Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, November 16, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 13

வேதகால வாழ்க்கை என்ற இத்தொடரை துவங்கும் பொழுது கூறினேன் மனிதர்கள் அனைத்தையும் முன் முடிவுடனே அனுகுகிறார்கள் என்று. இதன் காரணம் நீங்கள் இப்பகுதியை படித்தால் விளங்கும்.

வேதகால வாழ்க்கை என்பது ஒரு தத்துவம் போல மேஜையில் அமர்ந்து கணினியில் செய்யும் கற்பனை விஷயம் அல்ல. இதற்கு நீங்கள் கொஞ்சம் உடல் உழைப்பு செய்ய வேண்டும்.

உங்கள் வாழ்க்கை சூழல் பிரகாசம் ஆக நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் என்ன தவறு? நவீன அறிவியல் என்ற பெயரில் பலர் கண்டுபிடிப்புகளால் பூமியின் சூழலையும், மனித மனங்களையும் அசுத்தமாக்குகிறார்கள். நவீன கண்டுபிடிப்புகள் தேவையை பொருத்தே கண்டறியப்படுகிறது. ஆனால் அதன் பின்விளைவுகள் மிகவும் கொடூரமானவை.

வாகனங்களுக்கு பெட்ரோல் பயன்படுத்தும் பொழுது நமக்கு தெரியாது ஓசோனில் ஓட்டைவிழும் என்று. அது போலவே செல்போன் பயன்படுத்தும் பொழுது அதன் கதிர்வீச்சால் பல பறவையினங்கள் மலடான விஷயம் என சொல்லிக்கொண்டே போகலாம். நான் நவீன விஞ்ஞானத்திற்கு எதிரானவன் அல்ல. சுயநலம் மட்டுமே மண்டிகிடக்கும் விஞ்ஞான யுக்திகளுக்கு எதிரானவன். உங்களின் குடை உங்களுக்கு செளகரியமாக இருக்கும் பொழுது அதன் கம்பி பிறர் கண்களை குத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

வேதகாலத்தில் இருக்கும் கண்டுபிடிப்புகள் பின்விளைவுகளை கொண்டது அன்று. மிருகத்தோலை பயன்படுத்திய ரிஷிகள் அவற்றை அப்படியே விட்டுவிட்டு சென்றாலும் சிலவருடங்களில் அது இயற்கையுடன் கலந்துவிடும். ஆனால் நீங்கள் பயன்படுத்திய சிப்ஸ் பாக்கெட்டை பல்லாயிரகணக்கான வருடம் சென்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு எடுப்பார்கள்.

பலவரலாற்று அறிஞசர்களுக்கு வேதகாலத்தை பற்றி சான்றுகள் கிடைக்காதது இதனால்தான். அவர்கள் பயன்படுத்திய, உருவாக்கிய விஷயங்கள் அனைத்தும் இயற்கையுடன் இணைந்தவிஷயங்கள். அவர்கள் காலத்திற்கு பிறகு எளிமையாக இணைந்துவிட்டது.

சில வேடிக்கை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். பிராணிகள் விடும் ஏப்பத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதாம் அது உலக வெப்பமயமாதலுக்கு காரணமாம். அவர்கள் உரையாற்றிய அரங்கில் இருக்கும் குளிர்சாதனம் வெப்பமயமாதலுக்கு காரணம் இல்லையா? அவர்கள் வந்த வாகனமும், விமானமும் உலக வெப்பமயமாதலுக்கு காரணம் இல்லையா?

பசு ஏப்பம் விட்டதும், கங்காருவின் வேண்டாம்.....விடுங்கள்.

விஞ்ஞானிகளுக்கு ஏதோ ஒரு
காரணம் வேண்டும். சிலர் உலக வெப்பமடைதல் என்ற விஷயத்தையே எதிர்கிறார்கள். காரணம் உலக சுழற்சியில் இது இயல்பு என்கிறார்கள்.

பூமி தோன்றிய நாளில்
வெப்பமாவும், பிறகு குளிர்ந்து உறை பனியாக இருந்தது. அப்படிபட்ட பனி உருகி வட, தென் துருவத்தில் மட்டும் இருக்கிறது. இடைபட்ட பகுதியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருகிய பனி எந்த மிருகம் விட்ட ஏப்பம் என கேட்க தோன்றுகிறது.

வேதகால வாழ்க்கை என்ற விஷயத்தை நான் ஒரு எழுத்துவடிவில் எழுதவில்லை.
செயல்வடிவில் கடந்த 5 வருடங்களாகவும். உணர்வு நிலையில் பலவருடங்களாகவும் கொண்ட விஷயம். கோவை வேளாண்மை பல்கலைகழகத்துடன் இணைந்து வேதகால வாழ்க்கை மற்றும் வேளாண்மையை மேற்கொண்டு சிறந்த விவசாய முறை என்ற ஆய்வை சமர்ப்பித்துள்ளேன்.


நீலகிரி தோட்டகலைத்துறையும், வேளாண்மை பல்கலைகழகமும் நான்கு முனைவர்களை கொண்டு இம்முறையை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் வேளாண்மையில் இம்முறை ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். எனது கள அனுபம், ஆன்மீக ஆனுபவத்தாலும் வேளாண் துறை மாணவர்களுக்கு இம்முறையை வருடத்திற்கு மூன்று கருத்தாய்வு நடத்தி வெளிப்படுத்துகிறேன்.

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி பட்டறையும், விவசாய அலுவலர்களுக்கு இதன் அடிப்படையும் விளக்குகிறேன். இவை அனைத்தும் பல்கலைகழகம் வாயிலாக மட்டுமே செய்கிறேன். இது போக சில தனியாரின் நிலங்களுக்கு வேதகால வேளாண்மை முறையில் வேளாண்மை செய்ய உதவி வருகிறேன்.

வேதகால வேளாண்மை தவிர, ’நட்சத்திர வனம்’ என்ற பெயரில் 27 நட்சத்திரத்திற்கான மரங்களை சிறிய தோட்டமாக நட்டு அப்பகுதி ப்ராணனை மேம்படுத்திவருகிறேன். இது ஒரு இலவச சேவையாக செய்துவருகிறேன். இது மனிதகுலத்துக்கான சேவையாக செய்துவருகிறோம். நீங்கள் இதில் இணைந்து எங்களுடன் பணியாற்ற விருப்பம் இருந்தாலும் கூறவும்.

உங்கள் பகுதியில் சிறிய நிலப்பரப்பு இருந்தால் கூறுங்கள், நாங்கள் இலவசமாக நட்சத்திரவனம் ஏற்படுத்தி தருகிறேம்.

ஊசியிலை காடுகளில் வளரும் 27 நட்சத்திர மரங்களை கண்டரிந்து உதகையில் நட்சத்திர வனம் ஏற்படுத்தி உள்ளேன். அதன் செய்தி இதோ சுட்டி.

எனது வேதகால பணிகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். கல்லூரி மாணவர்களிடம் இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். விரைவில் வேதகாலம் மலரும்.

ஆம் வேதகாலம் என்பது முன்காலத்தில் இருந்தது அல்ல. சக உயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல், முழுமையான ப்ரபஞ்ச ஆற்றலுடன் வாழும் வாழ்க்கையை நாம் இனிமேல்தான் உருவாக்க வேண்டும்.

முன்காலத்தில் சிலரால் மட்டுமே பின்பற்றபட்ட வேதகாலத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு நாமும் அந்த ஒளியில் கலந்து மேம்படுவோம்.

(நிறைவு)

21 கருத்துக்கள்:

Thirumal said...

]]நிறைவு[[
மனதெங்கும்!


நட்சத்திர வனம் ஜொலிக்க மனமார்ந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

நிகழ்காலத்தில்... said...

\\நீங்கள் இதில் இணைந்து எங்களுடன் பணியாற்ற விருப்பம் இருந்தாலும் கூறவும்.\\

விருப்பம் உண்டு, தகவல்களைத் தாருங்கள்..

\\அவர்கள் பயன்படுத்திய, உருவாக்கிய விஷயங்கள் அனைத்தும் இயற்கையுடன் இணைந்தவிஷயங்கள். அவர்கள் காலத்திற்கு பிறகு எளிமையாக இயற்கையோடு இணைந்துவிட்டது.\\

அதனாலேயே நாம் அறிந்து கொள்ள முடியாமல் போய், இதற்கு சான்று இருந்தால்தான் நம்பமுடியும் என மனம் அழிச்சாட்டியம் பண்ணுகிறது :))

\\வேதகாலம் என்பது சக உயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல், முழுமையான ப்ரபஞ்ச ஆற்றலுடன் வாழும் வாழ்க்கையை நாம் இனிமேல்தான் உருவாக்க வேண்டும்.\\

ப்ரபஞ்ச ஆற்றலை பெருக்கி நாமும் நலமடைந்து, சூழலையும் நலமாக்கும் இந்த முறையை எங்களுக்கு எடுத்துக்காட்டிய தங்களுக்கு என் வணக்கங்கள்...

சாதி, மதம் கடந்து, இயங்கும் உயிர்கள் அனைத்தும், தாவர இனங்களும் நலமுடன் வாழ வழிவகுக்கும் வாழ்க்கை முறையை வாழ்த்துகிறேன்.

முடிந்தவரை பின்பற்றுகிறேன்..

அது ஒரு கனாக் காலம் said...

I will take part in every possible way. ( Google Tamil not working). Thanks a lot

Mahesh said...

இந்தப் தொடரின் எல்லா பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். தொடர் நிறைவடைந்தாலும் மனம் இன்னும் நிறைவடையவில்லை. புரிதலுடன் கூடிய நிறைவு வர சில காலம் ஆகலாம். உங்கள் பணிகளுக்கு வாழ்த்துகளும் வந்தனங்களும்.

டிசம்பரில் கோவை வரும்போது சந்திக்க முயற்சிக்கிறேன்.

yrskbalu said...

good work omkarji.

i never expected like this from you.

if you able publish your research paper- we can read.

like me ,others are there to support natural way agri. unknowngly our elder farmers done mistake.now they agree also. now 50 % land gone to chemical waste. looking dead body.

so if you publish in depth - it will helpfull to natural way agri
developers.

2. dont worry about others comments even it may correct.
pl continue your work. i think you may understand.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திருமால்,

உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

திருப்பூரிக்கு அருகில் இருக்கும் திருமுருகன் பூண்டி கோவிலுக்கு எதிரே நட்சத்திர வனம் உண்டு. முடிந்தால் சென்று வரவும். :)


உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்திரராமன்,

உங்கள் விருப்பம் நிறைவேற ப்ரார்த்திக்கிறேன்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

ஒரு மூச்சில் படித்தமைக்கு நன்றி :)

டிசம்பரில் பாரதம் காணும் கிச்சடி புகழ் மகேஷ் அவர்களே... என கோவையில் பெரிய கட் அவுட் வைக்கிறேன்.

:) வாருங்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

வரிகளில் உண்மையை கண்டேன்.

நன்றி

ரங்கன் said...

அய்யா

எனது கிராமத்தில் திரும்பிச் சென்று வாழ்ந்தது போல் இருந்தது. 20 கறவைப் பசுக்களுடன் இருந்தோம்.
ஆனந்தமான அந்த நாட்களுக்கு நான் சென்று வந்தேன். மிக்க நன்றி.

எனது தம்பியிடம் நட்சத்திர வனம் பற்றி பேச இருக்கின்றேன். (அவன் சென்னை பிடிக்காமல் திரும்பி கிராமத்துக்கு
சென்று விவசாயம் செய்பவன்.)

sowri said...

Thank you for the wonderful information you have shared. Somehow.opening நல்ல இருக்கு பட் பினிஷிங் சரி இல்லையப்பா !!!என்று தோன்றுகிறது. ஸ்ரீ சக்ர புரி போன்றே விறு விறுப்பாக சென்றது. May be you have decided enough is enough.

Inspite of all the hindrance, what you have conveyed is enough to create a little bit of awareness, which alone I will take and try to implement ASAP. Thank you swami for all the pain you have!

fieryblaster said...

it is easy to criticize anyone. especially when one speaks about aanmeekam and such other debatable stuffs. but with ur knowledge assimilation and way of life, definitely u lead a far superior life than co human being. irrespective of the fact whether commercialization of aanmeekam happens or not your post shows that u r knowledgeable and care for nature. this post was really interesting and informative. thanks a lot for it.

i wud be glad if nakshathira marakkandru thittam can be initiated in my area.

Sabarinathan Arthanari said...

ஓம்கார்,

\\இது மனிதகுலத்துக்கான சேவையாக செய்துவருகிறோம். நீங்கள் இதில் இணைந்து எங்களுடன் பணியாற்ற விருப்பம் இருந்தாலும் கூறவும்.\\

நாம் ஒரு கணிப்பொறி பொறியியலாளர். எவ்வகையில் உதவ முடியுமென தகவல் தாருங்கள்.

என்னுடைய தளத்தில் (http://sabarinathanarthanari.com) சுற்றுசூழலுக்கான தங்களது செய்தியை (பக்கங்களை) இலவசமாக தர இயலும்.

நன்றி.

seethag said...

me too swami.would like to participate in any small way that i can

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி ஏமாற்றம் !

சோமபானம் சுராபானம் பற்றியெலலம் எழுதுவிங்கன்னு நெனச்சேன்.

அப்ப நீங்க போலி சாமியார் இல்லையா ?


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Siva Sottallu said...

ஒரு வாரமாக ஃப்ளு காச்சனிலால் பாதிக்கபட்டு இருந்தேன் ஸ்வாமி. தற்பொழுது சற்று தெம்பாக உள்ளேன்.

உங்கள் அரும்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ஸ்வாமி.

ஸ்வாமி, சென்ற பகுதிளில் நீங்கள் கூறிய, நட்சத்திர மரம் அட்டவணையில், இந்த நட்சதிரதிர்க்கு இந்த மரம் என்று எப்படி கண்டுபிடித்தார்கள், ஏதேனும் வரைமுறை உள்ளதா அல்லது இதிகாசங்களில் கூரபட்டுல்லாத ஸ்வாமி?

வாடா இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் உள்ளவர்கள் தங்கள் நட்சதிரர்த்திர்ற்கு எந்த மரம் என எப்படி அறிந்துகொள்வது ஸ்வாமி?

NIVEDITA MAHESH said...

Dear swami,
Thanks for the posts. I am fan of urs and I am also a comibatore native, (I am from a small village called anaimalai, near pollachi). I miss the atmosphere of my village even in coimbatore. I want to know your opinion about bonsai trees. Can we grow bonsai tress, because most of us are in flats. Kindly give your in put on that. Namaskrams.

ஷண்முகப்ரியன் said...

சரணங்கள்,ஸ்வாமிஜி.

திவாண்ணா said...

திடு திப்புன்னு முடிச்சாப்போல இருக்கே!
நக்ஷத்திர மரங்கள் பத்தி இன்னும் கொஞ்சம் எழுதலாமே? அவரவருக்கு ஆன மரங்களை வளர்க்க கொஞ்சம் உற்சாகப்படுத்தும். இன்னும் நிறைய எழுதலாம்....

கையேடு said...

திரு. ஓம்கார் அவர்களுக்கு,

உங்களுக்கு கால அவகாசம் இருக்குமாயின் நீங்கள் குறிப்பிட்ட மரங்களின் கிளை, இலை, பூ ஆகியவற்றை புகைப்படங்களோடு ஒரு இடுகை எழுத முடியுமா. சில மரங்களைக் கேள்விப்பட்டதே(பார்த்ததும்) இல்லை, அதனால் கேட்கிறேன்.