ஐயோ-தீ....
என் தாத்தா அவரின் சொத்தை ஒருவரிடம் அடமானம் வைத்துவிட்டார். அது மூழ்கிப்போனது. என் தாத்தாவுக்கு அவரின் சொத்தை தக்கவைத்துக்கொள்ளும் யோக்கியதை இல்லை. அந்த சொத்தை இன்னொருவர் அனுபவிப்பதை பார்த்த பேரனாகிய நான் வழக்கு தொடுத்தேன். நீதிபதிகள் என்னையும், சொத்துக்கு உரியவரையும் பங்கிட்டு அனுபவிக்க சொல்லி இருக்கிறார்கள்.
கதையின் நீதி : நீங்கள் கோழை தாத்தாவுக்கு பிறந்தாலும் தவறில்லை புத்திசாலி நீதிமான்களிடம் சரண் புகுங்கள்...! உருப்படுவீர்கள்..!
டெல்லியில் மீண்டும் கில்லி
மீண்டும் டெல்லி பயணம். இந்த முறை ஒரு விஷேஷம் காமன் வெல்த் கேம்ஸ். நித்தியமும் ஆனந்தமாக இல்லாததால் எனக்கு எதற்கு ‘காமன்’ வெல்த் என ஒதுங்கிவிட்டேன். ஆனால் நம் பாரத தேசத்து லட்சணத்தை படம் போட்டு காட்டி விட்டார்கள்.
பாலம், ஸ்டேடியம் என பல கட்டிடங்கள் இடிந்துவிழுந்து சுகாதார குறையுடன் காணப்பட்டது. கடந்த ஒருவாரத்தில் கடினமாக உழைத்து கட்டுமான பணிகளை எல்லாம் முடித்துவிட்டார்களாம். அருமையாக இருக்கு பாருங்கள் என படங்களை மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறார்கள். முடிவில் ஜெய் ஹிந்து என வாசகம் வேறு.
திருமணத்திற்கு ஒருவாரம் முன்னால் மணப்பெண் ரெண்டு நாள் காணாமல் போகிறாள். மீண்டும் வந்து சும்மா கொஞ்சம் போயிட்டு வந்தேன். இப்ப கல்யாணம் அரேஞ்சுமெண்ட் எல்லாம் பக்காவா போகுது வாங்க கல்யாணம் கட்டிக்கலாம் என்றால் அப்பெண்ணை போற்றி புகழ்ந்துவிட்டு கல்யாணம் செய்வீர்களா என கேட்க தோன்றியது. நாம எங்க நினைச்சதை எல்லாம் கேட்டுருக்கோம்?
டிவிட்டர் இஸ் பெட்டர்
டிவிட்டரில் நான் உளருவதை எல்லாம் பெரிசாக பலர் படிக்கிறார்கள் என பின்பு தான் தெரியவந்தது. இங்கே ஆன்மீகம் மட்டும் பேசும் நான் டிவிட்டரில் அரசியல் சார்ந்த கருத்துக்களை சில நேரம் வெளியிடுகிறேன். அது ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்திருக்கிறதாம் நண்பர்கள் சொன்னார்கள். இப்படியே போனால் நான் இலக்கியவாதி ஆயிடுவேனோனு பயமா இருக்கு :)
அந்த டிவிட் என்ன என கேட்கிறீர்களா? நமக்கு ஏதுக்குங்க அரசியல்...
தாய் மரம்
ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் தாய் மரம் சேவை மிகவும் உன்னதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இச்சேவைக்காக இடமும், நன்கொடையும் கொடுத்து உதவிய உள்ளங்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.
தாய்மரம் பற்றிய விரிவான கட்டுரை விரைவில் எழுதுகிறேன். இந்த எளியோனுடன் நீங்கள் காட்டும் அன்பு கலங்க வைக்கிறது. உங்களின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும் என வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.
----------------------------------------------
கட(வுள்)ல்
சிலர் கடற்கரையில் நின்று ரசிக்கிறார்கள்
சிலர் மீன் பிடிக்க செல்லுகிறார்கள்.
சிலர் மீன் பிடிக்க பிற எல்லை பக்கம் சென்று மாண்டு போகிறார்கள்.
சிலர் மூழ்கி முத்தெடுக்கிறார்கள்.
சிலர் கப்பில் சொகுசு பயணம் போகிறார்கள்.
சிலர் கடலை கண்டதே இல்லை, அதனால் கடலே இல்லை என்கிறனர்.
சிலர் பாத்திரத்தில் கடல் நீரை பிடித்து வைத்து இதுவே கடல் என்கிறார்கள்.
சிலர் கடல் நீரை குடிநீர் ஆக்குகிறேன் என புறப்படுகிறார்கள்.
ஆனாலும் இங்கே கடலை முழுமையாக உணர்ந்தவரில்லை....!
13 கருத்துக்கள்:
//ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் தாய் மரம் சேவை மிகவும் உன்னதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.//
நல்ல செய்தி. சந்தோசமா இருக்கு
கடல்/கடவுள் பற்றிச் சொன்னது நல்லாயிருக்கு.
வந்தனங்கள்.
http://ilakindriorpayanam.blogspot.com/2010/10/blog-post.html
கடவுளும் வழிபாடும் அரசியலும்
என் கருத்துகள் “ஸ்வாமி”. பார்த்து படிக்கவும் அல்லது படித்து பார்க்கவும்.
நன்றி
//கட(வுள்)ல்
ஆனாலும் இங்கே கடலை முழுமையாக உணர்ந்தவரில்லை....! //
நான் கூட ஏறக்குறைய இதே அர்த்தத்தில் ஒரு கவிதை இன்று வெளியிட்டேன் ....
என்ன ஒரு கோ-இன்சிடென்ட் ......
கடல் - ரொம்ப ஆழம் !!!
punch anga maa!!!
சகோதரி கபீஷ்,
திரு அரி,
திரு க்ருபா,
திரு மகேஷ்,
திரு செளரி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
திரு தனிக்காட்டு ராஜா,
கடவுளை பற்றி எழுதினாலே ‘கோ’ இன்ஸிடன்ஸ் தான்..!
உங்கள் வருகைக்கு நன்றி
எங்க ஊரு பக்கம் கடல் எல்லாம் இல்லை , அட நெசமா தான் சொல்லுறேன் -:))))
// ஐயோ-தீ....
என் தாத்தா அவரின் சொத்தை ஒருவரிடம் அடமானம் வைத்துவிட்டார். அது மூழ்கிப்போனது. என் தாத்தாவுக்கு அவரின் சொத்தை தக்கவைத்துக்கொள்ளும் யோக்கியதை இல்லை. அந்த சொத்தை இன்னொருவர் அனுபவிப்பதை பார்த்த பேரனாகிய நான் வழக்கு தொடுத்தேன். நீதிபதிகள் என்னையும், சொத்துக்கு உரியவரையும் பங்கிட்டு அனுபவிக்க சொல்லி இருக்கிறார்கள்.
கதையின் நீதி : நீங்கள் கோழை தாத்தாவுக்கு பிறந்தாலும் தவறில்லை புத்திசாலி நீதிமான்களிடம் சரண் புகுங்கள்...! உருப்படுவீர்கள்..! //
இதனால் தாங்கள் கூற வரும் கருத்து......
//
இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்
vidamaatendaadei
சன்னலை மூடு
//
விடமாட்டேன்டாடேய் னு ஒரு பேரா
>>>கதையின் நீதி : நீங்கள் கோழை தாத்தாவுக்கு பிறந்தாலும் தவறில்லை புத்திசாலி நீதிமான்களிடம் சரண் புகுங்கள்...! உருப்படுவீர்கள்..!<<<
:)...ஆமா...திடிர்னு இது எதுக்கு
Post a Comment