
என்னை என்னுள் காண்பிக்கும்
ஒற்றை தேடல் இது
எல்லைக்கு அப்பாலும்
அப்பாலுக்கு அப்பாலும்
அதன் இருப்பு சாஸ்வதமாய்
அயர்ச்சியை ஏற்படுத்துகிறது
உடலாய், விலங்காய், பூதமாய்
தேடி முற்று பெறா முடிவிலியானேன்.
எங்கு தேடியும் கிடைக்காத உருபொருளை
உள்ளத்தில் காண் என்றான் உருவில்லாதவன்
என் உள்ளத்தில் எண்ணம்.
நான் எண்ணமா?
என் இருப்பில் உடல்
நான் உடலா?
என் அசைவில் ப்ராணன்
நான் ப்ராணனா?
முடிவில்லாத தேடலின் முடிவில்
ஒரொலி.......
என் ஒளி காண
அதன் ஒலி பற்றி
ஒலியை ஒலியால் நீக்கமற நிறைந்து
எல்லையாகவும் எல்லைக்கு அப்பாலும்
எங்கும் எதிலும் ஆனேன் ஓங்காரமாய்..!
8 கருத்துக்கள்:
அருமை.... அருமை.....
ரொம்ப நாளைக்கு முன்னால நான் கிறுக்கினது....
http://thuklak.blogspot.com/2009/03/blog-post_07.html
oomgaramai aavadarku aangaram koodadu
ezhudi ezhudi shoddu vaangum ennam koodak koodadu
course nadathi panam paarkkum seyaladuvum koodadu
Maha Periyava vaazhanda bhoomi,
Adai naasti aakkak koodadu
ஓட்டுப்போட முயற்சித்தேன்..
தமிழிஷ்-ல் பகிராமல் இருந்ததால் பகிர்ந்துவிட்டேன்..
எல்லாம் சிவத்தின் வேலை:)
கவிதை ’நச்’சுனு இருக்கு சாமி! :)
திரு மகேஷ்,
நீர் உடுமலை கவி :)
.. அருமையான கவிதை.
திரு சிவா,
வேலை செய்வதன் பெயர் சிவம்
வேலை செய்யாததன் பெயர் சவம்.
உங்கள் உதவிக்கு நன்றி :)
திரு ஷங்கர்,
ரொம்ப நச்சுனு இருக்கோ :)
மிக்க நன்றி
சகோதரி fieryblaster,
என் நிலையை பற்றி விமர்சனம் செய்ததற்கு நன்றி.
உங்களின் பின்னூட்டம் மூலம்
உங்களிடம் நிறைய காலி பாத்திரம் இருப்பது தெரியவருகிறது. அதில் ஏதேனும் இட்டு நிரப்புங்கள்.
மிக்க நன்றி.
>>>எல்லைக்கு அப்பாலும்
அப்பாலுக்கு அப்பாலும்
அதன் இருப்பு சாஸ்வதமாய்
அயர்ச்சியை ஏற்படுத்துகிறது<<<
அயர்ச்சியை ஏற்படுத்துகிறது..... :-)
ஒலியை ஒலியால் நீக்கமற நிறைந்து.
good.
i liked it
Post a Comment