Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, April 29, 2010

நித்ய பிரம்மச்சாரி...!

ஆவணி மாதத்தில் மத்திய நாட்கள். மழையின் காரணமாக யமுனா நதியின் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. அன்று ரோகிணி நட்சத்திர தினம். பிருந்தாவனம் கோலகலமாக இருந்தது. கோபியர்கள் பல்வேறு இனிப்புக்களையும் உணவு பொருட்களையும் கூடையில் ஏந்தி யமுனையின் மறுகறைக்கு செல்ல முயன்றனர்.

யமுனையில் வெள்ளம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணனை எப்படி சந்திப்போம் என குழப்பமானார்கள்.

யமுனைக்கரையில் வியாச மஹரிஷி அமர்ந்திருந்தார். அவர்களிடம் கோபியர்கள் சென்று, “ரிஷிகளின் ரிஷியே இன்று கிருஷ்ணனின் அவதார தினம், அவனை சந்திக்க வேண்டும் ஆனால் நீர் வேகத்தை பார்த்தால் ஆற்றை கடக்க முடியுமா என தெரியவில்லை. நீங்கள் தயவு கூர்ந்து உதவ வேண்டும்” என்றார்கள்.

“ கிருஷ்ணனின் இதயத்தில் என்றும் இருக்கும் கோபியர்களே உங்களிடம் இருக்கும் இனிப்புக்களை எனக்கு கொடுத்தால் அதற்கு வழி சொல்லுகிறேன்” என்றார் வியாச மஹரிஷி.

கோபியர்களிடம் இருக்கும் அனைத்து இனிப்புக்களையும் வயிறு நிறைய சாப்பிட்டார். கிருஷ்ணனுக்கு கொண்டு செல்லும் உணவை இவர் சாப்பிட்டுவிட்டாரே என ஒருபக்கம் கவலை இருந்தாலும், கிருஷ்ணனை பிறந்த நாள் அன்று சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்கு நோக்கமாக இருந்தது.

அனைத்து கூடைகளையும் காலி செய்துவிட்டு எழுந்தார் வியாச மஹரிஷி. பிறகு கூறினார், “ கோபியர்களே, யமுனை ஆற்றின் முன் நின்று நான் கூறுவதை கூறுங்கள். யமுனை வழிவிடும். நீங்கள் கூற வேண்டியது இது தான். வியாசர் நித்ய உபவாசி"

கோபியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். உபவாசி என்றால் உணவு சாப்பிடாதவன். இவரோ அனைத்து கூடையும் காலி செய்துவிட்டார். மேலும் நித்ய உபவாசி என்கிறார். என்றும் உபவாசியாக இருக்க ஒருவரால் முடியுமா என சந்தேகம் கொண்டனர். இருந்தாலும்

யமுனை ஆற்றின் முன் சென்று வியாசர் நித்ய உபவாசி என்றனர்.

யமுனை இரண்டாக பிரிந்து வழிவிட்டது.

மறுகரைக்கு சென்று கிருஷ்ணனை சந்தித்தனர். கோபியர்கள் கிருஷ்ணனுடன் ராசலீலைகளில் ஈடுபட்டு முடிவில் தங்கள் இருப்பிடம் செல்லும் நேரம் வந்ததும் புறப்பட்டனர்.

“எங்களை காதலால் நிறைத்த கிருஷ்ணா, யமுனையை கடக்கும் பொழுது நித்ய உபவாசி என வியாசர் கூற சொன்னார். யமுனை வழிவிட்டது. நாங்கள் மீண்டும அதே விஷயத்தை கூறி யமுனையை கடக்கலம் என நினைக்கிறோம். நீ அருள் தர வேண்டும் என கிருஷ்ணனிடம் கேட்டனர்.

மாய புன்னகையுடன் கிருஷ்ணன் , “பக்தியின் சிறந்த கோபிகைகளே யமுனையை கடக்கும் பொழுது இவ்வாறு சொல்லுங்கள் - கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” என்றார் கோபியர்கள் குழப்பத்துடன் மீண்டும் யமுனை முன் “கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி” கூறினார்கள். யமுனை வழிவிட்டது.

புறப்பட்ட இடத்திற்கு வந்ததும் தங்களின் குழப்பத்தை வியாசரிடம் கேட்டனர்.

“மஹரிஷியே. இது என்ன முரண்பாடு. நீங்கள் செய்யாததை கூறுகிறீர்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்ட யமுனையும் வழிவிடுகிறதே? இது என்ன மாய வேலையா?”

“கோபியர்களே, நான் என்றும் உணவருந்தும் பொழுது கிருஷ்ணார்ப்பணம் என பகவான் உண்ணுவதாக கருதுகிறேன். இறைவனே என் உணவை உண்கிறார். அதனால் நான் என்றும் விரதம் இருப்பவன்.

கிருஷ்ணனும் இறைநிலையில் இருந்து உங்களுடன் ராசலீலைகளை செய்கிறான். அவன் ஞான நிலையில் இருப்பதால் அவன் எதையும் செய்வதில்லை. ஆன்மாவில் சாட்சியாக இருக்கிறான். அதனால் கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி”

தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்தை கோபியர்கள் உணர்ந்து கொண்டனர்.

-------------------------------

டிஸ்கி : மேற்கண்ட கதை புராணங்களில் இல்லை. உபன்யாசம் செய்பவர்களால் புனையப்பட்டது. சில நாட்களாக பத்திரிகை தொலைகாட்சிகளை பார்க்கும் பொழுது இக்கதை ஏனோ ஞாபகம் வந்து தொலைத்தது. கட்டுரையின் சில வார்த்தைகள் போல்ட்-ஆக இருப்பது தற்செயலானதே.. !

தற்காலத்தில் இக்கதை நடந்தாலும் தவறு இல்லை. ஆனால் மறுகரையில் வியாசர் இருந்திருந்தால் செய்தித்தாளில் வந்திருப்பார். தான் உபவாசியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது வியாசருக்கு தெரிந்திருக்கிறது. சிலருக்கு தெரியவில்லை.

அக்கரைக்கு இக்’கறை’ பச்சை..!

17 கருத்துக்கள்:

Romeoboy said...

\\கட்டுரையின் சில வார்த்தைகள் போல்ட்-ஆக இருப்பது தற்செயலானதே.. !//

அடடா - சாமி இது தெரியாம ஏதோ உள்குத்து இருக்குதுன்னு நினைச்சேன்...

லதானந்த் said...

ராசலீலை என்றால் என்ன?
ஒரு சமயத்தில் எவ்வளவு கோபிகையர் ராசலீலையில் ஈடுபட்டனர்?
FULL DETAILS குடுங்க சாமி

தனி காட்டு ராஜா said...

" தனி காட்டு ராஜா (எ) சுதந்திர யோகி நித்ய பிரம்மச்சாரி” என்று சொல்லுங்கள் ....கடல் பிளந்து வழிவிடும் ......கன்னியாகுமரி -யில் இருந்து ஸ்ரீலங்காவிற்கு நடந்தே செல்லலாம் ..........

VELU.G said...

உண்மைதாங்க, ஒரு வேளை இதெல்லாம் இப்படித்தான் இருக்குமோ

மதி said...

என்ன சொல்ல வர்ரீங்க....

கோவி.கண்ணன் said...

//தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்தை கோபியர்கள் உணர்ந்து கொண்டனர்.//

:)

அடிவாங்கும் போதும் தான் வாங்கவில்லை இறைவனே வாங்குகிறார் என்று நினைப்பதே 'நித்திய' துறவிக்கு அழகு

Unknown said...

சுவாமிக்கு இனிய வணக்கம். நான் எழுதிய கமென்ட்ஸ் க்கு நீண்ட பதில் தந்தீர்கள் நன்றி. இந்தியாவில் அனைத்தும் கற்று தர சாமியார்கள் இருக்கிறார்கள் ஆனால் கோவில்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று கற்றுதர ஒருவர் கூட இல்லை. கண்ட இடங்களில் சிறுநீர் மலம் கழித்து கோவில்களை அசிங்க படுத்துகிறார்கள். நான் நேற்று திருவண்ணாமலை கிரிவலம் என்னுடைய நண்பர்களிடம் சென்றேன்.அங்கே கண்ட காட்சியைதான் கூறினேன் இதைப்போல் அனைத்து கோவில்களின் இதுதான் நிலை எனது நண்பர்களில் முஸ்ஸிம் மற்றும் கிருத்துவ நண்பர்கள் கூட என்னுடம் வந்தார்கள் அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வியை நான் உங்களிடம் கேட்டேன்.எப்படி கோவில்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு சுவாமிகள் கூட சொல்லிதரவில்லையா என்று?என்னுடைய கருத்து
சுவாமிகளின் பிரசாரம்கள் அனைத்தும் மேல்தட்டு மக்களிடம் மட்டுமே போய்சேருகிறது. ஆனால் கோவில்களுக்கு போகிறவர்கள் அனைத்தும் கீழ்தட்டு பாமர மக்கள். அவனிடம் போய் யோக கற்று தருகிறேன் சுத்தமாக்களாம் என்று சொன்னால் அவனிடம் எடுபடது. அல்லது சொற்பொழிவு ஆற்றினாலும் அவனக்கு புரியாது இதை எவ்வாறு சரிசெய்வது?

அதனால் நீங்கள் தொடர் எழுத தொடங்கும் முன் இதைபற்றி தொடர் எழுத வேண்டும்.நன்றி சுவாமி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரோமியோ,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு லதானந்த்,

ராச லீலையை பற்றி நான் கூறுவதைவிட உங்களை போன்ற ‘ரசனை’ மிக்கவர்கள் கூறினால் நன்றாக இருக்கும். அப்படி ஒருவர் சி.ஐ.டி கஸ்டடியில் இருக்கிறார். தொடர்பு கொள்ளவும். :)

72,000 கோபிகளை இருந்ததாக கூறுகிறார்கள். அனைவருடனும் ஒரே நேரத்தில் ரசலீலை செய்தார் என்கிறது பாகவதம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தனிக்காட்டு ராஜா,
திரு வேலு,
திரு கோவி.கண்ணன்,
திரு மதி,
திரு ரஜேஷ்,

உங்கள் வருகைக்கு நன்றி.

Siva Sottallu said...

//மேற்கண்ட கதை புராணங்களில் இல்லை. உபன்யாசம் செய்பவர்களால் புனையப்பட்டது.//

சரி ஸ்வாமி, அப்போ இதை ஏற்றுக்கொள்ளலாம் என்கிறீர்களா, இல்லை கூடாது என்று சொல்கிறீர்களா?

Mahesh said...

நான் கூட யமுனை கிட்ட நின்னு "நான் நித்யம் ப்ளாக் எழுதறவன் ; ஸ்வாமி ஓம்கார் ப்ளாக்ல நித்யமும் பின்னூட்டம் போடறவன்"னு சொன்னேன். என்ன ஆச்சரியம் !!! யமுனை வழி விட்டுது !!!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

நான் சொன்னதையேல்லாம் ஏற்றுக்கொண்டீர்களா :) ? இதில் நற்கருத்து இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

//நான் கூட யமுனை கிட்ட நின்னு //

இது உங்க வீட்டுக்கு தெரியுமா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கோவி அண்ணா
//அடிவாங்கும் போதும் தான் வாங்கவில்லை இறைவனே வாங்குகிறார் என்று நினைப்பதே 'நித்திய' துறவிக்கு அழகு//

அடி வாங்கும் போது, தான் வாங்கவில்லை, ஐயோ இறைவன் வாங்கிவிடுவானே என்ற அன்பில்/அக்கறையில், அடி வாங்காத அளவுக்கு நடந்து கொள்வதே "நித்யமான" துறவிக்கு அழகு! :)

துறவிக்கு மட்டும் அல்ல! பக்தருக்கும் அஃதே அழகு! - எக்காரணம் கொண்டும் இறைவன் மேல் அடி விழக் கூடாது! என்ற நினைப்பே, "நித்திய" நினைப்பு! மற்றெல்லாம் "முத்திய" நினைப்பு! :)

V Dhakshanamoorthy said...

"தான் ஒரு கருவி, இறைவனே இயக்குகிறார் என உணர்ந்தால் கர்மாக்கள் நம்மில் செயல்படாது என்ற ஞான யோக கருத்து".

மிகவும் அருமை

மதுரை சரவணன் said...

அருமை... வாழ்த்துக்கள்.