Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, April 15, 2010

விளக்கு... விளக்கு ....விளக்கு ...!

இறைவனை ஒளியாக வணங்குவது ஆன்மீக மரபு. ஞானத்தின் அடையாளமாகவும், முழுமையின் உருவாகவும் இருப்பது ஒளியே ஆகும்.

இறைவனை உருவமாக வணங்கி பின்பு உருவ-அருவமாக வணங்கி முடிவில் அருவமாக வணங்கும் நிலை என்பது ஆன்மீகத்தின் படிநிலை.

அடிப்படை மனிதனுக்கு ஆரம்ப நிலையில் அருவமாக இறைவனை வணங்குதல் என்பது மிகவும் சிரமமான காரியம். அதனால் இறைவனை ஒளி வடிவில் வணங்குதல் என்பது அதற்கான எளிய முயற்சியாக இருக்கும்.

பாரத கலாச்சாரத்தில் தோன்றிய அனைத்து மதங்களிலும், ஆன்மீக கோட்பாடுகளிலும் ஒளி வழிபாடு என்பது முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நம் நாட்டிற்கு வந்த பிற மத கோட்பாடுகள் கூட நம் கலாச்சாரத்தின் அடையாளமாக ஒளியை தன் கட்டமைப்புக்குள் எடுத்துக்கொண்டது.

உபநிஷத்தில் ஒளியை பற்றி பல கருத்துக்கள் இருக்கிறது. சில உபநிஷத்தில் ஒளியை பற்றிய விளக்கமும், சிலவற்றில் ஒளியின் அடிப்படை கோட்பாடுகளை பற்றியும் விளக்குகிறது.

வேதத்தில் பல இடங்களில் அக்னியை பற்றியும் அதன் ஒளியை பற்றிய சுவடுகள் உண்டு.

ஈசாவாஷிய உபநிஷத்தில் சாந்தி மந்திரம் எனக்கு பிடித்த ஒன்று. பூர்ணமிதம் என துவங்கும் அந்த மந்திரத்திற்கு வெளிப்படை உதாரணமாக இருப்பது விளக்கின் ஒளியாகும்.

ஞானம் என்பது பரிபூரணமானது, ஞானம் ஒருவருக்கு கிடைக்கும் பொழுது முழுமை நிலையை அடைகிறார். ஞானம் பெற்றவர் மற்றொருவருக்கு ஞானம் வழங்கும்

பொழுது தனது ஞான நிலையில் குறைவதில்லை. அது போல விளக்கு ஒளி தான் முழுமையான ஒளியுடன் திகழ்ந்து, தான் பெற்ற ஒளி மற்றொரு விளக்குக்கு அளிக்கும் பொழுது முழுமையாக அளித்து தானும் ஒளி குன்றாமல் இருக்கும்.


உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் விளக்கை ஒரு அங்கமாக்கினால் உங்கள் ஆன்ம நிலை தங்கமாகும்.

இப்படித்தான் ஒரு ஆன்மீகக்கூட்டத்திற்கு சென்று இருந்தேன். அங்கே சில ஆன்மீக அன்பர்கள் மேடையில் அமர்ந்து என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதில் சிலர் மரியாதையாக பேசுவதாக எண்ணிக்கொண்டு இப்படிச் சொன்னார்கள், “தயவு கூர்ந்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள். என் பின்னால் நின்று இருந்த சுப்பாண்டி என்னிடம் குனிந்து, “ஸ்வாமி மேடை சுத்தமாத்தானே இருக்கு எதுக்கு இப்ப விளக்குமாறு கேட்கறாங்க” என்றான்.
அன்று விளக்குமாறு கிடைத்திருந்தால் எனக்கும் பயன்பட்டிருக்கும். :)


கலாச்சார மாறுபாடுகளால் விளக்கு ஏற்றும் முறைகூட மறந்து ஏனையோர் இருக்கிறார்கள். சிலர் என்னிடம் வீடுகளில் விளக்கேற்றும் முறைபற்றி கேட்பது உண்டு.

விளக்கை பற்றி விளக்கச்சொன்னால் என்ன விளக்குவது?

ஒளியை விளக்கும் அளவிற்கு எனக்கு ஒளி உண்டா என தெரியாது. இருந்தாலும் நம் தினமும் எப்படி ஒளி ஏற்ற வேண்டும் என்பதை விளக்குகிறேன்.

  • ஐந்து முக விளக்கு, காமாட்சி விளக்கு என பல விளக்குகள் இருந்தாலும் உருவம் பொறிக்கப்படாத அத்ம விளக்கு என்பதே விளக்குகளில் சிறந்தது.

  • மையத்தில் செங்குத்தாக திரி இருக்கும் படி வட்டவடிவில் இருக்கும் விளக்கின் அமைப்புக்கு அத்ம விளக்கு என பெயர்.

  • ப்ரார்த்தனை அறையில் அத்ம விளக்கு இல்லாமல் வேறு விளக்குகள் இருந்தாலும் பயன் இல்லை.

  • பஞ்ச முக விளக்குகள் வைத்தால் இரண்டு ஜோடியாக வைக்க வேண்டும். அத்ம விளக்கு எப்பொழுதும் ஒன்று தான் வைக்க வேண்டும்.

  • விளக்கு வெண்கலம் அல்லது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தால் நலம். கல் விளக்கு, இரும்பு விளக்கு, செம்பு இவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

  • நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே விளக்கிற்கு பயன்படுத்த வேண்டும்.

  • திரியை ஜோடியாக (இரண்டாக) விளக்கில் ஏற்ற வேண்டும். ஒற்றையாக வைக்கக்கூடாது.

  • பஞ்ச முக விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றுகிறோம் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அத்ம விளக்குக்கு பயன்படுத்தும் பொழுது எந்த திசை பார்த்து இருக்க வேண்டும் கவலை இல்லை, அதனாலேயே அத்ம விளக்கு சிறந்தது என்கிறேன்.

  • காலை மற்றும் மாலை இரு வேளையும் தீபம் ஏற்ற வேண்டும். 150 மில்லி எண்ணெய் கொள்ளும் ஒரு விளக்கில் 12 மணி நேரம் ஒளி இருக்கும். அதனால் 24 மணி நேரமும் ஒளி கொண்ட தன்மை பெற முடியும்.

  • தீபத்தை அணைக்க நேர்ந்தால் புஷ்பம் கொண்டோ அல்லது விபூதி கொண்டோ அணைக்கலாம். வாயால் ஊதி அணைக்கக் கூடாது.

  • பஞ்சபூதங்கள் அனைத்து உருவாக்கத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. விளக்கு ஏற்றுவதில் முழுமையாக பஞ்சபூதங்களின் தன்மை இருக்கிறது.

  • விளக்கின் உலோகம் மண் தன்மை கொண்டதாகவும், எண்ணெய் நீர் தன்மை கொண்டதாகவும், ஒளி நெருப்பின் அமைப்பிலும், ஒளி தொடர்ந்து கிடைக்க காற்றும் ஆகாயமும் பின்புலத்தில் செயல்படுகிறது. பஞ்சபூத நிலையில் இருக்கும் விளக்கை வழிபடுவதால் பஞ்சபூதம் நிலையில் இருக்கும் இறைவனை வணங்குகிறோம்.

வள்ளலார் தனது ஆன்ம பயிற்சியில் முக்கியமாக ஒளி நிலையை பற்றிய தியானத்தை குறிப்பிடுகிறார். ஒளியை தொடந்து தியானிக்க முடிவில் நம் உடல் ஒளியாகும் என்கிறார். அதை செய்தும் காட்டினார்.

வள்ளலாரின் ஆன்மீக வழிகாட்டியான திருமூலர் விளக்கை பற்றி அருமையாக விளக்கி உள்ளார்.


விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளைக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான்கழல் மேவலும் ஆமே

------------------------------------------------------------திருமந்திரம் 2816

உடல் என்ற விளக்கின் உள்ளே ஒளியாக மற்றொரு விளக்கு உண்டு. அதன் பெயர் ஆன்மா. உடலின் உள்ளே சென்று ஆன்ம ஒளியை தூண்டி ஆன்மாவின் மூலம் பரமாத்மாவை அறிய முயற்சிப்பவர்களுக்கு பரமாத்மாவின் சொரூப நிலையை அடையலாம்.

விளக்கை தூண்டுங்கள் உங்களின் உள்ளே இருக்கும் விளக்கை தூண்டுங்கள். இறை ஒளி உங்களில் ஒளிரட்டும்.

18 கருத்துக்கள்:

Vidhoosh said...

விளக்கோ விளக்குன்னு விளக்கிட்டீங்க ஸ்வாமி. அருமையான கட்டுரை.

என்னிடம் வெள்ளியில் அத்மவிளக்கு இருக்கு. யாரோ ஒரு பெரியவர், வெள்ளியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றக் கூடாது என்றார். என்ன செய்யலாம்? தினப்படி நெய்யூற்றி விளக்கேற்றுவது கட்டுப்படி ஆக மாட்டேங்கறது?

எம்.எம்.அப்துல்லா said...

//வள்ளலாரின் ஆன்மீக வழிகாட்டியான திருமூலர் விளக்கை பற்றி அருமையாக விளக்கி உள்ளார்.


//

விளக்கைப் பற்றியா விளக்கி இருக்காரு!! :))))

Test said...

தகவல்களுக்கு நன்றி

மதி said...

>>விளக்கை தூண்டுங்கள் உங்களின் உள்ளே இருக்கும் விளக்கை தூண்டுங்கள். இறை ஒளி உங்களில் ஒளிரட்டும்.<<

ஒளிரட்டும்...

அருமையான பதிவு..மிக்க நன்றி

விளக்கை 24 மணி நேரமும் எரிய விடலாமா?உறங்கும் முன் விளக்கை அவசியம் அணைத்துவிட வேண்டும் அல்லவா?

Thirumal said...

]]]உடல் என்ற விளக்கின் உள்ளே ஒளியாக மற்றொரு விளக்கு உண்டு. அதன் பெயர் ஆன்மா. உடலின் உள்ளே சென்று ஆன்ம ஒளியை தூண்டி ஆன்மாவின் மூலம் பரமாத்மாவை அறிய முயற்சிப்பவர்களுக்கு பரமாத்மாவின் சொரூப நிலையை அடையலாம்[[[

இதை விட வேறென்ன வேண்டும்..
அற்புதமான விளக்கம் ..
நன்றி சுவாமி..

தனி காட்டு ராஜா said...

சரியாய் சொன்னிங்க விளக்கு எண்ணெய் (பற்றி)

எறும்பு said...

என்னவோ போங்க இப்ப உள்ள பொண்ணுங்க குங்குமத்துக்கு பதிலா ஸ்டிக்கர் போட்டு வச்சுக்கிற மாதிரி, நிறைய வீட்ல LED லைடுதான் பார்கிறேன். நீங்க தூண்டுரத தூண்டுங்க..


:)

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி விதூஷ்,

வெள்ளி விளக்கு தின பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது. தீபாவளி,குபேர பூஜை, சத்யநாராயண பூஜை போன்ற தனிவிஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

மற்ற காலத்தில் சாதாரண வெங்கல விளக்கு நல்லது.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

//விளக்கைப் பற்றியா விளக்கி இருக்காரு//

அவரு விளக்கி விளக்கி நமக்கு விளங்கிடுது. அதனால விளக்கை விளக்கிட்டாரு என்றேன்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு லோகன்,
திரு மதி,

தாராளமாக 24 மணிநேரமும் தீபம் வைக்கலாம்.

திரு திருமால்,
திரு சுதந்திர யோகி,
திரு ராஜகோபால், “ஹூம்...”

உங்கள் வருகைக்கு நன்றி.

G.MUNUSWAMY said...

சுவாமிஜி,
விளக்குக்கு எத்தனை விளக்கங்கள்.
விளங்கி வைத்ததற்கு நன்றி.
கோ. முனுசாமி,
சென்னை துறைமுகம் .

Sivakumar said...

//திரியை ஜோடியாக (இரண்டாக) விளக்கில் ஏற்ற வேண்டும். ஒற்றையாக வைக்கக்கூடாது.//

//பஞ்ச முக விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றுகிறோம் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். //
இரண்டிற்கும் முரண்பாடாக இருக்கிறதே.

//நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே விளக்கிற்கு பயன்படுத்த வேண்டும்.//
ஐங்கூட்டு எண்ணெய் போன்ற வகைகளை உபயோகிக்கக்
கூடாதா

virutcham said...

விளக்கு ஏற்றும் நியதிகள் சொல்லிட்டீங்க ஆனால் காரணங்களை விளக்கலையே.
இந்த rules மாதிரி சொல்லும் போது கொஞ்சம் சங்கடம். ஏன்னா நாம வேறே ஒருத்தர் கேட்கும் போது ஞே நு விழிக்க வேண்டி இருக்கிறது.

என் சின்ன வயசில் இருந்து அம்மா இரெட்டை திரி தான் ஏற்றுவார்கள் சொல்லியும் தந்து இருந்தார்கள். சென்றே முறை வந்த போது திடீரென்று என்று new rule ஒற்றை திரி implement பண்ணீட்டு போயிட்டாங்க. காரணம் கேட்டா அது தான் சரின்னு எங்கோ படித்தாக அல்லது யாரோ பெரியவர் சொன்னதாகவோ ஒரு reference.

இப்போ என்ன பண்ணுவது ?

http://www.virutcham.com

Siva Sottallu said...

//விளக்கு ஏற்றும் நியதிகள் சொல்லிட்டீங்க ஆனால் காரணங்களை விளக்கலையே.//

இதற்கான பதிலை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ஸ்வாமி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவக்குமார்,


//திரியை ஜோடியாக (இரண்டாக) விளக்கில் ஏற்ற வேண்டும். ஒற்றையாக வைக்கக்கூடாது.//

//பஞ்ச முக விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றுகிறோம் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். //

இரண்டிற்கும் முரண்பாடாக இருக்கிறதே.

முரண்பாடு எதுவும் இல்லை.
விளக்கு திரிக்கும், விளக்கு எரியும் திசைக்கும் பற்றிய விளக்கத்தை குழப்பிக்கொள்ளாதீர்கள்.

ஐங்கூட்டு எண்ணெய் போன்ற வகைகளை உபயோகிக்கக்
கூடாதா

ஐங்கூட்டு எண்ணெய் போன்றவை பயன்படுத்தலாகாது. ஆன்மீக ரீதியாக
நல்லெண்ணெய் மற்றும் நெய் இவையே சிறந்தது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விருட்சம்,

//விளக்கு ஏற்றும் நியதிகள் சொல்லிட்டீங்க ஆனால் காரணங்களை விளக்கலையே.
இந்த rules மாதிரி சொல்லும் போது கொஞ்சம் சங்கடம். ஏன்னா நாம வேறே ஒருத்தர் கேட்கும் போது ஞே நு விழிக்க வேண்டி இருக்கிறது.//

சில விஷயங்கள் ரூலாக இருந்தால் நல்லது. போக்குவரத்து விதிகள் போல. அவைகள் நன்மை பயக்குமெனில் பின்பற்றலாம்.

கூறப்பட்ட பாதையில் பயணித்தால் அதன் காரணம் உங்களுக்கு புலப்படும்.
எனக்கு புலப்பட்டதை போல.

விளக்குக்கு இரண்டு திரிகளை ஜோடியாக போட வேண்டும். ஒற்றை திரி கூடாது.

Vidhoosh said...

நன்றி ஸ்வாமி ஓம்கார் அவர்களே. வெண்கல விளக்காகவே வைத்து விட்டேன். இப்போது திருட்டுப் போகும் பயமும் இல்லையே. :)

விருட்சம்: சார், ஒரு நாள் விடியற்காலையிலேயே ஆபீசுக்கு போகும் அவசரத்தில் முதல் நாள் ஏற்றிய பஞ்சுத் திரியை (சின்னதாகி இருந்தது) ஒற்றை திரியாக்கி ஏற்றி விட்டு சென்று விட்டேன். சாயந்திரம் வந்து பார்க்கும் போது தொடர்ந்து எரிந்து (திரி முழுதும் கடைசி வரை எரிந்து போய்) விளக்கு முகமெல்லாம் கருப்பாகி இருந்தது. இரட்டை திரி போடும் போது எப்போதும் இப்படி ஆனதில்லை.

அதே போல காற்றில் தீபம் அணைந்து விடாமல் இருக்க வட்டமாக கண்ணாடி வைக்கிறேன்.

சில முறை யாரும் வீட்டில் இல்லாத நிலை. அப்போது விளக்கை அமர்த்தி விட்டே செல்கிறேன். இதெல்லாம் wood work, மற்றும் திரை சீலை அதிக பயன்பாட்டில் இருக்கும் apartmentட்டில் எங்கள் பாதுகாப்புக்காகவே செய்கிறேன். ஒரு வேளை இதை பார்த்துக் கொண்டே வரும் என் மகள், நானாக விளக்கம் தராவிட்டால், இதையும் ஒரு ஆன்மீக நம்பிக்கை/கடமையாக கருதும் அபாயம் இருக்கிறது இல்லையா?

virutcham said...

இன்றே நான் back to rettai thiri. சரியா
நான் கரணம் கேட்டது ஏன்னா ஒவொருவரும் எதாவதை ஒன்றை சொல்லி நல்லது அப்பெடீன்னு சொல்லிடறாங்க. ஒரே மாதிரி சொல்லிட்டா நமக்கும் பின்பற்றுவதில் சங்கடம் இல்லை. முரண்பாடான கருத்துக்களை கேட்கும் போது எது சரின்னு குழப்பம் வருது.

வெத்திலை பாக்கில் இரண்டு பழம் வைப்பதே என் அம்மாவின் பழக்கம். ஆனால் ஒற்றை பழம் தான் வைக்க வேண்டும் என்று புதுசா யாரோ குழப்பினார்கள். இதுக்கும் கொஞ்சம் எனக்கு ரூல்ஸ் சொன்னால் சந்தோஷப் படுவேன்.

அப்புறம், நான் உங்கள் தண்ணீர் பற்றிய பதிவை படித்து விட்டு, இப்போ தண்ணீர் குடிக்கு முன் நல்ல விஷயங்களை மனதுக்கு கொண்டு வந்து விட்டு, அல்லது ஏதாவது சுலோகம் சொல்லி விட்டு குடித்தல் என்று முயற்சி செய்கிறேன்.
விதூஷின் பதிவிலும் இதை நான் சொல்லி இருந்தேன். மாற்றங்களை உணர ஆரம்பிக்கும் போது உங்களுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்.

http://www.virutcham.com