இது நடக்கும் என தெரியும்....இது எதிர்பார்த்தது தான் என நீங்கள் புன்சிரிப்புடன் படிக்க துவங்குவது எனக்கு தெரியும். :)
சிங்கப்பூர் பயணம் முடித்தவுடன் நான் சென்ற இடம் ... அப்படி பட்டதாக இருந்திருக்கக் கூடாது. கோவைக்கு செல்லாமல் நேராக சென்னையிலிருந்து அந்த இடத்திற்கு தான் வந்து சேர்ந்தேன். பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.
திருவனந்தபுரம்.
கேரளாவின் தலைநகரம்.
வெளிநாட்டு மாணவர்கள் சிலருக்கு யோகப் பயிற்சி கொடுக்க பயணமானேன்.
பல நூறு வருடங்களாக அறிவு மிக்க அரசர்கள் ஆண்டுவந்த நகரம். திவ்ய தேசங்களில் ஒன்றான பத்மநாப ஸ்வாமி கோவில் அங்கே தான் இருக்கிறது.
சிறுவயதில் சென்ற நினைவுகள் இருந்ததால் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றேன்.
ஸ்ரீமந் நாராயணனின் சயன கோலத்தில் இருக்கும் கோவில்கள் மிக அரிதி. அதிலும் ஸ்ரீரங்கம் மற்றும் இன்ன பிற கோவில்கள் என இந்தியாவின் சயன நிலையில் இருக்கும் திவ்ய தேசங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இக்கோவிலை தவிர கேரளாவில் சயன நிலையில் மஹாவிஷ்ணு கிடையாது என நினைக்கிறேன். கேரளாவில் தமிழ் பாணியில் கட்டப்பட்ட கோபுரத்துடன் காட்சி அளிக்கும் கோவில் அது.
அனந்தபத்மநாப ஸ்வாமி என அழைக்கப்படும் பத்மநாப ஸ்வாமியின் பெயரால் இந்த தலைநகரே திரு-அனந்த-புரம் என அழைக்கப்படுகிறது.
ஆனால் அங்கே நடக்கும் அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல. கோவிலை தங்கள் அதிகாரத்தால் துஷ்பிரயோகம் செய்யும் நம்பூதிரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் என பார்க்கும் இடமல்லாம் குளறுபடி.
சட்டை அணிந்து செல்லக்கூடாது என்பது கேரளாவில் பெரும்பான்மை கோவில்களின் நடைமுறை. அதை நான் வரவேற்கிறேன். கோவிலின் ப்ராண சக்தி உடலில் புகுவதற்கு மிகவும் ஏற்ற சூழல் அது. ஆனால் பத்மநாப ஸ்வாமி கோவிலில் சட்டையை கழற்றினாலும் அதை கோவிலுக்குள் கொண்டு செல்லக்கூடாது என தடை விதிக்கிறார்கள். அதை பாதுகாக்க ஒரு தனிக்கட்டணம்.
இவ்வாறு நடைமுறைக்கு மீறிய செயல்கள் அவர்களின் நடவடிக்கை இருந்தது. கோவிலுக்குள்ளே இவர்கள் செய்யும் அராஜத்தை பக்கம் பக்கமாக எழுதலாம்.
கோவிலின் ஆற்றல் எப்படி இருக்கிறது என ஆராய்ந்தால் அது மிகவும் குன்றி, அங்கே இருக்கும் தெய்வாம்சம் சிரமப்படுவதும் உணர முடிந்தது.
பத்மநாப ஸ்வாமி கோவிலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் ஆட்டுங்கால் பகவதி அம்மன் எனும் கோவிலுக்கு சென்றேன். அற்புதங்களின் உறைவிடம். மிகவும் சக்திவாய்ந்த இடம்.
இங்கே சட்டையுடன் அனுமதிக்கிறார்கள். இவர்களுக்கு சாநித்யம் எதுவும் கெட்டுப்போவதில்லை. பெண்களில் சபரிமலை என கூறப்படும் இத்தலம், சென்ற ஆண்டு மட்டும் தைமாதம் 25 லட்சம் பெண்கள் கூடி பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை பதிவு செய்திருக்கிறார்கள். அக்கோவில் வளாகத்தில் கின்னஸ் சான்றிதழ் இருக்க கண்டேன்.
ஆட்டுங்கால் கோவிலுக்கு வெளியே ஒரு குரு மஹானின் சமாதி இருந்தது. பத்மநாப ஸ்வாமி கோவிலில் கிடைக்காதது இந்த சிறு சமாதியின் முன்னே கிடைத்தது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சென்ற ஸ்வாமி விவேகானந்தர், “கேரளம் பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்றார். ( 'I have wandered into a lunatic asylum!')
இன்னும் அந்த பைத்தியக்கார கூடாரம் மாறவில்லை...பைத்தியங்கள் மட்டும் மாறியிருக்கின்றன...
21 கருத்துக்கள்:
//பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.//
நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் ;)
அன்புடன்
சிங்கை நாதன்
தலைப்பு உபயம் பை கோவி.கண்ணன் அல்லது ஜோசப்பாக இருக்கும் என்று நினைச்சேன்:))))
/சிங்கை நாதன்/SingaiNathan said...
//பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.//
நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் ;)
/
Repeatttuuu...
:)
Swamiji,
Indraikku andha payithiakarargal oor
oru arivu jeevigalin nagaram. God's own country ena kondadugirargal. padittha mentalgal niraintha oru manilam. Delhi-yil evargal vaithathuthan sattam. Thalainagaram evargal kaiyil. Adharkku oru udharanam anaikkatu vivagaram. Edho neengal thappitheergal.
Vazga pallandu,
G.Munuswamy
Chennai Thuraimugam.
அய்யோ சுவாமி... நீர் இப்படி துவேஷம் கொள்ளலாகுமோ?!
//கோவிலுக்குள்ளே இவர்கள் செய்யும் அராஜத்தை பக்கம் பக்கமாக எழுதலாம். //
நாத்திகர்களை விட ஆஷாட பூதிகளினால் தான் ஆன்மீகம் மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது.
நன்றி
திரு சிங்கை நாதன்,
//நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் ;)
அன்புடன்
சிங்கை நாதன்
//
இதை எல்லாம் வெளியே சொல்ல முடியுமா? :)
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு என்.ஆர்.சிபி,
திரு குசும்பன்,
திரு நிஜமாநல்லவன்,
திரு ஜெகதீசன்,
திரு ஜி.என்.முத்துசாமி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு செல்வேந்திரன்,
//அய்யோ சுவாமி... நீர் இப்படி துவேஷம் கொள்ளலாகுமோ?//
நீர் அங்கே சென்று வந்தால்... அறச்சீற்றத்தில் ஆறு பதிவு எழுதுவீர் :)
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு சபரிநாதன் அர்த்தனாரி,
உங்கள் வருகைக்கு நன்றி
//சிங்கை நாதன்/SingaiNathan said...
//பைத்தியக்காரர்கள் செல்லும் இடத்திற்கு நான் செல்ல சிங்கை நண்பர்கள் காரணம் அல்ல.//
நல்ல வேளை, தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள் ;)
அன்புடன்
சிங்கை நாதன்//
:-))
கொஞ்சம் காரம் ஜாஸ்தி தான் உங்கள் இந்த பதிவில் , அனந்தபத்மநாப சுவாமி கோவிலிலுக்கு உள்ளே உள்ள கிருஷ்ணன் கோவிலில் அதன் தள்ளலும் /கூட்டமும் தெரியாது ... வெளியூர் பிரயாணிகளுக்கு தான் இந்த மாதிரி அசௌகரியம், நாங்கள் உள்ளூர் என்பதால் மொபைல், பர்ஸ் இத்தியாதிகள் கொண்டு செல்வதில்லை. கொடி மரத்திற்கு வலது பக்கத்தில் , நவராத்திரி மண்டபம் என்ற ஒரு கல் மண்டமம் உண்டு ... நிறைய சிற்பங்கள், சரி, க , ம ... சப்தம் எழுப்பும் கல் தூண்கள் போன்றவை உண்டு ( அதை பார்க்க 4 /10 ருபாய் கட்டணம் உண்டு ) ...
//ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சென்ற ஸ்வாமி விவேகானந்தர், “கேரளம் பைத்தியக்காரர்களின் கூடாரம்” என்றார்.//
நன்றி சாமி
நான் விவேகானந்தரை அவ்வளவு வாசித்தது இல்லை
எங்களுக்கு தெரிந்தது எல்லாம் கோயில் கொடியவர்களின் கூடாரம் என்ற வசனம் தான :)
நல்ல வேளை நான் பயந்துட்டே இருந்தேன். :)
மனநிலை தவறியவர்கள் என்று குறிப்பிட்டிருக்கலாமே?
நீங்களெல்லாம் இப்படி எழுதலாமா?
பதிவு அருமை.
உண்மை உங்கள் சட்டையை பாதுகாக்க பத்து ரூபாய் உங்கள் பர்ஸ் மொபைல் பாதுகாக்க பத்து ரூபாய் இது தவிர அவர்கள் தரும் நேரியல் பத்து ரூபாய் நடுவில் வழிமறித்து அநியாய விலையில் தலையில் கட்டப் படும் பூஜை பொருட்கள் ....வர வர ஆன்மிகம் ரொம்ப காஸ்ட்லி ஆகிவிட்டது
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தெய்வாம்சம் சிரமப்படுமா.... அவ்வாறு சிரமப்படுகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது...
அதை சீர் படுத்த என்ன செய்ய வேண்டும்?
உப கேள்வி:
பழமை வாய்ந்த கோயில்களில் மட்டுமே தெய்வாம்சம் இருக்குமா?
தெருமுக்கில் உள்ள பிள்ளையார் கோயிலிலும் தெய்வாம்சம் கிடைக்குமா?
தாங்கள் சொல்வது மிகவும் சரி. நான் காஞ்சிபுரம் சென்றபோது, உலகளந்த பெருமாள் கோவிலில், உள்ளே நுழைவதற்கே கட்டணம் ரூ5 வசூலித்தார்கள். நல்லவேளை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு மாலை 4.45 க்கு சென்றுவிட்டேன். 5 மணியிலிருந்து உள்ளே செல்வதற்கே கட்டணம் வசூலிக்கிறார்கள். அரசாங்கத்தை இதில் குற்றம் சொல்வதற்கில்லை. உள்ளே நுழைவதற்கே கட்டணம் என்பதை சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. :( பேசாமல் கோவில் பெயரை வரதராஜ பெருமாள் வர்த்தக நிறுவனம் என்று மாற்றி விடலாம் :)
சுவாமி,
அடுத்த பதிவும் வந்து விட்டது.
இந்த பதிவிற்கான கேள்வி அப்படியே உள்ளதே.
//தெய்வாம்சம் சிரமப்படுமா.... அவ்வாறு சிரமப்படுகிறது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது...
அதை சீர் படுத்த என்ன செய்ய வேண்டும்?
உப கேள்வி:
பழமை வாய்ந்த கோயில்களில் மட்டுமே தெய்வாம்சம் இருக்குமா?
தெருமுக்கில் உள்ள பிள்ளையார் கோயிலிலும் தெய்வாம்சம் கிடைக்குமா?//
Post a Comment