ரைட்டர்ஸ் ப்ளாக்
ஒரு வலையுலக நண்பர் என்னை சந்திக்க வந்தார். சிங்கை சென்று வந்ததிலிருந்து நீங்க அதிகமா எழுதறது இல்லையே என்றார். ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டுமே என்று, ”வேறு ஒன்னும் இல்லை சில எழுத்தாளர்களுக்கு அதிகமா எழுதினா ஒருகட்டத்தில் எழுத விசயம் இல்லாம போயிடும் அதுக்கு 'ரைட்டர்ஸ் ப்ளாக்’-னு பேரு. எனக்கு அது வந்துடுச்சோனு நினைக்கிறேன்.”என்றேன்.
என் அருகில் இருந்த சுப்பாண்டி என் காதருகே குனிந்து, “எழுத்தாளர்களுக்கு தானே சாமி வரும். உங்களுக்கு ஏன் வந்துச்சு?” என்றான். இந்த ரைட்டரே ப்ளாக்கு தான்யா என சொல்ல நினைத்தேன்... :)
ஒத்துக்க மாட்டீங்களே... சரி விடுங்க...
----------------------------
சொகுசு சாமி
இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். இணையம் மூலம் வெளிநாட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்துவிட்டு மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்த்தேன். சென்னை பதிவர் ஒருவர் நான் இரவு நேரத்தில் ஆன் லைனில் இருப்பதை பார்த்து விசாரித்தார். வகுப்புகள் இப்பொழுது தான் முடிவடைந்தது என்றேன்.
“என்ன சாமி நீங்க விவரம் தெரியாதவரா இருக்கீங்க, மிச்சவங்க மாதிரி சொகுசா இருக்கிறதை விட்டுட்டு இப்படி கஷ்டப்படறீங்களே... ” என்றார்.
அவரிடம் சொன்னேன், “யாரு சொன்னா நான் கஷ்டப்படறேன்னு? என்னை மாதிரி சொகுசான ஆளு உலகத்தில கிடையாது. துணிக்கடைக்கு போன துணி எடுக்கிறதுல குழப்பம் இல்லை, பொண்டாட்டிக்கு நகை துணி வாங்கனும்னு பிரச்சனை இல்லை, குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம். இப்ப சொல்லுங்க யாரு சொகுசா இருக்கா?” என்றேன்.
அவர் நினைத்திருப்பார், “இது கிட்ட வந்து ராத்திரி வாயக்கொடுத்தோமே”
----------------------
அமானுஷம் அதிசயம்
தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றி ஏதாவது தொடர் வந்தாலும், அமானுஷம் என அடித்தொண்டையில் அலறும் நிகழ்ச்சிகள் வந்தாலும் விடாமல் பார்க்கும் மாணவர் ஒருவர் இருக்கிறார்.
இவற்றை பார்ப்பதுடன் நிறுத்தாமல் என்னை சந்திக்கும் பொழுது அதை பற்றி கூறி சோதிப்பார். அவர் கூறுவதை எல்லாம் இவ்வளவு காலம் பொறுமையாக கேட்ட நான் கொதித்தெழுந்தேன்.
அவரிடம் கூறினேன். மனித உடலை விட அமானுஷமானது எதுவும் இல்லை. இருக்கும் பொழுது லேசாக இருக்கும் உடல், இறந்த பிறகு நான்கு பேருக்கு மேல் தூக்கும் அளவுக்கு பளுவாக தெரிகிறதே... அப்படி என்றால் வாழும் பொழுது நம்மை தூக்கிய மற்ற மூவர் யார்? அமானுஷமாக இல்லையா? என்றேன்.
என்னை அமானுஷமாக பார்த்துவிட்டு சென்றார் :)
----------------------
த்யானம் செய்தால் என்ன கிடைக்கும்..?
சில மாதம் வெளியூர் பயணத்தால் இணைய உலக நண்பர்களின் எழுத்தை படிக்க முடியாமல் பல நல்ல விஷயங்கள் விடுபட்டு போனது. பல எதிர்வினைகளும் மிச்சம் :)
துக்ளக் மகேஷ் எனும் நம் வலையுலக நண்பர் எழுதிய இந்த கட்டுரை அனைவரும் படித்து ரசிக்க வேண்டியது. அந்த பதிவில் அப்துல்லாவின் குசும்பும் ரசித்தேன்.
இங்கே க்ளிக் செய்யவும் : த்யானமும் வியாக்யானமும்
என் படத்தை போட்டு அவர் கட்டுரை எழுதியதால் படிக்க சொல்லுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம். :)
------------------------
விரைவில் தொடர் ஆரம்பம்
எத்தனையோ விஷயங்கள் எழுதும் எண்ணம் இருந்தும் பணியின் காரணமாக எழுத முடியவில்லை. விரைவில் தொடர் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். பலூன்காரனிடம் இருக்கும் அத்தனை பலூனையும் பார்த்த குழந்தை போல ஏகப்பட்ட தலைப்புகள் என் முன்னே இருக்கிறது. (க்ஹூம்..) எதை எழுத என புரியவில்லை.
சில தலைப்புகள் தருகிறேன். அனேகர் கூறும் தலைப்பை எழுதுகிறேன்.
கள்ள ஓட்டுக்கள் வரவேற்கப்படுகிறது... :)
- பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?
- மஹா கும்பமேளா என்பது என்ன?
- தியானமும் ஞானமும்
- வேதகால மருத்துவம்
- கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த தலைப்பை கூறவும்...
-------------------
44 கருத்துக்கள்:
//அப்படி என்றால் வாழும் பொழுது நம்மை தூக்கிய மற்ற மூவர் யார்? அமானுஷமாக இல்லையா? என்றேன்.//
யாரும் தூக்காமலே காற்று உள்ள பந்து தானே நீரில் மிதக்கும்.
:)
ஆஹா... நம்ம கடை போஸ்டர் இங்கயா?
தொடருக்கு என் சாய்ஸ் : "கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?"
வேதகால மருத்துவம்
கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
இரண்டுமே
சில குழந்தைகள் இரு பலூன் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள் அல்லவா
அது போல
my choice
மஹா கும்பமேளா என்பது என்ன?
//கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா//
என்னுடைய ஒட்டு இதற்கு
தியானமும் ஞானமும்
இது என்னுடைய விருப்பம்:))
எனக்கு எல்லா பலூனும் வேண்டும் ஸ்வாமி!! :))
// “யாரு சொன்னா நான் கஷ்டப்படறேன்னு? என்னை மாதிரி சொகுசான ஆளு உலகத்தில கிடையாது. துணிக்கடைக்கு போன துணி எடுக்கிறதுல குழப்பம் இல்லை, பொண்டாட்டிக்கு நகை துணி வாங்கனும்னு பிரச்சனை இல்லை, குழந்தைக்கு ஸ்கூல் அட்மிஷனுக்கு அலைய வேண்டாம். இப்ப சொல்லுங்க யாரு சொகுசா இருக்கா?” //
மனுஷனத் தவிற மற்றெல்லாம் சாமிங்கறீங்க! ரைட்டு. :)
சுவாமிக்கு இனிய வணக்கம் பங்கு சந்தையை பற்றி எழுதலாம்.
swami
veda kalam maruthuvam thuke engal vote
rgds/thiru
வணக்கம் பங்கு சந்தை தொடர் எழுதுங்கள்
//மஹா கும்பமேளா என்பது என்ன?
தியானமும் ஞானமும்//
இது என்னுடைய தேர்வு!
தியானமும் ஞானமும்
இது என்னுடைய விருப்பம்
Please write about பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?
வணக்கம் சுவாமி,
நான் இந்த வலை உள்ள பதிவுகள்ளில் சிலவற்றை படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருகிறது, அருமையாக உள்ளது. என்னுடைய ஒட்டு வேதகால மருத்துவம்
இறைஜானி அவர்களுக்கு பழனிமணியின் வணக்கம்
நிலைஅற்ற மற்றும் நிகழ்கால கேள்வி பதிலை விட
நிலையான தியானமும் ஞானமும் அமுதமாக அளிக்க வேண்டுகிறேன்
என்னை போல தத்தளிக்கும் சில பேதைகள் தியான ஞான மார்க்கம் அறிய
வழிகாட்டுங்கள். திருச்சியில் இருந்து.....
NK.பழனிமணி
veda kala maruthuvam
”வேறு ஒன்னும் இல்லை சில எழுத்தாளர்களுக்கு அதிகமா எழுதினா ஒருகட்டத்தில் எழுத விசயம் இல்லாம போயிடும் அதுக்கு 'ரைட்டர்ஸ் ப்ளாக்’-னு பேரு. எனக்கு அது வந்துடுச்சோனு நினைக்கிறேன்.”என்றேன்.
என் அருகில் இருந்த சுப்பாண்டி என் காதருகே குனிந்து, “எழுத்தாளர்களுக்கு தானே சாமி வரும். உங்களுக்கு ஏன் வந்துச்சு?” என்றான்!!!
என் படத்தை போட்டு அவர் கட்டுரை எழுதியதால் படிக்க சொல்லுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம். :)
ரொம்ப குசும்பு!!!!
திரு ஸ்வாமி ஓம்கார்,
உங்கள் பாணியில் ஜோதிட பாடம் கிருஷ்ணமூர்த்தி முறையை விரைவில் எதிர்பார்க்கின்றோம்!!!
வணக்கம் ஸ்வாமி. வேதகால மருத்துவம் பற்றி எழுதுங்கள்
சுவாமி,
நமக்கு பிடிச்ச தலைப்பு "வேதகால மருத்துவம்"
-------
ஒரு கள்ள ஒட்டு "மஹா கும்பமேளா என்பது என்ன?" க்குப் போட்டுக்குறேன்..
\\வேதகால மருத்துவம்//
இது ஓகே ..
வணக்கம் சுவாமி,
1 தியானமும் ஞானமும்
2 வேதகால மருத்துவம்
3 மஹா கும்பமேளா என்பது என்ன?
4 கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
5 பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?
இந்த வரிசையில் வழங்கிடுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
இது என்னுடைய விருப்பம்
நன்றி.
pangu santhai jothidam-en ottu
//பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?//
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7342
2 கோடி ரூபாயே வேலை செய்யல .....பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?
நல்வரவு
பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?
Please write about this also. Thanks
“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”
Link: http://balakumaranpesukirar.blogspot.com/2010/04/blog-post.html
Please write about Kumba Mela.
anbudan
srinivasan
ghana
# வேதகால மருத்துவம்
# கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
ஸ்வாமி, அமானுஷம் என்றால் ஆச்சர்யம்/ வியப்பு என்று அர்த்தமா?
அமானுஷம், சூச்சமம் இரண்டையும் புரிந்து கொள்ள சிறிய விளக்கம் கொடுக்க வேண்டிக்கொள்கின்றேன்.
"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்பார்கள்" அதனால் என் வோட்டு "வேதகால மருத்துவம்"
நன்றிகள் ஸ்வாமி.
ஸ்வாமிஜீ! இன்னும் சில தலைப்புகள் தாங்களேன். (கொடுத்திருக்குற 5 ம் தேறாது போல இருக்கு.)
/அப்படி என்றால் வாழும் பொழுது நம்மை தூக்கிய மற்ற மூவர் யார்? அமானுஷமாக இல்லையா? என்றேன்.//
மற்ற மூன்று பேரைப் பற்றித் தெரியாது. ஆனால் நான்காவது ஆள் நான் அல்ல.
(பங்கு சந்தை - ஜோதிடம் ???)
பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா? விரைவில் எதிர்பார்க்கின்றோம்!!!
all the titles are good.. But I like from the reverse order..
I vote for the opics in reverse order
virutcham
வணக்கம் சுவாமி,
1 தியானமும் ஞானமும்
2 வேதகால மருத்துவம்
3 மஹா கும்பமேளா என்பது என்ன?
4 கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
5 பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா?
இந்த வரிசையில் வழங்கிடுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
இது என்னுடைய விருப்பம்
நன்றி.என் விருப்பமும் இதே வரிசையில்.
சுவாமிக்கு வணக்கம் என் தேர்வு பங்கு சந்தை ஜோதிடம் - வேலை செய்யுமா
my choose Share market
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.
வேதகால மருத்துவம்
மற்றும்
பங்குசந்தை ஜோதிடம்
இரண்டும் பெரும்பான்மை வாக்குகள் பெற்றுள்ளன :)
கள்ள ஓட்டுக்கள் பங்கு சந்தைக்கே அதிகம் :)
விரைவில் தொடர் ஆரம்பம்..
பங்கு சந்தை ஓகே..சாமி..
ஆனா நீங்க சரியான பொழைக்க.. சரி அத விடுங்க.. போங்க
கேபிள் சங்கர்
any chance of re counting / re election??? please see, this is why some people are saying electronic vote is not correct...
vera enna solla mudiyum, athanala, ippadi oru bittu!!!!!!!!!
anbudan
srini
my choice is வேதகால மருத்துவம்
அருமையான பஞ்சாங்கம். வேத கால மருத்துவம் வேண்டும்.
கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
1) வேதகால மருத்துவம்
2)கல்வி சீர்திருத்தம் வேண்டுமா? அது சாத்தியமா?
Post a Comment