நான் பிரம்ம முஹுர்த்த வேலையில் தென்பகுதியில் இருந்து கிரிவலம் செய்ய துவங்கினேன். செங்கம் என்ற ஊருக்கு செல்லும் சாலையும் கிரிவலப்பாதையும் இணையும் இடம் ஆங்கில எழுத்து “Y" போல இருக்கும். அங்கே சென்று கொண்டிருக்கும் பொழுது செங்கம் ரோட்டில் திருவண்ணாமலையை நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று தள்ளாட்டத்துடன் வந்து கொண்டிருந்ததை கண்டேன். நின்று அந்த வாகனத்தை கவனித்தேன்.அதிவேகத்துடன் தள்ளாடியபடி வந்த கார் நேராக என்னை நோக்கி வந்தது.
இந்த தருணத்தில் கிரிவலம் பற்றி விளக்கி விடுகிறேன். கிரி வலம் என்ற வார்த்தையே இச்செயலை விளக்கிவிடும். மலையை வலப்புறமாக வட்டமிடுமாறு வருவது கிரிவலம். தென்னிந்திய புனித ஸ்தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.வட இந்தியாவில் பிருந்தாவனத்தில் கோவர்த்தன மலையை மக்கள் வலம் வருகிறார்கள். மேலும் சில மலைஸ்தலங்களில் வலம் வருவதுண்டு.
தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பிரபலமான விஷயம் ஆகிவிட்டதால் பல தென்னிந்திய மலைக்கோவில்களில் பின்பற்ற துவங்கிவிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது என்பது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.
கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்துசெல்லப்படுகிறது. அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர வேண்டுமானல் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம். சிரசாசனம் என்ற யோக பயிற்சியை யோகிகள் செய்வார்கள். வவ்வால் எப்பொழுதும் சிரசாசன நிலையிலேயே இருக்கிறது. அதற்காக வவ்வாலை யோகி என சொல்ல முடியுமா? அது போல மலையை சுற்றி வலம் வந்தவர்கள் எல்லாம் மேன்மையான ஆன்மீக உணர்வு அடையமாட்டார்கள்.
அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு. ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது. ஒரு காட்டுபூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார். பூனையும் தன்னைக் காத்துக்கொள்ள ஓடத்துவங்கியது. துரத்திய ராஜாவும், துரத்தபட்டப் பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார். காரணம் மலையை சுற்றிவந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம். ஆனால் ராஜா செல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம் பூனையும் தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மேட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.
தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் 30 நிமிடத்தில் கிரிவலம் வந்து அனைத்து கோவிலிலும் ஒரு வணக்கம் வைக்கலாம். எத்தனை ஆட்டோக்கள் மோட்சம் அடைந்ததோ தெரியவில்லை.
கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெல்ல நடக்கவேண்டும். இறைசிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும். நீர்ம பொருளை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.
ரமண மகரிஷி மற்றும் அவரின் அடியவர்கள் இரண்டு நாட்கள் கிரிவலம் வருவது வாடிக்கை. உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு ஆங்காங்கே சமைத்து உண்டு மெல்ல நடப்பார்கள். இதற்கு பூரண கிரிவலம் என பெயர். தற்காலத்தில் பூரண கிரிவலம் வரும் ஆட்கள் குறைவு. துரித உணவால் வாழ்க்கையும் துரிதமாகிவிட்டது.
14 கி.மீ நீளம் கொண்ட சாலை கிரிவலப்பாதை. முன்பு மண் ரோடாக இருந்ததால் வெறும் காலில் நடந்து செல்லுவது இதமாக இருந்தது. கடந்த சில வருடங்களில் தார் சாலைகள் போட்டும் நடை மேடை அமைத்தும் நெடுஞ்சாலைத்துறை கிரிவலப்பாதையை மேம்படுத்தி உள்ளது. ஆனாலும் நம் கால்களுக்கு மண் பகுதிகளே நன்மையை கொடுக்கும். கிரிவலப்பாதை என்பது மூன்று உண்டு. மக்கள் பயன்படுத்துவது வெளிசுற்றில் இருக்கும் தார்சாலையைத்தான்.
மலையை ஒட்டி ஒரு காட்டுவழிச்சாலை இன்றும் உண்டு. தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் சொர்க்கத்தின் பாதை எது என புலப்படும். மிகவும் இயற்கை அன்னையின் இருப்பிடம் இந்த உள்வழிப்பாதை. அது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல்பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைதான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.
பெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும். முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பெளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள். தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அங்கே கிரிவலம் வர நாள்கிழமை பார்க்க வேண்டுமா?
இப்படித்தான் நாள் நேரம் பார்க்காமல் துவங்கிய எனது கிரிவலத்தில் அந்த கார் என்னை நேராக மோதுவதற்கு வந்தது. நான் அசையாமல் செய்வதறியாமலும் நின்றேன். எனக்கு முன்பாக சில அடி தூரத்தில் சட்டென வலபுறமாக திரும்பி ஒரு மரத்தில் மோதி நின்றது. ஓடி சென்று பார்த்தேன். அதில் ஒரு குடும்பம் பயணித்து வந்திருக்கிறார்கள். வாகன ஓட்டி இரவு ஓட்டியதால் களைப்பில் தூங்கிவிட்டார். வாகன ஓட்டிக்கு மார்புக்கூட்டில் நல்ல அடி. காரின் முன்பகுதி நல்ல பாதிப்பு. பிறருக்கு எதுவும் ஆகவில்லை.
திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் தொலைபேசி எண் தெரியும் என்பதால் அவர்களுக்கு தொலைபேசியில் அழைக்க எண் கொடுத்துவிட்டு கிரிவலத்தை தொடர்ந்தேன்.
இப்படி அடிக்கடி நடக்கும். விபத்தை சொல்லவில்லை. கிரிவலம் செல்லுபவர்கள் ஒரு சக்தியால் காக்கப்படுகிறார்கள். அந்த விபத்தை நீங்கள் நேரில் பார்த்திருந்தால் புரிந்திருக்கும். அந்த காரின் வேகத்திற்கு நிச்சயம் அங்கே சில உயிர் போயிருக்க வேண்டும். எமன் என்னுடன் கிரிவலம் அல்லவா சென்று கொண்டிருந்தார்...! அதனால் கடமையை கவனிக்க முடியவில்லை என நினைத்துக்கொண்டேன்.
திருவண்ணாமலை செல்லும் சமயங்களில் ஒரு முறை நடந்து கிரிவலம் வருவேன். பிறகு வாடகைக்கு ஒரு சைக்கிள் அமர்த்திக்கொண்டு வலம் வருவேன். சைக்கிளில் வலம்வருவது ஒரு சுகானுபவம். என் மாணவர்களுடன் செல்லும் பொழுது சைக்கிளில் வலம்வருவதுண்டு. பல கோவில்களுக்கு கிரிவலப்பாதையில் சைக்கிளில் பயணிப்பது அருமையாக இருக்கும். வேடிக்கையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு தெரிந்து பல சைக்கிள்களுக்கு இவ்வாறு மேட்சம் வழங்கியது உண்டு.
சிலவருடம் முன் சைக்கிளில் கிரிவலம் செல்லும் பொழுது என் மனதில் இருந்த கிரிவல சிந்தாந்தத்தை உடைத்து தெளிவாக்கியது ஒரு சம்பவம். கிரிவலம் செல்வதை பற்றி எனக்கு ஆணம் இருந்திருக்குமோ என்னவோ இறைவனின் அருளால் அதுவும் நொருங்கியது.
ரமணாஸ்ரமம் முன்பிருந்து சைக்கிளில் கிரிவலத்திற்கு தயாராகி மிதிப்பானை மிதித்தும் வண்டி நகரவில்லை. காரணம் சைக்கிளின் பின் புறம் கைகளால் பிடித்திருந்தார் “ சாக்கு சாமி ”.
இது தான் சாக்கு என அவரைப்பற்றி விளக்கி விடுகிறேன். சாக்கு சாமி என்றவர் திருவண்ணாமலையில் இருக்கிறார். அவதூத நிலையில் இருப்பவர். அங்கும் இங்கும் திரிந்து சாக்குதுணியை ஆடையாக கட்டிக்கொண்டு நிற்பவர். மார்பிலிருந்து தொடைப்பகுதி வரை ஒரே சாக்கு துணியை சுற்றி இருப்பார். தலை முடி சடைசடையாக இருக்கும்.
சைக்கிளின் முன்பகுதியில் வந்து உட்கார்ந்து கொண்டு 'நானும் வரேன்' என்றார். நான் ஒன்றும் பேசவில்லை. சைக்கிளை மிதித்து சில அடி சென்று இருப்பேன். “.... நிறுத்து நிறுத்து என்ன இப்படி கிரிவலம் போறே? தப்பு தப்பு வண்டிய திருப்பி பின்னால விடு” என்றார்.
கிரிவலம் தானே கேள்விப்பட்டிருப்பீர்கள். சாக்கு சாமியுடன் நான் சென்றது கிரி இடம்...! காரணத்தை அவரே பயணத்தின் பொழுது விளக்கினார்.. அது என்னெ வென்றால் ....

(தொடரும்)
24 கருத்துக்கள்:
இண்ட்ரஸ்டிங்.. அடுத்த பாகம் சீக்கிறம்.. :)
அருமையான தொடர் ஸ்வாமி. உங்களுடன் சேர்ந்து கிரி வலம் வந்த உணர்வு வருகிறது.
கிரிவலம் பற்றிய உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.
// மலையை வலப்புறமாக வட்டமிடுமாறு வருவது கிரிவலம். //
இது எனக்கு இன்னும் தெளிவாக புரியவில்லை ஸ்வாமி. கிரிவலம் வரும் பொழுது மலை நம் வலப்புறம் இர்ருக்குமறு சுற்றுவதா இல்லை நாம் மலையை நோக்கி நின்று பிறகு நம் வலப்புறம் திரிம்பி மலை நம் இடபுறம் இருக்கும் படி சுற்ற வேண்டுமா ஸ்வாமி?
// கிரிவலப்பாதை என்பது மூன்று உண்டு. //
சுற்றும் தூரம் மற்றும் சுற்றி வரும் பாதை இந்த வித்யாசம் தவிர்த்து ஆன்மீக ரீதியில் ஏதேனும் மற்றம் உண்டா ஸ்வாமி?
படிக்கப்படிக்க ஆர்வம் கூடுகிறது.கிரிவலம் போகும் நாளை எதிர்பார்க்கிறேன்.
I want to understand ThiruMandhiram. Is there any good book, with details for each and every line. I need a thorough understanding, because i want to follow it.
Guide me if you can.
சுவாமிஜி, இது டூ மச். நல்ல கதை சுவாரசியமா போய்கிட்டிருக்கும் பொது தொடரும் போட்டீங்களே! சன் டிவி சீரியல் போல! ஹி ஹி!
//எத்தனை அட்டோக்கள் மோட்சம் அடைந்ததோ தெரியவில்லை.//
விழுந்து விழுந்து அடி படாமல் சிரித்தேன்! மிகவும் அருமை!
மேலும் தொடருக்காக காத்திருக்கிறேன்!
இண்ட்ரஸ்டிங்.. அடுத்த பாகம் சீக்கிறம்.. :)
amam..daily 2 post podungalen swami ji
//கிரிவலம் தானே கேள்விப்பட்டிருப்பீர்கள். சாக்கு சாமியுடன் நான் சென்றது கிரி இடம்...! காரணத்தை அவரே பயணத்தின் பொழுது விளக்கினார்.. அது என்னெ வென்றால் ...//
இறக்கை கட்டிப் பறக்குதடா 'அண்ணா மலை' சைக்கிளுன்னு சாக்கு சாமியாரை முன்னாடி உட்கார வைத்துக் கொண்டு பாடிக் கொண்டே தானே சென்றீர்கள் ?
திரு சஞ்சய்காந்தி,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு அமரபாரதி,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு சிவா ,
உங்களுக்கு பயங்கரமான குழப்பம் வருகிறதே?
மலை உங்களுக்கு வலப்பக்கம் இருக்க சுற்றுவருவது கிரிவலம். மலையை பறவைபார்வையில் பார்த்தால் கடிகார முள் சுற்றும் திசையில்...
திரு வடுவூர் குமார்,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு யுவா,
திருமந்திரம் பல புத்தகங்கள் உண்டு. சிறந்த குருவினால் மட்டுமே அதனை விளக்கமுடியும்.
நல்ல யோக பயிற்சியும் தியானமும் பழகினால் உங்களுக்கே விளக்கம் தெளிய வாய்ப்புண்டு.
திரு தினேஷ் பாபு,
(Thiruvanamalai Rishigal Board) ;)
TRB ரேட்டிங் முக்கியம் அல்லவா?
உங்கள் வருகைக்கு நன்றி.
சகோதரி இயற்கை,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு கோவி.கண்ணன்,
//இறக்கை கட்டிப் பறக்குதடா 'அண்ணா மலை' சைக்கிளுன்னு சாக்கு சாமியாரை முன்னாடி உட்கார வைத்துக் கொண்டு பாடிக் கொண்டே தானே சென்றீர்கள் ?//
உங்களின் நகைச்சுவை + கருத்துக்கள் கொண்ட பின்னூட்டம் என்னை மட்டுமல்ல yrskbalu அவர்களையும் சிரிக்கவைக்கிறது. :)
ஆம் அப்படி பாடிக்கொண்டே ஞானப்பால் விக்க சென்றோம்.
உங்கள் வருகைக்கு நன்றி
பெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும். முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பெளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள். தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அங்கே கிரிவலம் வர நாள்கிழமை பார்க்க வேண்டுமா?//
திடீரென ஐதீகங்களை உடைக்கிறீர்கள்.பின்னர் பழமைகளின் சீர்மையை விளக்குகிறீர்கள்.நன்று,ஸ்வாமிஜி.
திரு ஷண்முகப்ரியன்,
ஒரே நாளில் மூன்று பகுதிகளையும் படித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி.
”அதிசயம்” எதுவும் நடந்ததாக எழுதவில்லை. தெய்வம் மானிட வடிவில் உண்டு என்பார்கள். அதை நான் உணர்ந்த சந்தர்ப்பத்தை எழுதினேன்.
அதிசயம் என்றால் என் கையில் பயணச்சீட்டு காற்றில் பரந்துவந்திருக்கும். அல்லது லிங்கம் எடுப்பவர் போல வாயிலிருந்து வந்திருக்கும். அதிசயங்களில் எனக்கு(ம்) நம்பிக்கை இல்லை.
இறைவன் உயிர் வடிவில் எங்கும் இருக்கிறார் என்பதை மட்டுமே நம்புபவன்.
உங்கள் வெளிப்படையான விமர்சனத்திற்கு நன்றி.
interesting.. and is it possible for you to guide us if we interested in visiting thiruvannamalai.Thanks swami for your wonderful sharing
என் ஐயத்தை விளக்கியதற்கு மிக்க நன்றி ஸ்வாமி.
எனது மறு வினாக்கு இன்னும் விடை கிடைக்க வில்லை ஸ்வாமி
// கிரிவலப்பாதை என்பது மூன்று உண்டு. //
சுற்றும் தூரம் மற்றும் சுற்றி வரும் பாதை இந்த வித்யாசம் தவிர்த்து ஆன்மீக ரீதியில் ஏதேனும் மற்றம் உண்டா ஸ்வாமி?
திரு சிவா,
//
சுற்றும் தூரம் மற்றும் சுற்றி வரும் பாதை இந்த வித்யாசம் தவிர்த்து ஆன்மீக ரீதியில் ஏதேனும் மற்றம் உண்டா ஸ்வாமி?//
கண்டிப்பாக ஆன்மீக ரீதியான வித்தியாசம் உண்டு. அதை கூறுவதைவிட உணர்ந்தால் நல்லது என்பதால் பதில் அளிக்கவில்லை.
தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் 30 நிமிடத்தில் கிரிவலம் வந்து அனைத்து கோவிலிலும் ஒரு வணக்கம் வைக்கலாம்.
ஆம் மனதை பாதித்த விஷயம் இது என்றாலும்
கிரிவலம் முழுவதும் நம் மக்கள் செய்யும் ரகளைகள் இன்னும் மனதை அதிகம் பாதிப்படையச்செய்கின்றது சுவாமி
நன்றி ஸ்வாமி.
அதை நான் உணர முயற்சிக்கிறேன்.
we chose to settle in thiruvannamalai for ashram and arunachala it self.
the 'pournami affair ' has made it hard for us to access even basic necessities in life and also just the commercialisation has spoilt the whole beauty of it all.But i must say that we have been very lucky to build our home in thiruvannamalai.
thank you swami for the enlightening point about why the pournami giirvalam was started in olden days. Right now i am away from thiruvannamalai and i miss home very much after reading your blog.
I am also happy that in your other blog you explained about 'pariharam' regarding astrology.
//ஆம் அப்படி பாடிக்கொண்டே ஞானப்பால் விக்க சென்றோம்.
//
அய்..இங்கபாரு டிகால்டிய..சாமி ஞானபாலை வாங்கத்தான் முடியும், விக்க முடியாது
இஃகிஃகிஃகி
அப்துல்லா அண்ணே...
/அய்..இங்கபாரு டிகால்டிய..சாமி ஞானபாலை வாங்கத்தான் முடியும், விக்க முடியாது
இஃகிஃகிஃகி//
நன்றாக படியுங்க விக்க... விற்க அல்ல் :)
//நன்றாக படியுங்க விக்க... விற்க அல்ல் :)
//
சாமி இது போங்குஆட்டம்.நான் ஒத்துக்க மாட்டேன்.சொல்வழக்கில் எழுதிப்புட்டு இப்ப சூப்பரா சமாளிக்கிறீங்க
ஹா...ஹா..ஹா...
ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற்றி கேட்டால் கோபம் வருகிறது போல இருக்கே?
மனிதனுக்கு தேவை மூன்று விஷயங்கள், சுற்றம், பணம், மற்றும் ஆன்மீகம் என்றார் எங்கள் வீட்டிற்க்கு வந்த ஒரு சாமியார்.
எப்படி?
//Raju said...
ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற்றி கேட்டால் கோபம் வருகிறது போல இருக்கே?//
ஸ்வாமிக்கும் பசிக்குமா ? வியர்க்குமா ? ன்னு கேட்காமல் விட்டிங்களே....!
:)
திரு ராஜூ,
///ஸ்வாமிக்கும் மற்ற சுவாமிகளை பற்றி கேட்டால் கோபம் வருகிறது போல இருக்கே?///
அனைவரை பற்றியும் புகழ்ந்து மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்க இயலாது. சில நேரங்களில் உண்மையையும் சொல்ல வேண்டி வரும். அப்பொழுது கோபம் என்பது எனக்கு வராது. கேட்பவர்களுக்கு வரும்.
//மனிதனுக்கு தேவை மூன்று விஷயங்கள், சுற்றம், பணம், மற்றும் ஆன்மீகம் என்றார் எங்கள் வீட்டிற்க்கு வந்த ஒரு சாமியார்.
எப்படி?
//
இதை வீட்டுக்குவந்த சாமியாரிடமே கேட்டிருக்கலாம்.
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு கோவி.கண்ணன்,
//ஸ்வாமிக்கும் பசிக்குமா ? வியர்க்குமா ? ன்னு கேட்காமல் விட்டிங்களே....!
//
ஸ்வாமிக்கு எதுவும் ‘இயல்பாக' இருக்காது. என்பது மக்களின் எண்ணம். விக்ரஹ ஆராதனை செய்து இவர்களுக்கு ஸ்வாமிகள் அனைவரையும் விக்ரஹமாகவே பார்ப்பார்கள். சிலர் வயது முதிர்ந்த ஆன்மீகவாதிகளுக்கு குடம் குடமாக அபிஷேகம் செய்து ‘சாமாதி' பேறு கொடுத்த சம்பவம் உண்டு.
Post a Comment