Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, August 2, 2009

ஹிரண்யம்

உலகில் செல்வத்திற்கு பல பெயர்கள் கொடுக்கப்பட்டாலும் ஹிரண்யம் என்ற பெயரில் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. ஹிரண்யம் என வார்த்தையை நீங்களும் சொல்லிப்பாருங்கள் ஒரு கம்பீரம் வரும். ஹிரண்யம் அதிகமாக வைத்துகொண்டதால் ஒரு அசுரனுக்கு ஹிரண்யகசிப்பு என பெயர். அவனைத்தான் நரசிம்ம அவதாரத்தில் வயிற்றை பிளந்து வதம் செய்தார் ஸ்ரீ நாராயணர்.

பணம் ஒருவனுக்கு வந்துவிட்டால் அவனின் ஆட்டம் தாங்கமுடியாது என்பதற்கு ஹிரண்யகசிப்பு ஒரு உதாரணம். ஹிரயண்ய கர்ப்பா என்ற ஒரு இடம் உண்டு. அதாவது செல்வத்தின் கருவரை என அர்த்தம். லக்‌ஷ்மி இங்குதான் இருப்பாளாம். குபேரன் அவளின் ஃபண்டு மேனேஜர். இவர்களின் செல்வம் முழுவதையும் எடுத்துகொண்டன் கசிப்பு.

ஹிரண்ய கசிப்பு யாராலும் வெல்ல முடியாத வரம் வாங்கி இருந்தானாம். ஹிரண்ய கசிப்பு இப்படித்தான் எப்பொழுதும் என சொல்ல முடியாது, ஆனால் எப்பொதும் இப்படித்தான் என சொல்லாம்.

அவனின் தந்தை ஒரு மகரிஷி. அவர் சந்தியாகாலத்தில் தியானத்தில் இருக்கும் பொழுது அழகாகவும் தேஜசாகவும் தெரிந்தார். அவரின் மனைவிக்கு அவர் மேல் மோகம் வந்து தன்னுடன் இணைய சொன்னாள். அப்பொழுது சந்தியாகாலம் அதனால் இணைய கூடாது என மறுத்தார். மனைவி கேட்டும் இணையவில்லை என்பது அதர்மம் என்றார் மகரிஷியின் மனைவி. தர்மவழியில் இருக்கும் மகரிஷி இணைந்ததால் இரட்டைகுழந்தை பிறந்தது அதில் ஒருவன் தான் ஹிரண்யகசிப்பு. அவனின் தம்பியும் ஒரு அசுரனே.

நம் சாஸ்திரம் என்ன சொல்லுகிறது தம்பதிகள் இருவரும் இணைகிறார்கள் என்றால் அது அவர்களின் சொந்தவிஷயம். இணைந்து குழந்தை பெறுகிறார்கள் என்றால் அது சமூகம் சார்ந்த பொது விஷயம். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இணையும் பொழுது நேரம் காலம் அவசியமாம். இன்று எத்தனையோ தம்பதிகள் எத்தனையோ ஹிரண்யகசிப்புவை பெற்று எடுத்திருக்கிறார்கள். மகரிஷியாக இருந்து சந்தியாகாலத்தில் கூடியதற்கே ஹிரண்யகசிப்பு மகன் என்றால் சாதாரண ஆசாபாசத்துடன் பெற்றால். ஆண்டவா...!

ஒரு ஹிரண்யன் இருந்தால் நரசிம்மர் வரலாம். இங்கே நரசிம்மர்கள் அவுட் ஆப் ஸ்டாக். எப்பொழுதும் மனது எதிர்மறையாகவே சிந்திக்கும். ஹிரண்யர்கள் பலர் வந்துவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிரகலாதர்கள் தானே? அப்பொழுது பக்திமான் பிரகலாதன் இருக்க வேண்டுமானால் ஹிரண்யர்கள் இருக்க வேண்டுமல்லவா?

பணம் வந்து ஹிரண்ய கசிப்பு ஆடினான் என்றேன். அது எப்படி என்றால் தேவலோகத்தையும் அனைத்து லோகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவதான். பணம் இருந்தால் அதிகாரம், பதவி என அனைத்தும் வாங்கிவிடலாம். தேவலோகம் என்பது ஒன்றும் இல்லை. நம் எல்லோருக்கு உள்ளேயும் ஹிரண்ய கசிப்பு இருக்கிறார். இல்லையென்றால் கோவிலில் சிறப்பு தரிசனம், அரசு அலுவலகத்தில் லஞ்சம் என அனைத்திலும் ஹிரண்ய வேலை செய்வோமா?.

ஹிரண்யம் என்ற பணம் வேலை செய்ய வேண்டுமானால் மனம் என்ற கருவி வேண்டும். ஆயிரம் ரூபாய் நோட்டு எடுத்து ஒரு பசுமாட்டிடம் காண்பியுங்கள் அதன் கண்கள் விரியாது. இதே ஒரு மனிதனிடம் காண்பித்தால் அவனுக்கு அங்கங்களில் பூரிப்பு தெரியும். மனிதனிடம் புல்லுக்கட்டை காண்பித்தால் ஒன்றும் நடக்காது. அவர் அவர் பணம் அவர் அவருக்கு.

மனம் என்பது ஒரு அதிசய உறுப்பு. ஆம் மனிதனின் மனம் ஒரு உறுப்புதான்.மனம் எங்கே இருக்கிறது என ஒருவரிடம் கேளுங்கள் தன் உடலுக்கு வெளியே இருக்கிறது என சொல்ல மாட்டார். உடலுக்கு வெளியே இல்லையென்றால் மனம் ஒரு உறுப்புதானே?

மனதை எப்படி கட்டுபடுத்துவது என என்னிடம் கேட்ப்பார்கள். மனதை நிற்க வைத்து ஒரு கயிரை எடுத்து வலமாக இருமுறை இடமாக இருமுறை கட்டுங்கள் என்பேன். அது எப்படி என கேட்டால் மனம் என்ற ஒன்று இருந்தால் தானே அது கயிறு ஒன்று இருப்பதை சிந்திக்கமுடியும்? இல்லாத ஒன்றையா கட்ட சொல்லுகிறேன். இருக்கும் மனதை கட்டுங்கள்.

ஆனால் மனது நீங்கள் நினைப்பது போல அல்ல, அதை கட்டுப்படுத்த முடியாது. மனம் எப்பொழுதும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. இப்பொழுது கூட பாருங்கள் உங்கள் மனது என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உங்கள் மனதை நான் வைத்திருக்கிறேன். இதை சோதிக்கலாமா? இந்த வரிகளுக்கு பிறகு இரண்டு பத்திகளை எழுதுகிறேன் மனது உங்கள் கட்டுப்பாடில் இருந்தால் மேற்கொண்டு அதை படிக்காமல் விட்டுவிடுங்கள் பார்க்கலாம்...!

மனது ஒரு ரப்பர்பேண்ட் போல வளையக்கூடியது. ரப்பர் வளையத்தை எடுத்து அதனுள் என் விரல்களை நுழைத்து இழுத்து விளையாடுவதை போல உங்கள் மனதையும் செய்ய முடியும். பாருங்கள் உங்கள் மனத்தில் எனது இரண்டு விரல்களை நுழைத்துவிட்டேன். இப்பொழுது வலமாக இழுக்கிறேன். உங்கள் மனம் வலப்பக்கம் அதிகரிக்கிறது.

விட்டுவிட்டேன். இடமாக இழுக்கிறேன் இடப்பக்கம் பாருங்கள் பெரிதாகிவிட்டது. அதையும் விட்டுவிட்டேன். இரண்டு பக்கமும் மாறி மாறி இழுக்கப்போகிறேன். தயாரா?

வலது ... இடது .... வலது ....
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
இலது ... வடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..
வலது ... இடது ..

சரி உங்கள் மனதை இழுக்கவில்லை விட்டுவிட்டேன். மனதை ஆட்டுவிப்பது உங்கள் புலன்கள் தான். வலது இடது சொல்லும்பொழுது நடுவில் மாற்றி சொன்னேன் உடனே அதை கண்டு கொண்டீர்கள் தானே? உங்க புலன் மனதை இயக்குகிறது. உங்கள் புலனை மனம் மூலம் நான் இயக்குகிறேன். மனது இல்லை என்றால் இத்தனை பிரச்சனை இல்லை. உங்கள் மனம் என்னிடம் சிக்கி இழுபடாது.

உங்கள் மனம் எனது கருத்தில் தொங்குவதில்லை. எனது வார்த்தை ஜாலத்தில் தொங்குகிறது. எனது வார்த்தையை வைத்து கொண்டு என்ன செய்வீர்கள். ஆனாலும் இதை நீங்கள் படிக்க வேண்டி இருக்கிறது..

மனம் இருந்தால் பணம் பண்ணலாம். பணம் இருந்தால் மனம் பண்ண முடியுமா? ஹிரண்யம் என்பது மனசு இருக்கும் வரைதான். ஹிரண்ய கர்ப்பா என்றால் எங்கோ இருக்கும் இடமில்லை. உங்களுக்குள் ஹிரண்ய கர்ப்பம் இருக்கிறது. பணத்தை பிரசவிக்கும் கருப்பை ஹிரண்யம். மனம் இயங்கும் வரை கர்ப்பம் தரிக்க முடியாது. மனம் இருந்தால் நீங்கள் மலடுதான். சரி உங்கள் மனதை நான் ஏன் வைத்து விளையாட வேண்டும்? மனதை விட்டு விடுகிறேன்.

இப்பக்கத்தை மூடிவிடுங்கள்.

அனைத்தும் சுபம்.

32 கருத்துக்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா புரிஞ்சுதுங்க சாமி...

ஸ்வாமி ஓம்கார் said...

:) புரிஞ்சா சரி

essusara said...

aaha! kelambitangaya! kelambitaga

ippavey kanna katuthey.

Raju said...

ஸ்வாமி ஓம்கார், ஹதயோகம் பற்றி ஒரு விடியோ போடலாமே? ஸ்டெப்ஸ் எப்படி?

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி ஹரண்யா என்னும் குடல் இறக்கம் வந்தால் கூட மனிதர்களுக்கு கஷ்ட காலம் தான்.

:)

டெஸ்ட் ட்யூபில் அப்படியெல்லாம் காலம் நேரம் பார்த்து கரு உண்டாக்க முடியுமா ?

//அவனின் தந்தை ஒரு மகரிஷி. அவர் சந்தியாகாலத்தில் தியானத்தில் இருக்கும் பொழுது அழகாகவும் தேஜசாகவும் தெரிந்தார். அவரின் மனைவிக்கு அவர் மேல் மோகம் வந்து தன்னுடன் இணைய சொன்னாள். //

ஆசை வெட்கம் அறியாது என்பார்கள், காமம் காலம் அறியவேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. சிக்கலானது. இபோதெல்லாம் நைட் சிப்ட் வேலை செய்பவர்களுக்கு பகல் தான் இரவு !

ஸ்வாமி ஓம்கார் said...

essusara உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ராஜூ,

ஹதயோகம் நேரடியாக குருமுகமாக கற்கவேண்டும். புத்தகத்திலோ வீடியோவிலோ கற்றுக்கொள்ளாதீர்கள். அது ஆபத்தானதும் கூட.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

நரசிம்ம அவதாரம் ஹிரண்ய கசிப்புவை வதம் செய்யும் பொழுது குடலை கிழித்து மாலையாக போட்டதாக சொல்லுவார்கள்.

குடலிறக்கத்திற்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? டாக்டர் நரசிம்மன் தான் சர்ஜரி செய்யவேண்டும் என நினைக்கிறேன். :)




எத்தனையோ எழுதி இருந்தாலும் அதில் ஒரு விஷயத்தை மட்டும் அதிகமாக பார்த்திருக்கிறீர்கள்.

வாரியார் சொன்னது போல..

“காமன் அனைவருக்கும் காமன்”

கோவி.கண்ணன் said...

//எத்தனையோ எழுதி இருந்தாலும் அதில் ஒரு விஷயத்தை மட்டும் அதிகமாக பார்த்திருக்கிறீர்கள்.

வாரியார் சொன்னது போல..

“காமன் அனைவருக்கும் காமன்”//

ஒரு பாடலின் இசை, குரல் நன்றாக இருந்தாலும் ஒரு சில வரிகள் மட்டும் உடனடியாக நினைவுக்கு வருவது இசையில் இருக்கும் வரி விலக்கு இல்லையா ? :)

Unknown said...

'G' you doing good job, you'll get

a lot of bless, keep go.

yrskbalu said...

ஒரு பாடலின் இசை, குரல் நன்றாக இருந்தாலும் ஒரு சில வரிகள் மட்டும் உடனடியாக நினைவுக்கு வருவது இசையில் இருக்கும் வரி விலக்கு இல்லையா ? :)

kovikannan- you are commenting too smart. good. if you tune your intellect with or towards god- you may do many wonders.

Unknown said...

அருமையான பதிவு

கோவி.கண்ணன் said...

//kovikannan- you are commenting too smart. good. if you tune your intellect with or towards god- you may do many wonders.//

எனது ஆன்மீகம் / இறை நம்பிக்கைப்ப் பற்றி ஸ்வாமியுடன் பகிர்ந்து இருக்கிறேன், அதனால் தான் எனது பின்னூட்டத் திருவிளையாடல்களை பொறுத்துக் கொள்கிறார்.

Anonymous said...

ஹிரண்யம் பற்றி நன்றாக கருது கூறியிருக்கீர்கள்! மிக்க நன்றி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கணேஷன்,

திரு பிரபு,

திரு யூவர்ஸ் பாபு,

திரு தினேஷ் பாபு,

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிகழ்காலத்தில்... said...

\\எனது பின்னூட்டத் திருவிளையாடல்களை பொறுத்துக் கொள்கிறார்.\\

இறைவனின் திருவிளையாடல்களை
கண்டு பரவசமடையாமல் விட்டாரே:)))

கோவி.கண்ணன் said...

//இறைவனின் திருவிளையாடல்களை
கண்டு பரவசமடையாமல் விட்டாரே:)))

August 3, 2009 8:15 PM//

இறைவன் திருவிளையாடலா ? அது உங்கள் ஆட்டம், அதைப் பார்த்து பரவசப்பட்டாரா ? ஆவேசப்பட்டாரா அவரைக் கேட்டுச் சொல்கிறேன்.

:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.நிகழ்காலம்,

கடைசிவரை பதிவை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

எதிர்காலத்திலாவது சொல்லுவார் என நினைக்கிறேன் :)

கோவி.கண்ணன் said...

//ஸ்வாமி ஓம்கார் said...

திரு.நிகழ்காலம்,

கடைசிவரை பதிவை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

எதிர்காலத்திலாவது சொல்லுவார் என நினைக்கிறேன் :)//

எதிர்காலமா ?
நிகழ்காலத்தில் கடந்த காலத்தில் அறிவே தெய்வம், தெய்வத்தின் திருவிளையாடல்களுக்கு கேள்வியோ பதிலோ ஏது? முக்காலம் உணர்ந்தோருக்கு ஒருகாலமும் கிடையாது.

நிகழ்காலத்தில்... said...

\\முக்காலம் உணர்ந்தோருக்கு ஒருகாலமும் கிடையாது.\\

ஒரு காலம்உண்டு, அதுதான் நிகழ்காலம்

ஸ்வாமி ஓம்கார் said...

எல்லாம் காலக்கொடுமை :)

நிகழ்காலத்தில்... said...

\\நம் சாஸ்திரம் என்ன சொல்லுகிறது தம்பதிகள் இருவரும் இணைகிறார்கள் என்றால் அது அவர்களின் சொந்தவிஷயம். இணைந்து குழந்தை பெறுகிறார்கள் என்றால் அது சமூகம் சார்ந்த பொது விஷயம். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள இணையும் பொழுது நேரம் காலம் அவசியமாம்.\\

\\மகரிஷியாக இருந்து சந்தியாகாலத்தில் கூடியதற்கே ஹிரண்யகசிப்பு மகன் என்றால் சாதாரண ஆசாபாசத்துடன் பெற்றால். ஆண்டவா...!\\

இனி குழந்தை பெறும் நிலையில் உள்ள தம்பதியினருக்கு சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்,

அவர்களுக்கு வேண்டிய குழந்தையை பெறும் வாய்ப்பு அவர்களிடத்தே!!!

மேன்மையை உணர வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

\\மனம் என்ற ஒன்று இருந்தால் தானே அது கயிறு ஒன்று இருப்பதை சிந்திக்கமுடியும்? இல்லாத ஒன்றையா கட்ட சொல்லுகிறேன். இருக்கும் மனதை கட்டுங்கள்\\

எங்களுக்கு கட்டத்தெரியுதோ இல்லையோ.,

தங்களுக்கு் மனதை விரலை வைத்து ஆட்ட முடிகிறது.,
இதுதான் ஓம்கார்.,

தொடருங்கள் மனதைப் ’பற்றி’ அடிக்கடி..

நிகழ்காலத்தில்... said...

\\ஸ்வாமி ஓம்கார் said...

எல்லாம் காலக்கொடுமை :)\\

:)))))))

நிகழ்காலத்தில்... said...

\\மேன்மையை உணர வாழ்த்துக்கள்\\

தம்பதியர் இதன் மேன்மையை உணர வாழ்த்துக்கள்

Itsdifferent said...

அருமையான பதிவு. சென்ற வாரம் தான் இந்த பதிவினை பற்றி தெரிந்து கொண்டேன். நிறைய விஷயங்கள், தற்காலத்துக்கு ஏற்ற மாதிரி சொல்லப்படும் தத்துவங்கள். மிக்க நன்றி. தொடருங்கள், நான் உங்களை தொடருவேன்.
தங்களின் பொறுமை போற்றத்தக்கது. எனது சமீபத்திய இந்திய விஜயத்தின் போது நம் நாட்டு மக்கள் ஏன் இப்படி பொறுமையே இல்லாமல், அனைவரையும், முந்தி கொண்டு ஓட பார்க்கிறார்கள் என்று, எண்ணி வருத்தப்பட்டேன். இதனை ஞானிகள், தத்துவங்கள் இருந்தும், நாம் ஏன் இந்த பொறுமையை கற்கவில்லை? ரோட்டில் ஆகட்டும், வரிசையில் நிற்பதாகட்டும் (நின்றால்!!!), பொறுமை என்பதே எவரிடத்திலும் இல்லை. ஏன்இப்படி?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,
நான் கேட்டதுக்கு இணங்க ஹோல் சேலில் பின்னூட்டியதற்கு நன்றி. அதற்கான சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு itsdifferent,

நீங்கள் இந்தியாவிலிருந்து சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டதோ?

இயல்பாகவே நம் மக்களுக்கு வெளியூர் சென்றுவிட்டால் நம் நாடும் அது போல ஆகவேண்டும் என விருப்பம் ஏற்படும்.
வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் ஒரு தாழ்வுமனப்பான்மையால் வரும் ஆணவம்...!

நம் நாட்டில் பெரும்பான்மையாக வரிசையில் நிற்கமாட்டார்கள். மருத்துவர் மற்றும் சினிமா அரங்கில் மட்டுமே வரிசையை பார்க்க முடியும். அதற்காக இவர்கள் பொருமையற்றவர்கள் என சொல்ல முடியாது.

எறும்பு வரிசையாக செல்லும். சிங்கமும் யானையும் வரிசையாக செல்லாது.. சாரையாக செல்லாமல் கூட்டமாகவே செல்லும்.

நீங்கள் உலகம் முழுவதும் எறும்பை எதிர்பார்க்கிறீர்கள். அனைத்தும் இருந்தால் தானே சுவாரசியம்? எனது வெளிநாட்டு மாணவர்கள் தெருவில் குப்பை இட்டும், உமிழ்ந்தும் மகிழ்வதை கண்டிருக்கிறேன் அவர்கள் ஏதோ பள்ளி விடுமுறையில் இருக்கும் குழந்தை போல எனக்கு தெரிகிறார்கள்.

அந்த அந்த நாட்டின் தன்மையை ஆங்கே இருந்தே ரசியுங்கள்...! வேறு பாடுகள் ரசனையை கூட்டும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு itsdifferent..

கடைசியாக ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். ஏன் இங்கே மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கான விடை உங்கள் பெயரிலேயே இருக்கிறது..

It's Different.. !

Itsdifferent said...

நெற்றிபொட்டில் அடித்தார் போன்ற நேர்மையான பதில்.
நான் ஆதங்கத்தோடு எழுதினேன், ஆனால் நீங்கள் அதை ஆணவம் என்கிறீர்கள்? புரியவில்லை!!!

ஷண்முகப்ரியன் said...

மனம் என்பது ஒரு அதிசய உறுப்பு. ஆம் மனிதனின் மனம் ஒரு உறுப்புதான்.மனம் எங்கே இருக்கிறது என ஒருவரிடம் கேளுங்கள் தன் உடலுக்கு வெளியே இருக்கிறது என சொல்ல மாட்டார். உடலுக்கு வெளியே இல்லையென்றால் மனம் ஒரு உறுப்புதானே?//

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சரியென்று தோன்றுகிறது.
ஆனால் ஒரு அழகான சூர்யோதத்தை ரசித்து, லயித்த மனம் உடலை விட்டு ஆகாயத்தில் அல்லவா சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது?
உடலை விட்டுப் பறக்கும் வேறு உறுப்புக்கள் உண்டா ஸ்வாமிஜி?
உடலையே மறக்கும்,மறைக்கும் வேறு உறுப்புக்கள் உண்டா ஸ்வாமிஜி?
உடல்தான் மனதின் உறுப்பு என்று சொன்னாலும் உண்மையாகத்தான் தெரிகிறது.

sasi said...

superb swamygi