Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, August 28, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 14

ஸ்ரீ சக்ர புரி என்னும் பூமியின் இந்த சிறு பகுதி யோகிகளையும் ஞானிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கே முதலில் தோன்றிய ஞானி யார்? அவர் ரமண மஹரிஷியா, சேஷாத்திரி ஸ்வாமிகளா இல்லை வேறுயாரேனுமா என கேள்விகள் முளைக்கும். ஜோதி ஸ்வரூபமாய் முதலில் தோன்றிய ஞான குரு இறைவனே. வேறு யாராக இருக்க முடியும்? இங்கே என்றும் எப்பொழுதும் ஞான குருவாய் இருக்கும் ஆதி குரு அனைவரையும் அவர்களுக்கு தெரியாமலே கவர்ந்திழுத்து முழுமையான ஞானத்தை வழங்கிவருகிறார்.

ரமணர் மற்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த காலம் சென்ற நூற்றாண்டுதான் (1890 முதல் 1950 வரை). அதற்கு முன் விருப்பாக்‌ஷி தேவர், குகை நமச்சிவாயர், அருணகிரி நாதர் என இடைவிடாத ஞான சங்கிலியை இறைவன் ஏற்படுத்திய வண்ணமே இருக்கிறான். காலத்தால் இவர்கள் வேறுபட்டாலும் ஞானத்தால் ஒன்றுபட்டவர்கள்.

இங்கே தோன்றிய ஞானிகள் அனேகருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. அவர்கள் பூத உடலில் வாழ்ந்த காலத்தில் சக மனிதர்களால் நிந்திக்கபட்டும்,சந்தேகிக்கபட்டும், துன்புறுத்தபட்டும் இருக்கிறார்கள். அவை அனைத்தும் அவர்களின் ஞான நிலையையும் அவர்களில் உள் நிலையின் உயர்வையும் உலகுக்கு காட்டவே இறைவனின் அருளால் ஏற்படுத்தபட்டது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்கள் சிலருக்கு மட்டுமே அவர்கள் எங்கே பிறந்தார்கள், தாய்தந்தையர் யார் என்ற தகவல்கள் தெளிவாக இல்லை. எளிமையாக சொல்ல வேண்டுமானால் ரிஷிமூலம் தெரியாது. திருவண்ணாமலையில் வாழ்ந்து பலருக்கும் தெரியாத சில ஞானிகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.


விருபாக்‌ஷி குகை

விருப்பாக்‌ஷி தேவர் என்பவர் வீர சைவம் சார்ந்த கர்நாடக தேசத்திலிருந்து வந்ததாக தகவல் உண்டு . கோவிலுக்கு மேற்கே அருணாச்சல மலையின் அடிவாரத்திற்கு சற்று மேலே இருக்கும் குகையில் வாழ்ந்துவந்தார். இவருக்கு பல சிஷ்யர்களும் இருந்தார்கள். ஞான கருத்துக்கள் நிறைந்த பாடல்களை வெண்பா வடிவிலும் பாடல் வடிவிலும் எழுதினார். இவர் வசித்த குகை ஓங்கார வடிவில் இருக்கிறது. அங்கே தியானித்தால் சொல்லவண்ணா உள்ளுணர்வை ஏற்படுத்துகிறது. இந்த குகையின் சக்தியை முழுமையாக உணர்ந்தவர் பகவான் ரமணர் எனலாம். இந்த குகையிலேயே சில வருடம் ரமணர் வாழ்ந்துவந்தார். தற்சமயம் இக்குகை ரமணாஸ்ரமத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.


விருப்பாக்‌ஷி தேவர் தனது இறுதி நிலை நெருங்குவதை உணர்ந்து தன்னை ஒரு துணியில் மூடிவிட்டு அனைவரையும் குகையின்
வெளியே காத்திருக்குமாறு கூறினார். சில மணி துளிகளுக்கு பிறகு உள்ளே வந்த சிஷ்யர்கள் அந்த துணியை விலக்கி பார்த்த பொழுது அவரின் பூத உடல் முழுவதும் விபூதியாக இருந்தது. அந்த விபூதியை லிங்க ரூபமாக குவித்து இன்றும் இந்த குகையில் வைத்திருக்கிறார்கள்.

அண்ணாமலையார் பாதம் என்ற அருணாச்சல மலை உச்சியில் ஏறுவதற்கு உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் விருப்பாக்‌ஷி குகையில் தியானிக்கலாம். ஞான அலைகளும் ஓங்கார ஓசையும் என்றும் நிறைந்திருக்கும் குகை இது.

குகை நமச்சிவாயர் சமாதி

ஸ்ரீசக்ர புரியில் வாழ்ந்த மற்றும் ஒரு ஞானி குகை நமச்சிவாயர். அருணாச்சல மலையின் கிழக்கு பகுதியில் குகையில் இவரும் இவரின் முதன்மை சீடர் குரு நமச்சிவாயரும் வாழ்ந்து வந்தார்கள். குகை நமச்சிவாயர் இயற்றிய பாடல்களும் மக்களுக்கு வழங்கிய அருளுரைகளும் பிரசித்தமானது. குரு நமச்சிவாயர் மற்றும் அவர் சிஷ்யருக்கும் நடந்த குரு சிஷ்ய சம்பாஷணை மற்றும் சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானது. இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த நிகழ்ச்சியை படிக்க இங்கே செல்லவும்.

எல்லா செல்வமும் நிறைந்த ஸ்ரீசக்ர புரியின் பவளக்குன்றில் ஒன்றும் இல்லாதவனாக படுத்திருந்தேன். எனது உடலில் இனம் புரியாத ஒரு ஆனந்த அலை இசையை போல நிகழ்ந்துகொண்டிருந்தது. சில நிமிடங்களில் எனது உடல் முழுவதும் அதிர்வதையும் , ஒளியுடன் கூடிய ஒரு அதிர்வு இருப்பதையும் கண்டேன். அந்த விஷயம் ஒரு ஷணத்தில் நிகழ்தது. எங்கும் எதிலும் நான் இருந்தேன். பாறையாக, மரமாக, அனைத்து உயிராக , சிறியதாக மற்றும் பிரம்மாண்டமாக என எங்கும் நிறைந்திருந்தேன். அவற்றை விளக்க வார்த்தையில்லை. விளக்க முயற்சிக்கும் பொழுது மொழியின் இலக்கணம் இலக்கற்று தெரிகிறது.

என்னை உடலாக நினைத்த நான் முழுமையாக உணர்ந்த நிலை அது. தியானம் செய்யும் பொழுது ஆழ்ந்து இருக்கும் சில வினாடிகள் இப்படி நிகழ்வதுண்டு. ஆனால் சில காரணத்தால் சகஜநிலைக்கு வந்துவிடுவேன். அன்று எவ்வளவு நேரம் அப்படி ஆனந்தத்தில் திளைத்தேன் என தெரியவில்லை.


தன்னிலை திரும்பும் பொழுது ஆனந்தத்தின் எச்சம் என்னில் இருந்தது. கிழக்கை சூரியன் ஆக்ரமிக்க துவங்கி இருந்தான். நான் படுத்திருந்த நிலையில் எனது இடது பக்கம் சில சலனம் தெரிந்தது. என உடலை அசைத்து என்னில் இருந்த ஆனந்தத்தை குறைக்க தயாராக இல்லை. என் தலையை மெல்ல திருப்பி பார்த்தேன். ஐந்து நபர்கள் நின்று இருந்தார்கள். உடலில் ஆடை இல்லை. நெடிய உருவமும் உடல் ரோமம் முழுவதும் மழிக்கபட்ட நிலையில் நின்று இருந்தார்கள். உடலில் எந்த மத அடையாளமும் இல்லை.

அவர்களின் கண்களும் உருவமும் அசாதாரண நிலையில் இருந்தது. உடல் அசைவற்று அவர்களை பார்த்தவாறு இருந்தேன். என்னை கூர்ந்து சில நிமிடங்கள் பார்த்தவண்ணம் இருந்தார்கள். பின்பு சிரம் தாழ்த்தி வணங்கி விட்டு சென்றார்கள்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட அந்த நிலை பின்பு எனக்கு புன்புலத்தில் எப்பொழுதும் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. என்னால் அதை தவிர்த்துவிட்டு இருக்கமுடியாத நிலை. அந்த நிகழ்வு வரை இருந்த நான் இறந்து புது பிறவி எடுத்திருந்தேன். எனது செயல்கள் கூட்டுக்குள் இருந்து வெளியேறி வானில் பறக்க துவங்கியது போல வட்டத்தை விட்டு வெளியேறி அனைவருக்கும் பயன்பட துவங்கியது.

இவ்வாறு இரு நாட்களையும் திருவண்ணாமலையை கழித்த நான். கடைசி நாளான இன்று செய்வதறியாது இருந்தேன். கோவைக்கு திரும்ப வேண்டும் எப்படி திரும்ப போகிறேன்?

(தொடரும்)

30 கருத்துக்கள்:

sakthi said...

அந்த துணியை விலக்கி பார்த்த பொழுது அவரின் பூத உடல் முழுவதும் விபூதியாக இருந்தது. அந்த விபூதியை லிங்க ரூபமாக குவித்து இன்றும் இந்த குகையில் வைத்திருக்கிறார்கள்.

படிக்கும் போதே ஒரு வித பரவச நிலை ஏற்படுகின்றது சுவாமிஜி

Mahesh said...

சிலிர்ப்பா இருக்கு !!

கோவி.கண்ணன் said...

//எல்லா செல்வமும் நிறைந்த ஸ்ரீசக்ர புரியின் பவளக்குன்றில் ஒன்றும் இல்லாதவனாக படுத்திருந்தேன். எனது உடலில் இனம் புரியாத ஒரு ஆனந்த அலை இசையை போல நிகழ்ந்துகொண்டிருந்தது. சில நிமிடங்களில் எனது உடல் முழுவதும் அதிர்வதையும் , ஒளியுடன் கூடிய ஒரு அதிர்வு இருப்பதையும் கண்டேன். அந்த விஷயம் ஒரு ஷணத்தில் நிகழ்தது. எங்கும் எதிலும் நான் இருந்தேன். பாறையாக, மரமாக, அனைத்து உயிராக , சிறியதாக மற்றும் பிரம்மாண்டமாக என எங்கும் நிறைந்திருந்தேன். அவற்றை விளக்க வார்த்தையில்லை. விளக்க முயற்சிக்கும் பொழுது மொழியின் இலக்கணம் இலக்கற்று தெரிகிறது.
//

அத்வைத சித்தாந்திகளுக்கு இப்படிப் பட்ட காட்சிகள் கிடைக்கும், பரவச நிலையில் சிலை வழிபாட்டினர் என்ன உருவங்களை வணங்குகிறார்களோ அந்த உருவம் காட்சியாக கிடைக்கும்.

உருவாய், அருவாய் எப்படி நினைக்கிறீர்களோ காட்சியும் அப்படியே.

- கோவியானந்தா :)

எம்.எம்.அப்துல்லா said...

//விருப்பாக்‌ஷி தேவர் என்பவர் ஆந்திர தேசத்திலிருந்து வந்ததாக தகவல் உண்டு //

அப்படியா!!! நான் ஏதோ மதுரையில் இருந்துபோன முக்குலத்தோர்னு நினைச்சேன்

:))

பெருசு said...

எப்படி கோவைக்கு திரும்பினீர்கள்.

அடுத்த பகுதிக்கு காத்திருக்கிற்ஓம்.

senthil said...

சில நிமிடங்களில் எனது உடல் முழுவதும் அதிர்வதையும் , ஒளியுடன் கூடிய ஒரு அதிர்வு இருப்பதையும் கண்டேன்.


என்ன ஒரு உன்னத நிலை . நான் துங்கும் போதும் இவ்வாறு நிகழ் முயற்சி செய்வேன்...!!!!!!1

Anonymous said...

மிக அருமையான அனுபவம் சுவாமி. இதுதான் பிரம்ம ஞானமா?

Siva Sottallu said...

மிக சுவாரஷ்யமான கட்டுரை ஸ்வாமி. எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

என் பொய்சிலிர்த்தது (மெய் இன்னும் உணராதவன் நான்).

ஷண்முகப்ரியன் said...

இனி எப்போது திருவண்ணாமலை சென்றாலும் உங்கள் ஞாபகம் இருக்கும்,ஸ்வாமிஜி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி சக்தி,
திரு மகேஷ்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

பூஜ்யாய ஸ்ரீ கோவியானந்தா :)

//அத்வைத சித்தாந்திகளுக்கு இப்படிப் பட்ட காட்சிகள் கிடைக்கும், பரவச நிலையில் சிலை வழிபாட்டினர் என்ன உருவங்களை வணங்குகிறார்களோ அந்த உருவம் காட்சியாக கிடைக்கும்.

உருவாய், அருவாய் எப்படி நினைக்கிறீர்களோ காட்சியும் அப்படியே.

- கோவியானந்தா :)//

உங்கள் விளக்கம் தாங்கலை.

பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

//அப்படியா!!! நான் ஏதோ மதுரையில் இருந்துபோன முக்குலத்தோர்னு நினைச்சேன்

:))//

அவர் பெயரில் கட்சி ஆரம்பிக்காம போனீங்களே அது போதும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பெருசு,

திரு செந்தில்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ்,

அதுக்கு என்ன பெயர் என எனக்கு தெரியவில்லை.

திரு சிவா,
உங்கள் வருகைக்கு நன்றி.

திரு ஷண்முகப்ரியன்,

திருவண்ணாமலை செல்லும் பொழுது மட்டும் தானா :)

உங்கள் வருகைக்கு நன்றி

DHANA said...

super

தேவன் said...

///ஜோதி ஸ்வரூபமாய் முதலில் தோன்றிய ஞான குரு இறைவனே. வேறு யாராக இருக்க முடியும்?///

எல்லாம் வல்ல இறையின் ஞானக்கருவூலம் அண்ணாமலையார் கோவில்.

///அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஏற்பட்ட அந்த நிலை பின்பு எனக்கு புன்புலத்தில் எப்பொழுதும் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. என்னால் அதை தவிர்த்துவிட்டு இருக்கமுடியாத நிலை.///

உணர்வின் எழுத்துக்கள் பரவசத்தின் உச்சம்.

நன்றி அய்யனே.

அடுத்த பதிவு எப்போது.

fieryblaster said...

Kandavan vindilar. Vindavar Kandilar. :)

Mahesh said...

//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்//

அருமை !!!

கோவி.கண்ணன் said...

//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்.

August 29, 2009 10:59 AM
/

அதைத்தான் அத்வைத சிந்தாந்திகள் காணுவார்கள், உணருவார்கள், நுகர்வார்கள் இன்னும் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். மனம் எதன் மீது நாட்டம் கொண்டு இருக்கிறதோ காட்சியும் அப்படியே.

//உங்கள் விளக்கம் தாங்கலை.//

உங்கள் கோபத்தை தூண்டும் வகையில் அப்படி ஏதும் சொல்லிவிட்டேனா ?

ஆன்மிகம் வெறும் பரவசம் சார்ந்த உணர்வு மட்டுமே அல்ல என்று நான் சொல்லத் தேவை இல்லை.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவிகண்ணன்,

//
//உங்கள் விளக்கம் தாங்கலை.//

உங்கள் கோபத்தை தூண்டும் வகையில் அப்படி ஏதும் சொல்லிவிட்டேனா ?

ஆன்மிகம் வெறும் பரவசம் சார்ந்த உணர்வு மட்டுமே அல்ல என்று நான் சொல்லத் தேவை இல்லை.//

கோவம் எப்பொழுதும் இல்லை.
காட்சிகள் கிடைக்கும் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்தேன் அவ்வளவே. :)

காணுதல், உணருதல் ஆகியவை நடக்க ஐபுலன் வேலை செய்ய வேண்டும். நான் கூற வந்த விஷயம் அதை தாண்டியது என சொல்ல முயன்றேன்.

ஞானிகள் மறுமொழி கூறும் பதிவரிடம் அஞ்ஞானி கோபப்டுவேனா :)

Sanjai Gandhi said...

தகவல் பிழை. முதல் ஞானி பெயர் சஞ்சய்காந்தி. :)

Food Safety Solutions said...

என் தலையை மெல்ல திருப்பி பார்த்தேன். ஐந்து நபர்கள் நின்று இருந்தார்கள். உடலில் ஆடை இல்லை. நெடிய உருவமும் உடல் ரோமம் முழுவதும் மழிக்கபட்ட நிலையில் நின்று இருந்தார்கள். உடலில் எந்த மத அடையாளமும் இல்லை.

சுவாமிஜி,
யார் அவர்கள் என்று யூகிக்க முடியுமா? இந்த அடையாளங்களுடன் ஐவரை வேறு எங்கோ படித்த நாபகம், முடிந்தால் சொல்லுங்கள்

முருகன் அடிமை said...

மிகவும் அருமையான கட்டுரை

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை, அனால் பரவச நிலை என்பது நம் எதிர்பார்ப்பின் காரனமாக நமது மூளை வரையும் காட்சி, என எனக்கு ஒரு சந்தொகம் உள்ளது. இந்த காட்சி கூட கீதையில் கண்ணன் சொன்னதை படித்தால் வந்து இருக்காலம். இந்த வகையில் கோ.வீ. கண்ணன் கூறுவது கூட சரி என்று நினக்கின்றேன்.

seethag said...

சுவாமி,

படிக்க படிக்க ரொம்ப நன்றாகவும்,பொறாமையாகவும் உள்ளது.(மன்னிக்கவும்).எனக்கு தெரிந்து, விருபக்ஷர் கர்நாடகத்தை சேர்ந்தவர்.பிழை இருக்கலாம்.

எனக்கு வீடு அங்கேயே இருந்தும் என் அனுபவங்கள் மிகவும் சாதாரணமானவை.

சீதா

Rajagopal.S.M said...

நேற்று திருவண்ணாமலை பயணம் இனிதே அமைந்தது.... நன்றி சுவாமிஜி

T K Arumugam said...

ஐயா

நான் நேற்றிலிருந்து தான் உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன்.

மிக ஈர்ப்பு.

ஸ்ரீ சக்ர புரி - பதினான்கு பகுதியும் படித்து விட்டேன். கோவைக்கு எப்படி திரும்பினீர்கள் என்று அறிய ஆவலாய் உள்ளேன்.

மேலும் "தொகுத்தவை" -இல உள்ள பல்வேறு கட்டுரைகள் (ருத்ராஷம் போன்றவை ) மிக அருமை.

வாழ்த்துக்கள்

Anonymous said...

//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்.//

Correct Swamiji! Like how Osho and J.Krishnamurthy said "The Observer is the Observed!"

Siva Sottallu said...

//பார்ப்பது, பார்பவன், பார்க்கபடும் பொருள் அனைத்தும் ஒன்றானால் பார்ப்பவன் யார் பார்ப்பது எதை என்பதை தெரிந்தால் காட்சி காணுதல் என்பது அங்கே இல்லை என தெரிய வரும்.//

இதை தான் திருமூலர் இப்படி கூரிஇருக்கிராரோ.

"மரத்தை மறைத்தது மாமதயானை

மரத்தில் மறைத்தது மாமதயானை"

APPAVOU said...

நீங்கள் எழுதிய அனுபவ
தொடரை எனக்கு இன்று தான்
படிக்கும் அதிஷ்டம் வாய்த்தது.
படிக்க படிக்க எனக்குபரவசமும்
கண்ணீரும் என்னால் கட்டுபடுத்த
முடியவில்லை.இப்பிறவிப்
பயனை அடைந்துவிட்ட
அனுபவம் இது
எனக்கு ஏன் என்று தெரியல
அந்த அனுபவம் எனக்குள்ளும்
நிகழ்ந்தது