Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, September 5, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15

ஆன்மீகம் என்பது உலக மக்களிடயே மத ரீதியாக பரவி இருப்பதால் அவர்களுக்கு உள் நிலையும் முழுமையாடையாமல் இருக்கிறது. அதனால் தான் ஸ்ரீ சக்ர புரி போன்ற இடங்களில் எப்பொழுதும் மஹான்கள் தோன்றி ஆன்மீக பேராற்றல் குறையாத வண்ணம் இருக்க செய்கிறார்கள்.

ஜீவன் முக்தர்களான இவர்களின் ஆற்றல் ஏந்த வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் சென்று சேருகிறது. ஏழை - பணக்காரன், ஆண்-பெண், ஜாதி-மதம் போன்ற வித்தியாசங்கள் இவர்களின் சன்னிதியில் இருப்பதில்லை.

பகவான் ரமண மஹரிஷியை புரிந்துகொள்ளாத பலர் அவர் பிராமணர்களுக்கு ஆசிரமம் நடத்தியதாக சொல்லுவார்கள். இவர்களின் அறியாமைக்கு விலங்குகளை கூட ஒப்பிட்டு விலங்குகளை அசிங்கபடுத்த கூடாது. பிரட்டீஷ் காலத்தில் வாழ்ந்த கட்டுபெட்டிதனமான பிராமண சமூகம் பிற ஜாதி மதத்தினரை அருகில் வரவோ தொட்டு பேசவோ அனுமதிக்க மாட்டார்கள். முக்கியமாக அவர்களை சமமாக வைத்து பேசமாட்டார்கள். ஆனால் பகவான் ரமணர் தனது ஆழந்த ஆன்மீக ஆற்றலால் பல்லாயிர கணக்கான கிலோமீட்டர்க்கு அப்பால் உள்ள வெளிநாட்டினரை திருவண்ணாமலைக்கு ஈர்த்தார்.

அந்த வெளிநாட்டினரில் சிலர் ரமணரின் ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக வாழ்க்கையை மேற்கொண்டு அங்கேயே முக்தி அடைந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சாது அருணாச்சலா. இவர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியில் போர் புரிந்தவர். பிறகு ரமணரின் தரிசனத்தால் தன்னிலை உணர்ந்து ஐரோப்பாவிலிருந்து வந்து ரமணாஸ்ரமத்தில் தஞ்சம் அடைந்தார். ஐரோப்பியரானாலும் தமிழ் பயின்று ரமணரின் மேல் வெண்பா பாடும் அளவுக்கு சாது அருணாச்சலா அவர்களின் ஆன்மீக வாழ்க்கை அமைந்தது. ரமணாஸ்ரமத்தில் பின் புறம் , கந்தாஸ்ரமம் போகும் வாயிலின் அருகில் இவரின் சமாதி இருக்கிறது.

சாதுக்களுக்கு மட்டும் அல்ல, காகம், குரங்கு, பசுமாடு மற்றும் மயில் ஆகியவற்றிற்கும் பகவான் ரமணர் முக்தி அளித்து ரமணாஸ்ரமத்திலேயே சமாதி எழுப்பி இருக்கிறார்கள். ஞானிகளின் முன் யாவரும் ஒர் நிலையில் இருக்கிறோம் என்பதை ரமணரின் சன்னிதியே மாபெரும் சாட்சியாகும்.

திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டினர் ஆன்மீக உணர்வு இல்லாமல் சுற்றுலா நோக்குடன் வந்தாலும் ஏதோ ஒரு சக்தி அவர்களை புரட்டி போட்டுவிடுகிறது. வந்தவுடன் பத்து நாட்கள் அவர்களின் செயல் சுருங்கி மிகவும் மெளனத்தில் இயற்கையாகவே இருப்பார்கள். அவர்களின் இயக்கம் மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும். எனது ஐரோப்பிய மாணவர்களிடமும், வேறு சிலரிடமும் நான் நேரடியாக உணர்ந்த விஷயம் இது. பிறகு அவர்களிடம் விசாரித்தால் ஆனந்த கண்ணீரை தவிர பதில் எதுவும் இருக்காது.

ஸ்ரீ சக்ர புரிக்கு வரும் வெளிநாட்டினர் தங்களுக்குள் இருக்கும் நற்பண்புகள், அன்பு, சேவை இவற்றை யாரும் கற்றுதராமலே உணருகிறார்கள். தங்கள் நாட்டில் உயர் பதவியில் இருப்பவர்க் கூட அவற்றை விட்டு விட்டு இங்கே பிறருக்கு சேவை செய்ய வந்து விடுகிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு ஐரோப்பிய இளைஞன் சைக்கிளில் மரகன்றுகளும் தண்ணீர் டிரம்முடன் தினமும் பயணிப்பார்.

மரக்கன்றை நட்டு நீர் ஊற்றி வளர்ப்பது அவரின் சேவை. திருவண்ணாமலை மற்றும் கிரிவல பகுதி இவ்வளவு பசுமையாக இருக்க அவர் அதிகபட்ச காரணம் என்பேன். ரமணாஸ்ரமத்தின் அருகில் சிறிய இடத்தில் அவர் மரக்கன்றுகளை வளர்க்கிறார். நீங்கள் அவரிடம் மரகன்றை இலவசமாக வாங்கி சென்றால் எங்கே வைக்கிறீர்கள் என கேட்டு அடுத்த நாள் சைக்கிளில் அதற்கும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார். யாரிடமும் உதவி பெறாமல் தனிமனிதனாக பல ஆண்டுகளாக இவர் இயங்கிவருகிறார். பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறோம் என தினசரியில் விளம்பரம் செய்யும் ஆன்மீகவாதிகளை காணும் பொழுது இந்த ஐரோப்பிய இளைஞனை நினைத்துக்கொள்வேன்.

திருவண்ணாமலையை பார்த்துக்கொண்டிருப்பது என்பதே தியானம் என சில பகுதிகளுக்கு முன் கூறினேன் அல்லவா? சில வெளிநாட்டினர் திருவண்ணாமலையை தினமும் காணும் நோக்குடன் அருணச்சலா லைவ் என்ற இணைய தளத்தை நடத்திவருகிறார்கள். இதில் தினமும் அருணச்சல மலையின் வெவ்வேறு வடிவங்களை நேரடி ஒளிபரப்பாக தருகிறார்கள். நீங்களும் தினமும் உங்கள் வீட்டில் இருந்தபடியே அருணாச்சலனை தரிசிக்கவேண்டுமா இதோ இணைப்பு. நினைத்தாலே முக்தி தரும் ஸ்ரீசக்ர புரியை தினமும் பார்த்தவாரே இருப்பது பெரும் பேறு அல்லவா?

திரு ரிச்சர்ட் என்பவர் அவரின் மனைவியுடன் அருணாச்சலத்தில் தங்கி எளிமையாக வாழ்ந்துவருகிறார். அவரின் வலைதளத்தில் ஸ்ரீசக்ர புரியின் ஒவ்வொரு அடியையும் ஆங்கிலத்தில் அவர் எழுதும் அமைப்பு சிறப்பு. தனது பெயரை கூட ரிச்சர்ட் அருணாச்சலா என மாற்றிவிட்டார் இவர். இவரின் வலையை படிக்க இங்கே சுட்டவும்.


தனது பிறந்த நாள் அன்று சாதுக்களுக்கு அன்னம் கொடுக்கிறார் ரிச்சர்ட் அருணாச்சலா.
அதை பின்னால் இருந்து பார்ப்பவர் யார் என தெரிகிறதா :) ?


மேற்கண்ட செயல்களை நம் ஆட்கள் செய்யவில்லை என்பதில் எனக்கு வருத்தும் உண்டு. பெளர்ணமி கிரிவலத்தில் சாப்பிட்ட மக்காசோள வில்லை, கடலை தோல், கரும்பு சக்கை மற்றும் மண்ணின் எதிரி பிளஸ்டிக் ஆகியவற்றை ஸ்ரீசக்ர புரியில் போடுவதை தவிர நம்மவர்கள் எதுவும் செய்யவில்லை. நமக்கு எப்பொழுதும் ஒரு விஷயம் கையில் இருக்கும் பொழுது அருமை தெரியாது.

பிரிட்டீஷ்காரர்களின் ஆதிக்கம் வரும் வரை நாட்டின் மேல் நமக்கு பற்றுவந்ததா என்ன? அது போல நாம் ஸ்ரீ சக்ர புரியை அனைவரும் உணரும் பொழுது காலம் கடந்திருக்கும்.

கடந்த மூன்று நாட்களாக இருந்த ஆனந்த நிலை என்னில் நிலைபெற்றவண்ணம் இருந்தது. கோவைக்கு திரும்ப செல்லும் முன் நான் வந்து இறங்கிய ரமணாஸ்ரமத்தின் முன் மண்டபத்தின் முகப்பில் அமர்ந்திருந்தேன். ஒரு ஐரோப்பியருடன் பேசியவாறே நடந்து சென்றார் நம் ஊர்காரர். அவர் ஐரோப்பிய ஆசாமி சொன்னது இதுதான். “ பிலிப் நீங்கள் கையில் வைத்திருக்கும் ஸ்ரீ சக்ரத்திற்கும் ரமணருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ரமணர் அனைத்தையும் துறந்தவர். நியம அனுஷ்டானங்கள் அவருக்கு கிடையாது....” நான் மெல்ல என்னுள் சிரித்தேன்.

நான் மெல்ல சிரிப்பைதை கண்ட அந்த பிலிப் என்ற ஐரோப்பியர் அவருடன் வந்தவரிடம் ஒருநிமிடம் என சொல்லிவிட்டு. ஸ்வாமி நீங்கள் சிரித்ததன் காரணம் என்ன? நான் தெரிந்து கொள்ளலாமா? என கேட்டார்.

“பிலிப் பகவான் ரமணர் சராசரி மனிதனால்
புரிந்துகொள்ள முடியாதவர். அவர் இப்படித்தான் என சொல்ல நாம் ரமணராக இருக்க வேண்டும். ஸ்ரீ சக்ரம் என்பது தற்காலத்தில் சிலரால் தவறாக சித்தரிக்கபட்டுள்ளது. உண்மையில் ஸ்ரீ சக்ரத்தை வைத்து ரமணர் உபாசனை செய்ய வில்லை என்றாலும், ஸ்ரீ சக்ரத்தின் மையமான ஸ்ரீ மேரு ஒன்றை ரமணாஸ்ரமத்தில் நிறுவி அதில் தனது ஆற்றலை நிலை படித்தி இருக்கிறார். தனது பூத உடலை உதிர்த்தாலும் தனது ஆற்றலால் என்றும் இங்கே நிறைந்து இருக்கிறார் ” என்றேன்.


எங்கே எங்கே என இருவரும் ஆர்வமாக கேட்க, மாத்ரூ பூதேஸ்வரர் ஆலயத்தில் ரமணரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீமேருவை காண்பித்தேன். இன்றும் ரமணாஸ்ரமத்தில் தமிழ் மாத முதல் நாளும், பெளர்ணமி அன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் அனைவரும் பார்க்குமாறு ஸ்ரீ மேருவை பூஜிக்கிறார்கள் என விளக்கிவிட்டு அவர்கள் ஸ்ரீமேருவை வணங்கியபடி இருக்க நான் திரும்பி மெல்ல நடந்தேன்.

ரமணாஸ்ரம வாயிலில் வந்து நின்றேன். பின்னாலேயே
பிலிப் வந்து ,”ஸ்வாமி உங்களுக்கு ஸ்ரீ சக்ரம் பற்றி ஏதாவது தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றார். “எனக்கு அவ்வளவாக தெரியாது நான் இப்பொழுது கோவைக்கு செல்லுகிறேன். வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் எனக்கு தெரிந்ததை பேசுவோம்” என்றேன்.

பிலிப் என்னை விடுவதாக இல்லை. நான் பேருந்துக்காக காத்திருப்பதை பார்த்து, தனது வாகன ஓட்டியுடன் தனது காரை என்னிடத்தில்
ஓட்டிவந்து,”ஸ்வாமி இந்தியாவின் எந்த மூலைக்கு செல்லுவதாக இருந்தாலும் உங்களை கொண்டு விடுகிறேன். என்னுடன் பயணத்தி படியே ஸ்ரீசக்ரத்தை பற்றி சொல்லுங்கள் என்றார். அவருடன் அன்று இரவு ஸ்ரீ சக்ரத்தின் தன்மையை விளக்கியபடியே அங்கிருந்து கோவை வந்தடைந்தேன்.

உங்களின் கருத்துக்களை கேட்டபிறகு மிக பிரம்மாண்டமாக ஸ்ரீ சக்ரத்தை உருவாக்க வேண்டும் என தோன்றுகிறது ஸ்வாமி என்றார் பிலிப். நான் புன்னகைத்தவாறே உங்களுக்கு அந்த வேலை பளு தேவை இல்லை என கூறி இந்த தொடரின் முதல் பகுதியை விளக்க துவங்கினேன்...

ஸ்ரீ சக்ர புரி என்றும் முடியாது. துவங்க மட்டுமே செய்யும்...!

|| ஓம் நமோ பகவதே அருணாச்சலேஷ்வராயா ||

23 கருத்துக்கள்:

ஸ்வாமி ஓம்கார் said...

அன்பர்களுக்கு வணக்கம்,

ஒருவாரமாக வட இந்திய புண்ணிய தலங்களில் யாத்திரை செய்து வந்ததால் பதிவு போட முடியவில்லை.

பொருத்தவர்களுக்கு எனது வணக்கங்கள்.
மின்னஞ்சலில் அக்கறையுடன் விசாரத்தவர்களுக்கு என் நன்றிகள்.

Unknown said...

swamiji,

why you are giving very much attention to Agni linga (Arunachala) other than other form of Panch Budha lingams. any specific reasons

புன்னகை said...

முடிவிலியை முடிக்கமுடியுமா , பரவசம்தான் எஞ்சிநிற்கிறது, பரவசப்படுத்தியதற்கு நன்றிகள் ஸ்வாமி

seethag said...

வணக்கம் சுவாமிஜி.

திருவண்ணாமலையில் ,அபீதா அருணகிரி என்பவர் மரம் நடதுவங்கினார். தற்சமயம் வேடியப்பனுர் கிராமத்தில் மரம் நடிவதில் ஈடுபட்டுள்ளார்.

காட்டுசிவா ப்ராஜெக்ட் என்று பெயர்.

ஷண்முகப்ரியன் said...

ஆன்மீகம் என்பது உலக மக்களிடயே மத ரீதியாக பரவி இருப்பதால் அவர்களுக்கு உள் நிலையும் முழுமையாடையாமல் இருக்கிறது.//

மிக,மிகச் சரியே,ஸ்வாமிஜி.
நீங்கள் எப்போது காணாமல் போனாலும் ஏதோ ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டிருப்பீர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

எனக்குத் திரை உலகம்.உங்களுக்குத் திரைகள் கிழிந்த உலகம்!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தம்பி ராஜ்,

பஞ்ச பூத லிங்கஸ்தலங்களில் அக்னிஸ்தலமான ஸ்ரீ சக்ர புரி மட்டுமே இயற்கையாக உருவானது.

மேலும் நமது வேத சாஸ்திரத்தில் அக்னிக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு.

நம் அறியாமை எனும் இருளை போக்கும் ஒளி அக்னி ரூபமே.
அது அருணாச்சலமே.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புன்னகை,

உங்கள் வருகைக்கு நன்றி.
பதினைந்து பகுதிக்கும் தொடர்ந்து நீங்கள் வந்தமைக்கு நன்றி பல.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி சீதா,

தகவலுக்கு நன்றி. பலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எதிர்ப்பார்ப்பில்லாமல் சேவையாக செய்யும் ஒருவரை சுட்டிகாட்டினேன். பல NGO திருவண்ணாமலையை மேம்படுத்துகிறார்கள்.

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

//எனக்குத் திரை உலகம்.உங்களுக்குத் திரைகள் கிழிந்த உலகம்!//

முழுமையான உண்மை.

பகவான் ரமணர் கூறியது போல...

திரை என்பது ஆன்மா.. புரஜக்டரில் இருந்து வரும் ஒளி பிறப்பு. காட்சிகள் விரியும் பொழுது பார்ப்பவன் வேறு உலகுக்கு செல்லுகிறான். திரைப்படம் முடிந்ததும் திரை மீண்டும் வெண்மையாகவே இருந்து அடுத்த காட்சிக்கு தயாராகிறது.

இந்த திரைப்படத்தின் இயக்குனரை நமஸ்கரிப்போம்.

நிகழ்காலத்தில்... said...

\\ஸ்ரீ சக்ர புரி என்றும் முடியாது. துவங்க மட்டுமே செய்யும்...!

இந்த தொடரின் முதல் பகுதியை விளக்க துவங்கினேன்...\\

படிக்க ஆரம்பித்து விட்டேன்

வாழ்த்துக்களுடன்
சிவா

*இயற்கை ராஜி* said...

//மிகவும் மெளனத்தில் இயற்கையாகவே இருப்பார்கள்//

அப்படின்னா..மெளனம்தான் இயற்கையா ஸ்வாமிஜி:-)

தேவன் said...

ஆன்மிக தாகத்தை அதிகப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் சுவாமிஜி.

வாழ்த்துக்கள்.

கிரி said...

சுவாமி இன்று தான் தங்கள் தொடரை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..

எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய இந்த தொடர் பலருக்கும் உதவியாகவும் சந்தேகங்களை தீர்க்க உதவிய ஒரு வழிகாட்டியாகவும் இருந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

நான் இது வரை திருவண்ணாமலை சென்றதில்லை உங்களை போல பலர் அதன் சிறப்புகளை கூறி சென்று வரக்கூறி இருந்தாலும் செல்வதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

தங்களது இந்த விளக்கமான தொடர் அங்கே செல்லும் ஆவலை மேலும் தூண்டுகிறது.

நன்றி

கிரி said...

//பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறோம் என தினசரியில் விளம்பரம் செய்யும் ஆன்மீகவாதிகளை காணும் பொழுது இந்த ஐரோப்பிய இளைஞனை நினைத்துக்கொள்வேன்//

சுவாமி இது குறித்த என் ஆதங்கத்தை விரைவில் ஒரு பதிவாக எழுத போகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

என்ன விளையாட்டு இது??? எங்க வேணா போங்க. சொல்லிட்டு போங்க.

எம்.எம்.அப்துல்லா said...

15 பகுதிகளை ஆர்வமுடனும்,உண்மையுடனும் எடுத்துச்சென்ற உங்களுக்கு என் வாழ்த்துகள் சாமி.

Mahesh said...

swami.... thanks a ton for such an interseting series. As you said... there is no end to Arunai, Karunai and Nama Smaranai.

அது ஒரு கனாக் காலம் said...

மிக மிக அருமையாக இருந்தது .... படித்தது என் பாக்கியம் ... கொடுத்த அத்துணை லிங்கும் நன்றாக இருந்தது

Raju said...

அருமையான தொடர். படிக்க ஆவலை தூண்டிய தொடர். மிக்க நன்றி. என்னை போன்ற அக்னாஸ்டிக் ( புரிந்து தெளிந்து தேடுகிறேன் ) ஆட்களுக்கு சில விளக்கம் அளித்த அத்தொடர்.

எனக்கு சில கேள்விகள் உண்டு.

* குரு என்பவர் யார்?
* குரு கொடுக்கும் ஞானத்திற்கு ( கோர்ஸ் ) விலை வைக்கலாமா?
* குரு என்பவர் மாய வித்தை செய்ய முடியுமா?
* குரு என்பவர் மேச்சிய் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். கடவுளிடம் ( மேம்பட்ட சக்தியை ) சொல்லி வரம் அருள வழி செய்பவரா?
* குரு உலகத்தின் பஞ்சத்தை போக்க முடியுமா?
* குரு என்பவர் கல்ட் சிஸ்டம் பரப்பலாமா ( மக்கள் ஹிப்னாடைஸ் ஆகிறார்கள் )
* குரு என்பவர் விளம்பரம் செய்யலாமா? ( பத்திரிக்கை, டிவி.)
* குரு என்பவர் தன க்டுஉம்பதை ஏன் வாரிசாக நியமித்து விஷயங்கள் பரப்ப வேண்டும்?

வினோத்குமார் கோபால் said...

ரிச்சர்ட் அருணாச்சலா மற்றும் ஐரோப்பிய இளைஞன் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி

முதன்முறையாக நான் இவ்வலைப்பூவை பார்வையிடுகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

பல நற்தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள், அதற்கும் நன்றி.

S.Muruganandam said...

சுவாமி தங்கள் ஸ்ரீசக்ரபுரி தொடர் முழுவதும் படித்தேன் அனைத்தும் அருணாச்சலத் தேன். பல அரிய செய்திகளையும் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி. முதலிலேயே பின்னூட்டம் இ்யலவில்லை.



//பெளர்ணமி கிரிவலத்தில் சாப்பிட்ட மக்காசோள வில்லை, கடலை தோல், கரும்பு சக்கை மற்றும் மண்ணின் எதிரி பிளஸ்டிக் ஆகியவற்றை ஸ்ரீசக்ர புரியில் போடுவதை தவிர நம்மவர்கள் எதுவும் செய்யவில்லை.//

அடியேன் கவனித்த ஒரு செயல் எல்லோரும் கற்பூரம் கொளுத்துவதுதான் எங்கும் கருப்பப் புகை மண்டி சுற்றுச்சூழலையும் மாசு படுத்துகின்றது. அதற்கு பதில் பெரிய அகண்டம் வைத்து அதில் அனைவரும் நெய் சேர்க்கலாமே?

கார்த்திகை தீப சயனத்தில் அடியேனும் அருணாசல மகிமையை எட்டுத்தியம்ப தங்கள் ஆசியை வழங்குமாறு வேண்டுகிறேன்.

Siva Sottallu said...

அனைத்து பகுதியையும் நன்கு ரசித்து உணர்த்து படித்தேன் ஸ்வாமி. மிக்க நன்றி.

// ஒருவாரமாக வட இந்திய புண்ணிய தலங்களில் யாத்திரை செய்து வந்ததால் பதிவு போட முடியவில்லை.
//

ஸ்வாமி, சில பகுதிக்கு முன்பு பகவான் ரமணரை சிலர் இமயமலைக்கு அழைத்த பொழுது "சிவனே இங்கு இருக்கும் பொழுது அவர் வீட்டைபொய் ஏன் பார்க்க வேண்டும் " என்று கூறியதாக சொன்னீர்கள்.

பகவான் ரமணர் சொன்னதை போல் மற்ற புண்ணிய தலங்களுக்கு செல்ல தேவை இல்லையோ என்று எண்ணி இருந்தேன், இதை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி?

வடுவூர் குமார் said...

முடிவில்லா தொடர்.அருமையாக இருந்தது.