Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, August 22, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 11

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழிய வைத்தானே.
-----------------------------------------------------------------திருமந்திரம் - 2882

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் அனேக மலை சார்ந்த தெய்வீகத்தலங்களில் மலையின் உச்சியில் அல்லது மலையின் ஆற்றல் கொண்ட இடங்களில் கோவில் கட்டப் பட்டிருக்கும்.

இந்திய கலாச்சார கடவுள்களான சிவன்,விஷ்ணு, அம்மன், முருகன், விநாயகர் என அனைவருக்கும் மலைமேல் கோவில் இருக்கும். முருகனுக்கு அதிகமாக இருப்பதால் குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார் என சொல்லுகிறார்கள்.

நாடி சாஸ்திரத்தின் அடைப்படையிலேயே மலையில் கோவில்கள் கட்டப்படுகிறது. உங்கள் ஸ்வாசமும் நாடிக்கும் தொடர்பு உண்டு என முன்பு பார்த்தோம்.

உங்கள் உடலின் வலப்பகுதியில் அழுத்தம் கொடுக்கபட்டால் இடது நாசியில் ஸ்வாசம் வரும் . அதாவது ஈடா நாடி வேலை செய்ய துவங்கும். இடப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால் வலபகுதியில் ஸ்வாசம் ஏற்பட்டு பிங்கள நாடி வேலை செய்யும். இருபக்கத்திலும் அழுத்தம் கொடுத்தால் ஸுக்‌ஷமணா நாடி வேலை செய்து இரு நாசியிலும் வேலை செய்யும்.

மேற்கண்ட விஷயத்தை ஒரு சோதனையாக நீங்களே செய்து பாருங்களேன். உங்களுக்கு எந்த நாசி துவாரத்தில் ஸ்வாசம் வருகிறது என பாருங்கள். பிறகு ஸ்வாசம் வரும் பகுதியில் உள்ள உங்கள் கைகளை நிலத்திலோ அல்லது மேஜையிலோ நன்றாக ஊன்றிக்கொள்ளுங்கள். சில நிமிடங்களில் கவனித்தால் உங்கள் ஸ்வாசம் அடுத்த நாசியில் வரத்துவங்கும். இடது நாசியில் ஸ்வாசம் வருவதாக இருந்தால் இடது கையை ஊன்றுங்கள். வலது பக்கம் ஸ்வாசம் சில நிமிடத்தில் வரத்துவங்கும்.

இம்முறைக்கு நாடி சலனா என பெயர். யோகிகள் யோக தண்டம் என ஆங்கில எழுத்து “Y" போல ஒரு பொருள் வைத்திருப்பார்கள் அல்லவா? அவை இதற்கு (ம்) தான் பயன்படுக்கிறது. அவர்களின் நாடியை சமப்படுத்த கைகளில் இடம் மாற்றி அழுத்தம் கொடுத்துக்கொள்வார்கள்.

நம் முன்னோர்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததால் தான் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்தாலோ, சாப்பிடும் பொழுது கைகளை ஊன்றி சாப்பிட்டாலோ அவ்வாறு செய்யாதே என கூறுவார்கள். கை மற்றும் உடலின் பாகங்கள் அழுத்தம் கொண்டால் உடலில் நாடி சலனம் ஏற்படும். சலனம் ஏற்படுவதால் நம் இயல்பான உடல் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்க படலாம்.

நாடி சலனத்தை சோதனை முறையில் செய்யுங்கள், தொடர்ந்து செய்யக்கூடாது. சரியான குருவின் வழிகாட்டுதலில் நாடியிடம் விளையாடுவது நல்லது.

நமது உடலின் நாடிகள் அனைத்தையும் தூண்டி ஆன்மீக நிலைக்கு இட்டு செல்லும் தன்மை ஸுக்‌ஷமணா நாடிக்கு உண்டு. அதனால் மலைக்கு மேல் கோவிலை கட்டிவிடால் இருகால்களையும் பயன்படுத்தி சம அளவு அழுத்தத்துடன் ஏறும் பொழுது உடலில் ஸூக்‌ஷமணா நாடி இயற்கையாகவே வேலை செய்யும். மலைக்கோவிகளுக்கு இனி செல்லும் பொழுது உங்கள் ஸ்வாசத்தை கவனிக்க தவறாதீர்கள். மலைக்கோவிலை அடைந்ததும் உங்கள் ஸ்வாசத்தை கவனித்தால் அவை இரு நாசிகளிலும் சரியான அளவாக வந்துகொண்டிருக்கும்.

[ குறிப்பு : கிருஸ்துவர்கள் இரு கால்களையும் மண்டி இட்டு வணங்கியும், இஸ்லாமியர்கள் இரு கால்களையும் அடுத்தி உட்கார்ந்து தொழுவதன் மூலமும் ஸூக்‌ஷமணா நாடியை தூண்டுகிறார்கள். நாடிகள் ஆன்மீகம் சார்ந்தது , மதம் சார்ந்தது அல்ல என புரிந்துகொள்ளுங்கள். ]

மலைமேல் கோவில் இருக்க காரணம் தெரிந்ததா? திருவண்ணாமலை திருத்தலத்தில் மட்டும் ஒரு விஷேடம் உண்டு. மலை மேல் கோவில் கட்டப்படாத ஒரு தெய்வீக ஸ்தலம் என்றால் அது திருவண்ணாமலை மட்டுமே. காரணம் மலையே இங்கு தெய்வமாக இருக்க மலையை உள்ளே வைத்து பிரம்மாண்டமாய் கோவில் கட்ட முடியுமா?

மலைமேல் ஏறுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் நாடி சலனம் தான். ஒரு இடத்தில் உட்கார்ந்து நாடியை மேம்படுத்த முடியும் என்றாலும் இயற்கையுடன் பயணித்து நாடியை மேம்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்த ஒருவிஷயம். மலைஏறும் திறன் இருந்தும் சிலர் மலைக்கோவிலுக்கு டோலியில் செல்வார்கள் அவர்களை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கும்.

ஆன்மீக அன்பர்கள் பலர் அருணாச்சல மலை மேல் ஏறுவதில்லை. காரணம் மலையே இங்கே கடவுளாக பார்க்கப்படுவதால் அதில் கால்வைக்க தயங்குகிறார்கள். இறைவன் அங்குமட்டுமா இருக்கிறார் ? ஒரு அடிக்கு ஒரு லிங்கம் இருக்கும் திருவண்ணாமலை என அருணாச்சல புராணம் விவரிக்கிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு லிங்கம் இருக்குமாம். அப்படி பார்த்தால் இவர்கள் ஊருக்குளேயே வர முடியாதே..!

அருணாச்சல மலையில் சரியான நடை பாதைகள் கிடையாது. கந்தாஸ்ரமம் எனும் பகவான் ரமணர் வாழ்ந்த இடம் வரைக்கும் தான் நல்ல பாதை உண்டு. பிறகு சுண்ணாம்பால் அம்பு குறி வரைந்து மேலே எப்படி செல்ல வேண்டும் என பாறைகளே நமக்கு வழிகாட்டும்.

நான் எனது மாணவியுடன் மேலே செல்ல செல்ல வெய்யிலும் மேலே சென்றது. மலையின் இடையே எங்களுடன் பயணத்திற்கு வேறு ஒரு வெளிநாட்டு அன்பரும் இணைந்து கொண்டார். அவரிடம் தண்ணீர் இல்லாததால் பாறையில் படுத்துவிட்டார். நீர் கொடுத்து அவரை தளர்வாக்கி அழைத்து சென்றோம். அன்று பார்த்து பாறைகள் உருகிவிடுமே என நினைக்கும் அளவுக்கு வெப்பம். அக்னி மலை என சொல்லுவதற்கு காரணம் கற்பிக்கும் வானிலை.


நான் தனியாக வந்திருக்க கூடாது என புலம்பிய படியே எங்களுடன் அந்த வெளிநாட்டு அன்பர் ஏறிக் கொண்டிருந்தார். அவருக்கு மலை ஏற்றமும் வெய்யிலும் புதுசு என்பதால் பாவம் மிகவும் மனசஞ்சலம் கொண்டுவிட்டார். யாரையும் துன்புறுத்தாதவர் ஆயிற்றே அருணாச்சலம்.... நாங்கள் உச்சியை அடைய சில தூரங்கள் இருக்க அங்கே மேக மூட்டம் சூழ்ந்தது. எங்களை சுற்றி முழுவதும் மேகங்கள். உச்சியும் தெரியவில்லை. கீழே நகரமும் தெரியவில்லை. எங்கும் குளிர்ச்சி குளிர்ச்சி .கேட்டதை கொடுப்பவர் என மீண்டும் அருணாச்சல மகாத்மியத்தை உணர்ந்தேன்.

மூவரும் உச்சியை அடைந்து கண்கள் மூடி தியானிக்க துவங்கினோம்..

திடீரென .......ஹோம்ம்ம்ம்ம் ............என்ற சப்தம் கேட்க துவங்கியது. நீண்ட அளவில் அதுவும் தீர்க்கமாக கேட்க துவங்கியது. சில விநாடிகளில் அதீத சப்தத்துடன் காதுகளின் கேட்கும் திறனுக்கும் மிகுதியாக கேட்டது.

நான் அந்த வெளிநாட்டுகாரர் சப்தம் எழுப்புகிறார் என நினைத்து கண்கள் திறந்து பார்த்தால் அவரும் எனது மாணவியும் காதுகளை இறுக அழுத்திகொண்டு கண்களில் நீர்வர உட்கார்ந்திருக்கிறார்கள்.

சுற்றியும் மழை மேகம், நாங்கள் அமர்ந்திருக்கும் இடமும் மேகமும் தவிர எதுவும் தெரியவில்லை. எங்களை சுற்றி பிரணவ மந்திர ஜபம் இயற்கை நிகழ்த்துகிறது. வேறு என்ன வேண்டும்? முக்தி வேண்டாம் உன்னை தரிசிக்க மனிதனாகவே பிறக்க வரம் கொடு என மாணிக்க வாசகர் சும்மாவா கேட்டார்? கீழ் இறங்கி வந்ததும் கண்ணீர் மல்க என்னிடம் விடை பெற்றார் அந்த வெளிநாட்டு அன்பர்.

இத்தனை பகுதிகளாக அருணாச்சல அருமைகளை தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஆசியாவிலேயா இரண்டாவது பெரிய கோவில் மற்றும் பிரம்மாண்டமாக கட்டபட்டு நவீன கட்டட கலைக்கு சவாலாக இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் பற்றி ஒன்றும் பேசவில்லையே?

அடுத்த பகுதியில் தரிசிப்போம்...

(தொடரும்)

30 கருத்துக்கள்:

Unknown said...

பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி.

sowri said...

arputham.Aanandam.

Anonymous said...

நாடிகள் சலனத்தை பற்றி கூறியது அருமை. என் பாட்டி சொல்லுவார்கள், சாப்பிடும் பொது கையை கீழே வைத்து அழுத்தாதே என்று, அதன் அர்த்தம் இப்போ தான் புரிகிறது! தங்கள் அனுபவம் மிகவும் அருமை!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பிரபு,

திரு செளரி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


திரு தினேஷ் பாபு,

அன்று பாட்டி சொல்லை தட்டியிருப்பீர்கள் :)

அவர்கள் சொல்லுவதை பொருள் தெரியாமல் செய்தாலும் நன்மை உண்டு.

அதனால் தான் பெரியவா சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி ஒரு சொல்லாடல் உண்டு. :)

நிகழ்காலத்தில்... said...

\\மலைக்கோவிகளுக்கு இனி செல்லும் பொழுது உங்கள் ஸ்வாசத்தை கவனிக்க தவறாதீர்கள்.\\

கூடவே முடிந்தவரை நடந்து மேலே ஏறுவது அவசியம்,

தற்போது பெரும்பான்மையான மலைக்கோவில்களில் வாகனங்கள் செல்ல வசதி உண்டு. மருதமலை, சிவன்மலை போல.:))

விசயங்களும், சுவாரசியமும் இணைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது

வாழ்த்துக்கள்

*இயற்கை ராஜி* said...

அதிசயங்கள் பல..ம்ம்ம்ம்

எம்.எம்.அப்துல்லா said...

//இஸ்லாமியர்கள் இரு கால்களையும் அடுத்தி உட்கார்ந்து தொழுவதன் மூலமும் //

அதைத்தான் யோகாவில் வஜ்ராசனம் என்கின்றார்கள்.

:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,
சகோதரி இயற்கை,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..
ரமலான் ஆரம்பிச்சாச்சு... நோம்பு தின வாழ்த்துக்கள்.

/அதைத்தான் யோகாவில் வஜ்ராசனம் என்கின்றார்கள்.
///

அப்படியா? இது எனக்கு தெரியாதே :)

வடுவூர் குமார் said...

இரண்டாவது படம் அருமையாக வந்திருக்கு.
கோவில் விபரத்துக்காக காத்திருக்கேன்.

Anonymous said...

முலைப்பால் திர்த்தம்,ஒரு தவ குடில்கூடம் (நான்) பார்த்தேன்.பிச்சைக்காரர்களின் சண்டை கூட

senthil said...

ஸ்வாமி இன்று கோவையில் இருந்திர்கள் என்றால் 3.15pm அளவில் மருதமலை மேல் வலது பக்கத்தில் மேகம் திரண்டு இருந்து, ஒரு பெரிய நீர் நிலை இல்லதா இடத்தில் இவ்வளவு பெரிய அளவு கொண்ட மேகத்தை கடந்த 20 வருடங்களில் நான் பார்த்து கிடையாது....!!!!!!!:)

ஷண்முகப்ரியன் said...

அருமை.நன்றி ஸ்வாமிஜி.

senthil said...

http://photogallery.webdunia.com/tamil/FullScreen.aspx?GalleryId=1016

sakthi said...

அதிசயப்படவைக்கின்றீர்கள் சுவாமிஜி

Siva Sottallu said...

மலை ஏறுவதும் நாடிக்கும் உண்டான அருமையான விளக்கம் ஸ்வாமி. மிக்க நன்றி.

ஒரு முரண்பாட்டை தெளிவாக்கிகொள்ள முயல்கிறேன் ஸ்வாமி. குறிப்பிட்டு காட்டுவதாக எண்ணவேண்டாம்.

பகுதி 3 இல் // இடது பக்கத்தில் இருக்கும் நாடி ஈடா நாடி என்றும் வலப்பக்கம் இருக்கும் நாடி பிங்கள நாடி என்றும் அழைக்கப்படுகிறது. பிங்கள நாடி வேலை செய்தால் இடப்பக்கமும், ஈடா நாடி வேலை செய்தால் வலபக்கமும் நமக்கு சுவாசம் வரும். //

பகுதி 11 இல் // உங்கள் உடலின் வலப்பகுதியில் அழுத்தம் கொடுக்கபட்டால் இடது நாசியில் ஸ்வாசம் வரும் . அதாவது ஈடா நாடி வேலை செய்ய துவங்கும். இடப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால் வலபகுதியில் ஸ்வாசம் ஏற்பட்டு பிங்கள நாடி வேலை செய்யும். //

ஈடா நாடி வேலை செய்தால் வலபக்கம் நமக்கு சுவாசம் வரும். என்றும் இடது நாசியில் ஸ்வாசம் வரும் . அதாவது ஈடா நாடி வேலை செய்ய துவங்கும்.

இதை எனக்கு தெளிவு படுத்தும் படி மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ஸ்வாமி.

எம்.எம்.அப்துல்லா said...

//அப்துல்லா அண்ணே..
ரமலான் ஆரம்பிச்சாச்சு... நோம்பு தின வாழ்த்துக்கள் //

மிக்க நன்றி சாமி.

Siva Sottallu said...

// மலை மேல் கோவில் கட்டப்படாத ஒரு தெய்வீக ஸ்தலம் என்றால் அது திருவண்ணாமலை மட்டுமே //

ஸ்வாமி, திருப்பரங்குன்றம் மலைமேல் கோவில் இல்லையே ஸ்வாமி? ஒருவேளை அது தெய்வீக ஸ்தலம் கிடையாதோ?

பகுதி 5 இல் நீங்கள் கூறியது " கோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று மூன்று நாட்கள் இருந்துவிட்டு திரும்பி வரவேண்டும். ஆனால் கையில் ஒரு பைசா கொண்டு செல்ல கூடாது.
" இதை முழுமையாக கூறி முடிக்கவில்லை என்று தோன்றுகிறது ஸ்வாமி...

தேவன் said...

///காரணம் மலையே இங்கே கடவுளாக பார்க்கப்படுவதால் அதில் கால்வைக்க தயங்குகிறார்கள்///

ஐயா தயவு செய்து தாங்கள் இன்னொரு முறை அருணாச்சலேஸ்வரர் கோவில் சென்றால் என்னையும் அழைத்து சென்று விடுங்கள்.

ஏன் என்றால் ஒருவனை கட்டுரையால் கட்டி ஏங்க வைத்த பாவம் உங்களுக்கு வேண்டாம்

கோவி.கண்ணன் said...

//இம்முறைக்கு நாடி சலனா என பெயர். யோகிகள் யோக தண்டம் என ஆங்கில எழுத்து “Y" போல ஒரு பொருள் வைத்திருப்பார்கள் அல்லவா? அவை இதற்கு (ம்) தான் பயன்படுக்கிறது.//

:)

இன்னோர் பயனும் இருக்கிறது. சாமக்கோடாங்கியிடம் கேட்டால் சொல்லுவான்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்,

(மலை ஏறும் படமா?)

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

திரு செந்தில் ராஜா,

/முலைப்பால் திர்த்தம்,ஒரு தவ குடில்கூடம் (நான்) பார்த்தேன்.பிச்சைக்காரர்களின் சண்டை கூட//

எந்த ஊரில் பிச்சைக்காரர்கள் சண்டை இல்லை :) ? லோக்சபா தொலைக்காட்சி பாருங்கள் :)

திரு செந்தில்,

கோவையில் இருந்தேன். இன்னும் சொல்லுவதென்றால் அந்த மேகத்திற்கு கீழ்தான் நான் வசிக்கும் இடம் :)

திருவண்ணாமலை புகைபடங்களுக்கு நன்றி.

திரு ஷண்முகப்ரியன்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி சக்தி,

உங்கள் வருகைக்கு நன்றி

திரு சிவா,

நீங்கள் சுட்டிகாட்டியதற்கு நன்றி.
பகுதி 3ல் அந்த வரிகளில் வலது இடது மாறி இருக்கிறது. தற்சமயம் சரி செய்துவிட்டேன். பகுதி 11ல் இருப்பது சரியான தகவல்.

//ஸ்வாமி, திருப்பரங்குன்றம் மலைமேல் கோவில் இல்லையே ஸ்வாமி? ஒருவேளை அது தெய்வீக ஸ்தலம் கிடையாதோ? //

திருப்பரங்குன்றம் மலையை குடைந்து உருவாக்கபட்டது.

//பகுதி 5 இல் நீங்கள் கூறியது " கோவையிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று மூன்று நாட்கள் இருந்துவிட்டு திரும்பி வரவேண்டும். ஆனால் கையில் ஒரு பைசா கொண்டு செல்ல கூடாது.
" இதை முழுமையாக கூறி முடிக்கவில்லை என்று தோன்றுகிறது ஸ்வாமி...//

நான் காசில்லாமல் கஷ்டப்பட்டதை அறிந்துகொள்ள அவ்வளவு ஆர்வமா :)

Siva Sottallu said...

தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

// நான் காசில்லாமல் கஷ்டப்பட்டதை அறிந்துகொள்ள அவ்வளவு ஆர்வமா :) //

அதற்காக இல்லை ஸ்வாமி, உங்கள் அனுபவத்தை அறிந்துகொள்ளவும் இறைவனின் திருவிளையாடலை தெரிந்துகொள்ளவும், உங்கள் பயண வெற்றியை உங்கள் நண்பர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஸ்வாமி, தியானத்தில் இருக்கும் ஃபோட்டோவில் உங்க முகம் ரொம்ப களையா இருக்கு! :))
ஆழ்நிலையில் தியானிக்கும் போது, பலருக்கும் கண்கள் இறுக்க மூடிக் கொண்டாலும், வாய் மட்டும் புன்னகை தவழ்வது ஏனோ?

//நாடிகள் ஆன்மீகம் சார்ந்தது , மதம் சார்ந்தது அல்ல என புரிந்துகொள்ளுங்கள்//

நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மலைக்கோவிலை அடைந்ததும் உங்கள் ஸ்வாசத்தை கவனித்தால் அவை இரு நாசிகளிலும் சரியான அளவாக வந்துகொண்டிருக்கும்//

கோவி அண்ணா கேட்காததை அடியேன் கேட்டு வைக்கிறேன்! :)

இது மலைக்கும் மலை மேல் கோயில்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ஸ்வாமி?

லிஃப்ட் ரிப்பேர் ஆகி, படிகளில் மேலேறி நடக்கும் போது, நமது மாடியை அடைந்தவுடன், ஸ்வாசம் இரு பக்கமும் வருகிறதே! எப்படி? :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே ஆர் எஸ்,

//ஆழ்நிலையில் தியானிக்கும் போது, பலருக்கும் கண்கள் இறுக்க மூடிக் கொண்டாலும், வாய் மட்டும் புன்னகை தவழ்வது ஏனோ?//

எல்லாம் ஒரு போட்டோ ஜெனிக்காக இருக்கவேண்டும் என்பதால்தான் ;)

பாத்திரத்தின் உள்ளே இட்லி வேகும் பொழுது பாத்திரத்தின் வெளியே புகைவருவதில்லையா..? அது மாதிரி தான் :)

ஸ்வாமி ஓம்கார் said...

//இது மலைக்கும் மலை மேல் கோயில்களுக்கு மட்டும் தான் பொருந்துமா ஸ்வாமி?

லிஃப்ட் ரிப்பேர் ஆகி, படிகளில் மேலேறி நடக்கும் போது, நமது மாடியை அடைந்தவுடன், ஸ்வாசம் இரு பக்கமும் வருகிறதே! எப்படி? :)//

திரு கே ஆர் எஸ்,

பாடிப்படிகளின் எண்ணிகையை பொருத்து மாறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. இரு பக்கம் அழுத்தம் கொடுத்து அது ஸூக்‌ஷமணா நாடியானாலும் மாடியில் ஏறிய பின் என்ன செய்கிறீர்கள் என்பதை பொருத்து நாடியின் தன்மை மாறுபடும்.

ஸூக்‌ஷமணா எவ்வளவு ஆன்மீக விஷேடம் இருக்கிறதோ அதற்கு தகுந்த கிரிமினல் வேலையும் செய்யும்.

ஒருவர் ஸூக்‌ஷமணாவில் இருக்கும் பொழுது ஆன்மீகத்தில் இருந்தால் நன்று. இல்லையேல் அதீத தீவரவாதம் மனதில் குடிகொள்ளும்.

ஸூக்‌ஷமணா என்பது குவிக்கபட்ட கதிவீச்சு போன்றது.. அதன் அடியில் உங்களின் கர்மாவை வைத்தால் அது அழியும். இது நற்செயல்.

அதன் அடியில் பிற உயிர்களை வைத்தால் அவை மடியும். இது துர்செயல்.

Sivakumar said...

அந்த வௌ்ளைக்காரர் மிகவும் அதிர் ்ட சாலி. எனக்கு
அவ்வகையான அனுபவம் கிடைக்குமா...

நான் ஒரே ஒரு முறை திருவண்ணாமலை சென்றேன்.
மிகவும் அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்தேன். என்னுடன்
என் தம்பியும் வந்தான். கோயிலின் தரிசனத்திற்காக 2.30 மணி
நேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அண்ணாமலையாரின் தரிசனத்திற்குப் பின் உணவு அருந்தி
விட்டு மலையை வலம் வரத் தொடங்கினோம். மிகவும்
மெதுவாகத்தான் தொடங்கினோம். நேரம் செல்லச் செல்ல
நடையில் வேகம் கூடியது. இதற்கு முன் நான் இவ்வளவு தூரம்
நடந்ததில்லை. அனைத்து லிங்க தரிசனங்களையும் முடித்து
வரும்போது கால்கள் வீங்கி விட்டிருந்தது தெரிந்தது.
பயங்கரமாக வலித்தது. கால்களை மடக்க வேண்டாம் என்று
அறிவுறுத்தப் பட்டிருந்தேன். பிறகு ஊருக்குத் திரும்பினோம். 3
நாட்கள் வரை கால்கள் வீங்கியே இருந்தது. என் தம்பிக்கு இப்படி
ஒரு நிலை ஏற்படவில்லை.
அந்த வலி இப்போதும் தொடர்கிறது. மருத்துவர்களிடம்
காண்பித்தேன். ஒன்றும் இல்லை என்கின்றனர். அந்த கால் வலி
இப்போது ஜாய்ண்டில் வரும் வலியாக மாறி விட்டது.
முக்கியமாக அந்த வலி வரும் போது என்னால் கைகளை மேலே
தூக்க முடியாது. கால்களில் வந்தால் மிகவும் மெதுவாக
தாங்கித் தாங்கி நடக்க வேண்டும்.
திருவண்ணாமலையான் எனக்கு எப்போது இதில் இருந்து
என்னை மீட்டெடுத்து ஆட்கொள்வானோ தெரியவில்லை.

விஜய் said...

வணக்கம். ஒரு ஐயம் சுவாமி. கலியுகத்தில் இல்லறத்தில் இருந்து இறைபக்தியுடன் இருப்பதே மிக பெரிய தியானம் என்று கருதுகிறேன். இல்லறம் இல்லாமல் நேராக துறவறம் பூணுதல் ஷார்ட்கட் ஆக நினைக்கிறன். தங்களது கருத்தை எதிர் நோக்குகிறேன்.

நன்றி.

குசும்பன் said...

//நம் முன்னோர்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததால் தான் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்தாலோ, சாப்பிடும் பொழுது கைகளை ஊன்றி சாப்பிட்டாலோ அவ்வாறு செய்யாதே என கூறுவார்கள். //

ஓசோவின் மறைந்திருக்கும் உண்மைகள் புத்தகத்திலும் இதுபோல் பல அரிய தகவல்களை நாம் பெற முடியும் அதுபோல் தாங்களும் அதுபோல் பல உண்மைகளை சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்.