Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, January 25, 2010

காசி சுவாசி - பகுதி 8

நீர் என்பது பஞ்சபூதத்தில் ஒரு முக்கிய அம்சம் என சென்ற பகுதியில் பார்த்தோம். அது போல கங்கை நதியும் இமாலய மலையில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவாரில் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கையின் துவக்கப்புள்ளி முதல் இறுதி வரை பல தெய்வீக இடங்கள் இருந்தாலும் காசியில் மட்டுமே கங்கை ஒருவித அதிர்வலையிலும் அகண்டும் பயணிக்கிறது.

காசி நகருக்கு மேற்கே அலகாபாத் என்ற ஊரில் காங்கையும் யமுனையும் சங்கமித்து பிறகு கங்கை என்ற ஒரே பெயரில் காசியை வந்தடைகிறது. அதனால் யமுனையின் ஆற்றலும், கங்கையின் ஆற்றலும் இணைந்து ஸ்பரிசிக்கும் இடம் காசி மாநகரம்.

கங்கை நதியை பல முறை பார்த்து அதில் இருந்து வெவ்வேறு பருவகாலத்திலும், சூழலிலும் நீர் சேகரித்து வந்துள்ளேன். நம் ஊரில் இருக்கும் குழாய் நீர் மேலும் சுத்திகரிக்கபட்ட நீர் என பாட்டிலில் விற்கும் நீர் என எந்த நீரையும் ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடியாது. சுத்திகரிக்கபடாத நீரில் புழுக்களும், சுத்திகரிக்கபட்ட நீரில் பாக்டீரியா உருவாக்கத்தால் ஒருவித வழுவழுப்பு இருக்கும்.

ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை. கலங்கிய நீராக இருந்தாலும் அவை அசுத்தமடைவதில்லை. புழுக்கள் வருவதில்லை. இன்னிடம் இருக்கும் நீரி இன்னும் தூய்மை நிலையிலேயே இருக்கிறது என்பதை கண்ட பின்பே கூறுகிறேன்.

ரிஷிகேஷ், ஹரித்துவாரில் இருக்கும் நீரின் தன்மையை விட காசியில் அதிர்வலைகள் அதிகம் கொண்ட கங்கை நீர் இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். ரிஷிகேஷ், ஹரித்துவாரில் கண்களால் பார்த்தால் தூய நீர் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதில் காசியில் இருக்கும் கங்கையின் ஆற்றல் உண்டா என்றால் குறைவே.

சிவனை உருவமாக வழிபடுபவர்கள், இந்திய வரைபடத்தில் சிவபெருமான் நின்ற கோலத்துடன் இருப்பதாக உருவகப்படுத்தி புண்ணிய தலங்களை பெருமைப்படுத்துவார்கள். சிவனின் முன்றாம் கண் கைலாய மலையாகவும், இருதயம் காசியாகவும், கால்கள் இராமேஸ்வரமாகவும் கூறுவார்கள்.

உண்மையில் காசி நகரம் அனைத்து சமயங்களையும் உள்கட்டமைப்பாக கொண்டது. யார் அந்த நகரில் இருக்கிறார்களோ அவர்கள் சமயம் அங்கே மேலோங்கி இருப்பதாக உணர்வார்கள். கங்கை நதி தன்னிடம் சரணடைபவர்களை ஜாதிமதங்கள் கொண்டு பார்ப்பதில்லை. இறைவனும் காசியில் அவ்வாறே செயல்படுகிறான்.

காசி நகரில் வீசும் காற்றில் ஒருவித மந்திர நிலை உண்டு. கங்கை கரையில் இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து கங்கை நீரை கண் இமைக்காமல் பார்ப்பது ஒருவித தியானம். விஞ்ஞான பைரவ தந்திரா என்ற நூலில் கூறப்படும் உயர் தியான வகையின் ஒன்று. கண் திறந்து தியானிப்பது என்பது மிகவும் உன்னதமானது. அதிலும் கங்கையை பார்த்தவண்ணம் தியானிப்பது அலாதியானது.

சிவம் என்றால் நிலையானது என்ற ஒரு பொருள் உண்டு. சக்தி என்றால் நிலையற்று நகர்வது என பொருள். காசியில் நாம் சிவமாகி, கங்கை என்ற சக்தியை காணும் பொழுது அங்கே சிவசக்தி நிலையில் ஆழ்ந்த அனுபவம் பெற முடியும். காசியில் ஒருவர் அவ்வாறு ஆழ்ந்து தியானிக்கிறார் என்றால் அவருக்குள் வெடித்து சிதறும் அற்புதங்கள் அளவிட முடியாது.

காசி நகரம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது என்றாலும், இறப்பு என்பதற்கும் காசி நகரம் பிரசித்தமானது. ஒரு நாளுக்கு சுமார் 700 முதல் 1000 பிணங்கள் எரிக்கப்படுகிறது. காசியில் அகோரிகள் பிணம் திண்பதாக சிலர் சொல்லுகிறார்கள்.

மரணம் என்பதற்கும் காசிக்கும் என்ன தொடர்பு? காசி ஏன் மஹா மயானம் என அழைக்கப்படுகிறது?

இவற்றை தெரிந்துகொள்ள நாம் இறக்க வேண்டும். செத்தால் தானே சுடுகாடு தெரியும்?

வாருங்கள் செத்து செத்து விளையாடுவோம்....:)

[...சுவாசிப்பேன்]

---------------அறிவிப்பு---------

பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் நான் காசியில் இருப்பேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் காசியில் பயணிக்கலாம். காசியில் தங்கும் இடம், பயணம் எல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது. அதற்கு நான் சரியான இடத்தை காட்டி உதவுகிறேன். உங்களை அழைத்து செல்ல நான் சுற்றுலா கம்பெனி அல்ல. என்னுடன் காசியை அனுபவிக்க விரும்பினால் தனி மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும். காசி சுவாசி நிறைவு பகுதிகள் காசியிலிருந்தே வெளிவரும்..!

24 கருத்துக்கள்:

Siva Sottallu said...

// காசி சுவாசி நிறைவு பகுதிகள் காசியிலிருந்தே வெளிவரும்..! //

அருமை ஸ்வாமி, நேரடி ஒளிபரப்பை போன்று ஒரு நேரடி பதிவை காசியிலிருந்தே கொடுக்கபோகிரீகள்.

அதற்குள் நிறைவு பகுதிகள் வந்துவிடுகின்றதே என்ற வருத்தமும் வருகின்றது ஸ்வாமி .

ஆனால் ஸ்வாமி, ஸ்ரீ சக்ர புரி தொடரை போன்று காசி தொடர் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை, அது ஏன் என்றும் புரியவில்லை. இருந்தாலும் சில உண்மைகளை கற்றுக்கொண்டேன்.

Unknown said...

Interesting as usual ..

*இயற்கை ராஜி* said...

nice o nice swami ji

pranavastro.com said...

வணக்கம் சுவாமி ஓம்கார் ஐயா
காசி ஆன்மிக ஸ்தலம் என்பதற்கு மேலாக ஒரு நிறைவை தர கூடிய கோவில் உங்களுடுய காசி பயணம் தொடர எல்லாம் வல்ல அந்த பேரருள் துணை நிற்கட்டும்
மோகன்குமார்

S.Muruganandam said...

//சிவம் என்றால் நிலையானது என்ற ஒரு பொருள் உண்டு. சக்தி என்றால் நிலையற்று நகர்வது என பொருள். காசியில் நாம் சிவமாகி, கங்கை என்ற சக்தியை காணும் பொழுது அங்கே சிவசக்தி நிலையில் ஆழ்ந்த அனுபவம் பெற முடியும்.//

அருமை, அருமை. காசி சென்று கங்கையை தரிசித்து தியானம் செய்ய உத்வேகம் தருகின்றது தங்கள் எழுத்து . வளர்க தங்கள் தொண்டு.

ஓம் நமசிவாய

S.Muruganandam said...

//ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை. கலங்கிய நீராக இருந்தாலும் அவை அசுத்தமடைவதில்லை. புழுக்கள் வருவதில்லை.//

மானசரோவரின் தீர்த்தமும் இவ்வாறே பல வருடங்கள் அப்படியே தூய்மையாக உள்ளது.

கௌரி குளத்தின் தீர்த்தம் புற்று நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாம்.

pranavastro.com said...

வணக்கம் சுவாமி ஓம்கார் ஐயா
காசி ஆன்மிக ஸ்தலம் என்பதற்கு மேலாக ஒரு நிறைவை தர கூடிய கோவில் உங்களுடுய காசி பயணம் தொடர எல்லாம் வல்ல அந்த பேரருள் துணை நிற்கட்டும்
மோகன்குமார்

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா

எறும்பு said...

அப்படியே காசில எங்களுக்காகவும் வேண்டிகிங்க...
:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,
//ஆனால் ஸ்வாமி, ஸ்ரீ சக்ர புரி தொடரை போன்று காசி தொடர் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை//

இந்த தொடரில் என்னை+காசியையும் பற்றி எழுதவில்லை என்பதால் உங்களுக்கு ஈர்ப்பு இல்லை என நினைக்கிறேன். :)

பிறர் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்துகொள்ளும் இந்திய மனோநிலையாக இருக்கலாம் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அமிழ்தினி,

உங்கள் வருகைக்கு நன்று.

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி இயற்கை,
திரு மோகன் குமார்,
திரு கோவி.கண்ணன்,
திரு ராஜகோபால்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கைலாஷி,

உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

//மானசரோவரின் தீர்த்தமும் இவ்வாறே பல வருடங்கள் அப்படியே தூய்மையாக உள்ளது. //

நான் கைலாயம் சென்றது இல்லை. அங்கே நீர் எடுத்துவர தடை என கேள்வி பட்டேனே உண்மையா?

Siva Sottallu said...

//பிறர் வாழ்க்கை ரகசியங்களை தெரிந்துகொள்ளும் இந்திய மனோநிலையாக இருக்கலாம் :)//

இதுவும் சரிதானோ... நானும் ஒரு சராசரி இந்திய பிரஜை அன்றோ :-) குடியரசு தின வாழ்த்துக்கள் ஸ்வாமி.

உங்களை உட்பட மகரிஷி, குருநமசிவாயர், அருணகிரிநாதர் மேலும் பல ஞானியாருக்கு அந்த மலையுடன் இருந்த ஒரு தெய்வீக தொடைர்பை அறிந்தேன், மேலும் நம் உடலுக்கும் நாடிக்கும் அந்த மலையுடன் இருந்த ஒரு உண்மையையும் அறிந்தேன். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன் ஸ்வாமி.

Paleo God said...

ஸ்வாமி...பயணம் குறித்து மகிழ்ச்சி.:)

எப்போது? எத்துனை நாள் பயணம்? எதில் பயணம்? விளக்கினால் நன்றி.

sowri said...

Ah!

எம்.எம்.அப்துல்லா said...

//ஸ்ரீ சக்ர புரி தொடரை போன்று காசி தொடர் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை, அது ஏன் என்றும் புரியவில்லை. //

நெருப்பு எதனுடனும் இரண்டறக் கலந்து விடும்.நீர் அடித்து விலக்கிவிடும்

:))

எம்.எம்.அப்துல்லா said...

//ஆனால் கங்கை எத்தனை நாட்கள் ஆனாலும் அதன் நிலையில் இருந்து மாறுவதில்லை

//

அதேமாதிரி உலகத்தில் இன்னோரு இடத்தில் இன்னோரு நீர் இருக்கின்றது. தெரியுமா சாமி??

:)

ATOMYOGI said...

***யமுனையின் ஆற்றலும், கங்கையின் ஆற்றலும் இணைந்து ஸ்பரிசிக்கும் இடம் காசி மாநகரம்.
ரிஷிகேஷ், ஹரித்துவாரில் இருக்கும் நீரின் தன்மையை விட காசியில் அதிர்வலைகள் அதிகம் கொண்ட கங்கை நீர் இருக்கிறது என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். ரிஷிகேஷ், ஹரித்துவாரில் கண்களால் பார்த்தால் தூய நீர் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதில் காசியில் இருக்கும் கங்கையின் ஆற்றல் உண்டா என்றால் குறைவே.***

அப்படி பார்த்தா கங்கை யமுனையோட சேர்ரதால தான் பவர்புல் ஆகுதா? தனியா வீக்கா? :-)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பலாபட்டறை சங்கர்,

//எப்போது? எத்துனை நாள் பயணம்? எதில் பயணம்? விளக்கினால் நன்றி.//

உங்கள் மின்னஞ்சல் கொடுங்கள். விவரிக்கிறேன்.

திரு செளரி,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

மாண்புமிகு அப்துல்லா,

//அதேமாதிரி உலகத்தில் இன்னோரு இடத்தில் இன்னோரு நீர் இருக்கின்றது. தெரியுமா சாமி??

:)//

எனக்கு தெரியாது. என்னை அங்கே கூட்டி சென்றால் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மாயாவி,

//அப்படி பார்த்தா கங்கை யமுனையோட சேர்ரதால தான் பவர்புல் ஆகுதா? தனியா வீக்கா? :-)//

ஒரு ரூபாய் அரிசி தந்தால் சந்தோஷம்..
அத்துடன் கலர் டீவி தந்தால் இரட்டிப்பு சந்தோஷம் அல்லவா? அதுபோலத்தான் இது..

காசி மட்டும் வீக்... இரண்டும் சேர்ந்தால் Month..!

sowri said...

ஸ்வாமி ஓம்கார் said...
மாண்புமிகு அப்துல்லா,

//அதேமாதிரி உலகத்தில் இன்னோரு இடத்தில் இன்னோரு நீர் இருக்கின்றது. தெரியுமா சாமி??

:)//

எனக்கு தெரியாது. என்னை அங்கே கூட்டி சென்றால் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன். :)

Ennvo renduperum zamzamnu pesirenga. onnumey puriyala

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

கட்டுரை அருமை - காசி செல்ல வேண்டும் - பார்ப்போம் - எப்பொழுது இறைவன் கருணை வைக்கிறான் என்று

நல்வாழ்த்துகள் ஓம்கார்