Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, January 28, 2010

’நச்’(சு) கவிதைகள்


வார விடுமுறை

ஆறு நாளில் உலகம் படைக்கப்பட்டது.
சண்டே ஹாலிடே..!


போலிகள்

உன்னை விட்டு விலகுவதும் இல்லை;
உன்னை கைவிடுவதும் இல்லை -
அப்படி இருக்க நான் ஏன்
மீண்டும் உயிர்த்தெழ வேண்டும்?விளம்பரம்

பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே
இவர்களை மன்னியும்-
சும்மா இருந்த என்னை சிலுவையில்
பேனர் போல தொங்கவிட்டு
உலகறியச் செய்தார்கள்..


பலி


ஆடுகளின் வேதத்தில் பலி
அனுமதிக்கப்பட்டு இருந்தால்?
ஆட்டின் அருகே தொழுகை செய்ய
தலை தாழ்த்த பயமாகத்
தான் இருக்கிறது.


இணைவைத்தல்


கனியை நினை
மரத்தை விடு...

தேனை ருசி
தேனியை விடு...

ஒலியை கேளு
காதுகளை விடு...தசாவதாரம்


குழந்தையின் விரல் பிடித்து
ஓவ்வொரு அவதாரத்தையும்
விளக்க முற்பட்ட பொழுது
அவனுக்கு இடக்கையில்
ஆறாம் விரல் இருந்தது..!உபநயனம்

பிச்சை எடுக்க கிளம்பினான்...
தங்கம் வெள்ளி பூணுல்கள்
அணிந்த சிறுவன்..கருவறைக் காமம்


தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு
தெரியவில்லை.
கருவறையில் கடவுள் இல்லை
என்பது..
புதிய மதம்

வர்த்தமானனும் சித்தார்த்தனும்
இனி தோன்ற மாட்டார்கள்...!
அவர்களுக்கு துணை முதல்வர் பதவி
காத்திருக்கிறது...!மதமாற்றம்


புதிய கார்கள்
மதிவாதிகளிடம் சிக்கியது...

புதிய காரின் மேல்
பூவைத்து சந்தனம் தெளித்து
தன் மதத்தில் சேர்த்தான் இந்து.

ஜபமாலையை தொங்கவிட்டு
புனிதநீர் தெளித்து
காரை ஞான ஸ்தானம் செய்தான்
கிருஸ்துவன்.

கிரிச்..கிரிச் என சப்தம் கேட்டு
இருவரும் திரும்பினார்கள்.
இவர்களுக்கு போட்டியாக
சைலன்சரை கொஞ்சமாக
அறுத்துக்கொண்டிருந்தான்
இஸ்லாமியன்.

இவைகள் புரியாமல்
கார் உணர்வற்றிருந்தது...


------------------------------

27 கருத்துக்கள்:

கே.ஆர்.பி.செந்தில் said...

கவிதைகள் அனைத்தும் அற்புதம்

கோவி.கண்ணன் said...

பல கண்டனங்கள் வரப் போகுது !
:)

அத்திரி said...

எல்லா கவிதைகளும் அருமை

KS said...

மதம் கடவுளை அடைய வழிகாட்டினாலும் கைக்கொள்பவர்கள் குறைபாடுள்ள சாதாரண மனிதர்கள்தானே, அவர்களின் நடைமுறையில் குறைபாடுகள் இருக்கவே செய்யும்.

இப்படிக்கு
சின்னச்சுப்பாண்டி

இருந்தாலும் பாவமன்னிப்பெல்லாம் ரொம்பவே ஓவர்.

ஷண்முகப்ரியன் said...

கோவி.கண்ணன் said...
பல கண்டனங்கள் வரப் போகுது !
:)//

ஆமோதிக்கிறேன்,கண்ணன்!

பலா பட்டறை said...

"’நச்’(சு) கவிதைகள்"

:))

தாரணி பிரியா said...

கவிதை எல்லாம் அற்புதம். கண்டிப்பா நிறைய பேர்கிட்ட திட்டு வாங்க போறீங்க சாமி :)

sowri said...

காசிக்கு தயாரகிவிட்டிர்கள் போலிருக்கு !

sowri said...

நல்லாதானே போய்கிட்டிருக்கு?

நிகழ்காலத்தில்... said...

’நச்’(சு) கவிதைகள்

உண்மையாக இருந்தாலும் தேவையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை :))

சொல்ல வேண்டிய வேறு விசயங்கள் நிறைய இருக்கிறது...

கோவி.கண்ணன் said...

ஆகா நான் சொன்னது போல் மைனஸ் ஓட்டுப்போட்டு கண்டனம் தெரிவிக்கிறாங்க போல !
:)

VIKNESHWARAN said...

//தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு
தெரியவில்லை.
கருவறையில் கடவுள் இல்லை
என்பது..//

கலக்கல்...

VIKNESHWARAN said...

இது Enter கவிதைகள் தானே?

T.V.Radhakrishnan.. said...

அனைத்தும் அற்புதம்

yrskbalu said...

all are very nice and good punches

S said...

அட! நீங்க நாத்திக சுவாமியா? அப்புறம் எதுக்கு காசி யாத்திரை?

prabhu said...

ஆகா நான் சொன்னது போல் மைனஸ் ஓட்டுப்போட்டு கண்டனம் தெரிவிக்கிறாங்க போல !
:)மைனஸ் 2 நானும் இருக்கேன் ஐயா.

கோவி.கண்ணன் said...

இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

mokkaimail SHANKAR robin viknesh2cool

:)

நான் இன்னும் ஓட்டு போடவில்லை

எறும்பு said...

அற்புதம்..

jaisankar jaganathan said...

//தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு
தெரியவில்லை.
கருவறையில் கடவுள் இல்லை
என்பது..//
அப்போ கடவுள் எங்க இருக்கிறார் ?

Siva Sottallu said...

// பல கண்டனங்கள் வரப் போகுது !
:)//

Amen! Amen!!

Mahesh said...

காசிக்குப் போறீங்க... தி்ரும்ப வரணுமே :)))))))))))))))

உண்மை புரிந்தால் கவிதையில் / விஷயத்தில் ஒண்ணுமில்லை.....

ரங்கன் said...

//பிச்சை எடுக்க கிளம்பினான்...
தங்கம் வெள்ளி பூணுல்கள்
அணிந்த சிறுவன்.//


ஆஹா தங்கம் வெள்ளி தனை துச்சமாக நினைத்து பிச்சை எடுக்கும்
அந்தச் சிறுவன் பரமாத்மா சொரூபம் அல்லவோ !!

மாயன் said...

:-)

பிரியமுடன் பிரபு said...

கருவறைக் காமம்

தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு
தெரியவில்லை.
கருவறையில் கடவுள் இல்லை
என்பது..
///////////

இதுக்கு பேருதான் நச்..

பிரியமுடன் பிரபு said...

////
கோவி.கண்ணன் said...

பல கண்டனங்கள் வரப் போகுது !
:)
//////

சரியா சொல்லீட்டீங்க

cheena (சீனா) said...

ஹாய் ஓம்கார்

மைனஸ் ஓட்டு 4 தவிர இது வரைக்கும் யாருமே திட்டலையே - ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் ஓம்கார்