படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே.
-திருமந்திரம் -88.
லிங்கோத்பவராக இருக்கும் இறைவனின் புராண சம்பவத்தை உணரவேண்டுமானால் நம் உடலில் இருக்கும் நாடிகளை பற்றி தெரிந்துகொள் வேண்டும். நாடிகளை பற்றிய சாஸ்திரம் ”ஸ்வர சாஸ்திரம்” என அழைக்கப்படுகிறது. சரி அவற்றை சற்று விரிவாக பார்ப்போம். நிமிர்ந்து உட்கார்ந்துக் கொள்ளுங்கள்.
நாடி என்பது பரவலாக நம்மிடையே தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம். நரம்புகள் என்பது எப்படி இரத்தத்தை கடத்த உதவுகிறதோ அது போல உடலில் இருக்கும் ஆற்றலை கடத்த உதவுவது நாடிகள். கை மணிக்கட்டில் துடிப்புடன் இருப்பதை நாடி என்பார்கள் அது போல உடலில் அனேக ஆற்றல் புள்ளிகள் உண்டு.
நம் சாஸ்திரத்தில் மொத்த நாடிகள் 72,000 என கூறப்படுகிறது. அது என்ன கணக்கு 72000 என்றால் நம் உடலில் இருக்கும் நாடிகள் ஒரு நிமிடத்திற்கு அறுபது என வேலை செய்யும். அவ்வாறு ஒரு நாளில் 20 உடல் உறுப்புக்களை செயல்படுத்த தேவையானது 72,000 நாடிகளாகும். (3600 X 20)
அத்தகைய நாடிகள் உடலில் சில இடங்களில் தொடர்பு புள்ளிகளை (connection point) ஏற்படுத்துகிறது. அதன் எண்ணிக்கை 108. இந்த புள்ளிகள் நாடிகளின் சலனத்தை மாற்றும் இணைப்புக்கள். 108 புள்ளிகளை மேம்படுத்தவே 108 மணிமாலைகளில் ஜபம் செய்வது, சடங்குகளில் 108 எண்ணிக்கையை வைத்துகொள்வது என்பதை கடைபிடிக்கிறோம்.
பன்னிரண்டு ராசிகள் மற்றும் ஒன்பது கிரகங்களின் இணைவு (12X9=108) என பிரபஞ்சத்தில் 108 புள்ளிகளை உருவாக்கி மனித உடலில் அந்த 108 புள்ளிகளையும் இணைக்கிறது. 108 நாடிகளில் முக்கியமானது மூன்று நாடிகள் அவை சூட்சுமனான கண்களுக்கு தெரியாத நாடிகளாகும். நமது உடலின் இடபாகத்தில் ஒரு நாடியும், வலது பாகத்தில் ஒரு நாடியும் இயங்கிவரும்.
இடது பக்கத்தில் இருக்கும் நாடி ஈடா நாடி என்றும் வலப்பக்கம் இருக்கும் நாடி பிங்கள நாடி என்றும் அழைக்கப்படுகிறது. பிங்கள நாடி வேலை செய்தால் வலபக்கமும், ஈடா நாடி வேலை செய்தால் நமக்கு சுவாசம் வரும். நம் உடலில் இருக்கும் சுவாசம் என்பது நாடி வேலை செய்து பிறகு வெளியேற்றும் கழிவு என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். தமிழில் இந்த சுவாசத்தை சூரிய கலை ,சந்திர கலை என்பார்கள்.
மனித இயக்கமே முற்றிலும் இந்த நாடிகளை சார்ந்து இருக்கிறது என்றால் மிகையில்லை. உங்களுக்கு வலது பக்கம் சுவாசம் வரும் சமயம் சூரிய நிலையில் இருப்பதால் ஆற்றல் மிகுந்த காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
உதாரணமாக பிங்கள நாடி செயல்படும் பொழுது உடற்பயிற்சி செய்வது, பயணம் செய்வது மற்றும் பிறருடன் பேச்சு, வாதம் புரிவது என்ற வெளி செயல்களில் ஈடுபடுவீர்கள்.
சந்திர நாடியான ஈடா நாடி வேலை செய்யும் பொழுது கவிதை, கட்டுரை மற்றும் சங்கீத ரசனை ஆகியவை உண்டாகும். இப்பொழுது கூட உங்கள் இடது நாசியில் விரல் வைத்து பாருங்கள் அதில் வலது நாசியை விட சுவாசம் அதிகமாக இருப்பதை பாருங்கள். காரணம் இப்பதிவை படிக்கும் பொழுது உங்கள் ஈடா நாடி வேலை செய்வதால் இடதுபக்கம் சுவாசம் வரும்.
இரு நாடிகளும் இணைந்து வேலை செய்யும் பொழுது இந்நாடிக்கு ஸுக்ஷமணா என பெயர். இரு நாடிகளும் இணையும் பொழுது புதிதாக நாடி உருவாகாது. ஒளிரக்கூடிய இரு தீபமும் ஒன்றிணையும் பொழுது இணைந்த தீபம் நீண்டு பிரகாசிக்கும். அது போல இரு நாடிகளும் இணையும் புள்ளி ஸுக்ஷமணா எனலாம். ஸூக்ஷமணா செயல்படும் பொழுது நமது நாசியின் இரு துவாரத்திலும் சுவாசம் வரும்.
ஸூக்ஷமணா வேலை செய்யும் பொழுது நம் செயல்நிலைகள் ஒழிந்து நிலைத்தன்மைக்கு வருவோம். மனம் உள்முகமாகும். தியான நிலைக்கு தயாராகும். இயற்கையாக இந்நிலை அமைவது சிரமம். ஸூக்ஷமணா நாடியில் இயங்க பல ப்ராணாயம பயிற்சிகள் யோக சாஸ்திரத்தில் உண்டு. முனிவர்கள் கையில் தண்டம் வைத்திருப்பது தங்கள் உடலில் இருக்கும் நாடியின் ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்குத்தான்.
பாருங்கள் நாடி சாஸ்திரத்திற்குள் புகுந்து எங்கோ வந்துவிட்டோம். நாடி சாஸ்திரத்தின் இந்த விஷயங்கள்தான் எளிமையான பாமரனுக்கு புரியும் வகையில் புராணமாக்கப்பட்டது.
பிங்களா எனும் செயல் நிலை விஷ்ணுவின் செயலை குறிக்கும். பிரம்மா எனும் படைத்தல் நிலையை ஈடா நாடி குறிக்கும். நிலையான சிவ தன்மையை ஸூக்ஷமணா நாடி குறிக்கும்.
செயல் செய்து கொண்டிருக்கும் பன்றி (பிங்களா நாடி ) ஏன் லிங்கோத்பவருக்கு இடது பக்கம் இருக்கிறது? மன கற்பனை மற்றும் கலைத்திறனை குறிக்கும் அன்னம் எனும் ஈடா நாடி லிங்கோத்பவருக்கு வலது பக்கம் ஏன் இருக்கிறது என்பது புலனாகிறதா? தாழம்பூ மனதை மயக்கும் மணம் உண்டாக்குவது. கலைஞனுக்கு மனோமயக்கம் இயற்கையானது.
போதை மற்றும் கற்பனை அவனின் பிறவி குணம். அதனால் மனதை மயக்கும் தன்மையை தாழம்பூ குறிக்கிறது. மேற்கண்ட புராண கதை போன்றே விஷ்ணுவை பிரதானமாக வழிபடுபவர்கள் சிவனும் பிரம்மனும் போட்டிபோட்டதாக சொல்லுவதுண்டு. நமக்கு தேவை மூன்று எண்ணிக்கையும் அதில் நடுவில் என்றும் இணையில்லா பிரம்மாண்டம் கொண்ட ஸூக்ஷமணா நாடியும். இந்த சித்தாந்ததை உணர்ந்தால் புராண கதைகளைத் தள்ளி வைக்கலாம்.
வாழ்க்கையில் நாம் இரு நாடிகளிலும் மாறி மாறி இயங்கி வருகிறோம். சிவ நிலை எனும் ஸூக்ஷமணா நாடியில் இருந்தால் இயல்பாகவே பற்றற நிலையும் தியானமும் கைகூடும்.
சித்தர்களும் யோகிகளும் நாடியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தங்களில் வாழ்க்கையை தங்கள் நினைத்தபடி செயல்படுத்துவார்கள்.
ஸ்ரீசக்ர புரி எனும் இந்த மாநகருக்கு ஒரு சிறப்பு உண்டு. அங்கே நீங்கள் இருக்கும் நாளில் அதிக பட்சமாக ஸூக்ஷமணா நாடி வேலை செய்து உங்களை தியான நிலையிலும் பேரானந்த நிலையிலும் வைக்கும்.
ப்ராணாயாமங்கள் பல செய்து வரவேண்டிய ஸூக்ஷமணா நிலை இயல்பாகவே அமைவது சாதாரண விஷயமா? இப்பொழுது தெரிகிறதா அங்கே ஏன் சித்தர்களும் , மஹான்களும் அதிகமாக உருவாகிறார்கள் என்று?
ஸ்ரீசக்ர புரி என்ற இத்தலத்தையும் நாடி சாஸ்திரத்தையும் நான் உணரும் பொழுது எனக்கு ஒன்பது வயது....!
ஒன்பது வயது சிறுவன் தன்னந்தனியாக திருவண்ணாமலை சென்று நாடிகளை பற்றி தெரிந்து கொள்ள முடியுமா?
ஆன்மீக வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாத எனது தனிப்பட்ட வாழ்க்கையை உங்களுக்காக கூறுகிறேன்.. கேளுங்கள்...

நாடி நம்மை இயக்கினால் நீங்கள் மனிதர்.
நாடியை நீங்கள் இயக்கினால் நீங்கள் யோகி.

(தொடரும்)
45 கருத்துக்கள்:
கட்டுரை மிக நுட்பமாக உள்ளது.
நவீன அறிவியல் மூளையின் செயல் திறனை வலது ,இடது என்று பிரித்துள்ளனர் .
ஆனால் இடது மூளை லாஜிகல் வலது மூளை கற்பனை திறன் என்று பகுத்துள்ளனர்.
இதற்கும் நாடிகும் சம்பந்தம் உண்டா?
உபயோகமான தகவல்கள் ஸ்வாமி.
நாடிகள் பற்றியும், 108ன் காரணம் அறியத் தந்தமைக்கு நன்றி.
திரு essusara,
நீங்கள் குறிப்பிட்டது சரியே.. நாடி சாஸ்திரத்தின் ஆரம்ப நிலையில் இருக்கிறது நவீன விஞ்ஞானம்.
நாடிகளை முழுமையாக அறிய அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்
உங்கள் வருகைக்கு நன்றி
திரு ராகவ்,
உங்கள் வருகைக்கு நன்றி
ஸ்வாமி...அருமை...அருமை... லிங்கோத்பவருக்கு உங்கள் விளக்கம் இன்னும் எளிமை !!
அது போக.... ஒன்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்...
ராகு, கேது ரெண்டும் சாயா (virtual) கிரகங்கள். மற்றவை நிஜ கிரகங்கள். சாயா கிரகங்களையும் நிஜ கிரகங்களுக்கு நிகரா வெச்சுருக்கறது ஏன்?
ஆன்மீக வாழ்க்கையில் எனக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாத எனது தனிப்பட்ட வாழ்க்கையை உங்களுக்காக கூறுகிறேன்.. கேளுங்கள்.
கண்டிப்பாக சுவாமிஜி
நம் சாஸ்திரத்தில் மொத்த நாடிகள் 72,000 என கூறப்படுகிறது. அது என்ன கணக்கு 72000 என்றால் நம் உடலில் இருக்கும் நாடிகள் ஒரு நிமிடத்திற்கு அறுபது என வேலை செய்யும். அவ்வாறு ஒரு நாளில் 20 உடல் உறுப்புக்களை செயல்படுத்த தேவையானது 72,000 நாடிகளாகும். (3600 X 20)
புது தகவல்களுடன் தங்கள் தொடர் அருமை
\\ஸூக்ஷமணா செயல்படும் பொழுது நமது நாசியின் இரு துவாரத்திலும் சுவாசம் வரும். \\
இருதுவாரத்திலும் சமமாக சுவாசம் வரும்.
//அது என்ன கணக்கு 72000 என்றால் நம் உடலில் இருக்கும் நாடிகள் ஒரு நிமிடத்திற்கு அறுபது என வேலை செய்யும். அவ்வாறு ஒரு நாளில் 20 உடல் உறுப்புக்களை செயல்படுத்த தேவையானது 72,000 நாடிகளாகும்//
இதுவரை நான் தெரிந்து கொள்ளாத தகவல். 72000 என்று மட்டுமே அறிந்திருந்தேன். எப்படி என்று இன்றுதான் அறிந்தேன்
அற்புதமான விளக்கம் சுவாமி! நான் சென்ற யோகா பயிற்சியில் இதை விளக்கினார்கள். இந்த கதை அந்த விளக்கம் தான் என்று இப்போ திரியுது. கதை வேண்டாம், விளக்கம் மற்றும் போதும்! உங்கள் கதைக்காக காத்திருக்கிறேன்! அதாவது உங்கள் சொந்த அனுபவகதை!
திரு மகேஷ்,
//ராகு, கேது ரெண்டும் சாயா (virtual) கிரகங்கள். மற்றவை நிஜ கிரகங்கள். சாயா கிரகங்களையும் நிஜ கிரகங்களுக்கு நிகரா வெச்சுருக்கறது ஏன்?//
முன்பு ஜோதிட பாடத்தில் கூறு உள்ளேன்.
http://vediceye.blogspot.com/2009/01/i.html
இருந்தாலும் விஞ்ஞான விளக்கம் இங்கே.. நட்சத்திர ஆற்றலை சூரிய மண்டலத்தில் எது எதிரொலிக்கிறதோ அப்பகுதிகளை கிரகங்கள் என்கிறது ஜோதிடம். வானியலில் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சூரியமண்டலத்தில் ராகு கேது புள்ளிகள் தான் வெற்றிடமாக இருக்கும், வின் தூசுக்கள் மற்றும் ஏனைய தொல்லை இல்லாமல் நட்சத்திர ஆற்றல் பரவ இந்த இடங்கள் பயன்படுகிறது.
ஆற்றல் வெற்றிடத்தில் பரவும் என்ற கோட்பாடிற்கு இணங்க ஆற்றல் இடங்களான ராகு கேதுவை கிரகங்களாக கூறுகிறோம்.
ராகு கேது உருவான புராணகதைக்கு என்ன விளக்கம் என கேட்டு விடாதீர்கள். உஸ்.... இப்பொழுதுதான் ஒரு புராணத்தை முடித்திருக்கிறேன் :)
உங்கள் வருகைக்கு நன்றி.
சகோதரி சக்தி,
திரு நிகழ்காலம்,
திரு தினேஷ் பாபு,
உங்கள் வருகைக்கு நன்றி.
ஸ்வாமி சப்தநாடிகள் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
திருமணம் ஆன ஆண்களுக்கு எல்லா 72000 நாடிகள் இருக்குமா ?
திரு கோவி...
//ஸ்வாமி சப்தநாடிகள் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
திருமணம் ஆன ஆண்களுக்கு எல்லா 72000 நாடிகள் இருக்குமா ?//
உங்கள் கஷ்டம் புரிகிறது... :)
உச்சந்தலை முடியே ஒருவர் கையில் இருக்கும்பொழுது அனைத்து நாடிகளும் அடங்கிவிடும் :)
// அது என்ன கணக்கு 72000 என்றால் நம் உடலில் இருக்கும் நாடிகள் ஒரு நிமிடத்திற்கு அறுபது என வேலை செய்யும். அவ்வாறு ஒரு நாளில் 20 உடல் உறுப்புக்களை செயல்படுத்த தேவையானது 72,000 நாடிகளாகும். (3600 X 20) //
3600 எப்படி வந்தது ஸ்வாமி? ஒரு நிமிடத்திற்கு அறுபதா அல்லது ஒரு வினாடிக்கு அறுபதா?
// பன்னிரண்டு ராசிகள் மற்றும் ஒன்பது கிரகங்களின் இணைவு (12X9=108) என பிரபஞ்சத்தில் 108 புள்ளிகளை உருவாக்கி மனித உடலில் அந்த 108 புள்ளிகளையும் இணைக்கிறது. //
மேல் சொன்னது போல் 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களும் (27X4=108) 108 புள்ளிகளும் சம்பந்தம் உண்டா ஸ்வாமி?
// செயல் செய்து கொண்டிருக்கும் பன்றி (பிங்களா நாடி ) ஏன் லிங்கோத்பவருக்கு இடது பக்கம் இருக்கிறது? மன கற்பனை மற்றும் கலைத்திறனை குறிக்கும் அன்னம் எனும் ஈடா நாடி லிங்கோத்பவருக்கு இடது பக்கம் ஏன் இருக்கிறது என்பது புலனாகிறதா? //
ஸ்வாமி சின்ன திருத்தம், "அன்னம் எனும் ஈடா நாடி லிங்கோத்பவருக்கு *வலது* பக்கம் ஏன் இருக்கிறது " என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்.
//செயல் செய்து கொண்டிருக்கும் பன்றி (பிங்களா நாடி ) ஏன் லிங்கோத்பவருக்கு இடது பக்கம் இருக்கிறது? //
பிங்களா நாடி வலது பக்கம் தானே இருக்கும் ஸ்வாமி. சுவாசம் தானே இடது பக்கம் வரும் பிங்களா நாடி வேலை செய்யும் பொழுது என்று கூருநிர்கள்.
திரு சிவா,
//3600 எப்படி வந்தது ஸ்வாமி? ஒரு நிமிடத்திற்கு அறுபதா அல்லது ஒரு வினாடிக்கு அறுபதா?
//
ஒரு நிமிஷத்திற்கு அறுபது. அதாவது 60 X 60 = 3600.வினாடிகள் என கொள்ளலாம்.
//மேல் சொன்னது போல் 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களும் (27X4=108) 108 புள்ளிகளும் சம்பந்தம் உண்டா ஸ்வாமி?//
எல்லாம் ஒன்றுதான். 27X4 , 9 பாதம் ஒரு ராசிக்கு எனவே 9X12, ஒரு கிரகம் 12 ராசி வீதம் 9X12. எல்லாம் நம்மை கிரக ஆற்றல் நாடிவர நாடிய கணக்குகள்.
//ஸ்வாமி சின்ன திருத்தம், "அன்னம் எனும் ஈடா நாடி லிங்கோத்பவருக்கு *வலது* பக்கம் ஏன் இருக்கிறது " என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்.
//
நீங்கள் குறிப்பிட்டது சரியே. தவறாக தட்டச்சிவிட்டேன். நீங்கள் தான் ஆழமாக படித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். :)
//பிங்களா நாடி வலது பக்கம் தானே இருக்கும் ஸ்வாமி. சுவாசம் தானே இடது பக்கம் வரும் பிங்களா நாடி வேலை செய்யும் பொழுது என்று கூருநிர்கள்.
//
நம் உடலில் மட்டுமே நாடிகள் உண்டு லிங்கோத்பவருக்கு அல்ல. லிங்கோத்பவரை கண்டால் உங்களுக்குள் விஷ்ணுவும் , பிரம்மாவும் இருக்கும் வலது இடது பகுதிகளை குறிக்கவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
// அது போல இரு நாடிகளும் இணையும் புள்ளி ஸுக்ஷமணா எனலாம். //
ஸ்வாமி நான் புரிந்து கொண்டது இவை. தவறு இருந்தால் திருத்தவும்.
நீங்கள் கொடுத்துள்ள படத்தில் இருப்பது போல் ஈடா நாடி, பிங்கள நாடி மற்றும் சுஷும்னா நாடி என்ற மூன்று நாடிகளும், இந்த இரண்டு நாடிகளும் (ஈடா மற்றும் பிங்கள) பின்னி இணையும் புள்ளியை ஸுக்ஷமணா என்றும் அழைக்கலாம். மேலும் படத்தில் உள்ளது போல் 7 புள்ளிகளும் ( ஸுக்ஷமணா ) 7 சக்கரத்துக்கும் இணைப்பு உள்ளதா ஸ்வாமி?
மிக்க நன்றி ஸ்வாமி. நடு இரவு என்றும் பாராமல் என் வினாகளுக்கு விடை கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸ்வாமி.
தொடர் சீரான வேகத்தில் பயணிக்கிறது ஸ்வாமி! வாழ்த்துக்கள்! ஸ்ரீ சக்ர புரியில் தங்கள் ஒன்பது வயது அனுபவம், இன்னும் ஒன்பதினாயிரம் அனுபவத்துக்கும் தூண்டுகோலாக அமையட்டும்! ஈசன் சித்திக்கட்டும்!
//அது என்ன கணக்கு 72000 என்றால் நம் உடலில் இருக்கும் நாடிகள் ஒரு நிமிடத்திற்கு அறுபது என வேலை செய்யும்//
அதனால் தான் அறுபது வி"நாடி"கள் என்கிறார்களோ?
//இடை-பிங்கலை-சுஷும்ணா//
இதையே இடை, பிங்கலை, சுழிமுனை என்று தமிழில் சொல்வதுண்டு!
ஒளவைப் பிராட்டியும், விநாயகர் அகவலில்...
இடை-பிங்கலையின் எழுத்து அறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்து முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி
....
என்று இதன் இயக்கத்தை விவரிப்பாள்!
அடியேனுக்கு ஒரு ஐயம்!
மூன்று நாடிகளும் சொல்கிறார்கள்!
ஆறு ஆதாரங்களும் சொல்கிறார்கள்! (குண்டலினி யோகத்தில்,மூலாதாரம், சுவாதிட்டானம் முதலான ஆறு ஆதாரங்கள், ஆறு சக்கரங்கள்)!
இந்த மூன்று நாடிகளுக்கும், ஆறு ஆதாரங்களுக்கும் தொடர்பு உள்ளதா? ஆம் என்றால் எப்படி?
//ஸ்ரீசக்ர புரி எனும் இந்த மாநகருக்கு ஒரு சிறப்பு உண்டு. அங்கே நீங்கள் இருக்கும் நாளில் அதிக பட்சமாக ஸூக்ஷமணா நாடி வேலை செய்து உங்களை தியான நிலையிலும் பேரானந்த நிலையிலும் வைக்கும்//
ஒரு ஊரில் இருப்பதாலேயே எப்படி சுழிமுனை நாடி தானாகவே வேலை செய்யும் என்பதையும் விளக்க வேண்டுகிறேன்!
அப்படிப் பார்த்தால் திருவண்ணாமலையில் வாழ்பவர்கள் அத்தனை பேரும் - கடைக்காரர்கள் முதற்கொண்டு தொழிலாளிகள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சுழிமுனை நாடி வேலை செய்வதாக ஆகுமே!
அடியேன் கேள்வியில் தவறு இருந்தால் மன்னித்து, இதனைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்!
அற்புதமான தகவல்கள் ஸ்வாமிஜி.
பேரண்டத்தில் துவங்கி உங்கள் ஒன்பது வயது ‘personal touch' ஓடு படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் உங்கள் கதை சொல்லும் டெக்னிக் சூப்பர்!
திரு சிவா,
திரு கேஆர் எஸ்,
ஆதாரசக்கரங்கள் என நீங்கள் குறிப்பிட்டவை எனக்கு பரிட்சயம் இல்லை.. :)
அனேக யோக புத்தகங்களில் அவ்வாறு போடப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.
அவ்வை தனது அகவலில் கூட சக்கரங்களை பற்றி சொல்லி இருப்பார்.
விநாயகருக்கு பாடபட்டது என நாடிகள், சக்கரங்கள் பற்றி ஓதுவார்கள் கோவில் முன் பெருங்குரலெடுத்து பாடுவார்கள். அதன் உற்பொருள் அறியாமல்.
தற்காலத்தில் மேற்கத்திய நாடுகளிலும், நம் நாட்டின் யோக கேந்திரங்களிலும் இந்த வார்த்தைக்கு நல்ல வியாபார தன்மை உண்டு என மட்டும் தெரியும்.
என்னை பொருத்தவரை ஆதாரச்சக்கரங்களுக்கு ஆதாரம் இல்லை...!
திரு கேஆஎஸ்,
//ஒரு ஊரில் இருப்பதாலேயே எப்படி சுழிமுனை நாடி தானாகவே வேலை செய்யும் என்பதையும் விளக்க வேண்டுகிறேன்!
அப்படிப் பார்த்தால் திருவண்ணாமலையில் வாழ்பவர்கள் அத்தனை பேரும் - கடைக்காரர்கள் முதற்கொண்டு தொழிலாளிகள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் சுழிமுனை நாடி வேலை செய்வதாக ஆகுமே!
//
உங்கள் கேள்வி சரி. இக்கேள்வியை முன்பே எதிர்பார்த்தேன். நீங்கள் மட்டுமே கேட்டுகிறீர்கள்.
பதிவில் குறிப்பிட்ட இடத்தை கவனியுங்கள்....
//அங்கே நீங்கள் இருக்கும் நாளில் அதிக பட்சமாக ஸூக்ஷமணா நாடி வேலை செய்து உங்களை தியான நிலையிலும் பேரானந்த நிலையிலும் வைக்கும்.//
அங்கே இருப்பவர்களுக்கு 'அதிகபட்சமாக' வேலை செய்யும்.
சாதாரண மனிதனுக்கு, என்னை போன்ற வெளியூர் பிச்சைகாரர்களுக்கு, சாதுக்களுக்கு, அங்கே நடமாடும் குடுபஸ்தர்களுக்கு என அனைவருக்கும். யார் பிரக்ஞையுடன் அதை கவனிக்கிறார்களோ அவர்கள் மேம்படுகிறார்கள். கவனிக்காதவர்கள் “வாழ்ந்துவிட்டு” போகிறார்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு ஷண்முகப்ரியன்,
ஊரில் அனைவருக்கும் கதை சொல்பவர் நீங்கள். நீங்கள் பாராட்டியது உற்சாகம் அளிக்கிறது.
நன்றி
\\ஆதாரசக்கரங்கள் என நீங்கள் குறிப்பிட்டவை எனக்கு பரிட்சயம் இல்லை.. :)\\\\
\\என்னை பொருத்தவரை ஆதாரச்சக்கரங்களுக்கு ஆதாரம் இல்லை...!\\
அரசியலில் சேரும் எண்ணம் உண்டா?
பரிட்சயம் இல்லாததற்கு ஆதாரம் இல்லை என்கிறீர்களே:))
ஓரு இலட்சம் ஹிட்சுக்கு வாழ்த்துகள்.அடி,முடி காணாத அளவிற்கு ஹிட்ஸ்கள் குவியட்டும்.
:))
இப்பதிவை படிக்கும் போது எனக்கு ஈடா நாடி தான் ஓடிக்கொண்டிருக்கு.
கே ஆர் எஸ் க்கு கொடுத்திருக்கும் பதில்கள் அருமை.
எல்லாம் சரிங்க ஸ்வாமி.
ஆனா, அந்த சூரிய கிரகணம் பற்றி நீங்கள் சரியான விளக்கம் தரும்வரை உங்களை நான் விடுவதாக இல்லை.
தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தரவும்.
அப்துல்லா அண்ணே..
திடீருனு என்ன இப்படி ஒரு குண்டு? :)
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு வடுவூர் குமார்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு ஊர் சுற்றி...
எனக்கு தெரிந்த விளக்கத்தை சூரிய கிரகணத்திற்காக சொல்லியாகிவிட்டது.
உங்கள் கருத்தை நான் என் கருத்தாக சொல்லவேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டம்.
அடுத்த சூரிய கிரகணத்தில் வேண்டுமானல் தெளிகிறதா என பாருங்கள்.
என் மின்னஞ்சல் swamiomkar at gmail.com
ஸ்வாமி... ராகு கேது எப்படி "ஆற்றல்" புள்ளிகள் ஆகும் என்று புரியவில்லை.
Logically speaking, they are just two intersection points. North and south lunar 'nodes'. That way, any two orbits crossing each other will have two intersecting points. Purely an imaginary orbit and imaginary nodes. That point would be like any other point in the space. Still at a loss to understand how such imaginary points become energy centres. Moreover the orbits of the moving things in the space are subject to change due to various factors.
எதாவது தப்பா கேட்டிருந்தா மன்னிக்கவும்.
ஆஹா தொடர் ஜெட் வேகத்தில் செல்ல ஆரம்பித்துவிட்டதே.... நாடிகள் பற்றி ஏற்கனவே படித்த விஷயங்கள் தான்.. ஆனா இவ்வளவு நுட்பமா விளக்கி, படிச்சதில்லை...நன்றி சுவாமிஜி
ஆஹா தொடர் ஜெட் வேகத்தில் செல்ல ஆரம்பித்துவிட்டதே.... நாடிகள் பற்றி ஏற்கனவே படித்த விஷயங்கள் தான்.. ஆனா இவ்வளவு நுட்பமா விளக்கி, படிச்சதில்லை...நன்றி சுவாமிஜி
//திரு கேஆஎஸ்,
உங்கள் கேள்வி சரி. இக்கேள்வியை முன்பே எதிர்பார்த்தேன். நீங்கள் மட்டுமே கேட்டுகிறீர்கள்//
கோவி அண்ணன் கேப்பாருன்னு நெனைச்சேன் ஸ்வாமி! :)
//அங்கே இருப்பவர்களுக்கு 'அதிகபட்சமாக' வேலை செய்யும்//
புரிகிறது ஸ்வாமி!
//சாதாரண மனிதனுக்கு, என்னை போன்ற வெளியூர் பிச்சைகாரர்களுக்கு, சாதுக்களுக்கு, அங்கே நடமாடும் குடுபஸ்தர்களுக்கு என அனைவருக்கும். யார் பிரக்ஞையுடன் அதை கவனிக்கிறார்களோ அவர்கள் மேம்படுகிறார்கள். கவனிக்காதவர்கள் “வாழ்ந்துவிட்டு” போகிறார்கள்//
உண்மை!
எங்கூருல ஒரு நாட்டு வழக்கு சொல்லுவாங்க!
காஞ்சிபுரம் போனாக் காலாட்டிக்கிட்டே பொழைக்கலாம்-ன்னு!
அதை நம்பி ஒருத்தரு, காஞ்சிபுரம் வந்து, ஒரு திண்ணைல உட்கார்ந்து கிட்டு, காலாட்டிக்கிட்டே இருந்தாரு! ஒன்னும் நடக்கல! கடைசீல பசியோட ஊரு வந்து சேர்ந்தாரு! :)
காஞ்சிபுரத்தில் தறி! தறியைக் காலால் ஆட்டிப் பிழைக்கலாம்! நெய்யும் வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளணும் என்பதற்காக, காலாட்டிப் பிழைக்கலாம் என்றார்கள்! வெறும் திண்ணையில் போய் காலாட்டிக்கிட்டு இருந்தா? :))
அது போல, அண்ணாமலையில், ஸ்ரீசக்ர சக்தி ஆகர்ஷிணிகள் நிறைய! சுழிமுனை நாடி "அதிகமாக" வேலை செய்யும் வேலை வாய்ப்பு உள்ளது! அந்த வேலை வாய்ப்பை, சாதகனின் சாதனையை நாம செய்யணும்! அப்போ தான் காலாட்டிக்கிட்டே பொழைக்க முடியும்! :)
பிரக்ஞையுடன் அதை கவனிக்கிறார்களோ அவர்கள் மேம்படுகிறார்கள். கவனிக்காதவர்கள் “வாழ்ந்துவிட்டு” போகிறார்கள் என்று முத்தாய்ப்பாகச் சொன்னீர்கள்! மிகவும் நன்றி! சிவோஹம்! சிவோஹம்!
// என்னை பொருத்தவரை ஆதாரச்சக்கரங்களுக்கு ஆதாரம் இல்லை...! //
சக்கரங்களுக்கு ஆதாரம் இல்லை என்றால் "மந்திர பிரதிஷ்டை மட்டுமே உண்மை" "ப்ராண பிரதிஷ்டை" பொய் ஆகிவிடுமே ஸ்வாமி?
லலிதா ஸஹஸ்ரநமதில் கூட சக்கரங்கள் பத்தி பாடுவது உண்டோ.
என்னை பொறுத்த வரை சக்கரங்களுக்கான ஆதாரம்
"தியானலிங்கம்" ஆகா கருதுகிறேன்.
உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் ஸ்வாமி.
திரு மகேஷ்,
//ஸ்வாமி... ராகு கேது எப்படி "ஆற்றல்" புள்ளிகள் ஆகும் என்று புரியவில்லை. //
வட்டபாதை கற்பனை இல்லை. இல்லாமல் இருக்கிறது. இல்லாமல் இருக்கும் node புள்ளிகள் பூமிக்கு அருகில் இது மட்டுமே உண்டு. அதனால் பிரபஞ்சத்தில் இருக்கும் பிற புள்ளிகளை நாம் எடுத்துக்கொள்ளுவதில்லை. பூமிக்கு சந்திரனை போல வேறு ஒரு சந்திரன் இருந்தால் இரண்டு ராகு இரண்டு கேது இருந்திருக்கும்.
இன்னும் புரியவில்லை என்றால் சொல்லவும். ஆள் (ஆட்டோ) அனுப்புகிறேன்.
திரு ராஜகோபால், உங்கள் கருத்துக்கு நன்றி.
திரு சிவா,
/
சக்கரங்களுக்கு ஆதாரம் இல்லை என்றால் "மந்திர பிரதிஷ்டை மட்டுமே உண்மை" "ப்ராண பிரதிஷ்டை" பொய் ஆகிவிடுமே ஸ்வாமி?
லலிதா ஸஹஸ்ரநமதில் கூட சக்கரங்கள் பத்தி பாடுவது உண்டோ.
என்னை பொறுத்த வரை சக்கரங்களுக்கான ஆதாரம்
"தியானலிங்கம்" ஆகா கருதுகிறேன்.
உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் ஸ்வாமி.//
யாரோ சொன்னதை அரைகுறையாக கேட்டு பிராண பிரதிஷ்டா தவறாக என்பதை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
ஆதாரசக்கரங்கள் இருக்கு இல்லை என்பது விவாதத்திற்கு உண்டான விஷயம் இல்லை உணர கூடிய விஷயம்.
இருக்கு என நீங்கள் சொன்னால் இல்லை என்பதற்கு பல ஆதாரம் சொல்ல முடியும்.
அதே நேரம்....
இல்லை என நீங்கள் சொன்னால் இருக்கு என்பதற்கும் விளக்கம் சொல்ல முடியும்.
சக்கரத்தை விடுங்கள் சரணாகதியை பிடியுங்கள்.
திரு கே.ஆர் எஸ்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
உங்களின் இந்த பதிவை தொடர்ந்து வந்தாலும், பின்னோட்டம் இட சமயமில்லை ( சில சமயம் தமிழ் -ஆங்கில தட்டச்சு வேலை செய்யல )..மன்னிக்கவும்
படிக்க படிக்க ..இதோ இந்த நிமிடம் (ஷனம் )அங்கு போகவேண்டும் என்ற ஒரு அவா, யார் யார் எப்போ போக வேண்டுமோ அப்பத்தான் முடியும் என்ற விதி இருக்கு.
மிக அருமையான விளக்கம், தொடர்ந்து படித்து வருகிறேன் , நன்றி
மன்னிக்கவும்... இன்னும் விளங்கவில்லைதான்...(நான் கொஞ்சம் மந்தம்) நான் உங்களை நேரில் சந்திக்கும்போது கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி...
//இன்னும் புரியவில்லை என்றால் சொல்லவும். ஆள் (ஆட்டோ) அனுப்புகிறேன்.//
சிங்கப்பூருக்கா ஜெனீவாக்கா? :)
நன்றி ஸ்வாமி, நேற்று நண்பர் ஒருவர் வீட்டில் ஹோமம் செய்யப்பட்டது. அங்கு ஹோமம் ஆரம்பிக்கும் முன் மந்திரம் சொல்லி பிரான பிரதிஷ்டை செய்து பின்பு அக்னி மூட்டலாம் என்றார். அப்பொழுது தான் புரிந்து கொண்டேன் எனக்கு பாதி கூட தெரியவில்லை என்று.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஸ்வாமி.
Post a Comment