யோகிகளும் மஹான்களும் கிரிவலம் செல்லும் பொழுது இடப்பக்கமாக செல்லுகிறார்கள். காரணம் உலகவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் வலப்பக்கம் சுற்றி பரமனுடன் தங்களை பிணைத்துக்கொள்ளுகிறார்கள். முக்திஅடைதல் என்ற மஹாத்தத்துவதில் இயங்கும் யோகிகள் இடபக்கம் சுற்றுவது கூட நன்மைக்குதான். காரணம் அப்பொழுது தானே நாம் வலப்பக்கம் சுற்றும் பொழுது நேருக்கு நேர் சந்திக்க முடியும்?
எனது பரதேசி பயணத்தில் சில உறுதிமொழியை எனக்குள் எடுத்திருந்தேன். எங்கும் யாசகம் கேட்க கூடாது. யாரிடமும் உதவி பெறக்கூடாது என்பது போன்ற வைராக்கிய கணக்குகள் என்னுள் இருந்தது. பணம் இல்லாமல் திருவண்ணாமலை வந்து செல்லுவது சிரமம் இல்லை என பலர் நினைக்கலாம்.
உணவுக்காக கையேந்தி நின்றால் என்ன கவலை? யாராவது ஒருவராவது உதவ மாட்டார்களா? இல்லை ஒரு ஆசிரமத்தில் தங்கினால் அவர்கள் உணவு இடமாட்டார்களா? வேலை எளிதாக முடியும் அல்லவா? எனது பயணத்தில் காசில்லாமல் சென்று திரும்ப வேண்டும் என்று மட்டுமே என நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அத்துடன் எங்கும் தங்கக் கூடாது. உணவுக்காக யாரிடமும் கேட்க கூடாது என்ற வைராக்கியம் வளர்த்துக்கொண்டேன்.
என் மனதுக்குள் இருந்த வைராக்கியம் என்னவென்றால், “இறைவன் அனைவருக்கும் உணவு வழங்குவான் என்றால் நான் இருக்கும் இடத்திற்கு கேட்காமலே உணவை வழங்க வேண்டும் அல்லவா?”. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். வைராக்கியத்தை காட்டிலும் ஆணவமே அதிகமாக எனக்குள் இருந்தது.
பிரம்மனின் ஆணவமே காணாமல் போன இடம் இது. நான் எல்லாம் ஒரு காசுக்கு ஆவேனா.? சக்தி வாய்ந்த இடங்களில் நமக்கு ஆணவம் தோன்ற காரணம் அந்த தலத்தின் சக்தியை நாம் உணரத்தான்..! இல்லையென்றால் மரக்கட்டை போல அங்கு சென்று வந்தால் என்ன உணர்வு இருக்க முடியும்?
திருவண்ணாமலையில் ஆற்றல் வாய்ந்த இடம் எது என கேட்பது மல்லிகையில் எந்த பகுதி மணக்கும் என கேட்பதை போன்றது. திருவண்ணாமலையே ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் பொழுது அதன் அருகில் எது நிற்க முடியும்? திருவண்ணாமலையின் மையத்தில் இருந்து மூன்று யோஜனை தொலைவில் இருக்கும் அனைவருக்கும் திருவண்ணாமலை அருளாற்றலை வழங்குகிறது என அருணாச்சல புராணம் திடமாக கூறுகிறது.
அது என்ன மூன்று யோஜனை என உங்களுக்கு யோசனையா? ஒரு மாட்டுவண்டியில் பிணைக்கப்பட்ட மாடு தளர்வடையாமல் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அந்த தொலைவு ஒரு யோஜனை. இது சராசரியாக 8 கிலோமீட்டர் என கூறலாம். ஆக திருவண்ணாமலையை சுற்றி 25 கிலோமீட்டருக்கு அருணாச்சல கிரி தனது ஆற்றலை வெளிப்படுத்திவருகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய திருவண்ணாமலையில் முக்கியமாக அனுபவிக்க வேண்டிய இடங்கள் சில உண்டு.
கவனிக்கவும் பார்க்க வேண்டிய இடங்கள் அல்ல. அனுபவிக்க வேண்டிய இடங்கள்..!
நான் விவரிக்க போகும் இடங்கள் எல்லாம் எனக்கு பிடித்த இடங்கள். சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம். தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சுற்றுலா அழைத்துவருகிறார்கள். அவர்கள் பார்க்கும் இடத்தை நான் கூறப்போவதில்லை. நாம் என்ன இன்பச் சுற்றுலாவுக்காகவா இடம் தேடுகிறோம்? அதனால் எனது பட்டியலை ஆன்மீக தலைப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
தெற்கு பகுதியில் நான் நடக்க துவங்கிய கிரிவலப்பாதையில் இருக்கும் அடுத்த முக்கிய இடம் பச்சையம்மன் கோவில் மற்றும் கெளதமர் ஆசிரமம். இங்கே பார்வதி தேவி கெளதம முனிவரின் ஆசிரமத்தில் தவம் இருந்ததாக கூறுகிறார்கள். தற்சமயம் இந்த இடம் சிதிலம் அடைந்து வருகிறது. நேர் அண்ணாமலை என திருவண்ணாமலை கோவிலுக்கு நேராக மலைக்கு பின்புறம் இருக்கும் இடம் இந்த நேர் அண்ணாமலை கோவில்.
அதிலிருந்து ஒரு ஐந்து கிலோமீட்டரில் வருவது திருவண்ணாமலையில் எனக்கு மிகவும் பிடித்த இடம். முக்கிய நகரங்களின் மையப்பகுதியை ஹார்ட் ஆப்த சிட்டி என்பார்கள். திருவண்ணாமலையின் ஹார்ட் அதாவது ஆன்மீக இதயமாக செயல்படு இடம் அடி அண்ணாமலை.
இந்த கோவிலுக்கு பெளர்ணமி தவிர பிற நாட்களில் சென்றீர்கள் என்றால் நீங்களும் இறைவனும் மட்டும் தான் இருப்பீர்கள். அத்தனை (அத்துணை..!) அமைதி இருக்கும் கோவில். அடி அண்ணாமலை கோவில்தான் முதன் முதலாக திருவண்ணாமலையில் கட்டபட்ட கோவில்.
இக்கோவிலின் உண்மையான பெயர் “ஆதி அண்ணாமலை”.
அடி அண்ணாமலை கோவிலின் வடக்கு சுவர் முழுவதிலும் கிளிகள் மற்றும் புறாக்கள் வரிசையாக அமர்ந்திருக்கும் இருக்கும். நினைத்து பாருங்கள் பச்சையும்,சாம்பலும் மற்றும் வெள்ளையுமாக கோவிலின் சுவரில் பறவைகள் அமர்ந்திருக்கும் இயற்கையின் வண்ண விளையாட்டு எப்படி இருக்கும் என்று..... மாணிக்கவாசகர் இந்த கோவிலில்தான் முதன் முதலில் திருவாசகம் பாடினார். அடி அண்ணாமலைக்கு அருகில் மாணிக்க வாசகருக்கு ஒரு தனிக்கோவில் இங்கே மட்டுமே காண முடியும். அடி அண்ணாமலை கோவிலும் அதன் சுற்றுபுறமும் கண்டால் நமக்கே நமச்சிவாய வாழ்க..நாதன் தாழ் வாழ்க என பாடத்தோன்றும்.!
அடிஅண்ணாமலைக்கோவிலில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி அம்சம் மிகவும் வித்தியாசமானது. அதைவிவரிக்க தமிழில் வார்த்தையை தேடிவருகிறேன். ஒருநாள் கண்டிப்பாக விவரிக்க முயற்சி செய்கிறேன்.... மெளன ரூபனை வார்த்தைகளால் விவரிக்கும் நாள் என்னாளோ?
எனக்கு தெரிந்தவரையில் ஆற்றல் மிகுந்த கோவில்களில் மூல ஆற்றலை ஒரு இடத்தில் சேமித்து வைத்திருப்பார்கள். அந்த மூல ஆற்றல் கோவிலின் கருவரைக்கு சென்று விக்ரஹத்தை சக்தியூட்டும். மூல ஆற்றல் இருக்கும் இடம் ரகசியமாகவே வைக்கப்படும். கோவில் சிதைக்கபட்டாலும் மூல ஆற்றல் இடங்கள் மூலம் மீண்டும் அவற்றை உயிர்ப்பிக்கலாம். ஆன்மீக ஆற்றல் உள்ளவர்களால் மூல ஆற்றல் கேந்திரங்களை கண்டறிய முடியும்.
திருவண்ணாமலை சக்திவாய்ந்த இடத்தின் மூல சக்தி இரு இடங்களில் மட்டும் அதீதமாக இருப்பதாக எண்ணுகிறேன். ஒன்று அடி அண்ணாமலை மற்றொன்று முடி அண்ணாமலை.
அடி அண்ணாமலை இந்த இடம் என்றால் முடி அண்ணாமலை என்பது மலையின் சிகரம். திருவண்ணாமலையின் உச்சி பகுதி மிகவும் சக்தி வாய்ந்தது. சிறு வயதிலிருந்து பல மலைகளை ஏறிய அனுபவம் உண்டு. மலையேறுபவர்களே சிரமம் கொள்ளும் வெள்ளிங்கிரி மலைக்கு கூட எளிமையாக ஏறிவிடுவேன். ஆனால் முடி அண்ணாமலையானை காண ஏறினால் மட்டும் என்னால் முடியாது..!
மிகவும் செங்குத்தான பாதை. ஸ்ரீ சக்ர புரி என்பதற்கு இணையாக சிறிது ஏற்றம் பிறகு சமமான பாதை என படிபடியாக உச்சியில் குறுகிய முனையாக இருக்கும். உச்சியில் 20 அடி சுற்றளவு மட்டுமே இருக்கும். ஏறும் பாதையில் அனேக குகைகள் உண்டு. அதில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடினால் ஓம்கார மந்திரம் கேட்கும்.
வருடத்தில் பல முறை திருவண்ணாமலை சென்றாலும், குறைந்தபட்சம் இருமுறையாவது முடி காணாமல் வரமாட்டேன். நான் என்னுடன் வந்த வெளிநாட்டு மாணவியுடன் சில வருடம் முன் மலையேறும் பொழுது நடந்த சம்பவம் நீங்கள் மலையேறும் பொழுதும் நடக்கலாம்.
அது .......
(தொடரும்)
31 கருத்துக்கள்:
Interesting,Giving suspense in every episode!!!Making us to follow every moment.
அறிய பல விஷயங்களை கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இப்பொழுது புரிகிறது, யோகிகள் ஏன் இடப்பக்கமாக வருகிறார்கள் என்று. தொடர்பதிவிர்க்காக காத்திருக்கிறேன். இரண்டு வருடம் முன்பு நான் ஒரு கோவிலுக்கு சென்றேன். அங்கு சிவன் கோயில் விஷ்ணு கோயில் இரண்டுமே பக்கம் பக்கம் இருந்தது. விஷ்ணு அனந்த சயனத்தில் ஒரு மலையில் செதுக்கபட்டிருந்தார். அந்த கோயில் குளம் ஆக்டகோனால் (எட்டு சைடு) வடிவில் இருந்தது. (இந்த ஒரு கோயிலில் மட்டும் தான் அது உள்ளது). ஊர் பெயர் ஞாபகம் இல்லை, உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் அந்த கோயிலின் ஆன்மீக சிறப்பை விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
//திருவண்ணாமலை சக்திவாய்ந்த இடத்தின் மூல சக்தி இரு இடங்களில் மட்டும் அதீதமாக இருப்பதாக எண்ணுகிறேன். ஒன்று அடி அண்ணாமலை மற்றொன்று முடி அண்ணாமலை.
//
ஏன் சாமி ஓரு அருவி விழுகின்றது என்றால் மேலிருந்து கீழ்வரை ஓரே ஆற்றல்தானே.அதில் அடி என்ன? முடி என்ன? இடையில் ஓன்றும் இருக்காதா?
பி.கு : என்னையையும்,சாமியையும் பற்றித் தெரியாத அன்பர்களின் கவனத்திற்கு -
இது எனக்கும் சாமிக்குமான தனிப்பட்ட உரையாடல்.ஏதோ ஓரு இஸ்லாமியன் ஏடாகூடமாகக் கேள்வி கேப்பதாக நினைத்து தனிப்பட்ட அர்ச்சனை வேண்டாம்.
9 ஆம் பகுதிக்கு நன்றி ,
பதிவு மிக நன்று !
கட்டுரை படிப்போரை திருவண்ணாமலை செல்லத் தூண்டுகிறது.
கோவிலுக்கு எதற்காக போகவேண்டும் என்ற உட்கருத்தும் மெள்ள மெள்ள வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சாமி, 200 ஃபாலோயர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
நமச்சிவாய..
//அதில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடினால் ஓம்கார மந்திரம் கேட்கும்.//
பசி மயக்கத்தோடு மேலே ஏறுபவர்களுக்கு இன்னும் சத்தமாக கேட்கும்.
:)
திரு ak,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு தினேஷ் பாபு,
நல்ல ஒரு கோவிலை சுட்டிகாட்டிவிட்டீர்கள். வரும் காலத்தில் அதன் சிறப்பை கூறுகிறேன். அதுவரை ரகசியமாகவே இருக்கட்டும் :)
அப்துல்லா அண்ணே...
//ஏன் சாமி ஓரு அருவி விழுகின்றது என்றால் மேலிருந்து கீழ்வரை ஓரே ஆற்றல்தானே.அதில் அடி என்ன? முடி என்ன? இடையில் ஓன்றும் இருக்காதா?
//
எப்படி இப்படியெல்லாம்?
அருவியின் மேல்பகுதி கீழ்பகுதியை பற்றி கூறவில்லை. திருவண்ணாமலையே அருவி போல ஆற்றல் எங்கும் நிறைந்திருக்கிறது.
ஆனால் அருவி உற்பத்தியாக ஒரு ஆறு அதன் துவக்கம் ஒன்று தேவை அல்லவா? அதை தான் ஆற்றல் மூலங்கள் என சொல்லுகிறேன்.
வீட்டில் மின்சாரம் எங்கும் இருந்தாலும் அதற்கு ஒரு மெயின் சுவிட்ச் ஒன்று இருக்கவேண்டும் அதை தான் குறிப்பிட்டேன்.
//
பி.கு : என்னையையும்,சாமியையும் பற்றித் தெரியாத அன்பர்களின் கவனத்திற்கு -
இது எனக்கும் சாமிக்குமான தனிப்பட்ட உரையாடல்.ஏதோ ஓரு இஸ்லாமியன் ஏடாகூடமாகக் கேள்வி கேப்பதாக நினைத்து தனிப்பட்ட அர்ச்சனை வேண்டாம்.//
இது போன்ற பின்குறிப்புகளை தவிர்க்கவும் :) யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சும்மா இருப்பவர்களையும் கூப்பிட்டு பின்குறிப்பு சொல்ல வேண்டாம்:)
எனக்கு தெரிந்து திருவண்ணாமலையில் (கோவில்களில்) மட்டும் தான் “மத” பிரச்சனை இல்லை. அதுக்கு 'அடி'போட வேண்டாம். 'மூடி' போடுவோம் :)
திரு புன்னகை,
திரு ஸ்ரீதர்,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு நிகழ்காலம்,
எதிர்காலத்தில் இல்லாமல் நிகழ்காலத்தில் 200 ஃபாலோயர்களாக்கியதற்கு நன்றி. :)
உங்கள் கருத்துக்கு நன்றி.
திரு.கோவி.கண்ணன்,
//
பசி மயக்கத்தோடு மேலே ஏறுபவர்களுக்கு இன்னும் சத்தமாக கேட்கும்.
:)//
முடியல. :)
வானத்தை பார்த்தால் சங்கு சக்கரம் தெரியும் :)
//சாமி, 200 ஃபாலோயர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
நமச்சிவாய..//
ஸ்வாமி ஓம்கார் said...
திரு நிகழ்காலம்,
எதிர்காலத்தில் இல்லாமல் நிகழ்காலத்தில் 200 ஃபாலோயர்களாக்கியதற்கு நன்றி. :)
//
இது தெரிந்திருந்தால் நானும் ஏற்கனவே பாலோயராக சேர்ந்திருந்ததை நீக்கிவிட்டு 199 வந்ததும் மீண்டும் சேர்ந்திருப்பேன்.
:)
\\திரு.கோவி.கண்ணன்,
பசி மயக்கத்தோடு மேலே ஏறுபவர்களுக்கு இன்னும் சத்தமாக கேட்கும்.
:)\\
சாக்கு சாமியின் இன்னொரு அவதாரம்தான் கோவியார் :))
ஆமா சீரியஸாகவே கேட்கிறேன்,
பசியோடு ஏறீனார்களா? அப்போது ஓம்காரம் எப்படி இருந்தது.
இல்லை என்பது பதிலானால் அடுத்த முறை முயற்சிக்கவும்
ஆக்கபூர்வமாக கேள்விகளை எனக்கு கேட்க தூண்டிய கோவியாருக்கு என் வணக்கங்களும் நன்றியும்:))
திரு நிகழ்காலத்தில்...
//
பசியோடு ஏறீனார்களா? அப்போது ஓம்காரம் எப்படி இருந்தது.
இல்லை என்பது பதிலானால் அடுத்த முறை முயற்சிக்கவும்
ஆக்கபூர்வமாக கேள்விகளை எனக்கு கேட்க தூண்டிய கோவியாருக்கு என் வணக்கங்களும் நன்றியும்:))//
என் ஒன்றுவிட்ட உறவினர் குதம்பை சித்தர் சொன்னதை கேளுங்கள்.
மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?
அதனால் மாங்காய்பால் உண்டு ஏறினேன் :)
இது போன்ற பின்குறிப்புகளை தவிர்க்கவும் :) யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சும்மா இருப்பவர்களையும் கூப்பிட்டு பின்குறிப்பு சொல்ல வேண்டாம்:)
//
யாரு சாமி சும்மா இருக்கா இங்க ?? உங்களைத் தவிர :)
என் பிரச்சனை என் நிலையில் இருந்தால் மட்டுமே புரியும். இறைநிலையில் இருந்தால்கூட கஷ்டம்தான் புரிந்துகொள்ள :)))
எனிவே இனிமேல் இங்கு பி.கு. போடமாட்டேன். :)
//அதனால் மாங்காய்பால் உண்டு
//
ரெண்டு மூணு எபிசோடுக்கு முன்னாடி ஞானப்பால். இப்போ மாங்காய்பால்... சாமி நீங்க உண்மையிலேயே அண்ணாமலை சொந்தக்காரர்தான்
இஃகீஃகீஃகீஃகீ
Intersting swami. But you have made us to wait for a such a long period. Mr.Dinesh Babu refers to Thirumeiyam Temple? Also tell us how one should make himself ready to receive the blessings while visiting such places.
Dear Swami ji
Siva puranam mulu manathodu padum pothu entha unarvu erpatatho athe unarvu ungal thodarai padikum pothu
Nandri
Rgds/thiru
இடப்பக்கம், வலப்பக்கம் இவ்வளவு விசயங்களா...
நன்றி அய்யா
இடப்பக்கம், வலப்பக்கம் இவ்வளவு விசயங்களா !
நன்றி அய்யா.
சுவாமி அடி அண்ணாமலை எனக்கு மிகவும் பிடித்த கோவில். என்னுடைய் பெரிய வருத்தம்எல்லா இடமும் வீட்டு மனை ஆகிவருவது தான்...
ஸ்வாமி ஓம்கார், உங்க நண்பர்களோட போட்டி போட்ட மூணு நாள் கதையை கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடுங்க. அப்புறம் தனியா திருவண்ணாமலை பெருமையை படிக்கலாம்!
இது என்ன வசியமா?
குமுதம், விகடனில் எழுதுகிற சாமியார்கள் மாதிரி... தொடர்ச்சியா.... :-)
நீங்கள் ஏதாவது வார இதழில் எழுதுறீங்களா?
// முக்திஅடைதல் என்ற மஹாத்தத்துவதில் இயங்கும் யோகிகள் இடபக்கம் சுற்றுவது கூட நன்மைக்குதான். காரணம் அப்பொழுது தானே நாம் வலப்பக்கம் சுற்றும் பொழுது நேருக்கு நேர் சந்திக்க முடியும்? //
யோகிகள் இடப்பக்கம் சுற்றும் நன்மை இன்னும் சரிவர விளங்கவில்லை ஸ்வாமி. நேருக்கு நேர் சந்திக்க எதற்காக சுற்றிவரவேண்டும்? ஒரு இடத்தில் நின்றுகொண்டோ அல்லது அமர்ந்துகொண்டோ எதிரில் வருபவர்களை சந்திக்கலாமே? இடப்பக்கம் சுற்றி வருவதன் நன்மை சற்று விரிவாக கூறும்படி கேட்டுகொள்கிறேன் ஸ்வாமி...
திரு செளரி,
நீங்கள் சொன்ன இடம் சரிதான்.
அது போக ஹம்பி எனும் இடத்தில் இருக்கும் குளம் அருமையாக இருக்கும்.
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு thiru,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு கேசவன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
சகோதரி சீதா,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. மேலும் திருவண்ணாமலையின் நிலத்தின் விலை கேட்டால் தலை சுற்றுகிறது.
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு ஷங்கரலிங்கம்,
//ஸ்வாமி ஓம்கார், உங்க நண்பர்களோட போட்டி போட்ட மூணு நாள் கதையை கொஞ்சம் சீக்கிரம் சொல்லிடுங்க. அப்புறம் தனியா திருவண்ணாமலை பெருமையை படிக்கலாம்!
இது என்ன வசியமா?//
திருவண்ணாமலை என்றாலே ஒரு வசியம் தானே?
//குமுதம், விகடனில் எழுதுகிற சாமியார்கள் மாதிரி... தொடர்ச்சியா.... :-)
நீங்கள் ஏதாவது வார இதழில் எழுதுறீங்களா?//
அவர்கள் எல்லாம் பெரும் ஞானிகள். நான் இன்னும் ஞானம் அடையவில்லை.
திரு சிவா,
//யோகிகள் இடப்பக்கம் சுற்றும் நன்மை இன்னும் சரிவர விளங்கவில்லை ஸ்வாமி. //
உலக பற்றுடன் இருப்பார்கள் வலம் வருகிறார்கள். உலக பற்று இல்லாமல் இருப்பவர்கள் இடமாக சுற்றுகிறார்கள்.
ஒரு பொருளை மற்றொன்றுடன் பிணைக்க கயிறை வலம் சுற்ற வேண்டும். விடுவிக்க இடம் சுற்றவேண்டும்.
நாளை அடுத்த வகுப்பில் சந்திப்போம் :)
அது என்ன மூன்று யோஜனை என உங்களுக்கு யோசனையா? ஒரு மாட்டுவண்டியில் பிணைக்கப்பட்ட மாடு தளர்வடையாமல் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அந்த தொலைவு ஒரு யோஜனை. இது சராசரியாக 8 கிலோமீட்டர் என கூறலாம். ஆக திருவண்ணாமலையை சுற்றி 25 கிலோமீட்டருக்கு அருணாச்சல கிரி தனது ஆற்றலை வெளிப்படுத்திவருகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.//
ஆன்மீகத்துக்கு விஞ்ஞான விளக்கங்கங்கள் எப்போதும் ஒரு சாபக் கேடு.உங்களுக்கெதற்கு ஸ்வாமி விஞ்ஞானம்?
ஒரு கி.மீ.க்கு இயந்திரத்தனமான definitions தான் சரியாக இருக்க முடியும்.
கி.மீட்டரை மாட்டின் நடையை வைத்து அளந்தால் அதனுடைய பரம்பரை,உடல்வாகு,அன்றைய தட்ப வெப்ப நிலை,அன்று அது உண்ட உணவு போன்று ஏராளமான் காரணிகளால் அது மாறிக் கொண்டே இருக்கும்.அது உயிர். அதனை அறிவியல் அளவுகொளாக எடுத்துக் கொள்ளல் முடியாது.
விளக்கவொண்ணாத ஆன்மாவைச் சொற்களால் விளக்கும் கடும் பணியை மேற்கொள்ளும் போது அன்பர்களை நேரடியான உங்கள் அனுபவங்களால்,உணர்வுகளால்,மனதையும் தாண்டிய வெளிப்பாடுகளினால் விளக்கினீர்களானல் அது புரியும்,
‘நீங்களே அண்ணாமலைக்கும் ,மல்லிகை மலருக்கும் முடிச்சுப் போட்டுச் சொன்னீர்களே அது போல.
மிக்க நன்றி ஸ்வாமி, மிகத்தெளிவாக புரிந்தது இப்போது.
மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு உங்களுக்கு தொந்தரவு செய்ய விரும்பவில்லை ஸ்வாமி, இருந்தாலும் ஒரு சின்ன கேள்வி.
என்னைபோல் குடும்ப வாழ்கையில் உள்ளவர்கள் இடப்புறமாக சுற்றி வந்தால் ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா ஸ்வாமி?
//என்னைபோல் குடும்ப வாழ்கையில் உள்ளவர்கள் இடப்புறமாக சுற்றி வந்தால் ஏதேனும் பாதிப்புகள் உண்டாகுமா ஸ்வாமி?
//
மெக்காவில் பலமுறை சுற்றியவன் என்ற அனுபவத்தில் சாமியின் சார்பாக நானே சொல்லிவிடுகின்றேன். ஓரு பாதிப்பும் வராது. மாறாக அனைத்தின் மேலும் அன்பு அதிகரிக்கும்.அதற்கு உங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல.
திரு அப்துல்லா,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் முன்வந்து விலகியதற்காக பாராட்டுகின்றேன்.
Post a Comment