விவசாயம் செய்யும் பூமியில் அனேக களைகள் இருக்கும். களைகளை அகற்றி நீர்பாய்ச்சினால் நல்ல ஒரு அறுவடை கிடைக்கும். இல்லை என்றால் விழலுக்கு இறைத்த நீர் என கூறுவார்களே அப்படி ஆகிவிடும். செயற்கையாக கவனத்துடன் செயல்படும் பொழுதே இவ்வாறு அனேக களைகள் வந்துவிடும். இயற்கை காடு என்றால் களைகளுக்கு கேட்கவா வேண்டும்?
அது போலத்தான் திருவண்ணாமலையில் ஆதி குரு முதல் அனேக ஜீவன் முக்தர்கள் தோன்றினார்கள். தோன்றி வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு இடையே சில களைகளும் உண்டு. அவற்றை கண்டுணர்ந்து அகற்றிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஞான அறுவடையில் அதிக மகசூல் கிடைக்கும்.
தென் பாரத திருநாட்டில் ஸ்ரீ சைலத்திற்கு பிறகு திருவண்ணாமலையில் தான் சாதுக்களும், யோகிகளும் கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள். எந்த பொருளும் கையில் இல்லாமல் பறவை போல சுற்றி திரியும் சாதுக்களை காண்டால் எனக்கு ஆன்மீக நிலையையும் தாண்டி வரைமுறையில்லாமல் பொறாமை ஏற்படும்.
ரமணாஸ்ரமத்தில் தினமும் காலை 11 மணிக்கு நாராயண சேவை என்ற ஒரு நிகழ்வு உண்டு. திருவண்ணாமலையில் இருக்கும் அனேக சாதுக்களும் இங்கே கூடிவிடுவார்கள். அவர்களை வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் ரமணாஸ்ரமத்தில் உணவு வழங்குவார்கள். சாதுக்கள் ருசிக்காக சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு பசிக்கும் பொழுது ஏதோ ஒருவகை சோறு வேண்டும். அவ்வளவுதான். சிலர் இரு கையையும் குவித்து அன்னம் பெற்று சில அடிகள் தள்ளி சென்று உண்பார்கள். பிறகு அங்கே இருக்கும் குழாயில் கைகளை கழுவி விட்டு சென்றுவிடுவார்கள். அவ்வளவுதான்...
தினமும் உணவு உண்ண மாட்டார்கள். உணவு வாங்க பாத்திரம் கூட வைத்திருக்கமாட்டார்கள். இவர்கள் வாழும் பட்டினத்தார்கள். அந்த பாத்திரத்தால் வாழ்க்கையில் ஒட்டுதல் இருக்க கூடாது என்பது அவர்களின் சித்தாந்தம்.நாராயண சேவை என்ற இந்த இலவச உணவு முறை தினமும் தடையில்லாமல் செய்கிறார்கள். குறைந்தபட்சம் இருநூறு சாதுக்களாவது உண்பார்கள்.
திருவண்ணாமலை செல்லும் சமயங்களில் காலை பதினோரு மணிக்கு அங்கே நடக்கும் இந்த அன்ன வேள்வியை கண்டு ஆனந்தமடைவது என் வாடிக்கை. எவ்வளவு பார்த்தாலும் அடங்காத ஆனந்தம்.
சாதுக்கள் தவிர்த்து பிச்சைக்காரர்களும் உணவு உண்ண வருவதுண்டு. அவர்கள் பிளாஸ்டிக் பையில் அல்லது பாத்திரத்தில் வாங்கிசெல்லுவார்கள். காவி உடை போட்ட காரணத்தால் அவர்கள் சாதுக்கள் என சிலர் எண்ணி ஏமாந்துவிடுவதுண்டு.
சாதுக்களின் முகம் மற்றும் உடை அவர்களின் தனித்தன்மையை காட்டும். சாதுக்கள் என்பவர்கள் அனேக ஆன்மீக முன்னேற்றம் கொண்டாலும் கூரையின் கீழ் தங்காமல் எந்த பொருளையும் சேர்க்காமல் இருப்பவர்கள். யாராவது யாசகம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளுவார்கள். யாரிடமும் காசு கொடுங்கள் என யாசகம் கேட்க மாட்டார்கள்.
பிச்சைக்காரர்களுக்கும் சாதுக்களுக்கும் எப்படி வித்தியாசம் தெரியாமல் இருக்கிறோமோ அது போலவே சிலர் திருவண்ணாமலையில் நம்மை ஏமாற்ற “ஞானிகள்” வேஷம் போடுவதுண்டு. சின்ன சின்ன சித்து வேலைகள் கற்றுக்கொண்டு இவர்கள் செய்யும் சுட்டித்தனங்கள் தாங்க முடியாது.
அதிசயம் செய்பவர்களை கடவுளாக நினைக்கும் மக்கள் இவர்களிடம் நம்பி ஏமாந்துவிடுவார்கள். அருணகிரி நாதர் துவங்கி ரமணர் வரையும், அதன் பிறகு வந்த யோகி ராம்சூரத் குமார் போன்றவர்களும் அதிசயங்கள் எதையும் நிகழ்த்தி காட்டியதில்லை. அவர்கள் சொன்ன கருத்தால் மனிதர்களின் மனங்களில் அதிசயம் நிகழ்தது.
தெரியாமல் உங்கள் முழங்கை எதிலாவது முட்டினால் ஒருவித மின்சாரம் பாயும் அனுபவம் வரும் அல்லவா? அது போல பிறரை தொட்டால் மின்சார உணர்வு உண்டாக்கும் ஒரு சித்து இருக்கிறது. சில பிராணாயம பயிற்சிகளால் எளிதில் பெறமுடியும். இத்தகைய தேவையற்ற சித்துக்களை வைத்துகொண்டு வருபவரிடம் உனக்கு குண்டலினி ஆட்டிவிக்கிறேன் குந்துமணி விற்கிறேன் என சிலர் ஏமாற்றுவதுண்டு.
அவர்கள் முதுகை தொட்டதும் மின்சாரம் பாய்ந்தது போல இருக்கும். அவ்வளவுதான். நானும் குண்டலினி அனுபவம் பெற்றுவிட்டேன் என அந்த நபர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியாது. இந்த சித்துக்களை வைத்துகொண்டு சிலர் உலக புகழ் (போலி) யோகிகளானதும் உண்டு.
எனது வெளிநாட்டு மாணவியுடன் மலைமேல் ஒரு சம்பவம் நடந்ததாக சொன்னேன் அல்லவா? அதற்கு அடுத்த நாள் காலை 4 மணிக்கு தியானம் செய்ய நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து ரமணாஸ்ரமத்தின் தியான மண்டபத்திற்கு செல்ல தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.
தெருவில் சில சாதுக்கள் படுத்துதூங்கி கொண்டிருந்தனர். அதில் ஒரு சிலர் மட்டும் தூங்காமல் உற்கார்ந்து இருந்தனர். நான் அவர்களை கடக்க முயலும் பொழுது அதில் ஒருவர் சப்தமாக “டேய்....” என்றார்.
நான் திரும்பவில்லை. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தேன்.
“டேய் உன்னைத்தாண்டா”.. என்றார்.
நான் நிதானத்துடன் நடந்தேன். ஆனால் திரும்பவில்லை. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருப்பேன்.
“டேய் ஓம்காரு உன்னத்தாண்டா..” என்றார்.
நினைத்து பாருங்கள் ஒருவர் உங்களின் பெயரை சொல்லி காலை 4 மணிக்கு கூப்பிடுகிறார். அவருக்கு உங்களின் பெயர் தெரிந்திருக்கிறது....! ராம சாமி, குப்பு சாமி என குத்துமதிப்பாக அடித்துவிடவில்லை. ஸ்பொஷ்டமாக “ஓம்கார்” என்கிறார்.
நான் நின்றேன். திரும்பி அவரை பார்த்தேன்.
“உன் பேரு மட்டுமில்லை நேத்து மலைக்கு மேல என்ன நடந்துனும் எனக்கு தெரியும்” என்றார்.
நானும் எனது மாணவியும் மலைக்கு மேல் சென்றதும் இவருக்கு தெரிந்திருக்கிறது.
அவரிடம் நான் கேட்டேன், “அதுக்கு இப்ப என்ன? உங்களை நமஸ்காரம் பண்ணனுமா?” என்றேன்.
அவ்வளவுதான்..
அவர் அமைதியாகிவிட்டார். நான் ரமணாஸ்ரமத்திற்கு தியானம் செய்ய சென்றேன்.
இவ்வாறு சித்துக்களை காட்டி நாம் வாய்பிளந்து நிற்கும் பொழுது நமக்கே வாய்க்கரிசி போடும் பித்தர்கள் இங்கே அதிகம். நீங்கள் இதை பெரிதுபடுத்தாமல் ஒதுக்கிவிடவேண்டும். மாயையை விலக்க திருவண்ணமலை வந்து மாயையில் விழலாமா?
முழுமையானவர்கள் என்றும் உங்களிடம் அதிசயம் காட்டமாட்டார்கள். உங்களை அறியாமல் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்துகொண்டிருப்பார்கள். அதற்கு விளம்பரம் தேடமாட்டார்கள்.
பலாப்பழத்தை திருடிய திருடன் எவ்வளவு நாள் தான் அதை தனது நாற்காலிக்கு கீழே மறைத்துவைக்க முடியும்? அது போல ஞானிகள் தங்களை பற்றி யாரிடமும் கூறுவதில்லை. அவர்களின் இருப்பு எப்படியோ அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது.
பகவான் சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு பரதேசியாக சஞ்சரித்தவர். அனைத்து வேதங்களையும் இளவயதில் கற்றவர் என்றாலும் இருபது வயதில் அவதூதராக அப்படியே திருவண்ணமலைக்கு வந்துவிட்டார். எங்கும் தங்கமாட்டார்.
திருவண்ணாமலையை சுற்றி சுற்றி வருவார். திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோவிலின் உள்ளே இருக்கும் முருகன் சந்நிதியில் அமர்ந்திருப்பார். இவர் எப்படி பட்டவர் என யாருக்கும் தெரியாது. ஊரை சுற்றி வரும் பொழுது ஏதாவது கடையில் நிற்பார். அந்த கடைகாரர்கள் ஏதாவது அவருக்கு கொடுப்பார்கள். சென்றுவிடுவார். யாரிடமும் பேச்சுக்கிடையாது..!
நாள் முழுவதும் அந்த கடையில் வியாபாரம் தூள் பறக்கும. என்றைக்கும் இல்லாத வியாபாரம் நடக்கும். இது படிப்படியாக மக்கள் உணர ஆரம்பித்தார்கள்.சேஷாத்திரி ஸ்வாமிகள் என்றும் இதை சொன்னது கிடையாது. அவருக்கு பிச்சை போட்டவர்கள் உணர்ந்தார்கள். சேஷாத்திரி ஸ்வாமிகளும் எத்தனைநாள் தான் அவரின் ஆன்மீக பலாபழத்தை மறைக்க முடியும்?
இப்படித்தான் அனேக சாதுக்களும், அவதூதர்களும், ஞானிகளும், மஹான்களும் பார்க்க எளிமையாக இருந்தாலும் உள்ளே மஹாஉன்னத நிலையில் இருக்கிறார்கள். அதனால் அதிசயம் நிகழ்த்துபவர்களை நான் எப்பொழுதும் நகைச்சுவையுடனே அனுகுவேன்.
அருணாச்சல மலையில் வேறுயாரும் இல்லாத இடத்தில் நான், என் மாணவி மற்றும் மற்றொருவருடன் நிகழ்ந்த நிகழ்வை ஒருவர் சொன்னார் என்றவுடன் அவரிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு தோன்றவில்லை மாறாக ஏளனமே தோன்றியது. சின்ன சித்துக்கள் வைத்து என்ன செய்துவிட முடியும்? சித்தமில்லாமல் இருப்பவருக்கு சித்துகள் எதுக்கு?
அது சரி. மலையில் என்ன நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? தெருவில் உற்கார்ந்து இருக்கும் ஒரு சாதுவிற்கு தெரிந்தது உலகத்தையே விரல் நுனியில் உலாவும் உங்களுக்கு தெரியாதா?
எதற்கு தர்க்கம் சொல்லிவிடுகிறேனே...
நானும் எனது மாணவியும் காலை ஏழு மணிக்கு மலை ஏறத்துவங்கினோம்,...

(தொடரும்)
17 கருத்துக்கள்:
//சித்தமில்லாமல் இருப்பவருக்கு சித்துகள் எதுக்கு?
//
சித்து கற்ற முயன்று சித்தபேதம் ஆன கதைதான் நிறைய இருக்கே :)
நீங்க சொல்ற மாதிரி நம்ம கிறுக்காகாம இருந்தா சரி :))
மலை மேல் ஏறக்கூடாது என்று சட்டம் இருக்கிறது
அடுத்த பகுதி எப்போ என்ற ஆவலையே அடக்க முடியவில்லை ,எனக்கெல்லாம் ஆன்மீக அனுபவம் பெற பொறுமையும் தகுதியும் இந்தப்பிறவியில் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.
பயிரின் ஊடே களைகளை இனம் கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த நுணுக்கங்கள் அருமை
\\அவரிடம் நான் கேட்டேன், “அதுக்கு இப்ப என்ன? உங்களை நமஸ்காரம் பண்ணனுமா?” என்றேன்.
அவ்வளவுதான்..\\
இது சூட்சமம் மிகுந்த நடவடிக்கை, இதற்கு இனம் கண்டு கொள்ளும் ஆற்றல் நம்மிடம் பெருகவேண்டும். இது சித்து என உணர நாம் சித்துகளில் தேர்ந்தவர்/அறிந்தவராக இருக்க வேண்டும்
\\மாயையை விலக்க திருவண்ணமலை வந்து மாயையில் விழலாமா?\\
விழிப்புணர்வு மிக்க கட்டுரை பகுதி,
அனைத்து தரப்பினருக்கும் ஏற்றது.
அப்துல்லா அண்ணே..
//நீங்க சொல்ற மாதிரி நம்ம கிறுக்காகாம இருந்தா சரி :))//
சித்து கற்றால் ஆவாய் பித்து.
இறைவனே உன் சொத்து
சரியா?
இன்னைக்கு ஒரே கவிதையா வருது ;)
திரு ஜெய்சங்கர் ஜகநாதன்,
உலகில் இருக்கும் எந்த இடத்திற்கு செல்லவும் தடையேதும் இல்லை.
அருணாச்சல மலை வன துறைகட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் அண்ணாமலையார் பாதம் என சொல்லப்படும் மலை உச்சிக்கு செல்ல அவர்களிடம் அனுமதி பெறவேண்டும்.
அனுமதி அனைவருக்கும் கொடுப்பார்கள்.
கார்த்திகை தீப காலத்தில் இந்த அனுமதியும் தேவை இல்லை.
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு புன்னகை,
ஆன்மீகத்திற்கு இப்படித்தேன் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் வைத்துக்கொள்ளாதீர்கள்.
நீங்கள் நீங்களாகவே இருப்பது ஆன்மீகம்.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு நிகழ்காலம்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
>>>மலையில் என்ன நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்?<<<
ஆமாம்....இன்னும் மர்மமாகவே இருக்கிறது...
YOU ARE COMMENTING UPTO 9.40 PM
AGAIN YOU ARE POSTED AT 11.40 PM
AGAIN YOU ARE STARTED COMMENTING 7.OOAM.
OMKARGI- YOU ARE GIVING SO MUCH IMPORTANCE TO BLOG ?
I DONT KNOW HOW YOU ARE MANAGING YOUR TIME
//சேஷாத்திரி ஸ்வாமிகளும் எத்தனைநாள் தான் அவரின் ஆன்மீக பலாபழத்தை மறைக்க முடியும்?//
நிறைய பேர் ஆன்மிக எலுமிச்சைப் பழம், ஆன்மீக தங்க மோதிரம், ஆன்மீக லிங்கம் இவற்றை மறைக்க முடியாமல் தான் எடுத்துக் கொடுக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.
//I DONT KNOW HOW YOU ARE MANAGING YOUR TIME//
ஸ்வாமி(களு)க்கு நேரம் காலம் எதுவும் கிடையாது, கட்டுப்படுத்தவும் முடியாது !
:)
Dear yrksbabu,
//YOU ARE COMMENTING UPTO 9.40 PM
AGAIN YOU ARE POSTED AT 11.40 PM
AGAIN YOU ARE STARTED COMMENTING 7.OOAM.
OMKARGI- YOU ARE GIVING SO MUCH IMPORTANCE TO BLOG ?
I DONT KNOW HOW YOU ARE MANAGING YOUR TIME//
You Missed something in your time description...
I also read some other blogs and give comment over their article.
So my time is very long for every day.
Like vedic scripts..Heavenly people's one day is humans one year...! :)
Thanks for your care..!
திரு கோவி.கண்ணன்.
//
நிறைய பேர் ஆன்மிக எலுமிச்சைப் பழம், ஆன்மீக தங்க மோதிரம், ஆன்மீக லிங்கம் இவற்றை மறைக்க முடியாமல் தான் எடுத்துக் கொடுக்கிறாங்கன்னு நினைக்கிறேன்.//
இந்த பின்னூட்டத்தை எதிர்பார்த்தேன் :)
உங்களுக்கு தனியே பதில் சொல்ல தேவை இல்லை. நீங்கள் கொடுத்த பின்னூட்டதிலேயே ஆன்மீகம் என்ற வார்த்தையை எடுத்துவிடுங்கள். :)
நன்கு சுட்டிகாடியுள்ளீர்கள். உண்மையான ஞானிகள் விளம்பரம் இல்லாமல் அமைதியாக தங்கள் வேலையை செய்வார்கள். திருவண்ணாமலை செல்லும் பொழுது இது மிகவும் உபயோகமாக இருக்கும், மனதில் கொள்கிறேன். சரியான நேரத்தில் மறுபடியும் தொடரும் போட்டுடீங்களே!
Me present:-)
அவர்கள் சொன்ன கருத்தால் மனிதர்களின் மனங்களில் அதிசயம் நிகழ்தது.//
இது ஒன்றுதான் கடைசிக் கட்ட உண்மை.
மனங்களில் நடக்கும் அதிசயங்களிலேயே தலையாய அதிசயம் மனமே காணாமல் போவதுதான்.இல்லையா ஸ்வாமிஜி?
Post a Comment