Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, September 13, 2008

ஜோதிடத்தின் சாபம்

ஜோதிடம் ஜாதகம் பற்றிய நம்பகத் தன்மையை ஏற்படுத்த சொல்லப்படும் விளக்கங்களெல்லாம் எந்தக் காலத்திலும் லாஜிக்காகவும் அழகாகவும் இருக்கின்றன. ஜோதிடப் புத்தகங்களின் முன்னுரைகள் மிக அற்புதமாக இருக்கின்றன். ஆனால் கணிப்பதில் சரியாகச் செய்வதை விட ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஆட்கள் தான் இந்தத் துறையில் மிகுந்து காணப்படுகிறார்களே.


கலையின் ஆழத்தை அறிவதற்குப் பயில்வதை விடுத்து, மக்கள் தொகைப் பெருக்கமும் பெரும்பாலானோரின் தன்னம்பிக்கைக் குறைவும் தமக்கு மூலதனமாக இருப்பதையே சாதகமாக்கிக்கொண்டு வாழ்வதே இந்தத் துறையினரின் வாழ்நெறி ஆனது எதனால்? - ரத்னேஷ்

அன்பு ரத்னேஷ்,

உண்மையை எப்பொழும் திணிக்க வேண்டியது இல்லை. எப்பொழுதும் அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வலைபூ ஜோதிடம் உண்மை என சொல்ல துவங்கப்பட்டது அல்ல. ஜோதிடத்தை நான் எனது சிறிய அறிவால் புரிந்துகொண்டதை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் இடமே இது.

ஜோதிடத்திற்கு என ஒரு சாபக்கேடு உண்டு.

மருத்துவம் படித்த மருத்துவர் தவறுசெய்தால் மருத்துவரை தவறானவர் என கூறுகிறோம். ஆனால் ஜோதிடர் தவறு செய்தால் ஜோதிடம் தவறு என கூறுகிறோமே தவிர ஜோதிடர் தவறு என சொல்லுவதில்லை. அதனால் இந்த கூற்று ஜோதிடர்கள் தவறு செய்ய உதவியாக இருக்கிறது. இதைதான் சாபம் என கூறினேன்.

எல்லா துறையிலும் தவறானவர்கள் இருக்கதான் செய்கிறார்கள் அதனால் அந்த துறையே தவறு என சொல்லிவிட கூடாது.

ஜோதிடர் தவறாகலாம் ஜோதிடம் தவறாகாது.


ஜோதிடம் ஒர் கலை அல்ல. அது மெய்ஞான தந்திரம். அதை எளிதில் யார் வேண்டுமானாலும் கற்று
பயன்படுத்தலாம். அதை விடுத்து ஜோதிடர்கள் போலி போலி என கூறிவதால் என்ன பயன்?

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்தவர் அனைவரும் கேட்காத கேள்வியை நரேந்திரன் எனும் சிறுவன் கேட்டதால் அவனுக்கு கடவுள் சொரூபம் தெரிந்தது. அது போல தவறானவரை பற்றி கவலைப்பட்டமல் உங்களால் நல்லவர்களை உருவாக்க முடியுமா என பாருங்கள். நன்றாக ஜோதிடம் கற்று பிறருக்கு உதவுங்கள், தானே போலிகள் ஒழிவார்கள்.

ஜோதிடர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் அவர்களை தவறு செய்ய தூண்டுவது யார் என்றும் பார்க்கவேண்டும். ஜோதிடத்தால் உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியாது. உங்கள் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்றுதான் பார்க்க முடியும். ஆனால் யாரும் இதற்கு தயாரக இல்லை. நமக்கு என்றும் தேன் மழை பொழியும் நாளும், சூரியன் மறையாத காலையும் , செல்வம் குறையாத பண முடிப்பும் தேவை. இந்த பேராசையுடன் ஜோதிடரிடம் செல்லும் பொழுது அங்கு பேராசை எனும் வியாதி அவருக்கும் பிடிக்கப்பட்டு இருவரும் அழிவில் செல்கிறார்கள்.

ஜோதிடத்தால் எதையும் மாற்ற முடியாது என்றால் ஜோதிடம் எதற்கு என உங்களுக்கு கேள்வி தோன்றலாம்...

அதை ஒரு நாள் விவாதிப்போம்..


7 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//ஜோதிடத்தால் எதையும் மாற்ற முடியாது என்றால் ஜோதிடம் எதற்கு என உங்களுக்கு கேள்வி தோன்றலாம்...//

ஸ்வாமி ஓம்கார் அவர்களே,

பதிலுக்கு நானும் காத்து இருக்கிறேன்.

நமக்கு சாதமானவற்றைத் தான் தேட வேண்டுமா ? -
ரத்னேஷ் கேட்ட கேள்வியும் சிந்திக்கக் கூடிய ஒன்று தான்.

Subbiah Veerappan said...

///மருத்துவம் படித்த மருத்துவர் தவறுசெய்தால் மருத்துவரை தவறானவர் என கூறுகிறோம். ஆனால் ஜோதிடர் தவறு செய்தால் ஜோதிடம் தவறு என கூறுகிறோமே தவிர ஜோதிடர் தவறு என சொல்லுவதில்லை. அதனால் இந்த கூற்று ஜோதிடர்கள் தவறு செய்ய உதவியாக இருக்கிறது. இதைதான் சாபம் என கூறினேன்.

எல்லா துறையிலும் தவறானவர்கள் இருக்கதான் செய்கிறார்கள் அதனால் அந்த துறையே தவறு என சொல்லிவிட கூடாது.

ஜோதிடர் தவறாகலாம் ஜோதிடம் தவறாகாது.///

It is 100% true Swam1ji!

ஸ்வாமி ஓம்கார் said...

கோவி.கண்ணன் அவர்களே

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா அவர்களே

உங்கள் வருகைக்கு நன்றி.

அமிர்தம் உண்டவருக்கே அதன் ருசி தெரியும் என்பது இதுதானா?

VIKNESHWARAN ADAKKALAM said...

விளக்கத்திற்கு நன்றி ஐயா... மேலும் எழுதுங்கள்... சுப்பையா ஐயா வகுப்போடு உங்கள் வகுப்பிற்கும் வருகிறேன்...

பி.கு: எழுத்துரு மட்டறுத்தலை நீக்கிவிடால் பின்னூட்டம் போட சுலபமாக இருக்குமே ஐயா...

ஸ்வாமி ஓம்கார் said...

அன்புகுரிய திரு விக்னேஸ்வரன்,

உங்கள் வரவுக்கு நன்றி.

வலையுலகிற்கு நான் புதியவன்.

தயவு செய்து மட்டறுத்தல் என்றால் என்ன என எனக்கு விளக்கவும்.
மற்றொரு அன்பரும் இதை சுட்டிகாட்டியிருந்தார்.
இங்கு இல்லை என்றாலும் எனது மின்னஞ்சலில் கூறலாம்.

நன்றி

Srinath said...

Sir, I'm facing terrible problems. I'm feeling completely down. Everything is going against me. This includes my parents, which is something I'm not able to bear.

I am requesting you, if you could help me on the same. Pls say me an answer...I dont mind even if its a "No"

Thanks
Srinath