நவீன உலகில் முட்டாள் தனமானது மற்றும் மூடநம்பிக்கை என பல நல்ல விஷயங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பரிகாரங்களும் ஒன்று. உங்கள் மனலை எனக்கு புரிகிறது. பரிகாரம் இல்லை ! பரிகாரம் இல்லை! என வாய் கிழிய பேசியவன் பரிகாரம் உண்டு என கூறுவது விசித்திரம் தான். வருமானம் இல்லததால் இவரும் பரிகாரத்தை பேசுகிறார் என சிலர் சொன்னார்கள். இது வேடிக்கை தான்.
இன்றும் கூட ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் ஆயிரம் , ரெண்டாயிரம் என வாங்கி அல்லது கோவிலுக்கு சென்று வர கூறும் பரிகாரத்திற்கு நான் விரோதிதான்.இன்றைய கணக்குபடி சில ஜோதிடர்கள் பரிகாரத்திற்காக லட்சக்கணக்கில் கூறுகிறார்கள் என கேள்வி. இதுபோன்ற செயல்களை என் எல்லா ஜென்மத்திலும் எதிர்ப்பேன். எதிர்ப்பவனாக இருந்தால் இந்த கட்டுரைக்கு என்ன அர்த்தம்? உங்கள் கேள்வி புரிகிறது.ஜோதிட பரிகாரத்தை விஞ்ஞான பூர்வமாக அனுகும் தன்மையை கூறுவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
1) "இந்திய ஜோதிடத்தின் தந்தை " என கூறுப்படும் வராக மிகிரர், இளவரசனின் இறப்பை கத்ததால் புகழ் பெற்றார். இவர் ஏன் இளவரசனின் ஆயுளை நீட்டிக்க பரிகாரம் செய்யவில்லை?
2) குரு கடக ராசியில் உச்சம் பெற்றால் ஸ்ரீராமரின் ஜாதகத்துடன் ஒப்பிட்டு சொல்லுவதுண்டு, பரமாத்மாவின் அவதாரமான ஸ்ரீராமர் வனவாசம் செல்வதை தடுக்க ஏன் பரிகாரம் செய்ய வில்லை?
3) ஸ்ரீகிருஷ்ணரும் பாரத போரை தடுக்க ஏன் பரிகாரங்களோ அல்லது பூஜையோ செய்யவில்லை. இதற்கும் பஞ்ச- பாண்டவர்களில் சகாதேவன் ஜோதிடனாக இருந்தும் இதை செய்யாத காரணம் என்ன?
4) வீட்டில் சண்டை சச்சரவு மற்றும் மன வேறுபாட்டை தடுக்க பரிகாரம் செய்யும் ஜோதிடர்கள்,பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் , இலங்கையில் உள்நாட்டு கலவரம் இதை தடுக்கவும் பரிகாரம் செய்வார்களா?
5) ஒரு ஜாதகரின் விதியையே மாற்றும் பரிகாரத்தை ஒர் ஜோதிடர் செய்வதாக வைத்துக்கொண்டால் , விதியை அமைத்த கடவுளுக்கு எதிராக செயல்பட்டார் என கூறலாம் அல்லவா?
இந்த கேள்விகள் அனைத்தும் ஜோதிடர்கள் இடத்தில் கேற்கப்பட்டு அவர்கள் வெட்கி தலை குனிந்தவை. காரணம் நடைமுறையில் ஜோதிடர்கள் அனுபவரீதியாக இல்லாமல், கேள்வி ஞானத்தால் மட்டுமே பரிகாரம் செய்கின்றனர்.
ஜோதிட மாத இதழ்களில் வரும் விஷயத்தையோ அல்லது மற்ற ஜோதிடரையோ பார்த்து பரிகாரம் செய்வது வாடிக்கையாகி விட்டது. திருமணஞ்சேரிக்கு சென்றால் திருமணம் 45 நாளில் நடைபெறும் என்கிறார்கள். அங்கு செல்லும் அனைவருக்கும் திருமணம் நடைபெறுமா? சிந்திக்க வேண்டும்.
வேதத்தில் சொல்லப்பட்ட ஜோதிடத்தையே நாங்கள் கூறுகிறோம் என்னும் ஜோதிடர்கள் 100 வருட பழைமையான கோவிலுக்கு அனுப்புகிறார்கள். வேதம் மக்களிடையோ 100வருடமாகத்தான் இருக்கிறதா? அல்ல சுமார் 90 ஆயிரம் வருடத்துக்கு முன் வந்தவை. அதில் 20 ஆம் நூற்றாண்டில் ஜோதிட பரிகாரம் செய்ய இந்த கோவிலை பற்றி சொல்லி இருக்கிறதா? சிந்தித்து பார்க்க வேண்டும்.
நவீன காலத்தில் பிறமதத்தவர்களும் ஜோதிடரை அனுகும் சமயம் அவர்களை கோவிலுக்கு அனுப்புவதா? அல்லது அவர்களின் ஆன்மீக மையத்திற்கு சென்றால் பலன் தருமா?
அப்படியானால் எனக்கு தெரிந்தவருக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் இருந்தது, அவர் ஒரு கோவிலுக்கு சென்றாதும் குழந்தை பிறந்தது. இதற்கு உங்கள் பதில் என்ன என சிலர் கேற்கலாம்.
கடன், குழந்தை இன்மை, வியாதி ஆகிய பிரச்சனைகளுக்கு கோவில் ஓர் தீர்வு இதை மறுக்க முடியாது. காரணம் மேற்கண்ட பிரச்சனைகள் 6 மற்றும் 4 ஆம் பாவத்தால் வருபவை. இதை தவிர்த்தி 5ஆம் பாவம் நடைபெற்றால் 6க்கு விரய பாவமாகவும், 4 ஆம் பாவத்தின் வேலையை தவிர்க்கவும் பயன்படும். 5 ஆம் பாவம் ஆன்மீகம் , மந்திர உச்சாடனம் ஆகியவற்றை குறிக்கும். அப்படியானால் எனக்கு தெரிந்தவருக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் இருந்தது, அவர் ஒரு கோவிலுக்கு சென்றாதும் குழந்தை பிறந்தது. இதற்கு உங்கள் பதில் என்ன என சிலர் கேற்கலாம்.
ஆகவே கோவிலுக்கு செல்லும் சமயத்தில் இதைபோன்ற விஷயத்தை தவிர்க்கலாம். யோகா, தியானம், ஆகியவை 5 ஆம் பாவத்தை குறிப்பதால் இதை பயிற்சி செய்பவர்களுக்கு நோய் ,குழந்தை இன்மை ஆகிய வற்றிலிருந்து விடுபடுகிறார்கள்.
ஆனால் தொழில் முடக்கம், குடும்ப பிரச்சனை, கல்வி தடை இவற்றை சரி செய்ய இவை உதவுமா என்றால் உதவாது.அந்த காலத்தில் ஜோதிடத்தை வகுப்பாக எடுக்காமல் ஜோதிடரின் பக்கத்தில் இருந்து அனுபவமாக கற்றார்கள். இப்படி பயிற்சி செய்தவைதான் தவறான பரிகாரம் சொல்ல வைக்கிறது.இந்த நேரத்தில் பரமார்த்த குருவின் கதை ஒன்று னைவுக்கு வருகிறது. பரமார்த்த குருவின் சிஷ்யன் மட்டி என்ற முட்டாள் வாலிபன், குரு இறந்ததும் ஓர் வைத்தியரிடத்தில் வேலைக்கு சேர்ந்தான். வைத்தியரின் பையை சுமந்துவருவது அவன் வேலை. மட்டியை, வைத்தியம் செய்யம் முறையை கூர்ந்து கவனித்து அதன் மூலம் மருத்துவம் படிக்குமாறு வைத்தியர் பந்திருந்தார்.
ஒரு நாள் பக்கத்து கிராமத்தில் ஒருவருக்கு வயிற்று வலியை தீர்க்க வைத்தியரும் மட்டியும் சென்றார்கள். நோயாளியை பரிசோதித்த வைத்தியர் அவன் நேற்று சாப்பிட்ட வாழைப்பழம் அவனின் வயிற்று வலிக்கு காரணம் என கண்டரிந்து மருந்து கொடுத்தார். வரும் வழியில் மட்டி கேட்டான்,"ஐயா அந்த நோயாளி வாழைபழம் சாப்பிட்டதை எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்?" என்றான். வைத்தியர் சொன்னார் , "மட்டி வைத்தியம் செய்யும் சமயத்தில் அங்கு நிலவும் சூழ்லையை கவனி அது உனக்கு முதல் பாடம். நாம் சென்ற வீட்டில் நோயாளியின் படுக்கை அருகில் இருந்த குப்பை தொட்டியில் வாழைப்பழத் தோல் இருந்ததை கவனித்தேன். அனுபவமே வைத்தியம்" என்றார். சில மாதங்களுக்கு பிறகு வைத்தியருக்கு வேலையிருந்த காரணத்தால் மட்டி வைத்தியம் பார்க்க சென்றான். அங்கு ஒரு பிராமணர் மார்பு வலியால் துன்பப்பட்டார். மட்டி சூழ்லையை கவனித்தான். குப்பைதொட்டியில் எதுவும் இல்லை. நோயாளியின் வீட்டு ஜன்னல் வழியே பார்க்க, அங்கு மாடு கட்டிவைக்கும் இடம் காலியாக இருந்தது. மட்டியின் மூளை வேலை செய்தது, "நீங்கள் பசுமாட்டை சப்பிட்டதால் தான் இந்த நெஞ்சு வலி வந்தது" என்றான். அதன் பிறகு அவனுக்கு கிடைத்த மரியாதை உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். ஜோதிடத்தை அனுபவத்தில் கற்ற ஜோதிடர்கள் மட்டியை விட புத்திசாலிகள்.
ஒரு ஜோதிடர் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தார் அது பலித்தது என்றால் , எல்ல காரியத்திற்கும் கோவிலுக்கு அனுப்புவது முட்டாள் தனமானது. தொழில் முடக்கமா கோவிலுக்கு செல்லுங்கள் என்றால், கோவில் செல்லும் சமயம் ஜாதகருக்கு 5,9,12 நடைபெறும். இது 2,6,11 என்ற வருமானத்திற்கு எதிரான பாவங்கள். உதாரணமாக ஒரு சிறுவன் படிக்கவில்லை என்றால் அவன் ஜாதகத்தில் 4,9 க்கு பதில் 3,8 நடைபெறுகிறது என புரிந்து கொள்ளுங்கள். சரஸ்வதி அம்மன் அலயத்திற்கோ ஹயக்ரீவரின் ஆலயம் சென்றால் சிறு பிரயாணத்தின் பாவமான 3 ஆம் வீடே நடைபெறும். 3ஆம் வீடு 4க்கு எதிர் பாவம் அல்லவா? அவன் கோவிலுக்கு சென்று வந்ததும் படிப்பானா? சிந்திக்க வேண்டும்.
ஆக ஒருவருக்கு எந்த செயல் நடைபெற வேண்டுமோ அந்த செயல் சம்மந்த பட்ட பாவத்தின் வேலையை செய்தால் அதுவே பரிகாரம்.படிக்காத சிறுவனுக்கு அதிக விலையில் ஓர் புத்தகமே அல்லது எழுது பொருளோ வாங்கி கொடுத்தால் அவனின் ஜாதகத்தில் 4 ஆம் பாவ வேலை ஆரம்பிக்கும். இதே போன்று எல்ல காரியத்தை செயல் படுத்தலாம். இதற்கு பரிகாரம் என கூறாமல் சூட்சும முறையில் பாவத்தை செயல்படுத்துதல் எனலாம். அதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இல்லாத ஒன்றை தர பரிகாரங்கள் உதவாது. படிப்பே வராது, குழந்தையே பிறக்காது என்ற ஜாதகத்தில் முடிவு செய்துவிட்டால் பரிகாரம் சொல்வதை தவிர்கவும்.இந்த கட்டுரை இவ்வளவு பெரிதாக கூற தேவை இல்லை,பரிகாரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் போதும். ஓர் பாவத்தின் காரகத்துவத்தை முறியடிக்க மற்றொரு பாவத்தின் காரகத்துவத்தை செயல்படுத்துகிறோம். அதற்கு பதிலாக இந்த காரகம். இதை பரி+காரம் எனலாம். பரி என்றால் மாற்றாக என பொருள்படும்.காரம் என்றால் காரகத்தை குறிக்கும்.
எனது அனுபவத்தில் இது பலருக்கு பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறேன். என் அனுபவத்தை புரிந்து கொண்டு முட்டாள் மட்டியின் கதைபோல செயல்படாமல், நீங்கள் இதை பற்றி சிந்தித்து அனுபவப்பட்டு பயனடையவும். இதை பற்றிய விமர்சனத்தை வரவேற்கிறோம்.
எனது அனுபவத்தில் இது பலருக்கு பயன்படுத்தி வெற்றிகண்டிருக்கிறேன். என் அனுபவத்தை புரிந்து கொண்டு முட்டாள் மட்டியின் கதைபோல செயல்படாமல், நீங்கள் இதை பற்றி சிந்தித்து அனுபவப்பட்டு பயனடையவும். இதை பற்றிய விமர்சனத்தை வரவேற்கிறோம்.
13 கருத்துக்கள்:
சுவாமியின் அதிரடி திரும்ப ஆரம்பம் ஆச்சா ?
:)))
சாமி நீண்ட நாட்களாக எங்கே சென்றிருந்தீர்கள் ?
திரு கோவிகண்ணான்,
நலமா?
வெளியூர் பயணத்தால் பதிவேற்றம் செய்ய இயலவில்லை.
தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ?
ஒரு தகவல் பரிமாற்றம் செய்யும் சாதாரண மனிதன் தானே?
ஸ்வாமி ஓம்கார்
//தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ? //
:) அதுவும் சரிதான்.
வணக்கம் ஐயா,
அப்படியென்றால் பரிகாரம் சொல்லும் ஜோதிடகள் போலி ஜோதிடர்கள் எனக் கொள்ளலாமா?
//தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ?//
ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட்டாலும் பிளாகர் தான் 10 நாளுக்கு ஒரு பிளாக் போட்டாலும் பிளாகர் தான் என்பது எளியவனின் கருத்து..
திரு விக்னேஷ்வரன் அவர்களே,
உங்கள் வரவுக்கு நன்றி.
***அப்படியென்றால் பரிகாரம் சொல்லும் ஜோதிடகள் போலி ஜோதிடர்கள் எனக் கொள்ளலாமா?*******
தாராளமாக முடிவுசெய்யலாம்.
மக்களின் மன உளைச்சலை குறைக்கவும், மனோதத்துவ ரீதியாக செய்யும் சில செலவில்லா பூஜை வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் பணம் மற்றும் கால விரயம் செய்ய கூடாது.
உண்மையான ஜோதிடர்கள் அதை செய்ய மாட்டார்கள்.
********ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட்டாலும் பிளாகர் தான் 10 நாளுக்கு ஒரு பிளாக் போட்டாலும் பிளாகர் தான் என்பது எளியவனின் கருத்து..*******
ஐயா எளியவரே எனக்கு தெரிந்த வரையில் தினமும் பதிவு செய்யும் ஆட்களை தான் அதிகமாக வலையுலகம் வரவேற்கிறது. அவர்களும் அதன் கட்டாயத்திற்கு உட்படுகிறார்கள்.
நான் சுகந்திர வெளியில் சஞ்சரித்தவாரே எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
காலத்திற்கு உட்படாத எங்களை போன்றவர்களுக்கு ”தினமும்” என்பது இல்லை. இந்த ஷணம் மட்டுமே உண்டு.
//காலத்திற்கு உட்படாத எங்களை போன்றவர்களுக்கு ”தினமும்” என்பது இல்லை. இந்த ஷணம் மட்டுமே உண்டு.//
காலத்திற்கு உட்பட்டவரையும் உட்படாதவரையும் யான் அறியேன்.
//தினமும் ஒரு பதிவு போட நான் என்ன blogger-ஆ? //
இல்லாத வார்த்தையை நீங்கள் தான் சொல்லியதாக அறிகிறேன்.
நீங்கள் சொல்லியபடி கடந்தகாலமும் இல்லை எதிர்காலமும் இல்லை என்றால் இது ஒரு பைத்தியக்கார உலகம் என்றே சொல்ல முடியும்... தூர நோக்குச் சிந்தனை என மக்களிம் வாழ்வு பிழியப்படுவதை என்னவென்றுச் சொல்வது?
//காலத்திற்கு உட்படாத எங்களை போன்றவர்களுக்கு ”தினமும்” என்பது இல்லை. இந்த ஷணம் மட்டுமே உண்டு.//
எங்களையென யாரைச் சுட்டுகிறீர்கள்?
எல்லோருமே இந்த என்ற ஷணத்தை நினைத்து வாழ்ந்தால் பிரச்சனை இல்லை என்பது அடியேன் கருத்து
அடுத்த ஷணத்தில் நடப்பது போன ஷணத்தில் நடந்தது என்ற "நினைவு" இல்லாமல் இருப்பது மணிதன் மணிதணாக வாழ முடியும், சரியா
திரு ஜவஹர் அவர்களே,
உங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் கருத்து சரியானதே.
இந்த ஷணத்தில் வாழ்ந்தால் ஜோதிடம் சாஸ்திரம் எதுவும் தேவை இல்லை.
மனிதன் எப்பொழுது பெரும்பாலும் மனிதனாக வாழ்வதில்லை.
மணி (Money) தான் (I am) என்றே வாழ்கிறான்.
அவன் அருளால் மாற்றம் வரும் என எதிர்பார்ப்போம்.
அவன் அவனாக மாறாவிட்டால் எவன் அருளாளும் மாற்றம் வாரா
உங்களுடைய பதிவு மிகவும் அற்ப்புதம், பரிகாரம் என்ற பெயரில் ஜோதிடர்கள் செய்யும்,சொல்லும் பரிகாரம் இருக்கே "ஆதிசக்திகே" ஏற்றுக்கொள்ள முடியது.இதனால் பாபம் யாரை சாரும்
First time here....interesting to read ur blogs..
I will be writing in English..excuse me!
-shankar
Post a Comment