கேள்வி பதில் பகுதி இரண்டு
- ஆமா, ஜோஸ்யாம், ஜாதகம் இதையெல்லாம் உண்மையா??? -குரங்கு
முதலில் ஒன்று கூற விரும்புகிறேன்...உங்கள் பெயர் அருமை.
மனித இனம் தோன்றுவதற்கு முன்னறே பிரபஞ்சமும் அதன் ஆற்றலும் இயங்கி வருகிறது. நமது தோற்றம் பிரபஞ்ச ஆற்றலில் இருந்து நடந்ததால் , நமக்கும் அவ்வாற்றலுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. கடல் என்பது உயிர் தோற்றத்தின் மூலம் என விஞ்ஞானம் சொல்கிறது. சந்திரனின் அமைப்புக்கு ஏற்ப கடலில் எற்ற தாழ்வு அடைவதை காண்கிறோம். அது போல நமது உடலும் அதில் உள்ள கடல் தன்மையும் கிரக ஆற்றலுக்கு ஏற்றது போல வேலை செய்கிறது.
நவீன யுகத்தில் அனைவரும் பயன் படுத்தும் செல்போன் கருவியை எடுத்துக்கொள்ளுங்கள். இரு செல்போன்கள் தொடர்பு கொள்ளவேண்டுமானால் அருகில் உள்ள கோபுரத்தில் (tower) இணைப்பு ஏற்பட்டு பின்பு தொலைபேசி நிலையத்திற்கு(Tele Exchange) கடத்தப்படும். மீண்டும் தொலைபேசி நிலையத்திலிருந்து மற்றொரு கோபுரம் மூலம் எதிர் முனையில் இருக்கும் தொலைபேசிக்கு செல்கிறது. அது போல உயிரினங்கள் கண்களுக்கு புலப்படாத சக்தி மூலம் கிரகம் என்ற கோபுரமும் , நட்சத்திரங்கள் என்ற தொலைபேசி நிலையம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.
அவ்வாறு இயக்கத்தை கண்டறிதலை ஜோதிடம் என்றும் , அதற்கான வரைபடத்தை ஜாதகம் என்றும் கூறுகிறோம். செல்போனின் கதிர்கள் கண்களுக்கு தெரிவதில்லை அதனால் செல்போன் தொழில் நுட்பம் என்பது மோசடியானது என சொல்லமுடியுமா? தகுந்த விஞ்ஞானியை கொண்டு ஆய்வுசெய்தால் அதை உணர முடியும். அது போலத்தான் ஜோதிடமும். மனிதன் கண்டறிந்த விஞ்ஞானத்தில் எவ்வாறு ஒரே எண்ணில் இரு செல் போன் இருக்காதோ அது போல இரட்டை குழந்தைகளுக்கும் ஜாதகம் ஒன்று அல்ல. தனிதனியே செயல்படுகிறது.
உங்களுக்காக இங்கு ஒரு வீடியோ காட்சியை இணைத்திருக்கிறேன். அதில் இவ்விளக்கம் மேலும் பல கருத்துக்களை உஙகளுக்கு சொல்லும்.
நிரூபிக்கபட்டால் ஒழிய ஜோதிடத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.அதனால் எனது அமைப்பு மூலம் பங்கு சந்தை மற்றும் இதர விஷயங்களில் ஜோதிடத்தை நிரூபித்து இருக்கிறேன். எனது மாணவர்கள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக சொல்வார்கள். அதுபோல நாங்கள் ஜோதிடத்தை அறியாமையில் இருக்கும் மனிதர்களுக்கு நிரூபிக்க வேண்டி இருக்கிறது.
தற்காலத்தில் வெறும் ராசிகட்டதை மட்டும் வைத்து பார்ப்பது ஜோதிடம் என சொல்லப்படுகிறது. ராசி - நவாம்சத்தை பார்ப்பதில்லை. கிருஷ்ண மூர்த்தி முறை , அஷ்டகவர்கம் மற்றும் மிக துல்லிய சந்திர கலா நாடி முறைகளை வைத்து கூறப்படும் ஜோதிடம் என்றும் தவறாவதில்லை.
பரிகாரம் மற்றும் ஏமாற்று வித்தையால் ஜோதிடம் தனது உண்மை தன்மையை இழந்து விட்டது. மீண்டும் அதன் எழுச்சி காலம் கூடிய விரைவில் அமையும்.
- இந்துக்கள் நல்ல நேரம், அஷ்டமி, திதி மற்றும் இன்ன பிற நேரங்கள் பார்ப்பது போல பிற மதத்தவர் பார்ப்பது இல்லை. அப்படி அவர்கள் பார்க்காமல் செய்வதனால் ஏதேனும் தீய பலன்கள் ஏற்படுமா? நாம் நேரம், காலம் பார்த்து செய்வதனால் நமக்கு நற்பலன்கள் ஏற்படுகிறதா? -AMIRDHAVARSHINI AMMA
உயிரினங்கள் அனைத்தும் காலத்திற்கு உற்பட்டு இயங்குகிறது. எறும்பு மழைகாலம் வருவதை முன்பே அறிந்து அதற்கு ஏற்ப உணவை சேமிக்கிறது. பறவைகள் குளிர்காலம் வருவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே வெப்ப பகுதிக்கு பறந்து செல்கின்றன. அனைத்து விலங்குகளும் கிரகணம் ஏற்படும் போது தனது இருப்பிடத்தில் அடைந்து கொள்கிறது. ஆக சிறு உயிரினம் இவ்வாறு செயல்படும் பொழுது மனிதன் ஏன் நேரம் பார்த்து செயல்பட கூடாது?
நீங்கள் கூறியது போல அஷ்டமி நவமி என்பது கெட்ட திதி அல்ல. சில மூடபழக்கவாதிகளின் கூற்றே அது. அவ்வாறு கெட்ட திதியாக இருந்தால் ஸ்ரீ ராமரும் ஸ்ரீக்ருஷ்ணரும் தோன்றுவார்களா?
ராகுகாலம், எமகண்டம் என்பது பொதுவான கற்பிதம். ஒரு குறிப்பிட்ட திதியோ, நட்சத்திரமோ மற்றும் நாளோ நல்லது என்றோ -கெட்டது என்றோ சொல்ல முடியாது. உங்கள் தனிப்பட்ட ஜாதகம் மூலம் உங்களுக்கான சுப நேரம் தேர்ந்தெடுத்து அதன் மூலம் செயல்பட வேண்டும். அதே போல அசுப காலத்தில் தன்மையாக நடந்துகொள்வது அவசியம்.
வெளிநாட்டினர் இதன் அவசியத்தை தற்பொழுது உணர்ந்து வருகிறார்கள். தங்கள் அறியாமையில் இருப்பதை உணர்ந்து விவசாயத்தை கூட கிரகத்தின் அடிப்படியில் செய்கிறார்கள். Bio-Dynamic Agriculture என அதற்கு பெயர். நமது நாட்டில் பகுத்தறிவாளர்கள் என சொல்லுபவர்கள் மேலை நாட்டை சுட்டிகாட்டுகிறார்கள். இனி வரும் காலத்தில் மேலை நாட்டவரை சுட்டிகாட்டி ஜோதிடம் மூலம் நல்ல நேரம் பார்க்க துவங்குவார்கள். எல்லாம் நமது அறியாமையே..
உலக பொதுமறையில் கூடசொல்லப்பட்டதை இங்கு நினைவு கூறுகிறேன்... ஞாலம் கருதினும் கைகூடும்...என கூறினார்கள். காலம் கருதி செயல்பட முயற்சிப்போம்.
5 கருத்துக்கள்:
ஜோதிடம் ஜாதகம் பற்றிய நம்பகத் தன்மையை ஏற்படுத்த சொல்லப்படும் விளக்கங்களெல்லாம் எந்தக் காலத்திலும் லாஜிக்காகவும் அழகாகவும் இருக்கின்றன.
ஜோதிடப் புத்தகங்களின் முன்னுரைகள் மிக அற்புதமாக இருக்கின்றன்.
ஆனால் கணிப்பதில் சரியாகச் செய்வதை விட ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஆட்கள் தான் இந்தத் துறையில் மிகுந்து காணப்படுகிறார்களே.
கலையின் ஆழத்தை அறிவதற்குப் பயில்வதை விடுத்து, மக்கள் தொகைப் பெருக்கமும் பெரும்பாலானோரின் தன்னம்பிக்கைக் குறைவும் தமக்கு மூலதனமாக இருப்பதையே சாதகமாக்கிக்கொண்டு வாழ்வதே இந்தத் துறையினரின் வாழ்நெறி ஆனது எதனால்?
ரத்னேஷ்,
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்த மையக் கருத்தே என்னுடைய பகுத்தறிவும் நிண்கலைகளும் பதிவில் சுட்டியிருக்கிறேன்.
உங்கள் வரவுக்கு நன்றி. உங்கள் கேள்வி அடுத்த பகுதியில் பதில் அளிக்கப்படும்
திரு அறிவன் அவர்களே,
உங்கள் வரவுக்கு நன்றி.
பகுத்தறிவு என்பதை பகுத்தறிவால் என்னும் அனேகர் பகுத்தறியவில்லை என்பது எனது கூற்று.
மறுத்துபேசுவது. சமூகத்திற்கு எதிராக இருப்பது பகுத்தறிவு என எண்ணுகிறார்கள்.
உண்மையில் பகுத்து ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து அதை பிறருக்கு சொல்வதே பகுத்தறிவு.
உங்கள் வலைபூ விபரம் நன்றாக உள்ளது
Vanakam Sir,
Am nagarajan.I want know about my future and jobs,because of still am not went to correct job.my DOB is 03.05.1980 7.12pm saturday.plz sir replay ti nagarajan27@gmail.com
thank you sir
nagarajan
Post a Comment