நியுமரலாஜி உண்மையா?
மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் என்னிடம் கேட்கப்படும் கேள்வி இது. ஒருநண்பர் அதே கேள்வியை இங்கு கேட்கிறார்.
மக்களுக்கு என்ன சொல்வேனோ அதை உங்களுக்கும் சொல்கிறேன்.
நவீன காலத்தில் சிரோ எனும் மேலை நாட்டவர் கண்டு பிடித்தாக சொல்லப்படும் நியுமரலாஜி பலரை பாடாய் படுத்துகிறது. ஒருவரின் நம்பிக்கையை பிறர் தாழ்வாக கூற கூடாது எனும் கருத்தை வைத்து பார்த்தல் நியுமரலாஜியை ஆராயக் கூடாது. உண்மையில் இது நம்பிக்கைசார்ந்தது. ஆய்வுக்கு உட்படுத்தினால் கடைசியில் முட்டாள் தனமானது என்றுசொல்லவேண்டும்.
"ஆலாஜி" எனும் வார்த்தை ஒரு விஷயத்தை அறிவியல் என காட்ட சிலவிஷமிகள் துவக்கியது எனலாம்... நாளை நீங்கள் படிக்கும் பழக்கம்தான்உங்களை செல்வந்தராக்கும் என கூறி அதற்கு "ரீடலாஜி" என்பார்கள். ரீடலாஜி உங்களுக்குள் அதிர்வுகளை தரவேண்டும் என்றால் தினமும் 108 முறைகுறிப்பிட்ட புத்தகத்தை மீண்டும் படி என தண்டனை அளித்தாலும்
ஆச்சரியபடுவதற்கு இல்லை.
பெயரில் அதிர்வு கூடும் என்றால் "மின்சாரம்" என பெயர் வைக்கலமே ?
சற்று சிந்தித்து பாருங்கள் நம்மை யார் பெயர் சொல்லி குப்பிடுவார்கள்? உங்கள் தாய் தந்தை? செல்லம் -தம்பி என எதோ ஒரு செல்ல பெயர் அவர்கள்கூப்பிடுவார்கள்.
உங்கள் வாழ்க்கை துணைவரை பெயர்சொல்லி அழைக்க முடியாது காரணம்அன்பு.
நம்ம குழந்தையை நம்மையே பெயர் சொல்லி அழைக்க விட மாட்டோம்...
ஒரே இடத்தில் மட்டுமே நமது பெயர் சப்தமாகவும் தெளிவாகவும்உச்சரிப்பார்கள்..
.
.
.
.
.
.
அந்த இடம் கோர்ட் .
டபாலி நம்மை மூன்று முறை அழைப்பர். அதற்காகவா நியுமரலாஜி பிரகாரம்பெயர் மாற்றம் செய்கிறோம்? ஒரு படித்து பட்டம் பெற்ற மருத்துவர் அவரது மருத்துவ மனையை "Klinic" என எழுதி இருந்தார். இவரை என்னவென்று சொல்லி புரிய வைப்பது?
உங்கள் வீட்டின் சமயலறையில் இருக்கும் உப்பு டப்பவிற்கு சர்க்கரை என பெயர்மாற்றினால் கப்பியில் கலக்கி குடிப்பீர்களா ?
அது போல தான் உங்கள் உளநிலையை மாற்ற பெயர் தேவை இல்லை.
பெயரைமாற்றினால் உள்நிலை மாறது.
இந்த மோசடி பத்தாது என்று ஹிப்ரு நியுமரலாஜி, கபால நியுமரலாஜி என வகை வகையாய் ஏமாற்ற பார்க்கிறார்கள். நமது கலாச்சாரத்தில் பெயர் வைக்க ஒரு முறை இருக்கிறது அதை வேறு ஒரு நாள் கலந்து ஆலோசிப்போம் ...
இரண்டு நாளுக்கு முன்னால் ஓர் வலை உலக நண்பரிடம் சொன்ன கருத்தைஉங்களிடமும் சொல்ல ஆசைப்படுகிறேன்.
ஓர் கதை...
நியூமராலஜி வேலை செய்கிறது.....
காலை தினசரியை புரட்டிகொண்டிருந்த தனுஷ்...அந்த விளம்பரத்தை பார்த்தான்...
"ஆசியாவிலேய முதல் பெயரியல் நிபுணர் விஜயம்....உங்கள் பெயர் மூலம் அதிர்ஷ்டத்தை அடையுங்கள்......"
தனுஷுக்கு நியூமராலஜி மேல் நம்பிக்கை இல்லை , இது போன்ற நம்பிக்கையை பயன்படுத்தும் அவனது நண்பர்களை கிண்டல் செய்வது அவனது வாடிக்கை.
ஆனாலும் அன்று அந்த விளம்பரத்தை பார்த்ததும் அவனக்கு ஓர் ஆவல். தொலைக்காட்சியில் வரும் அந்த நபர் நமது நகரத்திற்கு வருகிறார் ஒரு முறை சென்று பார்ப்போம் என எண்ணினான்.
தொலை பேசியில் அனுமதி வாங்கி அவரை சென்று சந்தித்தான். பிறந்த தேதி மற்றும் பெயரை வாங்கி எண்களை கொண்டு கூட்டி கடைசியில் ஒரு முடிவாக பேச ஆரம்பித்தார் பெயரியல் நிபுணர்...
"தனுஷ் அவர்களே உங்கள் வாழக்கையில் 5 ஆம் எண் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கை முழுவதுமே 5 ஆம் எண் ஆதிக்கம் இருக்கிறது. உங்கள் பெயரும் 5 ஆம் எண் தான். எனவே ஐந்தாம் எண்ணை நன்றாக பயன்படுத்துங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.."
தனுஷால் அவரின் கருத்தை நம்ப முடியவில்லை... அவர் கேட்ட பிரகாரம் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான்.
தனது பைக்கை நிறுத்தும் பொழுதுதான் கவனித்தான் அவனது வாகன எண் 1445.
மெல்ல நடந்து காலிங் பெல்லை அழுத்தும் பொழுது
கருப்பு வட்டத்தில் வெள்ளை நிறத்தில் எழுதபட்ட அவனது வீட்டின் எண் கண்களுக்கு பட்டது (32)
அவனுக்கு ஏதோ புரிய துவங்கியது..
தனது அனுபவத்தை மனைவியிடம் கூறினான் தனுஷ்.
அவனை மையமாக பார்த்த அவனது மனைவி “அஞ்சு” அவனை பார்த்து...”எனக்கு உண்மையா இருக்கும் பொல இருக்குங்க நீங்க கூட நாலு பெண்ணை பார்த்த பிறகு தான் என்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டீங்க. நியூமராலஜி பார்க்க கூட 5000 பீஸ் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கும் ஐந்தாம் எண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குங்க...:” என்றாள்.
தனது நண்பன் பஞ்சாபகேசனுக்கு தொலைபேசியில் தனது ஐந்து எண்ணின் மகத்துவத்தை கூறினான் தனுஷ்.
பஞ்சாபகேசன் உற்சாகமடைந்தான். ஐந்தாம் எண்ணை அதிர்ஷ்டமாக்கும் யோசனைகள் விவாதிக்கபட்டது..
இருவரும் ஐந்தாம் எண்ணின் அதிர்ஷ்டத்தை சோதிக்க குதிரை பந்தையத்திற்கு போகலாம் என முடிவாயிற்று.
தனது வங்கி இருப்பிலிருந்து ஐந்தாம் எண்ணின் சக்தி கொண்ட 50,000 ரூபாயை எடுத்து கொண்டு குதிரை பந்தைய மைதானத்திற்கு இருவரும் சென்றனர்..
எந்த குதிரை மேல் பணம் கட்டுவது என்று குதிரையின் பெயர் பட்டியலில் சோதனை செய்தனர்..
”ஃபைவ் ஸ்டார் பிளாக்கி“ என்ற பெயர் அவர்களின் ஐந்தாம் எண்ணுக்கு ஏற்ப அமைந்திருந்தது.
தனது கைகளில் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் முழுவதும் அந்த குதிரை மேல் காட்டினான் தனுஷ்.
பந்தையம் ஆரம்பித்தது... இருவரும் உற்சாகமானார்கள். தனுஷின் முன் பண மழை பொழியும் கனவுகள் வந்து போயின...
பந்தைய முடிவு அறிவிக்கப்பட்டது...
ஃபைவ் ஸ்டார் பிளாக்கி எனும் குதிரை ஐந்தாவதாக வந்திருந்தது.
Thursday, September 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 கருத்துக்கள்:
//பெயரில் அதிர்வு கூடும் என்றால் "மின்சாரம்" என பெயர் வைக்கலமே ?
சற்று சிந்தித்து பாருங்கள் நம்மை யார் பெயர் சொல்லி குப்பிடுவார்கள்? உங்கள் தாய் தந்தை? செல்லம் -தம்பி என எதோ ஒரு செல்ல பெயர் அவர்கள்கூப்பிடுவார்கள்.//
ஸ்வாமி ஓம்கார்,
இப்படியெல்லாம் பழித்தீர்கள் என்றால் பிறகு உங்களுக்கும் 'போலி பகுதறிவாளர் / போலி ஆன்மிகவாதி' பட்டம் கொடுத்துவிடுவார்கள்.
கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
எனதன்பு கோவி.கண்ணன் அவர்களே,
உங்கள் பாரட்டுக்கு நன்றி.
கடந்த பத்து வருடங்களிக்கு மேலாக கோபுரத்தில் ஏறி இந்த உண்மையை உரக்க கூறிவருகிறேன்.
உண்மையை உரக்க சொல்வதால் எவ்வளவு கெட்ட பெயர் ஏற்பட்டாலும் தவறல்ல.
பொய்யை மக்களிடம் பரப்பி அவர்களை மனோமாயத்தில் தள்ளுவதால் ஏற்படும் “பட்டம்”
”புகழ” மற்றும் “பணம்” அனைத்தும் கேவலமானதே.
கூடிய விரைவில் இன்னும் பல மூடபழக்கங்களை பற்றி விவாதிப்போம்...
//இன்னும் பல மூடபழக்கங்களை பற்றி விவாதிப்போம்...//
great. awaiting........
Keep going!!
Good job. But unfortunatly I wrongly spell my son's name because of numarology.
உண்மையா ஒப்புக்கொண்டனைக்கு நன்றி.
மிகச்சரியா சொல்லிருக்கீங்க...
ஆமா, ஜோஸ்யாம், ஜாதகம் இதையெல்லாம் உண்மையா???
"ஃபைவ் ஸ்டார் பிளாக்கி எனும் குதிரை ஐந்தாவதாக வந்திருந்தது"
கலக்கல் சுவாமி,
விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் ஒரு பெண் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து உங்களில் யாருக்கு பிரச்சினையே இல்லை என்று கூறுங்கள். அவர் பெயரை நான் வைத்துக் கொள்கிறேன் என்று கூறினாள்.
நல்ல பதிவு. அப்படியே இந்த ராசிக் கல் பற்றியும் சொல்லிடுங்க சுவாமி.
http://www.virutcham.com
Post a Comment