Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, September 9, 2008

ஜோதிடம் யாருக்கு பயன்படும்?

ஸ்ரீமத் பாகவதத்தில் மனிதகுலம் இரு பெரும் பிரிவாக உள்ளது என சுக பிரம்மரிஷி கூறுகிறார். ஒன்று கடவுளை நோக்கி பயப்பவர்கள். அடுத்த பிரிவு பல கர்மங்களை செய்து கடவுளிடத்தில் பற்று இல்லாதவர்கள். இந்த இருவரும் வெளிப்பார்வைக்கு ஒரே செயலை செய்வது போல இருந்தாலும் , ஒருவர் கடவுளை நோக்கியும் மற்றொருவர் அதற்கு எதிராகவும் செயல்படுகிறார்கள். தானம் செய்யும்பொழுது கடவுளிடத்தில் பற்றுள்ளவர் தன்னலமில்லாமல் செய்கிறார்.

கடவுளிடத்தில் பற்று இல்லாதவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்த தானம் செய்கிறார். இது போல கர்மங்கள் ஒன்றாக தோற்றமளித்தாலும் அதன் வினை இரு பிரிவாக செயல்படுகிறது. இன்றும் கூட அனேக நபர்கள் இந்த இரண்டாம் பிரிவில் இருக்கிறார்கள். இவர்கள் ஜோதிடம் மற்றும் வேத சாஸ்திரத்தின் விஷயங்களை சுய நலத்திற்கும் தவறான கர்மத்தை செய்யவும் பயன்படுத்துகிறார்கள். தைத்ரீய உபஷத்தில் கர்ம அனுஷ்டானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஞான நிலை அடைய முற்படாமல் செய்யும் யாகம் , மரக்கட்டைகளை தீயில் எரிப்பதற்கு ஒப்பாகும் என்றும் இதை செய்பவர்கள் நான்கு கால் பிராணியின் நிலைக்கு ஒப்பானவர்கள் என கூறுகிறது.

யாக கர்மங்கள் எவ்வாறு தவறாக பயன்படுத்த படுகிறதோ அதே போல ஜோதிட சாஸ்திரமும் பயன்படுத்த படுகிறது எனலாம். முற்காலத்தில் ஜோதிடம் ஆன்மீக வாழ்க்கையின் நிலையை அறிந்து கொள்ள மட்டுமே பயன்பட்டது. வேதசாஸ்திரத்தில் நமது கர்மத்தின் அமைப்பே அடுத்த செயல் என்றும் கர்ம வினையே எதிர்கால வாழ்க்கைக்கு காரணம் என்கிறது. இதை ரூபிக்கும் கருவியே ஜோதிடம். ஒருவர் நல்ல கர்மம் செய்வாரா? அதன் மூலம் முக்திக்கு வழியுண்டா என ஆராயும் கருவியாகவே ஜோதிடம் பயன்படுத்தப்பட்டது. நடைமுறையில் கூறப்படும் தோஷங்களும்,யோகங்களும் ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்காக கண்டறியப்பட்டது. முற்காலத்தில் பார்க்கப்பட்ட தோஷம் மற்றும் யோகங்களை ஆன்மீக ரீதியாக ஆராய்வோம்.

செவ்வாய் தோஷம்:

செவ்வாய் தோஷம் என்பது பலரையும் துன்பத்தில் ஆழ்த்தும் விஷயம், இதை முற்காலத்தில் சன்யாசிகளுக்கு மட்டுமே பார்த்தார்கள் என்பது ஆச்சரியப்பட கூடிய விஷயம். செவ்வாய் என்பது காம உணர்ச்சிகளையும் கோபத்தையும் குறிக்கும் கிரகம். செவ்வாய் பிறப்புறுப்பை குறிக்கும் கிரகம் ,இதை விருச்சிக ராசிக்கு செவ்வாய் அதிபதி யாக வருவதன் மூலம் அறியலாம். இத்தகைய செவ்வாய் 4,7,11 வீடுகளில் காணப்படும் சமயம் அதிக காம உணர்வையும், 2-8 ஆம் வீடுகளில் சம்பந்தப்படும் சமயம் கோபத்தையும் காட்டும். இவை அனைத்தும் சன்யாசிக்கு உகந்த உணர்வுகள் கிடையாது. செவ்வாயின் நிலையை கண்டறிந்து அதன் பின்பே சன்யாசம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் திருமணம் செய்ய உள்ள இளம் வயதினருக்கு செவ்வாய் தோஷத்தை பார்த்து, செவ்வாய் தோஷ வர்த்தி வேறு செய்யப்படுகிறது. குடும்ப வாழ்வில் ஈடுபடும் இவர்கள் காம மற்றும் கோப உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் சிறந்த மணவாழ்வை வாழமுடியாது அல்லவா? செவ்வாய் தோஷத்தை பற்றி சிறிது சிந்தியுங்கள்.

நாக தோஷம் :

நாக தோஷம் என்பது ராகு கேது எனும் சாயா கிரகங்கள் 2,8 அல்லது 1,7 ஆம் வீடுகளில் சம்மந்தப்பட்டால் நாக தோஷம் என கூறுகிறார்கள். இதனால் மணவாழ்க்கை தாமதமாகும் மேலும் மணவாழ்க்கையில் சிக்கல்கள் காணப்படும் என கூறி பரிகாரங்களுக்கு திசை திருப்புகிறார்கள். முற்காலத்தில் தவ வாழ்வை மேற்கொள்பவர்கள் காடுகளுக்கு சென்று ஏகாந்த உணர்வில் தியானிப்பார்கள். மேலும் அனைத்து கடமைகளும் வாழ்வில் முடிவடைந்தவர்கள் வனப்பிரஸ்தம் எனும் வாழ்வியல் முறையிலும் வாழ்ந்தார்கள்.

கொடிய வனத்தில் அவர்கள் வாழும் பொழுது பாம்புகள் மற்றும் தேள் போன்ற விஷ ஜந்துக்கள் மூலம் தீங்கு வருமா என கண்டறிய உதவியது தான் இந்த நாக தோஷம். 2,7 ஆகியவை மாரகஸ்தானம் இவற்றில் சம்பந்த பட்ட சாயாகிரகம் விஷத்தின் மூலம் மரணத்தையும்,1,8 தொடர்பால் விஷத்தின் மூலம் ஆபத்தையும் கொடுக்கும் என கண்டறிந்தார்கள். ஆனால் இதை நாம் மணவாழ்க்கைக்குள் நுழையும் பெண் ஜாதகத்தில் பார்க்கிறோம். திருமணமான தம்பதிகள் காட்டில் வாழப்போகிறார்கள் என்றால் இதை எடுத்துக்கொள்ளலாம்.


கஜகேசரி யோகம் :

சந்திரனுக்கு 1,5,9ஆம் வீடுகளில் குரு இருந்தால் கஜகேசரியோகம். இதை பெற்றவர்கள் சுகபோக வாழ்வை அனுபவிப்பார்கள் என்பது தற்கால ஜோதிடர்களின் கருத்து. உண்மையில் இது போன்ற அமைப்புள்ளவர்கள் பாக்கியசாலிகளே. மனதை குறிக்கும் கிரகமான சந்திரன்(மனோகாரகன்) ஆன்மீக குருவான தனது வழிகாட்டியை மனதில் நினைத்து எப்பொழுதும் அவருக்கு பவிடை செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். இத்தகைய அமைப்பு பெற்றவர்களை குரு தன்னிடத்தில் நிரந்தரமாக இருக்க அனுமதிப்பார். ஆனால் இன்றையகால கட்டத்தில் பொருள்தேடி ஓடுபவர்களுக்கு இந்த யோகத்தை பார்ப்பது நகைப்புக்குரியது.

இவ்வாறு யோகத்தையும் தோஷத்தையும் விவரித்து கொண்டே செல்லலாம். உண்மையை ஆராய்ந்து பலன் சொல்லும் நிலைவரும் பொழுது மட்டுமே இதற்கு தீர்வு உண்டு. விஞ்ஞான ஜோதிட ரீதியாக ஆன்மீக வாழ்வை ஆராய்ந்தால் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாது.

4 கருத்துக்கள்:

Subbiah Veerappan said...

ஓம்கார் சுவாமிஜி அவர்க்ளே வருக! வருக!
உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்
உங்கள் வரவு நல்வரவாகுக!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா அவர்களே,

உங்கள் வாழ்த்துக்கும் நல்வரவுக்கும் நன்றி.

உங்கள் ஜோதிடம் பற்றிய வலைபூவை கண்டேன்.
அருமையான விளக்கங்கள்.

விரைவில் சந்திக்க முயற்சிப்போம்...

RAHAWAJ said...

இந்த விளக்கம் ஓரளவிற்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் என எதிர்பார்க்கலாம் நன்று

Anonymous said...

என‌க்கு நாக‌தோஸ‌ம் இருந்த‌து. அத‌ற்கு நாக‌சாந்தி செய்ய‌ச் சொன்னார்க‌ள்.
இந்த‌ நாக‌தோஸ‌ம் எத‌னால் வ‌ரும்.