கும்பமேளா மைதானத்தின் மையத்தில் இருந்த அந்த கூடாரத்தின் உள்ளே அப்புவும், சோமநாதரும் அமர்ந்திருந்தனர்.
புனித ஸ்நானம் செய்துவிட்டு வந்து அமர்ந்திருந்த அப்பு ஒருவித பரவச நிலையில் இருந்தார். வந்து சில நாட்களாக இங்கே இருக்கிறோம் எந்த விதமான பசியோ களைப்போ ஏற்படவில்லை என்பதை உணர்ந்திருந்தார்.
இந்த எண்ணத்துடன் அப்பு சோமநாதரை பார்த்தார், “நமக்கு ஐந்து உடல் இருக்கு. சதை எலும்பு கொண்ட ஊண் உடல் காலத்திற்கும், இடத்திற்கும் கட்டுப்பட்டது. ஆனா மிச்ச நாலு உடம்பும் அப்படி இல்லை. நாம ஊண் உடலை விட்டுட்டு இங்கே வந்துட்டோம். அந்த உடம்புக்குத்தான் பசி, தூக்கம் எல்லாம் இருக்கும்” என்றார் குருஜி.
அப்புவால் நம்பமுடியவில்லை. அனைத்தும் உணர்வதை போலவும், உண்மை போலவும் இருக்க எனக்கு உடம்பு இல்லை என எப்படி நம்புவது என தெரியாமல் முழித்தார்.
அப்புவின் அருகே வந்த சோமநாதர், அப்புவின் இதய மையத்தை தொட்டார். கண்களில் கூடாரம் மறைந்து ஒரு மலைப்பாதை தெரிந்தது. அங்கே அப்புவின் உடல் தளர்வாக படுக்கவைக்கப்பட்டிருந்தது. அருகே சோமநாதர் அமர்ந்து அப்புவுக்கு அவரின் உடலை சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தார்.
மேலும் சிறிது இதய மையத்தை அழுத்தினார் சோமநாதர். அங்கே அப்புவின் தாயார் அவரின் வீட்டில் இருப்பதை கண்டான். அப்புவின் அம்மா அப்புவை பார்க்க புறப்பட்டுக்கொண்டிருந்தது தெரியவந்தது.
மீண்டும் கூடாரத்தில் இருப்பதை உணர்ந்து அப்பு தன்னிலைக்கு திரும்பினான்.
“குருஜி, அம்மா என்னை பார்க்க புறப்பட்டு வரங்க. வீட்டுக்கு வந்து நான் இல்லைனு தெரிஞ்சா அவ்வளவு தான். பெரிய பிரச்சனை ஆயிடும். தயவு செய்து நாம திரும்பி போயிடலாமா?” என கேட்டான்.
“ஓ போகலாமே. அப்பு உங்களுக்கு அருள்நிறைந்த ஆதிநாத்தை தரிசிக்க வேண்டாமா?” என சோம்நாதர் கேட்க, இயலாமையால் தவித்தார் அப்பு.
சப்தமாக சிரித்த சோமநாதர், தன் கையில் வைத்திருந்த வலம்புரி சங்கை எடுத்து அப்புவின் தலைக்கு அருகே வைத்து பிறகு கீழே மணலில் குத்தி நிறுத்தினார்.
ருத்திராட்சத்தை எடுத்து தன் தலை அருகே வைத்து வலம்புரி சங்கின் மேல் வைத்தார். வலம்புரி சங்கின் பெரிய பகுதிக்கு மேலே முண்டாசு கட்டினது போல ருத்திராச மாலை இருந்தது. ஸ்ரீசக்ரத்தை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டார்.
அப்புவை அருகே அழைத்து அந்த ஸ்ரீசக்ரத்தை தொட சொன்னார்.அப்புவின் கண்களில் காட்சி விரிந்தது. தன் அம்மாவின் வீட்டிற்குள் அப்பு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்புவின் தோளில் சோம்நாத் குருஜி அமர்ந்துகொண்டு கைகளை அப்புவின் தலையில் முண்டாசு போல கட்டிக்கொண்டு இருந்தார்.அப்புவையும் தன் பேரனையும் பார்த்த தாயார் சந்தோஷத்தில் மிதக்க அப்படியே காட்சி சுருங்கி மஹாகும்பமேளாவின் கூடாரத்தில் இருந்தார் அப்பு.
காட்சியில் பார்த்ததை நம்பமுடியாமல் சோமநாதரை நோக்கி, “ இது எல்லாம் உண்மையா? இல்லை மாய காட்சிகளா?” என கேட்டார்.
“அப்பு அனைத்தும் உண்மையே..நீ இங்கே இருப்பதும், உன் தாயுடன் இருப்பதும், மலைக்கோவிலில் உடலாக இருப்பதும் உண்மையே...எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்வோம். அனைத்து உயிர்த் தன்மைகளும் ஒன்றாக இருக்க அனைத்தும் நாமாக இருக்கக்கூடாதா?” என விளக்கிய சோமநாதர் அப்புவின் கைகளை பிடித்து மேலே எழும்பி கூடாரத்தை விட்டு விண்ணில் பறந்தார்.அப்பொழுது அப்பு முதன்முதலாக அதான் சூட்சம உடலில் இருப்பதை உணர்ந்தான்.
மேலே சில மீட்டர்கள் உயரத்தில் மிதந்த வண்ணம் மஹாகும்பமேளா நடக்கும் சங்கம் மைதானத்தை முழுவதும் பார்த்தார் அப்பு. அங்கே லட்சக்கனக்கான மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
சற்று உற்று பார்த்தான் லட்சக்கணக்கான மனிதர்கள் அனைவரும் அப்புவாகவே இருந்தார்கள்...! சோமநாதர் புன்னகைத்தார்.
(மேளா தொடரும்)
6 கருத்துக்கள்:
//சூட்சம உடலில் இருப்பதை உணர்ந்தான். //
1. இதன் மூலம் ஆவிகள் இருப்பதை நம்பலாமா?
2. சூட்சம உடலில் இருக்கும் போது எப்படி சோமு ஸ்துலமான ருத்ராக்ஷம், வலம்புரி சங்கு, ஸ்ரீசக்ரம் எடுக்க முடிந்தது?
திரு.சிவக்குமார்.
//
1. இதன் மூலம் ஆவிகள் இருப்பதை நம்பலாமா?
//
ஆவிகள் என்றால் என்ன?
தயவு செய்து விளக்கவும். அதை பொருத்து நம்பலாமா இல்லையா என கூறுகிறேன்.
2. சூட்சம உடலில் இருக்கும் போது எப்படி சோமு ஸ்துலமான ருத்ராக்ஷம், வலம்புரி சங்கு, ஸ்ரீசக்ரம் எடுக்க முடிந்தது?
ருத்ராக்ஷம், வலம்புரி சங்கு, ஸ்ரீசக்ரம் எல்லாம் ஸ்தூலமானது என எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
சூட்சமமான நிலையில் இருந்த ஆதிநாதர் சூட்சம நிலையிலேயே இதை அளிக்கிறார்.
ஒரு ஸ்பெஷல் எபக்ட்ஸ் எபிசொட் பார்த்தமாதிரி இருக்கு ஸ்வாமி!
/*எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்வோம். அனைத்து உயிர்த் தன்மைகளும் ஒன்றாக இருக்க அனைத்தும் நாமாக இருக்கக்கூடாதா?*/
- "சூட்சம உடல்" கருத்து/கோட்பாடு ஒரே குழப்பா இருக்கு
சுவாமிஜி,
எனக்கு என்னமோ நானும் சூட்சும உருவில் தங்களின் அருகே அமர்ந்து நீங்கள் சொல்வதைப் கேட்டுக் கொண்டு இருந்ததைப் போல் இருந்தது.
நான் ஏற்கெனவே யோகி ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தா அவர்களின் 'ஒரு யோகியின் சுயசரிதை' யை படித்திருந்தால் இதெல்லாம் சந்தேகமே இல்லாமல்
சாத்தியம் என்று புரிகிறது.
அற்புதமாக வடித்திருக்கீறீர்கள் . நன்றிகள் பல .
கோ. நந்தகோபால்
சவுதி அரேபியா
சுவாமிஜி,
ஸ்தூல உடல் மணல் துகள்கள் போல உதிர்ந்து மறைவதும், வேறொரு இடத்தில் புகையாக வந்து ஸ்தூல உடம்பாக தெரிவதும், மனிதன் செல்லவே முடியாத இடங்களுக்கு சூட்சும உருவில் சென்று வருவதும் போன்ற நிகழ்வுகளைப் பற்றி ஸ்ரீ யுக்தேஸ்வர் அவர்கள் தான் மறைந்ததர்கப்புரம் யோகி ஸ்ரீ பரமஹம்ச யோகனந்தருக்கு மும்பையில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு வந்து விளக்கியதும் இதே போன்றுதான் இருந்தது. மேலும் அவர் சூட்சும லோகத்தில் உயிர்களின் வடிவம் நிறம் மற்றும் அங்கு விளையும் காய் கறிகள், கனிகள்,மலர்கள், தண்ணீர், மழை ஆகியவற்றைப் பற்றி விளக்கியதைப் படிக்கும்போது அப்படியே சந்தேகமேயில்லாமல் ஒப்புக்கொள்ளும்படி இருந்ததுதான் எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருக்கிறது.
இதையே நவீன ஆங்கிலப் திரைப்படங்களில் குறிப்பாக மம்மி, இந்தியான ஜோன்ஸ், அவதார் போன்ற திரைப்படங்களில் காட்டும்போது நான் ஆச்சர்யப்பட்டதுண்டு ' எங்கிருந்துதான் இந்த ஆங்கிலேயர்களுக்கு இந்த மாதிரி உண்மைக்கு நிகரான கற்பனைகள் உதிக்கின்றதோ என்று ' .ஏதோ ஒருவகையில் அந்த இயக்குனர்களெல்லாம் தங்களின் ஏதாவது ஒரு பிறவியில் இதையெல்லாம் பார்த்தோ, கேட்டோ அல்லது அனுபவித்தோ இருக்கக்கூடும் என்று சமாதானமாகிவிடுவேன்.
இதற்கு சுவாமிஜியின் கருத்தை அறிய ஆவல்.
கோ.நந்தகோபால்,
Too good
Post a Comment