Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, May 10, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 3

இதிஹாசங்கள் உருவாக்கப்பட்டன என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. உருவாக்காமல் பிறகு எப்படி வந்திருக்கும் என்ற கேள்விக்கு பிறகு விடை காணலாம். முதலில் உருவாக்கப்பட்டது என்ற திசையில் விவாதிப்போம்.

இதிஹாசங்கள் மனிதனை நல்வழிப்படுத்த சொல்லப்பட்ட ஒழுக்கவிதி கதைகள் என்ற அடிப்படையில் எடுத்துக் கொண்டால் ஒழுக்கத்தை மட்டுமே போதிக்கிறது என கூற முடியாது. ஸ்ரீராமர் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தார் என கூறும் பொழுது மஹா பாரதத்தில் குந்தியின் புதல்வர்களான பாண்டவர்கள் மற்றும் கர்ணனின் பிறப்பு இதற்கு முரணாக இருக்கும். மேலும் பஞ்ச பாண்டவர்கள் திரொளபதியுடன் வாழ்ந்தது ராமாயணத்திற்கு முரண் அல்லவா? அப்படியானால் ஒழுக்க விதிகள் எங்கே கூறப்பட்டுள்ளது?

பஞ்சபாண்டவர்கள் மற்றும் கெளரவர்களின் தந்தைகளாகிய திருதிராஷ்ரர், பாண்டு மற்றும் விதுரர் என்ற மூவரின் பிறப்பின் தன்மையை கேட்டீர்களானால் நம் நாட்டில் கலாச்சாரம் ஒழுக்கவிதிகள் தகர்ந்து போகும்.

நாகரீக வளர்ச்சி என்பது முதலில் ஒருவர் பல பெண்கள் என வாழ்ந்து, சமூகம் வளர்ச்சி அடைந்து ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்தால் அது பரிணாமம் என கூறலாம். ஆனால் ராமாயணம் என்ற முதல் இதிஹாசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என வலியுறுத்தப்பட்டு அடுத்த இதிஹாசத்தில் ஸ்ரீகிருஷ்ணர் துவங்கி பலருக்கு பலதாரம் அதுவும் பலதரம்...!

மேலும் பல வேடிக்கையான முரண்கள் இதிஹாசத்தில் இருக்கிறது.

இராவணனுக்கு பத்து தலை :

நினைத்து பாருங்கள் பத்து தலையுடன் யாரையாவது பார்த்ததுண்டா? அப்படியே ஒருவருக்கு பத்து தலை இருப்பதாக வைத்துக்கொண்டால் ஒரு கழுத்தில் ஒரு தலை இருக்கும் வலபக்கம் நான்கு தலையும், இடப்பக்கம் ஐந்து தலையும் இருக்கும் அல்லவா? அப்படியானால் தலைகள் நேராக இல்லாமல் அதிக தலை கொண்ட பக்கம் சாய்ந்த வண்ணம் கோணலாகிவிடுமே? அதையெல்லாம் விடுங்க.. ராவணன் ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டுமானால் எப்படிப்படுப்பான்? இதையெல்லாம் நாம கேட்ட கூடாது..!

கும்பகர்ணன் தூக்கம் :

ஆறு மாதம் தூக்கமும் ஆறுமாதம் விழிப்பும் கொண்டவன் கும்பகர்ணன். பிரம்மாவிடம் வரம் கேட்கும் பொழுது ‘நிர்தேவத்துவம்’ (தேவர்கள் அழிய வேண்டும்) என்பதற்கு பதில் டங் ஸ்லிப் ஆகி ‘நித்ரதேவத்துவம்’ (எப்பொழுதும் தூக்கத்தில் இருக்க வேண்டும்) என்ற வரம் பெற்றனாம். அப்புறம் பிரம்மா அவனுக்கு வரம் கொடுத்து அதை ஆறு மாதமாக குறைத்தாராம். சரி ஒரு முறை தப்பாக வரம் வாங்கியாச்சு, விழிப்புடன் இருக்கும் ஆறு மாதத்தில் தவம் இருந்து இந்த வரத்தை இல்லாமல் செய்ய மற்றொரு வரம் வாங்கலாம் அல்லவா? இதையெல்லாம் நாம கேட்ட கூடாது..!

ஸ்ரீராமன் :

ஸ்ரீராமர் அவதார புருஷராம். கடவுளின் அவதாரமாம். அப்படியானால் தன் மனைவியை ஒருவன் கவர்ந்து செல்ல போகிறான் என்பதை ஏன் முன்னரே தெரிந்து கொள்ள முடியவில்லை? அதுவும் எதிர்பாராமல் ராவணன் தூக்கி சென்றால் சரி எனலாம். சூர்ப்பனகைக்கு மூக்கு அறுபட்டதும் அவள் ஏதேனும் செய்வாள் என கணிக்க முடியாதா?
இது போதாது என தன் மனைவியை டீ குடிக்க சொல்லுவது போல அடிக்கடி தீக்குளிக்க சொல்லுகிறார். இவர் மனைவியும் கணவன் சொன்னதை திறம்பட செய்கிறார். நவீன பெண்கள் இதை ஆணாதிக்கமாக உருவான கதை என்பார்கள். இதையெல்லாம் நாம கேட்ட கூடாது..! கேட்டால் சாமி கண்ணை குத்து என்பார்கள்...!

இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். இது போல பெரிய லிஸ்ட் மஹாபாரதத்திலும் உண்டு. கேள்விகளை பார்த்து என்ன ஸ்வாமி ஒருவழியா நீங்களும் ‘அப்படி’ மாறிட்டீங்களா என நீங்கள் கேட்ப்பது புரிகிறது.

நம் சிறு அறிவுக்கே இப்படி கேள்விகள் தோன்றும் பொழுது இதிஹாசங்கள் உருவாக்கப்பட்டதாக கொண்டால் இதையெல்லாம் கூர்ந்து கவனிக்காமல் இருப்பார்களா?
அதனால் தான் சொல்கிறேன் இதிஹாசங்கள் உருவாக்கப்பட்டிருந்தால் இப்பிரச்சனைகள் வந்திருக்காது. இது உருவானது என்பதை விட இது என்றும் உருவாகிய வண்ணமே இருக்கிறது.

இதிஹாச உண்மைகளை தெரிந்துகொள்ளும் முன் நம் ஆன்மீக கலாச்சாரத்தையும் கடவுள் என்ற சித்தாந்தத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகிலேயே கடவுள் குழப்பம் அதிகம் உள்ள ஊரு நம்ம ஊருதான். அதனால் இதிஹாச உண்மைகளில் தேடலை கடவுளில் இருந்து நாம் துவங்குவோம்..!

(வினைத் தொடரும்)

10 கருத்துக்கள்:

KARMA said...

அய்யா, கதை சுவாரஸ்யமாக போய்கொண்டிருந்தாலும்...இவை நடந்த உண்மைதான் என்பதற்கான ஆதாரம் இதுவரை ஏதுமில்லை, பொருத்திருந்து தொடர்வதில் எமக்கு இழப்பேதுமில்லை.

Unknown said...

வணக்கம் சுவாமி. அருமையான பதிவு. புதிய அணுகுமுறை தொடருங்கள். நன்றி.

Anonymous said...

raavananukku saathaarana manithanukku podra rules ai pooda mudiyaathu.

saatharana manushanukkuththaan niingka solrathellaam porunthum.

valikkum; balance ille; padukkamudiyaathu enRellaam

raavananukku ellaamee easy !

Ramayanam should be read with a different understanding. Characters like Ravan r not ordinary human beings.

kalyani said...

good post.keep it up.

சிங்கக்குட்டி said...

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது மற்றும் மனித உறவுகளில் அத்தனை முறை சொந்தகளும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், நடந்து கொள்ள கூடாது.

இவை அனைத்தும் சொல்லப்பட்ட வாழ்கை வழிகாட்டியாக பார்க்கவேண்டியவை இவை என்பது என் கருத்து.

suvanappiriyan said...

//கேள்விகளை பார்த்து என்ன ஸ்வாமி ஒருவழியா நீங்களும் ‘அப்படி’ மாறிட்டீங்களா என நீங்கள் கேட்ப்பது புரிகிறது.//

எனக்கும் உடன் அப்படித்தான் தோன்றியது. இதற்கான பதிலை அடுத்த பதிவில் தெளிவாக விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

Mahesh said...

//இது உருவானது என்பதை விட இது என்றும் உருவாகிய வண்ணமே இருக்கிறது.//

well said !!!!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கர்மா,
திரு பிரபு,
திரு சிம்மக்கல்,
திரு சிங்கக்குட்டி,
சகோதரி கல்யாணி,
திரு மகேஷ்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் ஓம்கார்

முதல் இரு பகுதிகள் படிக்க வில்லை. பிறகு படிக்கிறேன். இப்பொழுது இப்பகுதியில் கூறியபடி கடவுளை ஆராய்வோம். தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

virutcham said...

நல்ல முயற்சி. எழுதுங்க.

இதை எல்லாம் கற்பனைக் கதை என்று யாராவது சொல்வார்களானால், இத்தனை பிரம்மாண்டமாக இத்தனை சிக்கல்கள், முடிச்சுகள், கிளைக் கதைகளுடன் , யுகங்கள் தாண்டி தொடரும் சம்பவங்களுடன் எழுத முடியும் என்றால் அவர்களைப் பாராட்டத் தானே வேண்டும். இந்த இதிகாசங்களின் தாக்கங்கள் இல்லாதொரு கதையை இன்று வரை யாரும் எழுதிவிட வில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.