மானச சஞ்சரரே....பிரம்ம நீ.....மாஅ...னச சஞ்சரரே.... இன்னைக்கு நித்யஸ்ரீ கலக்கிட்டாபோ.. கச்சேரின்னா இன்னைக்கு நடந்ததான் ஓய்...கச்சேரி என்றவாறே உள்ளே நுழைந்தார் சேஷூ என்கிற சேஷாத்ரி ஐய்யர்.
எங்கள் தெருவில் அனைவரும் கதிகலங்க வைக்கும் ஒருவர் . வாய்நிறைய வெற்றிலை சீவல், வாயை ரயில் எஞ்சின் புகைபோக்கி போல உயர்த்தி, இரண்டு கைகளிலும் பூணலை இழுத்து பிடித்து முதுகு சொறிந்தவண்ணம் அவர் பேசுவதை பார்த்தாலே நமக்கு லேசாக முதுகில் நமைச்சல் வரும்.
எப்படிபட்ட கூட்டமாக இருந்தாலும் இவர் சென்றால் சிதறி ஓடிவிடுவார்கள். அதனால் சேஷூ மாமாவுக்கு செல்லமாக நாங்கள் வைத்த பெயர் புரட்சி வீரன் சே..! தனக்கு தெரியாததே கிடையாது என்பது போன்ற அலட்டல் அவரிடம் இருபத்தி நாலு மணி நேரமும் இருக்கும். இதனல் சிலர் இவரை விக்கிப்பிடியா என்பது போல சேஷூபிடியா என்றும் அழைப்பார்கள்.
“என்னடா பசங்களா...வேலைவெட்டிக்கு போகாமல் பேசிண்டு இருக்கேள்... அரசியலா கிரிகெட்டா ?”என எங்கள் கூட்டத்தினுள் தனது கொரில்லா தாக்குதலை துவக்கினார் சே..!
“ஆமாண்டா இவரு நம்ம ஊரு கலெக்டரு...நாம தாண்டா வெட்டிப்பசங்க” என முணுமுணுத்தான் கோயிந்து.
“என்னடா குட்டி ராஸ்கல் முணுமுணுக்கறே...நானும் உங்களோட சேர்ந்து பேசிண்டு இருக்காலாம்னு பார்த்தா அசடு மாதிரி நிக்கறேள்?”
பொறுமை இழந்த நான், “மாமா நாங்க வேல்ட் கப் புட்பால் பத்தி பேசிண்டு இருக்கோம்” என்றேன்.
“பேஷா....பேசுங்கோ நானும் கேட்கறேன். எனக்கு தெரிஞ்சதையும் சொல்றேன்..நண்ணா இருக்குமோல்யோ?”
“அது என்ன நண்ணா இருக்குமோல்யோ? நல்லா இருக்குமா இல்லையா? தெளிவா சொல்லுங்கோ மாமா” என்றான் கோவிந்து. இன்று அவன் சரியான பார்மில் இருப்பது புரிந்தது.
“அசமந்தமா பேசாதேடா... உனக்கு என்ன டீம் ரொம்ப இஷ்டம், சொல்லு..” “நாங்க எல்லோரும் ஜெர்மனி ரசிகர்கள் மாமா..ஆனா அவாதான் தோத்துட்டா” என்றேன் நான்.
“பேஷ் நானும் தாண்டா. நம்ம தாயாதிகள் ரசிகரா இருக்கேள். எனக்கு சங்கடம் தான் போங்கோ”
“ஏம்மாமா கெட்டவார்த்தையில திட்டரேள்” என்றான் கோவிந்து.
“கோயிந்தூ...தாயாதிகள்னா உங்க பாஷையில பங்காளிகள்னு அர்த்தம்டா..”
“ஜெர்மன்காரங்க எப்படி மாமா நம்ம பங்காளிகள் ஆக முடியும்? ”
“ஜெர்மனியிலிருந்து தாண்டா ஆரியர்கள் எல்லாம் சிந்து நதி வழியா வந்து இந்தியாவில குடியேரினா தெரியுமோ? நம்ம கலர் எங்கிருந்து வந்துதுனு தெரியுமோ? எல்லாம் மேடின் ஜெர்மன். அதனால தான் பிராமணனை ‘சர்மாணி - சர்மா’ என சாஸ்திரம் சொல்லுது. ஜெர்மனிங்கிரதோட திரிபு இது புரிஞ்சுதோ? அதனால தாண்ட வைதீக சாஸ்திரத்தையெல்லாம் அவா இன்னும் கொண்டாடரா. ”
“மாமா புட்பாலை பத்தி பேசினா நீங்க ஜாதி கலவரமே செய்வீங்க போல இருக்கே...ஆமாம் மாமா டிவியில பார்த்தேளா? அக்டொபஸ் எல்லாம் யாரு ஜெயிப்பானு சொல்லிடுது. நீங்க ஜோதிட புலி ஆச்சே உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கோ?”
மாமாவின் பேச்சு திசை திரும்புவதை கண்டு அதை பிடித்திழுக்கும் விதமா கேள்வியை கேட்டான் கோயிந்து.
“எந்த டீவியிலடா காமிச்சான்? நான் பாக்குற எம் டிவியில அது வரலையே...”
எல்லோரும் தலையில் அடுத்துக்கொண்டனர்..
“சரி சரி ரொம்ப சங்கடப்படாதீங்கோடா பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பானு சொல்லறேன். நான் யாரு ஜோதிட சாம்ராட், ஜோதிட வித்வபூஷன் பட்டமல்லாம் வாங்கிருக்கேன்”
“டேய் பாருங்கடா மாமாவே சொல்லிட்டார். வாங்கிருக்காராம். யாரும் குடுக்கலையாம்”
“அம்பி கோயிந்து உனக்கு என்னமாதிரியே குயிக்திடா.. நேத்து நான் பிரம்ம முஹூர்த்தத்தில பஞ்சாங்கம் பார்த்ததில் நெதர்லாந்தும் ஸ்பெயினும் மோதர பைனல்ஸ்ல யாரு ஜெயிப்பா தெரியுமோ?” என சொல்லி நிறுத்தினார்..
அனைவரும் அவர் முகத்தை பார்த்தோம்.
“என்னடா பார்க்கரேள் எனக்கு சில்லி கோபி வாங்கி கொடுப்பேன்னு சொல்லுங்கோ அப்பத்தான் சொல்லுவேன்”
அனைவரும் நொந்து கொண்டோம். ஜோசியத்தை சில்லி கோபிக்கு தர முடிவு செய்த சேஷூ மாமாவிடம் கோரசாக “சரிமாமா சொல்லுங்கோ” என்றோம்.
தனது வெற்றிலை சீவலை உமிழ்ந்துவிட்டு.. “ஸ்பெயின் சுண்டக்காய் மாதிரி நெதர்லாந்தை ஜெச்சுடுவா பாரேன். இல்லைனா நான் வெத்தலை சீவலை விட்டுடுரேன்” என்றார்.
“ஏன் மாமா உங்களுக்கு நெதர்லாந்து பிடிக்காதா?” எனக்கேட்டோம். “அசடுகளா எனக்கு காவி டிரஸ் போட்டுண்டவாளை பிடிக்காதுடா.... நானெல்லாம் ஆச்சாரியாளை அரஸ்டு பண்ணும் போதே அடுத்த வேளைக்கு பருப்பு உசிலி வைக்கலாமானு பேசிண்டு இருந்தவன்...என்னாண்ட வந்து காவி போட்ட நெதர்லாந்துகாரணை பத்தி பேசிரையே நன்னவா இருக்கு?”
“அது சரி மாமா மூன்றாவது இடத்திற்கு இன்னைக்கு போட்டி இருக்கே அதில் ஜெர்மனி தானே ஜெயிக்கும்...அவாதான் உங்க பங்காளிகள் ஆச்சே...” என்றான் கோயிந்து.
“இல்லையோ பின்ன.. அவாளோட ஸ்டைல் அப்படி” என மாமா துவங்க.... அச்சமயம் ஒரு பெண் எங்களை கடந்து சென்றாள்.
“யாரு அது பரிமளமா? ஆடி விஷேஷத்திற்கு வீட்டுக்கு அனுப்புச்சுட்டாளா? உன் ஹஸ்பெண்டு பாவமாச்சேடி....:” என தன் தொழிலை அங்கே துவங்கினார்...
நாங்கள் விடுதலையானோம்..!
24 கருத்துக்கள்:
நன்னா எழுதியிருக்கேள், ஸ்வாமி.
எல்லாரும் ஸ்பெயின் ன்னு சூசகமா சொல்றீங்க, பார்ப்போம்,
:))))
எனக்கு ஸ்பெயின பத்தியும் தெரியாது,ஜெர்மனி ய பத்தியும் தெரியாது.ஆனா நீங்க சர்மா வுக்கு குடுத்த விளக்கம் சற்று யோசிக்க வைக்குது.எங்க பரனைல உள்ள குப்பைய கிளரி இது சரிதானான்னு தெரிஞ்சிகிட்டு திரும்ப வருவோம்ல
// ஆகமக்கடல் said...
எனக்கு ஸ்பெயின பத்தியும் தெரியாது,ஜெர்மனி ய பத்தியும் தெரியாது.ஆனா நீங்க சர்மா வுக்கு குடுத்த விளக்கம் சற்று யோசிக்க வைக்குது.எங்க பரனைல உள்ள குப்பைய கிளரி இது சரிதானான்னு தெரிஞ்சிகிட்டு திரும்ப வருவோம்ல//
ஐயா அதெல்லாம் தோள் சிவப்பா உள்ளவாளுக்கு. நார்த் இண்டியன்ஸ் தான் அப்படி இருப்பா
அட ரொம்ப நாளா பின்னூட்டம் போடாதவரும் கூட சேஷூ மாமா வந்ததும் கமென்ட் போடராங்களே.அட என்னையும் சேத்துதாங்க.வாழ்க ஜெர்மனியிலிருந்து வந்த சேஷு மாமாவின் வம்சம்
நாம் எல்லோரும் நம்முடைய சுயத்தை மறக்கக்கூடாது.ஐயரை பற்றி எழுதினால் ஐயர் பாஷையில் கமென்ட் போடும் நாம்,நாயை பற்றிய ஒரு பதிவிற்கு லொல்..லொல் என்று நாய் பாஷையில் கமென்ட் போடுவோமா?.
swami neenga too late
octobus munnadiey solliduchu
spainthanam
//மாமாவின் பேச்சு திசை திரும்புவதை கண்டு அதை பிடித்திழுக்கும் விதமா கேள்வியை கேட்டான் கோயிந்து//
பதிவு எந்த திசையில் போகிறதுன்னு ரொம்ப நன்னாவே பார்த்துக்கிறீங்க !!!!!!. சந்துல சிந்து பாடுவோமில்ல !!!!!
செமையா எழுதிருக்கேள் ஸ்வாமிஜி..
சோ... அவ்வளவும் ஆர்யாளுக்கு...சே.... ஐரொப்பாவுக்குதானா??? என்னமோ பெரியவா சொல்றேள்....
vera enda jathiya pathium openaa evanalaum ezhudamudiyadu. pinniduvaanga. elichavayan paappan thane. ezhudunga. sanyasi samsari ellarukkum aapta aalu bramanan dhan. ennamo solluvanga than mudugula ulladu teriyadu aduthavana paarkardunnu adu pola than.
kounder devar kallar mudaliar appadinnu oru sirukathai poduradu? round katti adi vaanga bayama irukka? apparam samiar neeenga mamiar veettukku pogavendiyadu than :)
சுவாமி
காலை வணக்கம்.
தங்களின் உலக கோப்பை தொடர்பான எல்லா கணிப்பு பலித்தது.
ஜோதிடத்தை பகடி செய்வோர் கருத்தில் கொள்ள வேண்டிய
விஷயம்.
அது சரி... அக்னி காரியம் என்னவாயிற்று?
ஆஹா,ஸ்வாமி சேஷூ மாமா சொன்னது பலிச்சிடுச்சே.அப்படியே தமிழ்நாட்ல அடுத்த முதல்வரா யார் ஜெயிப்பாங்க ஸ்டாலினா?கனிமொழியா?அழகிரி யா?கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.ஏன்னா தேர்தல் செலவு மிச்சமாகும்ல!!!
திரு சுப்புராமன்,
திரு மார்கண்டேயன்,
திரு பாலபாரதி,
திரு ஆகமக்கடல்,
திரு கோவி.கண்ணன்,
திரு செங்கோல்,
திரு essusara,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு சுந்திரராமன்,
திரு பரிசல் கிருஷ்ணா,
திரு மகேஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு சிவக்குமார்,
திரு செங்கோல்,
உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி.
சகோதரி fieryblaster,
உங்கள் கருத்து வேடிக்கையாக இருக்கிறது.
நான் புனைவுகள் ஜாதீய அடிப்படையில் எழுதுவதில்லை. அப்படி பார்த்தால் இதற்கு முன் நான்கு புனைவுகள் வெவ்வேறு ஆட்களை மையமாக கொண்டு எழுதி இருக்கிறேன். அவர்களின் ஜாதியை யாரும் ஆராயவில்லை. காரணம் உங்களை போன்ற குடிதாங்கிகள் தவிர வேறு யாரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
எத்தனையோ திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கீழ்த்தரமாக பிராமணர்களை சித்தரித்திருக்கிறார்களே...அன்றெல்லாம் உங்கள் அறச்சீற்றம் எங்கே சென்றது? மேலும் அவர்களை எல்லாம் பிராமண சங்கங்களோ அல்லது வேறு ஏதேனும் பிராமண அமைப்புகளோ கண்டித்து போராட்டம் நடத்தியதுண்டா?
அதையெல்லாம் விட்டுவிட்டு என்னை போன்ற எளிய பதிவர்களிடம் உங்களின் அறச்சீற்றத்தை காட்டினால் என்ன செய்ய?
உங்கள் கருத்தை பார்த்தால் அனேக பிராமணர்கள் சேஷூ அய்யர் போல இருப்பதாகப்படுகிறது. இதை கதாப்பாத்திரமாக பாருங்கள், ஜாதியின் அடையாளமாக பார்க்காதீர்கள்.
//apparam samiar neeenga mamiar veettukku pogavendiyadu than/
உங்கள் ஆசிகளுக்கு நன்றி.
i perceive dwesham in your writings. I do not mind when such dwesham comes from a normal man. be it cinema or other co bloggers, i just ignore it. but u say that u r a samiar. definitely this does not suit u if u happen to be one. enna vennaalum poosi mazhuppalam. manasatchikku theriyada edu sari edu thappunnu :)
புனைவோ, அல்லது தங்களின் கணிப்போ, நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி . . . தொடருங்கள் உங்கள் பயணத்தை, நாங்களும் பயன்பெற
உங்களுக்கு இது தேவையா?கால் பந்துக்கும் காவிக்கும் என்னய்யா சம்மந்தம்?பேசாம அக்னிஹோத்ரம் எழுதினோமா,ஏதோ வகுப்பு எடுத்தோமான்னு இல்லாம,புனைவு எழுதரன்டா பேர்வழின்னு ஏன் பதிவுலகுல வம்ப விலை கொடுத்து வாங்கரிங்க!.அதெல்லாம் உங்களுக்கு சரிப்படாது.கோவியாருக்கு தான் கை வந்த கலை.பாருங்க அவர் ப்ளாக்ல பின்னூட்ட சண்டை நடக்குது.அந்த பாணி யெல்லாம் உங்களுக்கு வேண்டாம்.ஏன்னா நாங்க உங்க அடுத்த பதிவு எப்ப வரும்னு காத்துகிட்டு இருக்கோம்.பதிலுக்கு பதில் போட்டா "காலம்" மாறி போயிடும்.
ஹி..ஹி..ஸ்வாமி ஜீ...நீங்களும் சண்டை போட ஆரமிச்சிட்டிங்களா?வெளங்கிடும்
சாமி உங்களுக்கு காமடி நல்லா வருது.ஆனா எப்ப காமடி பண்றீங்க எப்ப சீரியஸ் பண்றீங்கன்னு புரியல.மரம் சி டி படிக்குதுன்னு நீங்க எழுதினது நான் காமடின்னு நினைச்சேன்.ஆனா அது சீரியசாமே.அதுபோல இது காமடின்னு நினைச்சா பின்னூட்டங்களைப் பார்க்கறப்ப வேற மாதிரி இருக்கே.எதுக்கும் ஆரம்பத்திலியே ஒரு டைட்டில் போட்டுடுங்க.இது காமடி சிரிக்கவும்.அல்லது இது காமடி இல்ல .எழுந்து நிற்கவும்.இந்த மாதிரி.
சாமி உலகம் முழுக்க பகவானுக்கு கட்டுப்பட்டது.பகவானோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன்.மந்திரமோ பிராமணனுக்கு கட்டுப் பட்டது.ஆகவே உலகம் முழுக்க அவங்களுக்கு கட்டுப் பட்டது.அப்படின்னு படிச்சேன்.சும்மா அவாள் வாயில போய் விழாதேள்.
>>>உலகம் முழுக்க அவங்களுக்கு கட்டுப் பட்டது<<<
செம்ம காமடி போங்க....
Post a Comment