Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, January 3, 2010

தினம் தினம் திருமந்திரம் - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

ஜனவரி ஒன்றாம் தேதி இறைவனின் செயல் நிலையும் சமாதி நிலையும் இணந்த ஆருத்ர தரிசனம் அன்று தினம் தினம் திருமந்திரம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.



மாலை 6 மணிக்கு ப்ரணவ பீட பஜன் குழுவினரின் பக்தி இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.



சிறிய ப்ரார்த்தனைக்கு பிறகு தினம் தினம் திருமந்திரம் புத்தகம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


புத்தகத்தின் அச்சுப்பணியை சிறப்பாக செய்த வடகரை வேலன் அவர்கள் கெளரவிக்கப்பட்டார். வடகரைவேலன் அவர்கள் புத்தகம் அச்சிடும் பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.



ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் திருமந்திர சிறப்பையும் ஸ்வாமி ஓம்கார் நீண்ட உரை மூலம் விளக்கினார்.



நிகழ்ச்சியின் முடிவில் மந்திர ஜபம் மற்றும் தியானத்துடன் மக்கள் ஆன்மீக நிலையில் திளைத்தார்கள். அருள் காரியம் இனிதே சிறப்பாக நடைபெற்றது.

திரு நிகழ்காலம் சிவா, சஞ்சய் காந்தி ஆகிய பதிவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மெருகூட்டினார்கள்.

குறிப்பு : புத்தகம் விலை 80/- ரூபாய். 366 பக்கம் கொண்ட கையடக்க புத்தகம். புத்தகம் வேண்டுவோர் தபாலில் பெறலாம். தபால் செலவு தனி. குறைந்த பட்சம் 2 புத்தகத்திற்கு மேல் வாங்குபவர்களுக்கு தபால் கட்டணம் ஒரு புத்தகத்திற்கு அனுப்பினால் போதுமானது. நீங்கள் படிக்க மட்டுமல்ல பிறருக்கு பரிசாக கொடுத்து மகிழ வேண்டிய புத்தகம். அறக்கட்டளை சார்ப்பில் பெரிய புத்தகத்தின் விலையே 80 என நன்கொடையாகவே அமைக்கபட்டுள்ளது. புத்தகம் வேண்டுவோர் அதற்கான வழிமுறைகளை தொலை பேசிவாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
தொலைபேசி : +91 99 44 2 333 55.


|| ஓம் தத் சத் ||

23 கருத்துக்கள்:

selventhiran said...

மன்னிக்கவும் ஸ்வாமி. அன்றைய தினம் தந்த அலுப்பில் அசந்து தூங்கி விட்டேன். அண்ணாச்சி பலமுறை அழைத்தது கூட தெரியவில்லை.

எங்கேஜ்மெண்ட் காலம் கவனித்திருப்பீர்களென எண்ணுகிறேன். அணில் சுமந்த மண்!

கோவி.கண்ணன் said...

தென்னாடுடைய சிவனே போற்றி !
தென்னாடுடைய சிவனே போற்றி !

(இப்படித்தான் அன்பே சிவம் படத்தில் நாசர் சொல்லுவார்)

வாழ்த்துகள்.

ஷண்முகப்ரியன் said...

புத்தகத்தை எப்படித் தபாலில் பெறுவது என்று தெரிந்து கொண்டு பெற்றுக் கொள்கிறேன்,ஸ்வாமிஜி.

உங்கள் உடம்பின் மீது காணப படும் திருநீற்று வரிகளும்,உங்கள் எழுத்தின் வரிகளும் விந்தையான முரண்பாடாகத் தோன்றியது ஸ்வாமிஜி.

கோவி.கண்ணன் said...

//உங்கள் உடம்பின் மீது காணப படும் திருநீற்று வரிகளும்,உங்கள் எழுத்தின் வரிகளும் விந்தையான முரண்பாடாகத் தோன்றியது ஸ்வாமிஜி.//

:)

பதிவுலகத்தை நட்போடு அனுகுகிறார், அதைத்தான் எழுத்தில் காட்டுகிறார்னு நினைக்கிறேன். நண்பர்களிடம் பேசுவதற்கும் பிறரிடம் பேசுவதற்கும் வேறுபாடு இருக்கிறதே.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செல்வேந்திரன்,

உங்களின் வருகை இன்னும் பொலிவு சேர்த்திருக்கும்.

//அணில் சுமந்த மண்!//

அடுத்த முறை சந்திக்கும் பொழுது முதுகில் கோடு போடுகிறேன். :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவியார்,

//தென்னாடுடைய சிவனே போற்றி !//

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

//உங்கள் உடம்பின் மீது காணப படும் திருநீற்று வரிகளும்,உங்கள் எழுத்தின் வரிகளும் விந்தையான முரண்பாடாகத் தோன்றியது ஸ்வாமிஜி.//

வலைதளத்தில் என் புகைப்படம் அப்படித்தானே இருக்கிறது?

நிறந்திரமாக அப்படி இருக்க விரும்பு வரிக்குதிரையாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன் :) கருமையில் வெண் பட்டைகள் :)

yrskbalu said...

if you publish 1 or 2 mantra - it will usefull to before buying.

எம்.எம்.அப்துல்லா said...

சாமி, திருமந்திர வெளியீடுங்கிறதுனால திரீ லைன்ஸ்லாம் போட்டீங்களோ??

அளவில்லா டவுட்டுடன்,

அப்துல்லா

:))))

நிகழ்காலத்தில்... said...

நிகழ்ச்சி நன்றாக இருந்தது என சொல்லலாம்..

சொல்லலாம் அப்படிங்கிற வார்த்தை எப்படியோ எங்கிட்ட ஒட்டிக்கிட்டுதே சாமி...

இது சந்தேகமான பொருளத்தான தருது. அதனால ..

நிகழ்ச்சி சிறப்பா இருந்தது, செலவே இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக இருந்தது.

வாழ்த்துகள்..

கோவி.கண்ணன் said...

//
நிகழ்ச்சி சிறப்பா இருந்தது, செலவே இல்லாமல், ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக இருந்தது.

வாழ்த்துகள்..//

:)

விருந்து எதுவும் இல்லைன்னு எவ்வளவு சிறப்பாகச் சொல்றிங்க !

sarul said...

ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வார்த்தையை உபயோகிக்கும் சந்தர்ப்பங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன,அந்த வார்த்தையைப் பிரதியிட்டால் அந்த வச்னத்தின் அழுத்தம் மாறுபடுவதாகவே எனக்குப் படுகின்றது.இது சுட்டிக்காட்டப்படவேண்டியதல்ல ரசிக்கப்படவேண்டியது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,
//if you publish 1 or 2 mantra - it will usefull to before buying.//

இந்த பலகாரக்கடையில் இனிப்பு வாங்கும் முன் இரண்டு பீஸ் கொடுப்பார்களே அதுமாதிரியா :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே,

//அளவில்லா டவுட்டுடன்,

அப்துல்லா//

இந்த அளவில்லானு சொல்லுரவர் கூட அடிக்கடி பேசினா இப்படித்தான் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம் சிவா,

//நிகழ்ச்சி நன்றாக இருந்தது என சொல்லலாம்..

சொல்லலாம் அப்படிங்கிற வார்த்தை எப்படியோ எங்கிட்ட ஒட்டிக்கிட்டுதே சாமி...

இது சந்தேகமான பொருளத்தான தருது. அதனால ..//

அப்படியா பொருள் தருது? அப்படி சொல்லாம்னு நினைச்சேன்.. சொல்லலாம்னு சொல்லாம சொல்லலாம்கிறதை எப்படி சொல்லறது ? :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி,

//விருந்து எதுவும் இல்லைன்னு எவ்வளவு சிறப்பாகச் சொல்றிங்க !//

எல்லோருக்கும் திருமந்திர விருந்து கொடுக்கப்பட்டது :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கே.எஸ்,

//ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வார்த்தையை உபயோகிக்கும் சந்தர்ப்பங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன,அந்த வார்த்தையைப் பிரதியிட்டால் அந்த வச்னத்தின் அழுத்தம் மாறுபடுவதாகவே எனக்குப் படுகின்றது.இது சுட்டிக்காட்டப்படவேண்டியதல்ல ரசிக்கப்படவேண்டியது.//

சொல்லமாம்கிறதை இப்படியும் சொல்லமாமோ :) ?

Sanjai Gandhi said...

//இந்த பலகாரக்கடையில் இனிப்பு வாங்கும் முன் இரண்டு பீஸ் கொடுப்பார்களே அதுமாதிரியா :)//

அட்ரஸ் ப்ளீஸ்....

( இனிப்பு வாங்குபவர்களுக்கு மட்டும் என்ற பதில் செல்லாததாக அறிவிக்கப் படுகிறது )

Sanjai Gandhi said...

மன்னிக்கவும் ஸ்வாமி. என்னால் நிகழ்ச்சி முடியும் வரை கலந்துக் கொள்ள இயலவில்லை. என் நண்பர்கள் நீண்ட நேரம் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

குசும்பன் said...

//ஆருத்ரா தரிசனம் தினத்தின் முக்கியத்துவத்தையும் திருமந்திர சிறப்பையும் ஸ்வாமி ஓம்கார் நீண்ட உரை மூலம் விளக்கினார்.
//

அவரு வேற யாரோ போல?:))

நிகழ்காலத்தில்... said...

\\KS said...

ஸ்வாமி அவர்கள் சொல்லலாம் என்ற வார்த்தையை உபயோகிக்கும் சந்தர்ப்பங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன,அந்த வார்த்தையைப் பிரதியிட்டால் அந்த வச்னத்தின் அழுத்தம் மாறுபடுவதாகவே எனக்குப் படுகின்றது.இது சுட்டிக்காட்டப்படவேண்டியதல்ல ரசிக்கப்படவேண்டியது.\\


:))

சரி இனிமேல் ரசித்தே விடுகிறேன்.

கோவி.கண்ணன் said...

//SanjaiGandhi™ said...
மன்னிக்கவும் ஸ்வாமி. என்னால் நிகழ்ச்சி முடியும் வரை கலந்துக் கொள்ள இயலவில்லை. என் நண்பர்கள் நீண்ட நேரம் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
//

அடப்பாவி, உன்னோட 'நான் ரொம்ப...பிசி' வெளம்பரத்துக்குக்கு ஸ்வாமி பதிவு தான் கிடைச்சுதா ?

குப்பன்.யாஹூ said...

WISHES SWAMI JI, THANKS FOR SHARING