புல் வளைந்து பூமியை தொடும்
தொலைவில் இருந்தது.
சூரியன் உதித்ததும் பனித்துளி மறைந்தது.
புல் நிமிர்ந்தது.
-------------------------------------------
தற்கொலை செய்யும் நோக்கில்
மரக்கிளையில் கயிற்றில் தொங்கினேன்.
என் பழுதாங்காமல் கிளை முறியவிழுந்தேன் “பொத்” என...
கிளையில் இருந்த இலை மெதுவாக
காற்றில் அசைந்தவண்ணம் கீழே விழுந்தது.
------------------------------------------------
தினமும் செடிகளுக்கு நீர் ஊற்றினேன்
வளர்ந்தது.
தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்
நான் வளரவில்லை.
--------------------------------------------------
எங்கள் ஊரின் கிழக்கே பெரிய மலை உண்டு.
இருந்தும் சூரிய கிரணங்களை மறைக்க முடியவில்லை.
சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது.
18 கருத்துக்கள்:
தினமும் தலையில் நீர் ஊற்றுகிறேன் , முடி உதிர்ந்ததுதான் மிச்சம்,
ஹி ஹி ,, ஒரு கவிதை கூட முளுவதுமாகப் புரியவில்லை .. ஏதோ புரிந்ததுமாதிரித் தெரிகிறது .( புரியும் ஆனா புரியாது ,,)
//"வருங்கள் ஜென் ஆவோம்"//
எழுத்துப்பிழை இருக்குதுன்னு நினைக்குறேன்.
அது வருங்கள் - இல்லை - வறுங்கள் :)
திரு புன்னகை உங்களை வருகைக்கு நன்றி.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சென்ஷி
உங்கள் வருகைக்கு நன்றி
அப்ப நாம எல்லாம் இப்பவே ஜென் இல்லையா???
///சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது.///
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம்.
எனக்கு இந்த பாடல் ஞாபகம் வந்துடிச்சி சுவாமிஜி இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தானே.
i thought about maruthi jen, ok its jen saint,
அருமையான வரிகள் ......
தற்கொலை என்னும் வலிந்து உயிர் விடுதலை காட்டிலும் .. முதிர்ந்து பற்றற்று வீழும் ஒரு பழுத்த இழையின் மரணம் இயல்பானது அழகானது ....
சூரியன் உதித்ததும் பனித்துளி மறைந்தது.
புல் நிமிர்ந்தது. ///
சத்தியம் ...........
//Mahesh said...
அப்ப நாம எல்லாம் இப்பவே ஜென் இல்லையா???
//
இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு :)
//தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்
நான் வளரவில்லை.//
தினமும் என் தலைக்கு நீர் ஊற்றினேன்
முடியும் வளரவில்லை மூளையும் வளரவில்லை
"நான் வளரவில்லை." அப்படி என்றல் நல்லதுதானே.புரியுதா இல்லையா என்றே புரியவில்லை சுவாமி. :)
இந்த ஜென் கவிதைகளின் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரிகிறது, ஆனால் இதன் உள்ளர்த்தங்களை எப்படி புரிந்து கொள்வது? இவற்றை படிப்பதற்காக வேறு ஏதேனும் முறை இருக்கிறதா?
//தற்கொலை என்னும் வலிந்து உயிர் விடுதலை காட்டிலும் .. முதிர்ந்து பற்றற்று வீழும் ஒரு பழுத்த இழையின் மரணம் இயல்பானது அழகானது ....//
அடடா! இந்த கவிதைக்குள் இப்படியான அழகான கருத்தா? இதை எப்படி புரிந்து கொள்வது எப்படி என்று தான் புரியவில்லை.
அருமை
நிகழ்காலத்தில்...
மரணத்திலும் அழகுபார்க்கும் அற்புத மனிதர்கள் ,
இதுதான் மாயையின் வலிமையா ,
திரு மகேஷ்,
திரு கேசவன்,
திரு பித்தன்,
திரு முடிவிலி,
உங்கள் வருகைக்கு நன்றி
அப்துல்லா அண்ணே..
என்ன கட்சிக்கு ஆள் சேர்க்கறமாதிரி இருக்கு :)
திரு தமிழ்வாணன்.
திரு செளரி,
திரு சீனு,
திரு நிகழ்காலம்,
திரு புன்னகை,
உங்கள் வருகைக்கு நன்றி.
நண்பரே,
வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறது. கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளது. http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html
நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Swamiji,
ippadhavadhu ungal blogai paarkkum chance kidaithadhe... enakum konjam adhistam irukka thaan seikiradhu...
Post a Comment