மூன்று வேளை உண்பவன் ரோகியாம்
இருவேளை உண்பவன் போகியாம்
ஒருவேளை உண்பவன் யோகியாம்
உணவை வைத்தா யோகியை அளப்பது?
மூன்று காலத்திலும் வாழநினைப்பவன் ரோகி
இரு காலத்திலும் வாழ்பவன் போகி
நிகழ்காலத்தில் இருப்பவனே யோகி
இருப்பு என்ற நிலை தவிர..
நிகழ்காலம் என்று ஒன்று இல்லா காலத்தில்
இருப்பவனே யோகி.
உண்ணாமல் ஜீரணிப்பவன்
தூங்காமல் களைப்பை தீர்ப்பவன்
புணராமல் சந்ததி வளர்ப்பவன்
இல்லாமல் இருப்பவன் எவனோ அவனே யோகி.
யோகியமான யோகியானால் என்ன நடக்கும் ?
என்னில் நடந்தவை உனக்காக..
ரூபமற்ற பெருவெளியில் அந்தமற்ற சமவெளியில்
ஐக்கியமான ஒரு பெருஞ்சோதியில் இருள்விலக கலந்து
பின்பு ...
மற்றதை நீ யோகி ஆனதும் அனுபவி
இல்லையேல் கற்பனை போகியாகி கற்பில்லா யோகியாவாய்.
யோகியாக யோக்கியதை தேவை இல்லை.
போகியாகவும் ரோகியாகவும் நீ முயலுவதில்லையே?
பின் ஏன் யோகியாக முயற்சி செய்ய சொல்லுகிறாய்?
எங்கு சென்றோம் திரும்பி வருவதற்கு ?
எங்கே தொலைந்தோம் நம்மை தேட ?
எங்கே விழுந்தோம் மீண்டும் எழ?
இந்த ஷ்ணத்தில் முழுமையாக வாழு
நீ நீயாக இரு.
யோகியே.......
நீ நீயாக இரு.
Subscribe to:
Post Comments (Atom)
16 கருத்துக்கள்:
அருமையான விளக்கம்
அருமை ஸ்வாமிஜி.
உணவை வைத்துச் சொல்லாமல் காலத்தை வைத்துச் சொல்லி இருப்பது புதுக் கருத்து.நன்றி.
அட ஹைக்கு சூப்பரா இருக்கு.... ஹைக்கு சீசன் பதிவர்கள்கிட்ட ஒட்டிக்கிச்சு போல... :) கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் எட்டாம் பாகம் ஏதும் படிச்சிங்களா :)
//நிகழ்காலத்தில் இருப்பவனே யோகி//
அறிவே தெய்வம் என்கிற 'நிகழ்காலத்தில்' சிவ சுப்ரமணியம் உடனடியாக மேடைக்கு வரவும் !
:)
வந்துவிட்டேன்...
\\இந்த ஷ்ணத்தில் முழுமையாக வழு\\
வழு, வாழு அருமை
\\உணவை வைத்தா யோகியை அளப்பது?\\
உணவை வைத்தும் யோகியை அளக்கலாம், மிக ஆரம்ப நிலை
"உண்பவன்" ... "உள்ளவன்".... மேட்டர் நல்லா இருக்கே !!
//மூன்று வேளை உண்பவன் ரோகியாம்
இருவேளை உண்பவன் போகியாம்
ஒருவேளை உண்பவன் யோகியாம்//
ஸ்வாமி, அடுத்தவன் உணவையும் சேர்த்து உண்பவன் 'துரோகி'
:)
அருமை ஸ்வாமி ஓம்கார்!
எங்கள் ஊரில் சில சாமியார்கள் வீட்டிற்க்கு வருவார்கள். அறுசுவை உணவு நிச்சயம்! போலீஸ்காரன் சம்பளத்தில், என்னவெல்லாமோ கேட்பார்கள்!
அருமை. இன்னொரு கீதை.
ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு.,
மீண்டும் மீண்டும் எனது கருத்துகளை எழுதி பின் அதை அழித்து.......
முடியவில்லை என்னால்.
மௌனம் தான்..........
ஊமையன் தான் கனவு கண்டதை பிறரிடம் கூறமுடியாது.அதை போல தான் உங்களது பதிவை படித்த எனது நிலையும்.
இறைநிலையின் ஆசிரையும்
உங்களின் ஆசிரையும்
நாடும் சாமானியன்.
த.ரா.சேசு ராஜா ., தூத்துக்குடி
அருமை சுவாமி!
திரு ஜவஹர்,
திரு ஷண்முகப்ரியன்,
திரு விக்னேஷ்வரன்,
திரு கோவி.கண்ணன்,
திரு நிகழ்காலம்,
திரு மகேஷ்,
திரு ராஜு,
திரு பிரபு,
திரு சேசு.ராஜா,
திரு மதுரை வீரன்,
உங்கள் அனைவரின் வருகையும், கருத்துக்களும் இப்பதிவை மேலும் அலங்கரித்தது..
நன்றி.
வணக்கம் ஸ்வாமி.
எல்லாம் அற்புதமான ஆழமான வரிகள்..
பரவசமான அனுபவம் கிடைத்தது.
//உண்ணாமல் ஜீரணிப்பவன்
தூங்காமல் களைப்பை தீர்ப்பவன்
புணராமல் சந்ததி வளர்ப்பவன்
இல்லாமல் இருப்பவன் எவனோ அவனே யோகி.//
இந்த வரிகள் மாத்திரம் என்னுள் புகாமல் அடம் பிடிக்கிறது.
என் சிற்றறிவுக்கு எட்டும் வேளையை எதிர்நோக்கி...
சாமி ரொம்ப பிஸியோ??
பதிவே காணோம்??
சாமி ரொம்ப பிஸியோ??
பதிவே காணோம்??
Post a Comment