Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, June 6, 2009

அந்தமற்ற அந்தாதி


பிறந்தவுடன் எனக்கு என்னை புரியவில்லை.
ஏன் பிறந்தேன் என கேட்டதற்கு பதில்
-உன்னை படைத்தவர் பெயர் கடவுள்.

கடவுள் எங்கே என தேடுதல் துவங்கியதில்
துணிலோ துரும்பிலோ கடவுள் இல்லை.
அவர் இருப்பது அனைத்திலும்.

அனைத்தும் நானாக உணர்ந்தேன்
அப்பொழுது எனக்கு துணை தேவைபட்டது.
அனைத்தும் நானாக இருக்க நானே தான் எனக்கு துணை.

துணை இருந்தால் உலகில் பல செயல்கள் செய்யலாம்.
உலகில் துணையாக இருப்பதே செயல் தானே

எனக்கு செயல் என்பதே பிடிக்காமல் - செயல்படாமல் இருந்தேன்,
செயல்படாமல் இருப்பதும் செயலல்லவா என்ற எண்ணம் வந்தது.

எண்ணங்கள் என்பது உலகை புரட்டிப்போடும் ஆயுதம்
அதனால்தான் நான் அகிம்சையை விரும்புகிறேன்.

அகிம்சையை நான் விரும்புவதில்லை காரணம்
அதிலும் இம்சை எஞ்சி இருக்கிறது.

எஞ்சி இருக்கும் நான் யார் என புரிதல் தொடங்க முயற்சித்தேன்
அங்கே எஞ்சியது வெறுமை

வெறுமையாக இருக்கும் என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்..
வா மீண்டும் கடவுளை தேட பிறந்துவிடுவோம்.

பிறந்தவுடன் எனக்கு என்னை புரியவில்லை................

14 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா said...

//பிறந்தவுடன் எனக்கு என்னை புரியவில்லை.

//

படிக்கிற ரொம்பப் பேருக்கும் புரியாது

:)

Raaji said...

nijammave puriyala:-(

ஸ்வாமி ஓம்கார் said...

உண்மையா புரியலையா? :)


ஐ... நான் இலக்கியவாதி ஆயிட்டேன்... :))

அது ஒரு கனாக் காலம் said...

இடியாப்ப சிக்கலை கூட எடுத்திடலாம் போல இருக்கு !!!!!... ஆனால் ... இந்த தேடல் , ஓட்டம், தெளிவு , மறைவு , .... அதும்ப்பாட்டுக்கு நடந்துகிட்டே இருக்கு ( ஓடிகிட்டே இருக்கு )

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுந்திர ராமன்,

அந்த புகைப்படத்தை பத்தி தானே உங்கள் கமெண்ட் :) ?

உங்கள் வருகைக்கு நன்றி

Anonymous said...

சுவாமி ஓம்கார் அவர்களுக்கு .,

உங்களின் பதிவை கடந்த மூன்று மாதங்களாக நான் படித்து வருகின்றேன்.
அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது.
உங்களின் இந்த பதிவை படித்த பின் எனக்கு உங்களின் சீடராக வேண்டும் என நினைப்பு வந்துள்ளது.எனக்கு இறைவனை பற்றிய தேடுதல் அதிகம் உள்ளது.
அந்த தேடுதல் குறித்த சில தகவல்கள் உங்களின் பதிவின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் உங்களுக்கு உரித்தாகட்டும் .
வேதாத்திரி மகரிஷி மற்றும் ஓஷோ வின் புக்கை படிக்கும் போது எனக்கு உண்டாகும் மௌனம் இப்போது உங்களின் பதிவுகளை படிக்கும் போது உள்ளது.

த.ரா.சேசு ராஜா ,தூத்துக்குடி.

நிகழ்காலத்தில்... said...

\\எஞ்சி இருக்கும் நான் யார் என புரிதல் தொடங்க முயற்சித்தேன்
அங்கே எஞ்சியது வெறுமை\\

அருமையான ஓம்கார் அவர்களின் பதிவு

வாழ்த்துக்கள்

ஷண்முகப்ரியன் said...

புரிகிறது.அதனால் கவிதையாக இல்லாமல் போனது,ஸ்வாமிஜி.

jpaw said...

//வெறுமையாக இருக்கும் என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய்..
வா மீண்டும் கடவுளை தேட பிறந்துவிடுவோம்//
நீங்கள் எழுதும் கட்டுரைகளின் மெய்ப்பொருள் அதி அற்புதமாக உள்ளது.
//ஐ... நான் இலக்கியவாதி ஆயிட்டேன்... :))//
எனினும் நீங்கள் இடும் பின்னூட்டப்பதிவுகள் சிறுபிள்ளைத்தனமாகவும் நகைச்சுவையுடனும் உள்ளது.

உங்களின் இந்த பாமரத்தன்மையான பரிமாரல்கள் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தி தங்கள் மீது மரியாதயை ஏற்ப்படுத்துகிரது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு த.ரா.சேசு ராஜா,

பதிவை படித்ததும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கிளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

இதில் உள்ள கருத்துக்கள் என்னுடையது அல்ல. இறைநிலை கூறுவதை இங்கே பதிவேற்றம் செய்கிறேன்.

மஹான்களும் யோகிகளும் காணும் உண்மைகள் எப்பொழுதும் ஒன்று போலவே இருக்கும். காரணம் அனைவரும் கருவியாக இருந்து இறைதகவலை நமக்கு அளிக்கிறார்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

//புரிகிறது.அதனால் கவிதையாக இல்லாமல் போனது,ஸ்வாமிஜி.//

கவிதை என ஒரு தலைப்பு மட்டுமே கொடுத்துள்ளேன். இது கவிதை அல்ல :)

நீண்ட இடைவெளிக்கு பிறகு
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மென் தமிழன்,

பாமரத்தனமாய் இருப்பதும் பரமாத்மனாய் இருப்பதும் என் கையில் இல்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.

ATOMYOGI said...

**விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு் உள்ளே விளக்கைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே..

-திருமந்திரம் 2816 **

தலை சுத்துது!!!! தயவு செயது விளக்குங்களேன்....