Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, June 3, 2009

ப்ராண சக்தி

ப்ராண சக்தி
- உயிரின் மூலப்பொருள்.

பிரபஞ்சம் ஆற்றல் வடிவமானது. பிரபஞ்சத்தின் ஆற்றல் பல வடிவங்களில் இருந்தாலும். அதன் மூலத்தன்மை ஒன்று தான். ஈஷாவாசிய உபநிஷத் இதை மிகவும் எளிய வடிவில் விளக்குகிறது. ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.

ஆற்றலே அனைத்தும் என்கிறது மெய்ஞானம். பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்கள் தனியே பிரிந்திருக்கிறது. சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் பொழுது அந்த இடத்தில் உயிர்களின் தோற்றம் நடைபெறுகிறது. பஞ்சபூத ஆற்றல் ஒருங்கிணைந்து பூமியை இயக்குகிறது. பஞ்சபூதத்தின் இயக்கம் உயிர் சக்தியாக மாற்றம் அடையும்பொழுது உடலின் வடிவத்திற்கு உருமாறுகிறது. இவற்றை விரிவாக கூற வேண்டுமாயின் பஞ்சபூதங்கள் ஐந்து விதமான பிராணசக்தியாக பிறப்பு எடுக்கிறது.

இந்த பிராண சக்திகள் சூட்சும நிலையிலிருந்து, ஸ்துல நிலைக்கு மற்றமடையும் பொழுது உடல் உறுப்புக்கள் மாற்றம் அடைகிறது கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவை உள்நிலை உறுப்புகளாகும். பார்வை - ஒலி - சுகந்தம் - சுவை - உணர்வு என்று வெளிநிலையில் இருப்பதும் ப்ரபஞ்ச சக்தியின் எளிய வடிவான ப்ராண சக்தியே ஆகும்.


ப்ராணனின் இந்த ஒருங்கிணைவை உணர்ந்தவர்கள் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது என்கிறார்கள். ப்ராணன் பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் இணைகிறதோ அங்கு உயர் தோற்றம் நிகழும் என்பதை உணரவேண்டும். பூமியை போல பிற பகுதிகளிலும் உயிர்கள் இருக்கலாம். எனும் கேள்வியின் சாத்தியத்தை இது உறுதியாக்கும்.


நமது உடலில் ப்ராண சக்தி எப்பொழுது நிலை தவறுகிறதோ அப்பொழுது உடலில் நோய்களும், மனதில் அழுத்தமும் ஏற்படும். கர்ம வினையின் பதிவால் இயங்கும் நமது பிராண சக்திகள் உடல் செயலுக்கும் மனதின் செயல்களுக்கும் காரணமாக இருப்பதால் நமது வாழ்க்கை இயக்கங்கள் நடைபெறுகின்றன. நமது உடல் செயலுக்கு காரணமான ப்ராணசக்தி உடல் செயலால் நிலைத்தன்மை இழக்கும் என்பது உயிர் சக்தியின் ரகசியம். துப்பாகியிலிருந்து புறப்படும் குண்டு இலக்கை தாக்கும் முன்பு துப்பாக்கியில் ஓர் அதிர்வை ஏற்படுத்தும் அல்லவா? பூக்கூடையில் இருக்கும் பூவை எடுத்த பிறகும் அதில் பூவின் வாசம் இருக்கும் அல்லவா? அது போல ப்ராண சக்தியும் உடல் செயல் மூலம் கர்மாவை செயல்படுத்தும் முன்பு அந்த செயலின் அதிர்வை நமக்குள் ஏற்படுத்தும்.

பிறருக்கு நன்மை செய்யும் பொழுது அந்த செயல் நடைபெறும் முன்பு நன்மையான ஓர் அதிர்வு உங்களுக்குள் ஏற்படும். பிறருக்கு தீமை செய்யும்பொழுது முதலில் அதில் பாதிக்கப்படுவது நீங்கள் தான் என்பதை உணருங்கள். இதை ரிஷிகள் உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையில் உணர்ந்தால் தான் பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதீர்கள் என்றனர்.

தீர்த்த யாத்திரை செல்வது பிறருக்கு தான தர்மம் செய்வது போன்றவை எவ்வாறு புண்ணியமாக நமக்கு கிடைக்கும் என கேட்பவர்கள் ப்ராண சக்தியின் அதிர்வை புரிந்துகொண்டால் போதுமானது. தீர்த்த யாத்திரை மற்றும் தான தர்மம் செய்யும் சமயம் ஏற்படும் ப்ராண அதிர்வு உடனடியாக உங்களுக்கு மேன்மையை கொடுக்கும். இந்த மேன்மையே புண்ணியம் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. பிறருக்கு செய்யும் தீமையான செயல் ஏற்படுத்தும் ப்ராண அதிர்வுகள் பாவமான செயலாக கருதப்படுகிறது. இந்த ப்ராண சக்தியின் செயல்கள் அனைத்தும் பாவ - புண்ணிய, கர்ம வினை போன்ற தத்துவங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உணர்த்தும்.


ப்ராண சக்தியின் அதிர்வுகள் பதிவுகளாக ஆன்மாவில் வடிவமைகிறது. ப்ராண சக்திகள் தனது இணைவுகளை விடுவிக்கும் பொழுது உடலை விட்டு ப்ராணன் வெளியேறுகிறது. ஆன்மா அதில் உண்டான அதிர்வுக்கு ஏற்ப மீண்டும் ஓர் வடிவை எடுக்கிறது. மீண்டும் ப்ராண சக்தியின் செயலும் உடல் செயல்களும் ஓர் தொடர் இயக்கமாக நிகழுகிறது.




பிரம்மாண்டமான படைப்பின் ரகசியத்தை எளிமையான வடிவிலும் உண்மை வடிவிலும் விளக்கியிருக்கிறேன். மேலும் பல ரகசியங்கள் இதில் இருக்கிறது. இயற்கையுடன் ஒன்றுபடும்பொழுது ப்ராண சக்தியின் விஸ்வரூபத்தை கண்டு பிரமிக்கலாம். வெகு விரைவில் இந்த விஸ்வரூபத்தை எனது முயற்சியால் புத்தக வடிவில் தரிசிக்கலாம்.

ப்ராண சக்தி ஐந்து நிலையில் உடலில் இயங்குகிறது. தலை பகுதில் உதானன், மார்பு பகுதியில் ப்ராணன், வயிற்று பகுதியில் சமானன், மர்ம ஸ்தானம் மற்றும் இடுப்பு பகுதியில் அபானன் உடலின் அனைத்து பகுதியிலும் வியானன் எனவும் ப்ராண சக்தி இயங்குகிறது. ஒவ்வொரு ப்ராண பிரிவையும் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

தொடரும்...

26 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

\\பூக்கூடையில் இருக்கும் பூவை எடுத்த பிறகும் அதில் பூவின் வாசம் இருக்கும் அல்லவா? அது போல ப்ராண சக்தியும் உடல் செயல் மூலம் கர்மாவை செயல்படுத்தும் முன்பு அந்த செயலின் அதிர்வை நமக்குள் ஏற்படுத்தும்.\\

வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...

எம்.எம்.அப்துல்லா said...

//ஆற்றலுக்கு அழிவில்லை என்கிறது விஞ்ஞானம்.

ஆற்றலே அனைத்தும் என்கிறது மெய்ஞானம்

//

அப்ப ரெண்டும் ஒன்னுதான் :)

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த பிராண சக்திகள் சூட்சும நிலையிலிருந்து, ஸ்துல நிலைக்கு மற்றமடையும் பொழுது உடல் உறுப்புக்கள் மாற்றம் அடைகிறது கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவை உள்நிலை உறுப்புகளாகும். பார்வை - ஒலி - சுகந்தம் - சுவை - உணர்வு என்று வெளிநிலையில் இருப்பதும் ப்ரபஞ்ச சக்தியின் எளிய வடிவான ப்ராண சக்தியே ஆகும்.

//

சாமி!இது அப்படியே குரானில் இருக்கின்றது. பிரபஞ்ச சக்தி என்பதற்கு பதிலாக அல்லா என்று குரான் குறிப்பிடுகின்றது. அல்லா என்ற அரபி வார்த்தைக்கு நேரடியான தமிழ் பொருள் இறைவன். பிரபஞ்ச சக்தி என்றாலும் இறைவன் என்றாலும் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!

Anonymous said...

அருமையான பதிவு சுவாமி, மறு பதிவுக்கும் புத்தகத்துக்கும் காத்திருக்கிறேன்!

krish said...

Very good and simple explanation of prana and energy concepts.

நிகழ்காலத்தில்... said...

\\பிரபஞ்ச சக்தி என்றாலும் இறைவன் என்றாலும் ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!\\

நாமேதான் இறைஆற்றல், இறைஆற்றலே நாம்
உணர்வோம், தெளிவோம்

ஸ்வாமி ஓம்கார் said...

நண்பர் நிகழ்காலத்திற்கு..

/வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
வாழ்க வளமுடன்...
/

நன்றி..

அறிவே தெய்வம் என்னாச்சு ?

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

/சாமி!இது அப்படியே குரானில் இருக்கின்றது. பிரபஞ்ச சக்தி என்பதற்கு பதிலாக அல்லா என்று குரான் குறிப்பிடுகின்றது. அல்லா என்ற அரபி வார்த்தைக்கு நேரடியான தமிழ் பொருள் இறைவன். பிரபஞ்ச சக்தி என்றாலும் இறைவன் என்றாலும் ஒன்றுதான். //

அடுத்த பகுதியில் ஒரு வேத மந்திரம் வருகிறது. அவ்வரிகள் நீங்கள் சொன்ன அனைத்தையும் சரி என கூறுகிறது.

//இன்னும் சொல்லப்போனால் நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!//

சூஃபி தவிர வேறு இஸ்லாமியர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா என தெரியாது.

மதத்தையும் இறைவனையும் புரிந்து கொண்டவர்கள் குறைவே..

மதம் எனும் தலைப்பில் அனைத்து மதம் பற்றி ஒரு பதிவு எழுதி டிராப்டில் கிடக்கிறது. வெளியிட வில்லை...எல்லாம் ஒரு பயம்தான். :)

எனது கட்டுரைகளும் இந்துத்துவ கண்ணோட்டத்திலேயே வாசிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன்.

உங்கள் புரிதல் ஆச்சரியப்படவைக்கிறது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்,

நீங்கள் ஒரு தீர்க்க தரிசி.. :)

இது புத்தகமாக அச்சில் இருக்கிறது.

40 பக்கம் எழுத நினைத்து 400 பக்கமாக முடிந்தது. நான் எழுத நினைத்தது 40 பக்கம்.. அனால் அது நினைத்தது வேறு...

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

நன்றி.. க்ரிஷ்.

ATOMYOGI said...

**வெகு விரைவில் இந்த விஸ்வரூபத்தை எனது முயற்சியால் புத்தக வடிவில் தரிசிக்கலாம்.**

காத்திருக்கிறேன்...

sowri said...

ஆழ்ந்த கருத்துக்கள். எளிமையான நடை. சுருக்கமான உதாரணம். நன்றி சுவாமி. தங்களுடைய புத்தகத்திற்காக காத்திருக்கிறேன்.

yrskbalu said...

dear omkar ji,

for birth & re birth not only from prana . this is just one of the kosa. other 4 KOSA there for birth

and rebirth matter.

after reading your full view , we will discuss further.

கோவி.கண்ணன் said...

//நாமும் இறைவனும் ஒன்றுதான்...இல்லையா சாமி!//

போச்சு போச்சு அப்துல்லா இணை வச்சிட்டார்.

:)

கோவி.கண்ணன் said...

//சூரிய மண்டலத்தில் ஓர் பகுதியில் இவை ஒன்றிணையும் பொழுது அந்த இடத்தில் உயிர்களின் தோற்றம் நடைபெறுகிறது.//

ஸ்வாமி ஆற்றலை மட்டுமல்ல ஆன்மாவையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது தானே ?
:)

yrskbalu said...

dear nigalkalam,

pl dont spoonfeed your maharishi philosopy to us. its your destiny.
you make it empty.

if not follower - reject this comment

yrskbalu said...

dear kovi kannan,

i got surprise.

you accepted.

i always expecting your comment because you are thinking another angle i whatever matters.

நிகழ்காலத்தில்... said...

//dear nigalkalam,

pl dont spoonfeed your maharishi philosopy to us. its your destiny.
you make it empty.

if not follower - reject this comment//

வாழ்க வளமுடன் என்ற வார்த்தைக்கு முன் அடைப்பு குறிக்குள்
உள்ளதன் அர்த்தம் புரியவில்லை என்றே நினைக்கிறேன்.

இங்கு எங்கே மகரிஷி வருகிறார்?
ஏன் இங்கே ஒரு முன்முடிவுடன் பார்க்கின்றீர்கள்?

போதும்..யோகி அவர்களே

எம்.எம்.அப்துல்லா said...

யோவ் அண்ணே! ஏதாவது வில்லங்கத்த கிளப்பிவுடனே கிளம்பி வந்துருவீங்களே!!! நாங்க எங்க இணை வச்சேன்?? சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளுங்கள்ணா.

தியாகராஜன் said...

ஸ்வாமி,தங்களின் க்ராப்பாலஜி
என்ற பதிவு குங்குமம் புத்தகத்தில் வெளிவந்துள்ளது.
வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன் நண்பரே

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அணுயோகி,
திரு Sowri,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

/for birth & re birth not only from prana . this is just one of the kosa. other 4 KOSA there for birth and rebirth matter./


உண்மை கோஷங்களின் ஒரு பகுதி ப்ராணமய கோஷம்.

ஆனால் ப்ராண சக்தி என்பதே அது ஆகிவிடாது.

ப்ராணன் செயல்படும் இடம் ப்ராணமய கோஷம். இதில் ”மய” எனும் பதத்தை கவனியுங்கள். சர்வம் சக்தி மயம் என்பார்கள் அல்லவா? அதிபோல ஒரு குறிப்பிட்ட கோஷத்தில் ப்ராணன் வியாபித்து இருப்பதால் அதற்கு ப்ராணமய கோஷம் என பெயர்.

மேலும் கோஷங்கள் என்றும் முக்திக்கு இட்டுசெல்லும் விஷயங்கள் இல்லை.

அடுத்த பகுதி உங்களுக்கு மேலும் புரிதலை ஏற்படுத்தும்.

/pl dont spoonfeed your maharishi philosopy to us. its your destiny.
you make it empty//

கருத்து சுகந்திரம் என்பது அனைவருக்கும் சமம். அவர் வேதாத்திரி மகரிஷியை பற்றி எதுவும் கூறவில்லை. வாழ்க வளமுடன் என சொன்னாலே அது மகரிஷி வேதாத்திரியை குறிப்பதாக கொண்டால் வேதத்திரி போற்றதகுந்தவர் தானே?

be sportive ..!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்.

//ஸ்வாமி ஆற்றலை மட்டுமல்ல ஆன்மாவையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது தானே ?//

எப்பொழுதும் இருப்பதை ஏன் ஆக்கவும் அழிக்கவும் வேண்டும்?

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தியாகராஜன்,

நீங்கள் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. உங்களை போலவே சில வலை நண்பர்கள் சொன்னார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

Umashankar (உமாசங்கர்) said...

என் தேடலுகு ஒகந்த விருந்து.

நன்றி, ஸ்வாமி ஓம்கார் ஜி.