தங்களை பற்றிய ஜோதிட பலாபலனை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதும் அனைவருக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. ஜோதிடம் நம்பாதவர்கள் கூட ,” எங்கே சொல்லுங்க நடக்குதானு பார்ப்போம்” என கூறி எதிர்கால பலனை தெரிந்து கொள்வார்கள்.
இந்த வலைதளம் ஆரம்பித்த நாள் முதல் ஏனைய மின்னஞ்சல்கள் எனக்கு வருகிறது. ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் பதினைந்து மின்னஞ்சல்கள் வருகிறது. எனது எதிர்காலம் கூறுங்கள் என அவர்களின் வாழ்க்கை சிரமங்களையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி வரும் கடிதங்களை நான் பதில்கூறாமல் தவிர்த்தேன்.
ஜோதிட சாஸ்திரம் சாமானியமான விஷயமாக தற்காலத்தில் நலிவடைந்து விட்டது. ஜோதிடர்களும் தங்கள் சுயலாபத்தால் ஜோதிடம், ஜோதிடர் என்ற வார்த்தைக்கு கலங்கத்தை உண்டாக்கிவிட்டனர்.
முன்காலத்தில் ஜோதிடரை மன்னன் சந்திக்க வேண்டுமானால் ஜோதிடரை காண மன்னன் தான் வரவேண்டும். தகுந்த தூதுவனை அனுப்பி அவரிடம் பார்க்க அனுமதி கேட்க வேண்டும். அல்லது ஜோதிடரை சகல செளகரிய்த்துடன் அரண்மனையில் வைத்திருக்க வேண்டும். மன்னன் ஜோதிடரை ஏன் இவ்வாறு ஆராதிக்க வேண்டும் என நினைக்கலாம். மன்னன் ஜோதிடரை ஆராதிக்கவில்லை. அவனுக்கு உள்ளே இருக்கும் சாஸ்திரத்திற்கு மதிப்பு கொடுத்தார்.
தற்காலத்தில் நமது எண்ணம் நிறைவடைந்தால் போதும் என்ற சுயநலம் மேலோங்கி இருப்பதால் ஜோதிடரை பற்றியோ சாஸ்திரத்தை பற்றியோ கவலைகொள்வதில்லை. எங்கள் ஜோதிட பயிற்சிக்கான விளம்பரங்களை பார்க்கும் சிலர் கூட "tell about my future" என குறுஞ்செய்தி அனுப்புவதுண்டு.
அவர்கள் வாழ்க்கையும் மனதும் விசாலமான இருக்குமா? செய்தியின் அளவில் தானே இருக்கும். நான் சொல்லுவது மிகையாக படலாம். எனது ஆரம்ப கால பதிவுகளை சென்று பாருங்கள். அதன் பின்னூட்ட பகுதியில் தங்கள் பெயருடன் சிலர் பலன் கேட்டிருப்பார்கள்.
பண்டைய ஜோதிட நூல்களில் அதன் ஆசிரியர்கள் ஜோதிட விதிகளை கூறும் முன் ஜோதிடரை அனுகும் முறை மற்றும் ஜோதிடர் எப்படி இருக்கவேண்டும் என விவரிக்கிறார்கள். code of conduct என சொல்லலாம். ஜோதிடர், குரு, மருத்துவர் ஆகியோரை வெறும் கையில் சென்று சந்திக்க கூடாது. பழம், பூ, சிறிய துண்டு அல்லது துணி, சிறிது பணம் மற்றும் முடிந்த அளவு தானியம் ஆகியவற்றுடன் சென்று அதை அவரிடம் சமர்ப்பித்து ஆசி பெற்ற பின்பு - தான் வந்த காரியத்தை கூறவேண்டும் என்கிறது சாஸ்திரம். இதில் நுட்பமான மனோத்தத்துவம் பொதிந்துள்ளது.
சில ஜோதிடர்கள் ஏமாற்றுவதால் அவர்கள் மேல் உள்ள பயத்தில் அனேகர் ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை முன்பே கொடுப்பதில்லை. இவர் என்ன சொல்லுகிறார் என பார்ப்போம் என அமர்ந்திருப்பார்கள். ஜோதிடரோ கஷ்டபட்டு பலன் சொல்லி பணம் கிடைக்காதோ என்ற குழப்பத்தில் சரியான பலனை சொல்ல முடியாத நிலைக்கு செல்லுவார். சில ஜோதிடர்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு பரிகாரங்கள் செய்ய சொல்லுவதும் இதனால் தான். ஆயிரக்கனக்கான பில்லை பார்த்தவுடன் வந்தவர் “ஐயா நான் சாதாரண ஆள் என்னிடம் இவ்வளவு தான் இருக்கு” என தஞ்சம் அடைய வைக்க ஒரு யுக்தி.
இன்றைய நிலையில் ஜோதிடருக்கும் அவரை சந்திக்க வருபவர்ருக்கும் காசைதவிர வேறு எந்த சிந்தனையும் இருப்பதில்லை. காணிக்கையை முன்பே சமர்பித்துவிட்டால் இருவருக்கும் அதைபற்றிய எண்ணம் இல்லாமல் வாழ்க்கைப் பற்றி பேசத்துவங்குவார்கள்.
ஆகவே ஜோதிடருக்கு நீங்கள் மதிப்பு கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால் ஜோதிடத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். ஜோதிடருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டால், அவர் உங்கள் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். உங்கள் வாழ்க்கையை எவ்வளவு நேசிக்கிறீர்களோ அவ்வளவு கொடுங்கள். வாழ்க்கையை நேசிக்காதவர்கள் ஜோதிடரிடம் சென்றும் பயனில்லையே.
ஸ்வாமி மின்னஞ்சலில் இலவசமாக பலன் கேட்டதற்கா இத்தனை கருத்துக்கள் சொல்லுகிறீர்கள் என கேட்கலாம். இலவச பலன் கேட்பதற்கோ கொடுப்பதற்கோ நான் எதிரானவன் அல்ல. இந்த வருடம் தவிர்த்து கடந்த நான்கு வருடங்களாக சித்திரை ஒன்றாம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச பலன் கூறும் நிகழ்ச்சியை எங்கள் அறக்கட்டளை செய்துவருகிறது.
நான் இக்கட்டுரையில் கூறவந்தது ஜோதிடரையும் ஜோதிடத்தையும் அனுகும் முறையை தெரிந்து கொள்ளுங்கள் என்பதே. மேலும் நான் பிறருக்கு ஜோதிட பலன் சொல்லுவதை அதிகமாக விரும்பவில்லை. கற்றுக்கொடுப்பதிலும் எனது ஆய்வு பணிகளிலும் ஈடுபட விரும்புகிறேன். என்னிடம் ஜோதிடம் பார்க்க விரும்பி ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்து காத்திருப்பவர்கள் தான் அதிகம்.
இவ்வாறு இருக்க இலவச பலன் விரும்புபவர்களை நான் குறையாக சொல்ல வில்லை. நான் வெளிநாட்டில் இருக்கிறேன். அல்லது உள்ளூரில் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்க முடியாத சூழல் என அனேக காரணங்கள் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு பலன் கூறவும். என்னிடம் பலன் தெரிந்துகொள்ள விருப்பம் இருப்பவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை இறைவன் வழங்கி உள்ளார்.
“சுப வரம்” எனும் ஆன்மீக மாத பத்திரிகையில் கடந்த சில மாதங்களாக ஆன்மீக கட்டுரை எழுதி வந்தேன். ஜூன் மாதம் முதல் அதன் 32 பக்க இணைப்பில் ஜோதிட கட்டுரைகள், இலவச பலன்கள் மற்றும் கேள்வி-பதில் பகுதிகள் என அனைத்தும் எழுதுகிறேன். இந்த மாத இதழ் வாயிலாக நீங்கள் இலவச பலனை தெரிந்து கொள்ளலாம்.
உங்களுகான இலவச பலன்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
varamdesk@gmail.com
அதில் பின்வரும் வடிவில் தகவல்கள் இருக்கட்டும்.
பெயர் :
பிறந்த தேதி :
பிறந்த நேரம் :
பிறந்த இடம் :
கேட்கவிரும்பும் கேள்வி :
[இத்துடன் ஜாதக பிரதி இணைத்து அனுப்புவது நலம்]
உங்களின் கேள்விகள் சுபவரம் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுத்து வெளியிடப்படும்.
இணைய முகவரி : சுபவரம் ஆன்மீக மாத இதழ்
உங்கள் வாழ்க்கை வழிகாட்ட இறைவன் கொடுக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
24 கருத்துக்கள்:
தங்களது மெயில் ஐடி தேவை,
சில ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்புகிறேன்,
arivhedeivam@gmail.com
ஜோதிடம் நல்லவைகளுக்காக பயன்பட்டால் நல்லது.
நாம் நேரில் சந்திக்கும் போது இது குறித்து பேசினோம்
இந்த கருத்தை நாம் முழுவதும் வழிமொழிகிறேன்
//உங்கள் வாழ்க்கையை எவ்வளவு நேசிக்கிறீர்களோ அவ்வளவு கொடுங்கள். வாழ்க்கையை நேசிக்காதவர்கள் ஜோதிடரிடம் சென்றும் பயனில்லையே.//
நல்ல கருத்துக்கள்,ஸ்வாமிஜி.
so- finally you also started.
your real goal getting opening.
you may get innocent bloggers also.
go ahead.
everything done by will of god
>>>பிறருக்கு ஜோதிட பலன் சொல்லுவதை அதிகமாக விரும்பவில்லை. கற்றுக்கொடுப்பதிலும் எனது ஆய்வு பணிகளிலும் ஈடுபட விரும்புகிறேன்.<<<
எனக்கும் இதேதான் பலன் தெரிந்து கொள்வதைவிட ஜோதிடத்தை கற்றுகொள்ளத்தான் விரும்புகிறேன்.
அதிக நாட்களாகவே ஒரு ஜொதிட ஆசிரியரை(குரு) தேடி அலைகிறேன் ஜோதிடம் கற்றுக்கொள்ள,ஆனால் தோல்விதான்,என்ன செய்யா என் ஜாதகதில் வழி இல்லயொ....!!??
//ஜோதிடருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டால், அவர் உங்கள் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். உங்கள் வாழ்க்கையை எவ்வளவு நேசிக்கிறீர்களோ அவ்வளவு கொடுங்கள். வாழ்க்கையை நேசிக்காதவர்கள் ஜோதிடரிடம் சென்றும் பயனில்லையே.//
ஹி ஹி...
கடைசில மீட்டருக்குதான் வாரீங்க.....
//ஸ்வாமி மின்னஞ்சலில் இலவசமாக பலன் கேட்டதற்கா இத்தனை கருத்துக்கள் சொல்லுகிறீர்கள் என கேட்கலாம்//
உங்களை நீங்களாவே ஸ்வாமின்னு சொல்ல வைக்கறதுக்கா இது..
ஸ்வாமின்னு உங்களுக்கு யார் வைச்சது...
வழக்கம்போல் அன்பர்களும், மாணவர்களும் அன்பால் வற்புறுத்தி வைத்தனர்னு கதை சொல்லாம உண்மையை சொல்லவும்..
அப்பிடி இருந்தா கூட நீங்க எழுதற ப்ளாக்லயாவது ஸ்வாமின்றதை சேர்க்காம இருந்திருக்கலாமே Mr. ஓம்கார்
சுவாமிஜி சுபவரம் புத்தகம் தவறாமல் கிடைக்க வழி கூறவும் அல்லது பதிப்பக முகவரி தெரியபடுத்தவும்.
திரு நிகழ்காலம்,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு ஞானசேகரன்,
உண்மை சாஸ்திரம் உயிர்களுக்கு பயன்படத்தான் வேறு எதற்கு?
உங்கள் வருகைக்கு நன்றி
திரு DR.புருனோ,
நாம் பேசியதில் ஒரு துளியை தான் பதிவு செய்தேன். இதற்கே கண்டன மின்னஞ்சல்களுக் பின்னூட்டமும் வந்தவண்ணம் இருக்கிறது.
முழுமையாக வெளியிட்டால்.. ?
பலர் இதன் உள்கருத்தை புரிந்துகொள்ள தயாரக இல்லை. அல்லது முயற்சிப்பதில்லை.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு ஷண்முகப்ரியன்.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு Yrskbabu,
நான் கூறும் செய்தியை முழுமையாக படிக்கவும். பின் பின்னூட்டம் இடுங்கள். அதில் மக்களுக்கு இலவச சேவை பற்றியது. வியாபாரத்திற்கானது அல்ல.
திரு மதி,
உங்களுக்கு மட்டும் எப்படி அந்த வரிகள் தெரிந்தது ?
பிறருக்கு அது தெரிவதில்லையே? நான் ஏதோ பலன் பார்க்க வாருங்கள் என விளம்பரம் செய்ததாக கருத்து சொல்லுகிறார்கள்.
ப்ரணவ பீடத்தின் முக்கிய தளத்திலேயே ஜோதிட பலன் பாருங்கள் என்ற விளம்பரம் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாது. இவர்களை என்ன சொல்லி புரியவைக்க ?
உங்களுக்கு சிறப்பான ஜோதிட அறிவு கொடுப்பவர் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.
திரு கண்ணன்,
/கடைசில மீட்டருக்குதான் வாரீங்க.....//
எனது கருத்துகளை பிழையாக புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன்.
சாஸ்திரங்கள் என்ன சொல்லுகிறது. நடைமுறையில் எப்படி அதை பயன்படுத்தலாம் என்றுதான் கூறுகிறேன்.
மேலும் எனது கட்டுரை இலவச ஜோதிடம் பற்றியது. வியாபரத்துக்குண்டானது அல்ல.
//உங்களை நீங்களாவே ஸ்வாமின்னு சொல்ல வைக்கறதுக்கா இது..
ஸ்வாமின்னு உங்களுக்கு யார் வைச்சது...
வழக்கம்போல் அன்பர்களும், மாணவர்களும் அன்பால் வற்புறுத்தி வைத்தனர்னு கதை சொல்லாம உண்மையை சொல்லவும்..
அப்பிடி இருந்தா கூட நீங்க எழுதற ப்ளாக்லயாவது ஸ்வாமின்றதை சேர்க்காம இருந்திருக்கலாமே Mr. ஓம்கார்//
இது 32 கேள்விகள் கேட்கும் தொடர்பதிவின் முதல் கேள்வி ஆயிற்றே?
இங்கு மட்டுமல்ல எங்கும் எனது சுய சரிதையை வெளியுடம் நோக்கம் எனக்கு இல்லை.
//ஸ்வாமி மின்னஞ்சலில் இலவசமாக பலன் கேட்டதற்கா இத்தனை கருத்துக்கள் சொல்லுகிறீர்கள் என கேட்கலாம்//
மேற்கண்ட வரிகள் படிப்பவர்களுக்கு புரிவதற்காக எழுதப்பட்டது.
எனது பெயரை எப்படி அழைக்க வேண்டும் என சிலர் கேட்டதற்கு நான் கூறிய பதில் ”எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம்.பெயரில் என்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை”
திரு பிரபு,
//சுவாமிஜி சுபவரம் புத்தகம் தவறாமல் கிடைக்க வழி கூறவும் அல்லது பதிப்பக முகவரி தெரியபடுத்தவும்.//
தமிழகத்தில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.
உங்கள் வருகைக்கு நன்றி
ஸ்வாமி,
நல்ல கருத்து. ஒரு டாக்டரிடம் மருத்துவ ஆலோசனை கேட்பதும், வக்கீலிடம் நீதிமன்ற ஆலோசனை கேட்பதும், ஜோதிடரிடம் ஜோதிட ஆலோசனை கேட்பதும் தவறல்ல என்பது என் கருத்து. மேலும் அப்படி கேட்பவரிடம் என்னுடைய கட்டனம் இவ்வளவு என்று சொல்லி பணம் வாங்குவதும் தவறல்ல. முடிந்ததைக் கொடுக்கவும் என்பதும் சரியாகத் தெரியவில்லை. இந்த உலகில் எந்த பொருளுக்கும் சேவைக்கும் ஒரு விலை உள்ளது. இருக்கும் இடத்தைப் பொறுத்து அது அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். அதைச் சொல்லி அதை கொடுக்க முடியாத பட்சத்தில் மனமிருந்தால் இலவசமாகக் கூட செய்யலாம். தயவு செய்து தாயன்புக்கு விலை இல்லை என்று சொல்லி கொடுமை செய்ய வேண்டாம்.
எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று புத்தகம் எகுதி பணக்காரனான ஒருவரிட பேட்டி கண்டவர் "நீங்கள் என்னென்ன ஷேர்கள் வைத்திருக்கிறீர்கள்" என்று கேட்ட போது அவர் சொன்னது "எனக்கு புத்தகம் எழுதுவது மட்டும் தான் தெரியும்" என்று சொன்னாராம்.
//சில ஜோதிடர்கள் ஏமாற்றுவதால் அவர்கள் மேல் உள்ள பயத்தில் அனேகர் ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை முன்பே கொடுப்பதில்லை. இவர் என்ன சொல்லுகிறார் என பார்ப்போம் என அமர்ந்திருப்பார்கள்// எதற்கு ஸ்வாமி கொடுக்க வேண்டும்?. சாம்பிளுக்கு இரண்டு கேள்விகள் கேட்டு அதைச் சரியாகச் சொன்னால் மட்டுமே கொடுக்கலாம் அல்லவா? பணம் கொடுத்து பெறும் சேவை தரமானதா இல்லையா என்று பார்க்கும் உரிமை கூட பணம் கொடுப்பனுக்கு இல்லையா?
அதே சமயம் தரமான ஜோதிட விளக்கத்துக்கு உரிய பணம் கொடுத்தாக வேண்டும் அதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.
நான் நினைத்தது நடந்ததில் வருத்தமே...
//சில ஜோதிடர்கள் ஏமாற்றுவதால் அவர்கள் மேல் உள்ள பயத்தில் அனேகர் ஜோதிடருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை முன்பே கொடுப்பதில்லை. இவர் என்ன சொல்லுகிறார் என பார்ப்போம் என அமர்ந்திருப்பார்கள்// எதற்கு ஸ்வாமி கொடுக்க வேண்டும்?. சாம்பிளுக்கு இரண்டு கேள்விகள் கேட்டு அதைச் சரியாகச் சொன்னால் மட்டுமே கொடுக்கலாம் அல்லவா? பணம் கொடுத்து பெறும் சேவை தரமானதா இல்லையா என்று பார்க்கும் உரிமை கூட பணம் கொடுப்பனுக்கு
இல்லையா?
திரு அமரபாரதி அவர்களே இதே நிலைபாட்டை நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க சாம்பிள் டெஸ்ட் செய்ய முடியுமா? உதாரணத்திற்கு அவர் கொடுக்கும் மருந்து சரியாக வேலை செய்தல் பீஸ் தருகிறேன் என்று சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா?.
ஜோதிடம் என்பது ஒரு கருவி. உங்களுக்கு தேவை பட்டால் உபயோகித்து பயனடையலாம. அதை விடுத்தது ஜோதிடம் ,ஜோதிடர் பரிசோதிப்பது வீண் வேலை.
இன்றைய சூழ் நிலையில் எல்லா துறையிலும் போலிகள் இருகிறார்கள். ஜோதிடமும் விதி விலக்கு அல்ல.
நல்ல ஜோதிடரை வெகு எளிதாக அடையாளம் காணலாம். இந்த ப்ளோக்கை நீங்கள் முழுமையாக உள் வாங்கினால் அது உங்களுக்கு மிக சுலபம்.
அன்புடன்
essusara
.
//உதாரணத்திற்கு அவர் கொடுக்கும் மருந்து சரியாக வேலை செய்தல் பீஸ் தருகிறேன் என்று சொல்லும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா?.
//
இல்லை. ஆனால் நீங்கள் ஆரஞ்சையும் ஆப்பிளையும் ஒப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். மருத்துவமும் ஜோதிடமும் ஒன்று என்று சொல்கிறீர்களா? ஆனால் செய்த ஆபரேஷனோ கொடுத்த மருந்தோ தவறாக வேலை செய்தால் அந்த மருத்துவர் மீது கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர முடியும்.
>>>உங்களுக்கு மட்டும் எப்படி அந்த வரிகள் தெரிந்தது<<<
என்ன செய்வது குறை தேடுபவர்க்கு நிரைகள் தெரியாது
>>>உங்களுக்கு சிறப்பான ஜோதிட அறிவு கொடுப்பவர் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.<<<<
ஸ்வாமிஜி...உங்கள் ஆசிர்வாதத்திர்க்கு மிக்க நன்றி. உங்கள் வார்த்தை என்னை மகிழ்ச்சிபடுத்தியது,தேடலில் சோர்வடைந்த எனக்கு புது வலிமை கொடுத்தது,தேடலில் வெற்றி பெருவேன் என்ற பெரு நம்பிக்கை தருகிறது உங்கள் வார்த்தை.
please continue your jothida kalvi thodar
kumutham jothidam Mr.AMR says that we should not pay for jothida palan or in other words, joshier must not get paid.
Thanks
Raja
Post a Comment