தமிழ் நாட்டில் சில பழக்கம் மக்களிடையே பரவி வருகிறது. அதில் முக்கியமானது கண்களை பறிக்கும் அளவுக்கு வீட்டிற்கு கலர் அடிப்பது. சாலையில் செல்லும்பொழுது திடீரென அந்த வீடுகளை பார்த்தால் கண் பறிபோகும்.
ஆரஞ்சு,பச்சை, மஞ்சள் என ஃப்ளோரசெண்ட் கலரில் வீட்டுக்கு வர்ணம் பூசுகிறார்கள். இங்கிலீஷ் கலர் என பெயரில் பிரிட்டன் மக்களின் நாகரீகம் என்ற பெயரில் பூசினாலும், பிட்டனில் மக்க்ள் இவ்வளவு மோசமான வண்ண கலவையை தேர்ந்தெடுப்ப்பர்களா என சந்தேகம். வீட்டின் வெளிப்பகுதியில் ஒன்றுக்கு மேட்பட்ட வண்ணம் பூசும்பொழுது கண்களுக்கு ஒருவித தடுமாற்றமும், வயிற்றை பிசையும் ஒரு உணர்வும் ஏற்படுகிறது.
இந்த ந(ச)வநாகரீகத்தை பற்றி விசாரித்தால் அது 'வாஸ்து' குறைக்காக பூசுவதாக சொன்னார்கள். வாஸ்து குறையால் வீட்டை இடிக்க தயங்கும் சிலர் வாஸ்து தோஷம் போக்க இவ்வாறு பூசுகிறார்களாம். பிறரின் திருஷ்டி படாமல் இது தடுக்குமாம். ஐயா உங்களால் பிறருக்கு திருஷ்டியே இருக்காதே?
நம் நாட்டில் சுண்ணாமை அதிகமாக வண்ணம் பூச பயன்படுத்தினார்கள். வெண் நிறத்திற்கும், சுண்ணாம்பு காற்றில் வேதி வினை நிகழ்த்துவதாலும் அதில் வாழ்பவருக்கு நன்மை ஏற்படும். காரணம் வெண் நிறத்தில் எல்லா நிறமும் உண்டு. அங்கே யார் வாழ்ந்தாலும் அவருக்கு உண்டான நிறம் அதில் இருப்பதால் அனைவருக்கும் நன்மை ஏற்படும்.
இதை எல்லாம் புரிந்து கொள்ளாத இவர்களுக்கு வாஸ்துவில் மட்டும் குறை இருப்பதாக தெரியவில்லை..!
---------------
வண்டி வண்டியாய் பேச்சுசொற்பொழிவுக்கு என்னை அழைப்பவர்கள் எப்பொழுதும் என் மேல் அதிக எதிர்பார்ப்பு வைத்துவிடுவார்கள். எனது பேச்சில் அல்ல எனது வாழ்க்கை முறையில்...!
ஆன்மீகத்தில் மட்டும் அல்ல எனக்கு சுற்றுசூழலிலும் நாட்டம் இருப்பதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் விஷயங்களை முற்றிலும் தவிர்ப்பேன். அதில் முதன்மையானது வாகனம். அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனம் மற்றும் சூழலை பாதிக்காத வாகனத்தில் எப்பொழுதும் எனக்கு நாட்டம் உண்டு.
இக்கருத்தால் நான் கார் பயன்படுத்தவோ வைத்துகொள்ளவோ நினைப்பதில்லை. சிறிய இருசக்கர வாகனத்தில் எனது அத்தியாவிசிய பயணங்களை செய்வேன். சைக்கிள் எனக்கு பிடித்த வாகனங்களில் ஒன்று. அப்படித்தான் ஒரு நாள் சொற்பொழிவுக்கு கூப்பிடவர்கள் எனக்கு கார் ஏற்பாடு செய்தார்கள். சொற்பொழிவு அரங்கமோ நான் வசிக்கும் இடத்திலிருந்து நடக்கும் தொலைவில் இருந்தது. அமைப்பாளர்களிடம் எதற்கு கார் என கேட்டேன்?. அப்பொழுது தான் ஒரு மதிப்பு இருக்கும் என்றார்கள். சரி காரை கொண்டு செல்லுங்கள் அது மதிப்புடன் சொற்பொழிவு ஆற்றட்டும் என்றேன்.
-----------------------
எழுத்தில் வீச்சுசென்ற பழையபஞ்சாங்கத்தில் வாசிப்பு அனுபவத்தை பற்றி சொல்லி இருந்தேன் அது போல என் மேல் இன்னொரு குற்றச்சாட்டு ஒன்று உண்டு. எனது பேச்சில் இருக்கும் வீச்சு எழுத்தில் இல்லை என்பதே. நான் சொற்பொழிவுகளிலும் இயல்பாகவும் பேசும் பொழுது ரசிக்க தக்கதாக இருப்பதாக அனேகர் சொல்லி கேட்டிருக்கிறேன். சென்ற சித்திரை ஒன்றாம் தேதி கூட 'ஜோதிடம் மூடநம்பிக்கையா அறிவியலா' என்ற தலைப்பில் பேசினேன். அதை கட்டுரையாக மாற்றும் பொழுது சில கருத்துக்களை எடுக்க வேண்டி இருந்தது. அதனால் வலைப்பதிவர் சஞ்சய் கூட பின்னூட்டத்தில் 'பேசும் பொழுது இருந்த மாதிரி இல்லை' என கூறினார்.
பிறந்து சில வருடங்களில் பேச துவங்கிவிட்டேன். ஆனால் எழுத துவங்கி சில காலம் தானே இருக்கும் அதனால் இருக்குமோ என நினைத்தேன்..
ஆகயால் இனிமேல்.... வாயில் கிராம்பையோ , ஏலக்காயையோ போட்டுகொண்டு பேசலாம் என இருக்கிறேன். இனி பேசும் பொழுதும் ‘வீச்சு' இருக்காது.
----------------
ஞானி
இடைவிடாத நீர் ஒழுக்கு
மடைதிறவா அணை
அணையா விளக்கு
முற்றுப்பெறாத சொல்
மாசற்ற இசை
மனமற்ற திரை
தெளிவற்ற இயல்பு
முழுமையான சுயம்.
18 கருத்துக்கள்:
ஒத்துக்க மாட்டேன்... இதெல்லாம் பழைய பஞ்சாங்கம் கிடையாது... கிடையவே கிடையாது :))))
நல்ல கருத்துகள்....
//ஐயா உங்களால் பிறருக்கு திருஷ்டியே இருக்காதே?//
அருமை!
சென்ற வருடம் கேரளா சென்றிருந்தபோது பல இடங்களில் இது போன்ற வண்ணங்களைப் பார்த்து சலித்துப் போய் ஒரு வீட்டில் நிறுத்தி கேட்டபோது இது வாஸ்துவுக்காக என்றார்கள். எனக்கு காதில் வாசுவுக்காக எனக் கேட்டது. யாரோ அவங்க பையனுக்காக என்று நினைத்துக் கொண்டேன். உடன் வந்தவர் சொன்னபோதுதான் வாஸ்து என தெரிந்தது. நாசமாப்போக என்று நினைத்துக் கொண்டேன்!
உங்களுக்கும் இது பிடிக்கலன்னு தெரியறப்போ சந்தோஷமா இருக்கு!
//சைக்கிள் எனக்கு பிடித்த வாகனங்களில் ஒன்று. //
எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கி, அலுவலகத்து அதில் வரவேண்டும் என்ற ஆசை உண்டு.
//சில வருடங்களில் பேச துவங்கிவிட்டேன். ஆனால் எழுத துவங்கி சில காலம் தானே இருக்கும் அதனால் இருக்குமோ//
கலக்கல்! தலை நரைக்கும்போது மீசை ஏன் நரைப்பதில்லை என்ற கேள்வியின் பதில் நினைவுக்கு வந்தது!
//முழுமையான சுயம்//
அசாதாரண வரி ஸ்வாமிஜி!
//ண்களை பறிக்கும் அளவுக்கு வீட்டிற்கு கலர் அடிப்பது. சாலையில் செல்லும்பொழுது திடீரென அந்த வீடுகளை பார்த்தால் கண் பறிபோகும். //
சுவாமி இது குறித்து நானும் யோசித்து இருக்கிறேன்..
அதுவும் வெய்யில் நேரத்தில் பார்க்க ரொம்ப கொடுமையாக இருக்கும்..மரங்கள் சுற்றி இருந்தால் அவ்வளவாக தெரிவிக்காது
//ஆரஞ்சு,பச்சை, மஞ்சள் என ஃப்ளோரசெண்ட் கலரில் வீட்டுக்கு வர்ணம் பூசுகிறார்கள். இங்கிலீஷ் கலர் என பெயரில் பிரிட்டன் மக்களின் நாகரீகம் என்ற பெயரில் பூசினாலும், பிட்டனில் மக்க்ள் இவ்வளவு மோசமான வண்ண கலவையை தேர்ந்தெடுப்ப்பர்களா என சந்தேகம். வீட்டின் வெளிப்பகுதியில் ஒன்றுக்கு மேட்பட்ட வண்ணம் பூசும்பொழுது கண்களுக்கு ஒருவித தடுமாற்றமும், வயிற்றை பிசையும் ஒரு உணர்வும் ஏற்படுகிறது.
//
சென்னையில் புதிதாகக் கட்டப்படும் அப்பார்ட்மெண்ட் வீட்டின் நிறங்கள் ஏன் இப்படி என்று யோசித்தேன். வாஸ்து பிடித்து ஆட்டுதா ?
நம் நாட்டில் சுண்ணாமை அதிகமாக வண்ணம் பூச பயன்படுத்தினார்கள். வெண் நிறத்திற்கும், சுண்ணாம்பு காற்றில் வேதி வினை நிகழ்த்துவதாலும் அதில் வாழ்பவருக்கு நன்மை ஏற்படும். காரணம் வெண் நிறத்தில் எல்லா நிறமும் உண்டு. அங்கே யார் வாழ்ந்தாலும் அவருக்கு உண்டான நிறம் அதில் இருப்பதால் அனைவருக்கும் நன்மை ஏற்படும்.//
மதம் என்ற பெயரில் அறிவுக்குப் புறம்பான இது போன்ற அபத்தங்களை எல்லாம் உங்களைப் போன்ற ஆன்மீகப் பெரியவர்கல்தான் நீக்க வெண்டும்.
பெயிண்ட் விற்பனையாளர்கள் சார்பிலும், பற்பசை விற்பனையாளர்கள் சார்பிலும்
ஆட்சேபனைகளை தெரிவிக்கிறேன்.
:)))
வாழ்த்துக்கள்
ஸ்வாமிஜி,
நான் விடுமுறைக்கு இந்தியா சென்றபோது எங்கள் பகுதியில் இது போன்ற சுமார் ஐம்பது வீடாவது பார்த்திருப்பேன்.
இவற்றின் பின்னால் வாஸ்து இருப்பது சுத்தப் பொய்யே.
எந்த ஒரு "proffessional designer" .அல்லது engineer வடிவமைக்கும் ,கட்டும் வீடுகள் இந்த வண்ணத்தில் இருக்காது.ரசிக்கும் படியே இருக்கும்.
சில பல வீட்டுக்காரர்கள் படிக்காத முழு நேரம் ,டாஸ்மாக் சென்று பகுதி நேரம் கட்டிட வேலை பார்க்கும் கட்டிட மேச்த்திரிகளின் கையிலும் ,டர்பென்டினை கூட லவட்டி குடிக்கும் பெயிண்டரின் ஆலோசனைப்படியே இத்தகைய வண்ணங்கள் பூசப்படுகின்றன.
இது எந்த விதத்திலும் "இங்கிலீஷ் கலரும்" ஆகாது.
பச்சைக்கலரு ஜிங்குச்சா.சிவப்பு கலரு ஜிங்குச்சா இந்த மக்கள் இனியாவது திருந்துவாரா?
அன்பு ஸ்வாமி ஓம்கார்...
ம.செ., தொலைபேசி எண் வாங்கினீர்களே..? பேசினீர்களா..?
ச்சும்மா தெரிந்து கொள்ள..!
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ...
வாஸ்துவுக்கு வாஸ்துவும் ஆச்சு .. வீட்டுக்கு வழி சொல்றதும் எளிதாப் போச்சு .
சொந்தக்காரங்களிடம் / நண்பர்களிடம் வழி சொல்லும் போது, "நம்ம டுமீல் தெருவுக்கு வந்திடுங்க .. கண்ணப் பறிக்கற வகையில மஞ்ச கலர் வீடு வரும் .. அதான் நம்ம வீடு .."
எவ்வளவு ஈசியா இருக்கும் பாருங்க ...
அதுவும் இல்லாம இப்படி தெருவுக்கு ஒரு வீடு இருந்தா, தெருவுக்கே திருஷ்டி கழிஞ்ச மாதிரிதான்.
இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டு ..
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா ...
வாஸ்துவுக்கு வாஸ்துவும் ஆச்சு .. வீட்டுக்கு வழி சொல்றதும் எளிதாப் போச்சு .
சொந்தக்காரங்களிடம் / நண்பர்களிடம் வழி சொல்லும் போது, "நம்ம டுமீல் தெருவுக்கு வந்திடுங்க .. கண்ணப் பறிக்கற வகையில மஞ்ச கலர் வீடு வரும் .. அதான் நம்ம வீடு .."
எவ்வளவு ஈசியா இருக்கும் பாருங்க ...
அதுவும் இல்லாம இப்படி தெருவுக்கு ஒரு வீடு இருந்தா, தெருவுக்கே திருஷ்டி கழிஞ்ச மாதிரிதான்.
இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டு ..
//"சரி காரை கொண்டு செல்லுங்கள் அது மதிப்புடன் சொற்பொழிவு ஆற்றட்டும் என்றேன்"//
ஆடம்பரபிரியர்களுக்கு சரியான பதில்.
//"இனிமேல்.... வாயில் கிராம்பையோ , ஏலக்காயையோ போட்டுகொண்டு பேசலாம் என இருக்கிறேன். இனி பேசும் பொழுதும் ‘வீச்சு' இருக்காது."//
:-))).
எனது சைக்கிள் அனுபவம் பற்றி ஒரு பதிவு http://dondu.blogspot.com/2006/04/3.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு மகேஷ்,
திரு பரிசல், உங்கள் முப்பெரும் பாராட்டுக்கு நன்றி.உங்கள் சைக்கிள் ஆசைக்கு ஒரு பதிவு உண்டு.
திரு கிரி,
திரு கோவி.கண்ணன்,
திரு.ஷண்முகப்ரியன்,
திரு.நிகழ்காலம்,
திரு.கார்த்திகேயன்,
திரு. திரு , :)
திரு. துபாய் ராஜாம்
திரு. ராகவன்,
அனைவருக்கும் எனது உள்ளார்ந்த அன்பும் நன்றிகளும்
திரு வசந்த குமார்.
இன்னும் பேசவில்லை. சூழல் அமைய காத்திருக்கிறேன்.
அவர் வரைந்த படங்களை நினைக்கும் பொழுதெல்லாம் உங்கள் நினைவும் வருகிறது.
நன்றி.
ஷண்முகப்பிரியனை வழி மொழிகிறேன்.
Post a Comment