Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, March 25, 2009

பழைய பஞ்சாங்கம் 25 - மார்ச் - 2009

சரஸ்வதியும் டாய்லெட் பேப்பரும்

கடந்த வருடம் அமெரிக்காவிலிருந்து ஒரு மாணவர் நமது சாஸ்திரங்களை கற்றுகொள்ள வந்திருந்தார். பிறந்தது முதல் அமெரிக்காவை விட்டு எங்கும் சென்றதில்லை அவர். முதல் வெளிநாட்டு பயணமாக நேரடியாக தமிழகம் வந்தார் அவர்.

நமது ஒவ்வொரு செயலும் அவருக்கு வியப்பாக இருந்தது. பாடங்கள் கற்றுகொள்ளுவது போக மீதி நேரத்தில் “அது என்ன இது என்ன?” என என்னை
தொடர்ந்து கேட்டு குறிப்பு எடுத்தவண்ணம் இருந்தார்.

ஒரு நாள் வகுப்புக்கு இடையே எனது உதவியாளரிடம் சில பணிகளை சொல்லும் பொழுது , அவர் தவறுதலாக கீழே கிடந்த ஒரு பத்திகையில் கால்களை வைத்தவண்ணம் இருந்த்தார். உணர்வில்லாமல் ஒரு பத்திரிகையில் கால்களை வைத்து நிற்பதை நான் கண்டிக்க, உதவியாளர் பத்திரிகையை எடுத்து வைக்கும் முன் கண்களில் ஒற்றி பின்பு மேலே வைத்தார்.

எனது மாணவர் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றார். நானோ “எழுது பொருட்களில் கல்வி கடவுள் வசிப்பதாக மக்கள் நம்புகிறார்கள் அதனால் தான் என்றேன்”. மேலும் சரஸ்வதி தேவியின் புகைப்படத்தை காட்டி, எளிமையாக விளக்குவதாக நினைத்து “சரஸ்வதியின் உடையை பார், வெள்ளை நிற காகிதம் போல் இருக்கிறது அல்லவா?” என்றேன்.

அடுத்த நாள் சின்ன சின்னதாக சில நோட்டுபுத்தகங்களை கொண்டுவந்து கொடுத்தார் மாணவர். அலுவலக பணிகளுக்காக இது உதவட்டும் என்றார். திடீரென ஏன் இந்த நோட்டு புத்தகங்கள் என்றேன். நேற்று சரஸ்வதியை பற்றி கூறியதால் எனது டாய்லெட் பேப்பர்களை நோட்டு புத்தகமாக்கிவிட்டேன், சரஸ்வதியை டாய்லெட்டில் பயன்படுத்துவதில் எனக்கு சங்கடமாக இருந்தது என்றார்.

மேற்கொண்டு அவரிடம் நமது நாட்டில் தண்ணீரை கங்கையாக மதிக்கிறார்கள் என சொல்லவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவாஜி தி வாரியார்


திருமுருக கிருபானந்தவாரியாரின் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவத்தை ஒரு பிரபல சொற்பொழிவாளர் கூற கேட்டேன்.

சொற்பொழிவுக்கு இடையே கேள்விகளை கேட்டு சரியான பதில் சொல்லுபவர்களுக்கு பழம், பூமாலை என பரிசுகள் வழங்குவது வாரியார் ஸ்வாமிகளின் பழக்கம்.

ஒரு சிறுவனை அழைத்து “எம்பெருமான் முருகனுனின் தந்தை பெயர் என்ன?" என கேட்டார்.


திருவிளையாடல் திரைப்படம் வெளிவந்து அனைவராலும் கவரப்பட்ட காலம் அது.

அந்த சிறுவன் யோசிக்காமல் கூறினான் “சிவாஜி”.

கூடியிருந்த கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர். வாரியார் கூட்டத்தினரை பார்த்து கூறினார்..“ நேருவை நேருஜீ என்றும் காந்தியை காந்தி ஜீ என்று மரியாதையாக சொல்லுவது போல , எம்பெருமான் முருகனின் தந்தையை சிவாஜி என்கிறான் இந்த பையன். இதில் என்ன தவறு?” என்றார்.

ஒரு சமய சொற்பொழிவாளருக்கு சமய நூல்களை தாண்டிய நுண்ணறிவு வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒட்டகமான பெற்றோர்கள்


ஒரு குட்டி ஒட்டகம் , தாய் ஒட்டகத்தை பார்த்து கேட்டதாம்..
“அம்மா ஏன் நமக்கு நீண்ட கால்கள் இருக்கிறது?”

“பாலைவனத்தில் மணலில் சரியாக நடப்பதற்காக...”

“அம்மா நமக்கு ஏன் முதுகில் ஒரு மூட்டை போல இருக்கிறது”

“பாலைவனத்தில் நீர் எளிதில் கிடைக்காது அதனால் முதுகில் சேமித்து வைத்து கொள்ள அப்படி இருக்கிறது. இதன் பெயர் திமிள்”

“அம்மா நமக்கு ஏன் பெரிய பெரிய பற்கள் இருக்கிறது”

“பாலைவனத்தில் முள்செடிகளும் கள்ளிச்செடியையும் உண்ணவேண்டும் அதற்காகத்தான்.”

“அது சரி அம்மா... இத்தனையும் இருந்து நாம் ஏன் மிருககாட்சி சாலையில் இருக்கிறோம்?”

“------------”


மேற்கண்ட உரையாடல் போல
“ஏன் சிவன் கழுத்தில் பாம்பு இருக்கிறது?
நாம் ஏன் பொட்டு வைக்கிறோம்?
கோவிலுக்கு சென்றால் அங்கே ஏன் இத்தனை சன்னிதி ?
என அனேக குழந்தைகள் கேட்க பெற்றோர்கள் வாய் அடைத்து நிற்கிறார்கள்.

எப்பொழுது தான் இவர்கள் மிருக காட்சி சாலையிலிருந்து தங்கள் பூமிக்கு திரும்புவார்கள்?
---------------------------------------------------------------------------------------------------------------------------

தேர்தல் கிசு கிசு


எனது மாணவர்கள் என்னிடம் கேட்டார்கள், “குருஜி, மழை பெய்வது, ஆஸ்கார் விருது என எத்தனையோ விஷயங்களை கணிக்கிறீர்கள். எங்களுக்காக வரும் தேர்தலை பற்றி கணிக்க கூடாதா ?” என கேட்டார்கள்.

அவர்களுக்கு நான் சொன்ன பதில் கீழே

கூறலாம், எனக்கு அரசியல் பிடிக்காது அதனால் அதை கணிக்க எனக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்காக வேண்டுமானால் அடுத்த பழைய பஞ்சாங்கத்தில் கூறுகிறேன்.


[ என்ன பதில் கூறும் இடம் காலியாக இருக்கிறதா? உங்கள் மெளஸ் வைத்து காலியான இடத்தை செலக்ட் செய்யுங்கள்.]

நாங்க சொல்லற பதிலுக்கு மெளஸ் வர வெச்சுடோம்ல.... :)

27 கருத்துக்கள்:

Unknown said...

நல்லா இருக்கு.ஒட்டகக் கதை. ஒரு வித தத்துவம்
இழையோடுகிறது.அடுத்து, தலைப்பு “சிவாஜி தி வாரியார்”. துணுக்கை விட தலைப்பு சூப்பர்.

கோவி.கண்ணன் said...

//எனது மாணவர் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றார். நானோ “எழுது பொருட்களில் கல்வி கடவுள் வசிப்பதாக மக்கள் நம்புகிறார்கள் அதனால் தான் என்றேன்”.//

இது கொஞ்சம் ஓவராகத் தான் தெரிகிறது, சின்ன வயசில சொல்லிக் கொடுத்ததையே நீங்களும் சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள். தாளுக்கு சரஸ்வதி, பணத்துக்கு லக்ஷ்மி இன்னும் பல சங்கதிகளை சொல்லுவார்கள். டாஸ்மாக் கடையில் தான் லக்ஷ்மி சென்றுவருவதால் கடாச்சம் பொங்கி வழியுது :) என்னைக் கேட்டால் கால் ஒன்றும் அவ்வளவு மோசமான உறுப்பு கிடையாது தலைக்கு தலையணை கொடுப்பது போல் காலை ஆள்மீது வைக்காமல் எதுமீது வேண்டுமானாலும் வைக்கலாம். கந்தச(ஷ்)ட்டி கவசத்தில் ஒரு வரி உண்டு, எதை எதையோ (அக்குல், ஆசனவாய், ஆண்குறி ஆகியவற்றை) வேல் காக்குமாம், அதையெல்லாம் பக்திப்பாட்டு என்று நெக்குருகி பாடுபவர்கள் எதோ பேப்பர் மீது கால்வைத்ததற்கு சரஸ்வதியை மிதித்தாகச் சொல்வது வியப்பாக இருக்கிறது.

தாள்களை அவமதிப்பதைச் சுட்டிக் காடுவதை விட தாள்களின் பயன்பாடுகளை சரியாகப் (மறுபயனீடாகவும்) பயன்படுத்தினால் மரங்கள் வெட்டப்படுவது குறையும்

பாண்டித்துரை said...

கோவி.கண்ணன் said...

///காலை ஆள்மீது வைக்காமல் எதுமீது வேண்டுமானாலும் வைக்கலாம்.///

வைக்கலாம்

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரவிஷங்கர்,

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,


சரஸ்வதி இருக்கும் இடம் என்னை பொருத்த வரை அனைத்து பொருளும் தான்.

ஆனாலும் சில விஷயங்களை இது போன்ற எண்ணங்களால் மனதை தூய்மை ஆக்குவது நல்லது.

//எதோ பேப்பர் மீது கால்வைத்ததற்கு சரஸ்வதியை மிதித்தாகச் சொல்வது வியப்பாக இருக்கிறது.
//

உங்கள் பெற்றோர்களின் உருவபடம் இருக்கும் தாளை ஒரு பேப்பர் என நினைத்து கால்களால் மிதிப்பீர்களா?

பிரதமர், முதல் அமைச்சர் முன்பு சென்று அவர்களின் படத்தில் செருப்பால் அடித்து விட்டு உங்களையா அடித்தேன் இது ஒரு பேப்பர் தானே என சொல்ல முடியுமா?


சம்பிரதாயங்கள் மனிதனின் மனதை மேம்படுத்துவதற்காக இருக்கிறது.

மேற்கண்ட கருத்தை 150 வருடங்களுக்கு முன் விவேகானந்தர் கூறிவிட்டார். நீங்கள் 150 வருடம் பின் தங்கி இருக்கிறீர்கள் என்பதே உண்மை.

//(அக்குல், ஆசனவாய், ஆண்குறி ஆகியவற்றை) //

ஒரு அறிஞர் அகராதி(Dictionary) தயாரித்தார். பெண்கள் அமைப்புகள் அதில் 4 கெட்ட வார்த்தை இருப்பதாக சொல்லி போராட்டம் நடத்தினார்கள். அறிஞர் கூறினார் அதில் ஒரு மில்லியன் நல்லவார்த்தையை பார்க்காமல் 4 கெட்ட வார்த்தையை பார்த்த இவர்களுக்கு பதில் சொல்ல தேவை இல்லை என்றார்.


ஆதி சங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி எனும் பாடலை நீங்கள் படித்ததில்லை என நினைக்கிறேன். இந்த குறுகிய நிலைப்பாட்டில் அர்த்தத்துடன் செளந்தர்ய லகரியை படித்தால் உங்கள் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும். :)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பாண்டித்துரை,

உங்கள் வருகைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

//உங்கள் பெற்றோர்களின் உருவபடம் இருக்கும் தாளை ஒரு பேப்பர் என நினைத்து கால்களால் மிதிப்பீர்களா?

பிரதமர், முதல் அமைச்சர் முன்பு சென்று அவர்களின் படத்தில் செருப்பால் அடித்து விட்டு உங்களையா அடித்தேன் இது ஒரு பேப்பர் தானே என சொல்ல முடியுமா?//

இது வரட்டு வாதம், ஆள் என்று சொன்னால் உங்களைக் குறிக்காது, ஸ்வாமி ஓம்கார் என்று பெயர் குறிப்பிட்டு சொன்னால் தான் நீங்கள் !

கோவி.கண்ணன் said...

உங்களுக்கான மறுபின்னூட்டம் சற்று நீண்டுவிட்டது
:)

Bruno said...

//[ என்ன பதில் கூறும் இடம் காலியாக இருக்கிறதா? உங்கள் மெளஸ் வைத்து காலியான இடத்தை செலக்ட் செய்யுங்கள்.]

நாங்க சொல்லற பதிலுக்கு மெளஸ் வர வெச்சுடோம்ல.... :)//

சூப்பர்

ttpian said...

நாம் தமிழர்கள்!
எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!
சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!

ஆ.ஞானசேகரன் said...

//சம்பிரதாயங்கள் மனிதனின் மனதை மேம்படுத்துவதற்காக இருக்கிறது.
//
நம்புகின்றேன்...

நிகழ்காலத்தில்... said...

//உங்கள் பெற்றோர்களின் உருவபடம் இருக்கும் தாளை ஒரு பேப்பர் என நினைத்து கால்களால் மிதிப்பீர்களா?

பிரதமர், முதல் அமைச்சர் முன்பு சென்று அவர்களின் படத்தில் செருப்பால் அடித்து விட்டு உங்களையா அடித்தேன் இது ஒரு பேப்பர் தானே என சொல்ல முடியுமா?//

இது வரட்டு வாதம், ஆள் என்று சொன்னால் உங்களைக் குறிக்காது, ஸ்வாமி ஓம்கார் என்று பெயர் குறிப்பிட்டு சொன்னால் தான் நீங்கள் //

கோவி அண்ணன் சொன்னால் அதுதான் சரி,
நீங்களோ, நானோ சொன்னால் அது விதண்டாவாதம்,வரட்டு வாதம் தான்.

மிதித்தவர் அறியாமல் நின்றதும் தவறில்லை.
அதை நாம் கண்டிப்பதை விட, புரியும் விதத்தில்
எடுத்துச் சொல்லலாம்,அதற்கு மேல்...அவ்வளவுதான்

ஷண்முகப்ரியன் said...

ஒரு ஸென் ஞானி கடுமையான குளிர்காலத்தில் தான் வழிபட்டு வந்த மரத்தாலான புத்தர் சிலையை எரித்துக் குளிர் காய்ந்து கொண்டிருந்தாராம்.நீங்களே இப்படிப் புத்தரை அவமதிக்கலாமா என்று மற்றவர்கள் கேட்டதற்கு'நீங்கள் எந்தப் புத்தரைக் கேட்கிறீர்கள்,என்னுள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் புத்தரையா,அல்லது இந்த மரப் புத்தரையா?'என்று அந்த மாஸ்டர் கேட்டாராம்.
வழிபடுதல்,ஒன்றுபடுதல் என இரண்டு வெவ்வேறு தளங்களில் சொல்லப் படும் நியாயங்கள் இரண்டுமே அந்தந்தத் தளங்களில்தான் சரியாக இருக்கும்.ஸ்வாமிஜியும் கோவி.கண்ணன் சாரும் வெவ்வேறு தளங்களில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.
AS OSHO SAID,FACTS ARE ALWAYS DIFFERENT FROM TRUTH.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ttpian,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு புருனோ,


உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அ.ஞானசேகரன்,


உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அறிவே தெய்வம்,


நானும் அது தான் சொல்லுகிறேன் :). உங்கள் பெயரை சொன்னேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

கேள்விபட்டதாக இருந்தாலும் ஸென் கதை அருமை.
ஓஷோ சொன்னது Fact-a? அல்லது Truth-ஆ :)


உங்கள் கருத்துக்கு நன்றி.

sundaresan p said...

வணக்கம் ஸ்வாமி

வாரியார் பற்றிய புத்தகத்தில் நீங்கள் சொன்ன சிவா'ஜி கதை படித்திருக்கிறேன்.
பதிப்பு அருமாயாக இருந்தது.

sarul said...

//மேற்கொண்டு அவரிடம் நமது நாட்டில் தண்ணீரை கங்கையாக மதிக்கிறார்கள் என சொல்லவில்லை.//

ஸ்வாமி
உங்களுடைய 5 ம் இடம் உச்சமடைந்து உள்ளதா ,

வாய்விட்டுச் சிரித்தோம் சிலநிமிடம் .

பட்டாம்பூச்சி said...

//மேற்கொண்டு அவரிடம் நமது நாட்டில் தண்ணீரை கங்கையாக மதிக்கிறார்கள் என சொல்லவில்லை. //

அது சரி...நல்ல வேலை செய்தீர்கள் :).

நிகழ்காலத்தில்... said...

ஷண்முகப்ரியன்\\வழிபடுதல்,ஒன்றுபடுதல் என இரண்டு வெவ்வேறு தளங்களில் சொல்லப் படும் நியாயங்கள் இரண்டுமே அந்தந்தத் தளங்களில்தான் சரியாக இருக்கும்.ஸ்வாமிஜியும் கோவி.கண்ணன் சாரும் வெவ்வேறு தளங்களில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.\\

ஆமாம் , வழிபடுதல் மூலம் ஒன்றுபடுதல், ஒன்றுபடுதலை விட்டுவிட்டோம், வழிபடுதலையும்
முறையாக பின்பற்றாது குழப்பம் அடைந்துள்ளோம். இதை புரிந்துகொண்டால் ஒன்றுபடுதல் எளிது

Vishnu - விஷ்ணு said...

//ஒரு சமய சொற்பொழிவாளருக்கு சமய நூல்களை தாண்டிய நுண்ணறிவு வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.//

நுண்ணறிவி என்பது பட்ட(அனுபவ)அறிவுக்கு சகோதரன் தானே!

திரு கோவி.கண்ணன் அவர்களே, முயலுக்கு மூன்று கால்கள் தான்.

எம்.எம்.அப்துல்லா said...

சாமியும், கோவியும் சிறந்த நண்பர்கள். இரு நண்பர்களுக்கு இடையேயான விவாதத்தில் நாம் இடையில் புகுந்து இருவரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இருப்பதே நலம் :)

Vishnu - விஷ்ணு said...

அப்துல்லா அவர்களே மிகவும் சரியாக சொன்னீர்கள். பெரிய மனிதர்களின் கடைகண் பார்வை அப்படியாவது நம் மீது படட்டும். சாமி மற்றும் கோவி அவர்களின் திட்டும் கொட்டும் நல்ல செய்திகளை தானே கொடுக்கின்றன :)

அது ஒரு கனாக் காலம் said...

நான் உங்களின் மற்றும் ஓம்கார் சுவாமிகளின் பதிவை பார்த்து வந்ததின் விளைவு,
நிறைய ஆட்கள், நான் ரொம்ப spritual but not ritual , அதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் இந்த பூஜை, மூட நம்பிக்கை ல்லாம் கிடையாது ..( .. அப்படின்னா எது ritual, ....இரவில் படுப்பது , காலியில் எழுவது, யாரையாவது பார்த்து hello சொல்வது , கை குலுக்குவது , ...இப்படி சொல்லி கொண்டே போகலாம், .... ( சற்று யோசித்து பாருங்கள் கை குலுக்குவதற்கு பதில் காலால் குலுக்கினால் என்ன கதி ) .... ஆகவே, நாம் கல்வி கற்கின்ற எந்த புஸ்தகம், பேப்பர் போன்றவை காலில் படாமல் இருப்பது, நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல பழக்கமே.
Sundar - Dubai

Unknown said...

very recentlyi saw swamiji at moondravathu kan programme .afeter that i found this website.thanks swamiji and 3rd eye programme.very good explanation of very valuable topics.thanks again. murugesan R. chennai.