Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 1, 2014

சனிப்பெயர்ச்சி பலன் 2014

சனி  நவம்பர் 2 ஆம் தேதி முதல் விருச்சிக ராசிக்கு செல்கிறார். அவர் இன்னும் இரண்டரை வருடம் அந்த ராசியில் இருப்பார். ஜோதிடத்தில் ஒரு கிரகம் மட்டும் வைத்து பலன் சொல்வது முட்டாள் தனமான விஷயம். ஆனால் கோச்சார பலன்களில் ஒரு சதவிகிதமாவது இது வேலை செய்யும். சனி தசா அல்லது சனி புக்தி ஏதேனும் ஒன்று நடப்பவர்களாக இருந்தால் சனி அதிக வேலைகளை செய்வார்.

தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் எங்கும் சனிப்பெயர்ச்சி பலங்கள் தான். சரி நாமும் சுருக்கமாக சனிப்பெயர்ச்சி பலன் சொல்லுவோமே என கிளம்பிவிட்டேன். சனிப்பெயர்ச்சி பலன்கள் ஒரு வரியில் உங்களுக்காக....

மேஷம் - தொழில் சுனக்கம், சிறு விபத்தால் காலில் காயம்

ரிஷபம் - வழக்கு, சட்ட சிக்கல், மண வாழ்க்கையில் சஞ்சலம்

மிதுனம் - உடல் நலமின்மை, நாள்பட்ட வியாதி, சிறப்பான வேலையாட்கள்

கடகம் - குழந்தைகளால் சங்கடம், ஆன்மீக நாட்டம், வேலை இழத்தல்

சிம்மம் - சொத்து சார்ந்த விவகாரங்கள் , வாகன பழுது

கன்னி - உடன் பிறந்தவர்களுடன் பிணக்கு, பூர்வீக சொத்தில் மேன்மை

துலாம் - வரவு செலவு தாமதம், புதிய கடன், உறவினர்கள் சேர்க்கை

விருச்சிகம் - வாழ்க்கை துணைவர் வழி உறவினர்களால் சிக்கல், மன
உளைச்சல்

தனுசு - வசிப்பிடம் மாற்றம், வருமானத்திற்கு அதிகமான செலவு

மகரம் - மன மகிழ்ச்சி, எதிர்ப்பார்ப்புகள் தாமதத்துடன் பூர்த்தி ஆகும்

கும்பம் - நல்ல பெயர், பதவி உயர்வு, பொருளாதார மேன்மை

மீனம் - தந்தை உடல் நலம் குறைதல், ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம்


இவை சனிக்கிரகத்தால் ஏற்படுவது....

குரு அருளும், இறைவனின் அனுகிரகம் இருந்தால் சனி கிரகம் ஒன்றும் செய்யாது.

3 கருத்துக்கள்:

புதுகை.அப்துல்லா said...

சொல்லி இருக்குறதப் பார்த்தால் கும்பராசியைத் தவிர மற்ற அனைத்துமே அவுட் :)

நிகழ்காலத்தில்... said...

//குரு அருளும், இறைவனின் அனுகிரகம் இருந்தால் சனி கிரகம் ஒன்றும் செய்யாது.// இதுதான் முக்கியமான விசயம் :)

Unknown said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களே... உங்கள் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன். அறியாமையில் அறிவை மக்களுக்கு புலப்படுத்தி, ஆமையை(அறிவு+ஆமை) விரட்டும் உங்கள் பணி மிக மகத்தான பணி. அதனால்தான் "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்பிடாது" என்று உருவாயிற்றோ என்னவோ?. எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு இறைவன் அடியேனுக்கு உங்களை வலைப்பூவில் தொடர்புப்படுத்தி இருக்கிறார். நன்றி... தொடருங்கள்... மணிவாசகம்