Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, May 2, 2011

ராமாயணம், மஹாபாரதம் - உண்மையா?


சில நாட்களுக்கு முன் என்னை சந்திக்க பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் வந்தார். என் எழுத்தின் மூலமே என்னை பற்றி தெரிந்து கொண்டவர். பேச்சின் இடையே ராமாயணம் பற்றி பேச்சு எழுந்தது. ராமாயணம் அற்புதமானது என்றேன். அவ்வளவு தான்.

“சாமீ, நீங்க ராமாயணம் நடந்த விஷயம்னு சொல்றீங்களா? அது கற்பனை கதையாச்சே. நீங்க இதை உண்மைனு சொல்லுவீங்கனு நான் நினைக்கவே இல்லை” என நொந்து கொண்டார். இதற்கும் அவரின் பெயர் ராமாயண கதாபாத்திரத்தின் அடிப்படையில் இருந்தது...!

இவரை போல பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த வலைப்பக்கத்தை படித்துவிட்டு நான் ஏதோ கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். சிலைக்கு செருப்பு மாலை போட சொன்னாலும் சொல்லுவார்கள் என நினைத்துக் கொண்டேன்.

ராமாயணமும் மஹாபாரதமும் ஏதோ ஒரு கதாசிரியர் கற்பனையில் உதித்த கதைகள் என்றும் அதனால் கவரப்பட்ட மக்கள் அந்த கதாபாத்திரத்தையே கடவுளாக்கிவிட்டனர் என்றும் பலர் நினைக்கிறனர்.

மீண்டும் சொல்லுகிறேன் “ராமாயணம் மட்டுமல்ல மஹாபாரதமும் உண்மை தான்”

நம் கலாச்சாரத்தில் இதிகாசம், புராணம் மற்றும் காவியம் என மூன்று விஷயங்கள் உண்டு. வட மொழியில் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தை ‘இதிஹாஸ்’ என கூறுவார்கள். அதற்கு ‘இவ்வாறு நடந்தது’ என அர்த்தம்.

புராணம் என்பது மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் விளக்க கோட்பாடுகளை எளிய கதையாக கூறும் எழுத்து வடிவம். இதில் கற்பனை பாதியும் மெய்ஞான கோட்பாடுகள் மீதியும் இருக்கும். காவியம் என்பது முழுக்க முழுக்க கற்பனையால் ஆனது.

ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஒரு காலத்தில் நடந்தது என்பதாலேயே இதிஹாசம் என கூறுகிறார்கள் அல்லவா? அதுவும் பகுதி அளவு உண்மைதான்.

இலக்கணத்தில் வினைத்தொடர் என ஒரு கருத்தை சொல்லுவார்கள்.

ஒரு செயல் மூன்று காலத்திலும் நடந்தால் அது வினைத்தொடர் என நினைக்கிறேன். (தமிழ் புலவர்கள் வழிகாட்டுக.) உதாரணம் ஊறுகாய் என என் தமிழாசிரியர் கூறினார். அன்று அவர், “ஊறிய காய், ஊறுகின்ற காய் மற்றும் ஊறும் காய்” என வினைத்தொடருக்கு சரியான உதாரணம் கூறியதால் இன்றும் எனக்கு ஊறுகாய் சாப்பிடும் வினை மட்டும் தொடர்கிறது.

இது போல இதிஹாசங்களும் வினைத்தொடர் தான். முன்பு நடந்தது, தற்சமயமும் நடக்கிறது.இனி மேலும் நடக்கும்..! ஆமாம் ராமாயணமும் மஹாபாரதமும் இன்றும் நடக்கிறது...!

முன்பு நடந்ததை பற்றி நமக்கு தெரியாது. இனி நடக்கப்போவதை பார்ப்போமா என உறுதி இல்லை. ஆனால் தற்சமயம் நடப்பதை காணலாம் அல்லவா?

தற்சமயம் ராமர் எங்கே? கிருஷ்ணர் எங்கே?

வாருங்கள் காண்போம்...

(வினை தொடரும்)

11 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

//வினைத்தொடர் //

வினைத்தொகை

துளசி கோபால் said...

வணக்கம் ஸ்வாமிஜி.

உண்மையாத்தான் இருக்கணும். இமயம் முதல் குமரி வரை ஒரே கதை இருக்கு பாருங்க.
இங்கே அம்பாலா நகரத்துக்குப்பக்கம் தில்லி போகும் வழியில் பாரத யுத்தம் நடந்த குருக்ஷேத்ரம், கீதை உபதேசம் நடந்த இடம் எல்லாம் இருக்குதே! அப்புறம் கொஞ்ச தூரத்தில் தில்லி போகும் வழியில் கர்னால் என்ற ஊர். கர்ணனைக் குறிக்கும் ஊர். இதுக்குப் பக்கத்துலே கர்ணன் ஏரி கூட இருக்குதுங்களே!

நடந்தவைகள்தான் ராமாயணமும் பாரதமும். ஒருவேளை சின்ன ஸ்கேலில் நடந்துருக்குமோ?

Mahesh said...

சரியான அணுகுமுறை.... "...நடந்தது" என்பதில் எனக்கு சில மாற்றுக் கருத்துகள் இருந்தாலும்.

இராஜராஜேஸ்வரி said...

“ராமாயணம் மட்டுமல்ல மஹாபாரதமும் உண்மை தான்”
வழிமொழிகிறேன்.

guna said...

வழிமொழிகிறேன். nantri

KARIKALVALAVAN said...

The true story which have some changes in the wolrd thank you swamiji

ஸ்வாமி ஓம்கார் said...

புலவர் கோவியாருக்கு நன்றிகள்.

//இமயம் முதல் குமரி வரை ஒரே கதை இருக்கு பாருங்க.//

அதுமட்டுமல்ல அப்ரிக்க கண்ட பழங்குடியினரும், கம்போடியா, தாய்லாந்து இந்தோனேசியா வரையிலும் பரவி இருக்கே :))

துளசி அம்மாவுக்கும் நன்றிகள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,
சகோதரி இராஜராஜேஸ்வரி,
திரு குணா,
திரு ராபர்ட் க்ளய்வ்,

அனைவருக்கு நன்றிகள்.

ரங்கன் said...

ராமன், யுதிஷ்டிரன் போன்று நீதி நியாயம் இன்று நம்மால் முடியாது என்று நாமே நம்மை ஏமாற்றிக்கொண்டு வாழ்வதனால் அந்த இதிகாசங்களை வெறும் கதைகள் என்று - நம்புவது மட்டுமல்ல - நம் குழந்தைகளையும் நம்ப வைத்துவிட்டோம். தங்களின் விளக்கத்தை ஆர்வமுடன் எதிர் பார்க்கின்றேன்.

சிவமுருகன் said...

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் சமயம் எனக்கு ஆசிரியார் சொன்ன அதே கருத்தை நீங்களும் சொல்கிறீர்கள்.

அவர் மேலும் சொல்லும் போது

வேதம் சொல்லும் செய்யத்-தகுந்தவை - செய்யத்-தகாதவையாக முறையே இராமாயணம், மஹாபாரதம் எனவும் சொல்லிஇருக்கிறார்.

உதாரணமாக தந்தை சொல் தட்டாமல் வனத்திற்க்கு செல்வதற்க்கும் தயங்ககூடாது என்றும் (இதுவே இராமாயணத்தின் ஆரம்பம்)

உன் தந்தை ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்க்காக நீ பிரமச்சாரியாகக் கூடாது! (இதுவே மஹாபாரதத்தின் ஆரம்பம்) என்றும் அவர் சொல்லியது இன்றும் நினைவில் உள்ளது.

எதோ விளங்கி விளங்காதது போல் இருந்து விட்டது அந்த விடலை பருவம். தற்சமயம் Do's & Don'ts எனவும், பல வித சம்பவங்கள் காணும்-கேட்கும் போதும் அத்தகைய அறிவுரைகளும்-கதைகளும், நினைவிற்க்கு வந்து விடுவதை மறுக்க முடியவில்லை!

Unknown said...

//அதுமட்டுமல்ல அப்ரிக்க கண்ட பழங்குடியினரும்//

அந்த கதையை எழுத முடியுமா? முடிஞ்சால் லிங்க் குடுங்க