தற்கால கல்வி முறைகள் நமக்கு விஞ்ஞானத்தை வளர்க்கிறது. நம் அடிப்படை தேவையான உடை, உணவு மற்றும் உறைவிடங்களை உருவாக்க உதவுகிறது. இவை அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் நடைபெறும் வளர்ச்சிகளாககும். உண்டு, உறங்கி மற்றும் இனப்பெருக்கம் செய்து இறந்து போகும் இவ்வாழ்க்கை அனேகமாக வெளிமுக செயல்களையே முன்னிறுத்துகிறது.
அக முகமாக நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழிகளை கற்றுக்கொடுக்கும் மெய்ஞான கல்வியை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை.
நம்முள் இருக்கும் இறையருளை தரிசித்து அதன் பயனாக நம்மை சுற்றி இருக்கும் இறையருள் நிறைந்த விஷயங்களை உணரும் கல்வி முறையே மெய்ஞான கல்வியாகும்.
நம்மில் பலருக்கு ஆன்மீக கல்வியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பினும் அதை முறையாக கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் பல்வேறு தடைகள் இருக்கிறது. நம் வாழ்க்கை முறை முழுமையான ஆன்மீக பாதையில் இல்லாததால் ஆன்மீகத்தை நம் வாழ்க்கையில் இணைத்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி என்றுமே மனதில் மேல் ஓங்கி நிற்கிறது.
ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை நவீன காலத்திற்கு ஏற்ப மெய்ஞான கல்வி எனும் ஆன்மீக கல்வியை அனைவருக்கும் வழங்க இருக்கிறது.
மெய்ஞான கல்வியின் சிறப்புகள் என்ன?
- வாழ்க்கை சூழல் எப்படி இருந்தாலும் முழுமையாக ஆன்மீக சூழலை பெறும் வாய்ப்பு
- கற்றுக்கொடுக்க முறையான பயிற்சி அமைப்பு
- ஆண்டு கணக்கில் படிக்கும் தன்மை இன்றி குறுகிய கால பயிற்சி முறை
- நடைமுறை வாழ்க்கைக்கு விஞ்ஞான ரீதியாக ஆன்மீகத்தை பயன்படுத்தும் முறைகள்
- இயல்பு வாழ்க்கையில் மாற்றம் ஏதும் செய்யாமலேயே ஆன்மீக உயர்நிலைக்கு செல்லத்தக்க பயிற்சிகள்
ப்ரணவ பீடத்தின் மெய்ஞான கல்வி சென்ற பிப்ரவரி மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
பயிற்சிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வார இறுதியில் நடைபெறும். கோவையில் இருக்கும் ப்ரணவ பீடத்தின் நகர மையத்தில் பயிற்சிகள் நடைபெறும்.
பயிற்சிகளுக்கு கட்டணம் உண்டு. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கே பயிற்சி அளிக்கப்படும்.
உங்களுக்கு ஆன்மீக கல்வி கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். பயிற்சி பற்றிய விளக்கம் அடங்கிய தகவல் நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பயிற்சி ஆன்மீக ரீதியாக வெளிப்படையாக கற்றுக்கொடுக்காத பயிற்சிகள் என்பதால் அனைவருக்கும் அனுமதி கிடைக்க வாய்ப்புகள் குறைவு. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறோம்.
அதனால் உங்களுக்கு முழுமையான ஆர்வமும் என்னிடம் நேரடியாக கற்றுக்கொள்ளும் ஆவல் இருந்தால் மட்டும் மின்னஞ்சல் அனுப்புங்கள். மெய்ஞான கல்வியை பற்றி வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் விளக்கம் அளிக்கிறேன். இதை தவிர்த்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணாக்க முயலும் கேள்விகளையும் மின்னஞ்சலையும் தவிர்த்தால் நலம்.
தகவல் ஏடு பெற மின்னஞ்சல் அனுப்பும் முகவரி : swamiomkar@gmail.com
சப்ஜெக்டில் “மெய்ஞான கல்வி” (அல்லது) “Vedic Education" என குறிப்பிடவும்.
7 கருத்துக்கள்:
Please read this. It talks about deathlessness of vadalore
Ramalinga adigal.
http://www.vallalyaar.com/?p=409
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பதிவை வாசிக்கிறேன்.
good move . you must get good students
எங்க போனீங்க ??? அப்பப்போ அட்டேன்டன்சே போடுங்க .....
எல்லார்க்கும் நல்லது பாருங்க ...
நல்ல முயற்சி !!!! தொடருங்கள்...
நீண்ட நாட்களுக்குப் பின்..
மீண்டும் அய்யர் உங்கள் பதிவுகளில்..
ஆர்வம் இருக்கிறது. ஆனால் கோவையில் வந்து கற்றுக் கொள்ள இயலாது. பதிவுகளின் வாயிலாக நேரம் கிடைக்கும் போது குறிப்புகள் தந்தால் நன்றாக இருக்கும்.
Post a Comment