Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, April 12, 2011

சாமீ....கருமம் கருமம்....!

நம் வாழ்க்கையில் பல வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்துகிறோம் என்பது உண்மை. இன்னும் ஒருபடி மேலே சொன்னால் பல வார்த்தைகள் நான் ஏன் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாமல் பயன்படுத்துகிறோம். நம் கலாச்சாரத்திலும் நம் முன்னோர்களாலும் செம்மையாக பயன்படுத்தபட்ட பழக்கவழக்கங்கள் நாளடைவில் வார்த்தையாகி, அவ்வார்த்தையே வெறும் சொற்களாக நம்மிடையே உலாவுகிறது. அப்படிப்பட்ட வார்த்தை தான் “கருமம்”.

நம் சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் ஆன்மீகத்தை ஒரு பகுதியாக வாழமல், வாழ்க்கையையே ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக வாழ்ந்தார்கள்.

தங்களின் ஒவ்வொரு செய்லும் அர்த்தத்துடன் இருக்க வேண்டும் என விரும்பினார்கள். கர்ம வினைகளால் மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு கர்மங்களையும் உணர்ந்து தெரிந்து செயல்பட்டார்கள்.

தன் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து அதற்கு தக்க செயல்பட்டால் கர்மவினைகள் அதிகரிக்காது. கர்மவினை அதிகரிக்காத பட்சத்தில் பல்வேறு பிறவிகள் எடுத்து கஷ்டப்படாமல் முக்தியை அடையலாம்.

இக்கருத்து நம் முன்னோர்களுக்கு ஆழமாக இருந்ததால் கர்மவினையை பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஒருங்கே கொண்டிருந்தார்கள்.

நம் செய்யும் செயல் (கர்மா) என்பது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு போன்றது. அதை மீண்டும் உள்ளே அடைக்க முடியாது, மேலும் அது செல்லும் திசையில் உள்ள இலக்கை அடையாமல் விடாது. குண்டின் இச்செயலை நாம் முடக்க வேண்டுமானல் துப்பாக்கியை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

ஒருவர் தான் எதற்காக பிறந்திருக்கிறோம் எனபதை உணர்ந்து அதற்கு தக்க செயல்படாமல் வேறு விதமான செயலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் கர்மாவை சேர்க்கிறார் என அர்த்தம்.

உதாரணமாக ஒருவர் ஆசிரியராக இருக்கிறார். அதற்கு தக்க செயலை செய்யாமல் தான் ஒரு ஜவளிக்கடை அதிபராக வேண்டும் என முயல்கிறார் என்றால் அவரின் கர்மா அங்கே நீட்டிக்கப்படுகிறது.

துறவிகள் தங்களின் செயல்களில் சமுதாய பயனுடன் செயல்படுவார்கள். அப்படி செயல்படும் சமயம் தங்களை உணராமல் தன் சுய நலனுக்கு ஏதேனும் செய்துவிட்டால் அது கர்மவினையாக தங்களை தாக்கும் என்று நம்புவார்கள். அவ்வாறு தங்களுக்கு கர்மவினை சேராமல் இருக்க தங்கள் செயலை கண்காணித்து எச்சரிக்கை கொடுக்க சிலரை அருகே வைத்திருப்பார்கள். அப்படி சுய நலன் மேலோங்கும் பொழுது அவர்கள் துறவியின் காதில் “கர்மம் கர்மம்” என கூறுவார்கள். துறவியும் உடனே உணர்ந்து அச்செய்கையை கைவிடுவார்.

இவ்வாறு தமக்கு ஒவ்வாத கர்மாவை செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டி எச்சரிக்க பயன்படுத்தும் வார்த்தை தான் “கர்மம் கர்மம்”. இவ்வார்த்தையை கேட்டதும் மனம் தெளிந்து அதிலிருந்து விடுபட்டு நற்கதியை அடைவார்கள்.

தமக்கு ஒவ்வாத கர்மம் செய்ததன் பலனை கிரகங்கள் அடுத்த பிறவியில் தீவினையாக அளிக்கிறது. கிரகங்களால் கர்மவினை தாக்கம் பீடிக்கப்பட்டு மன நிலையிலோ அல்லது உடல் நிலையிலோ கஷ்டப்படுவார்கள். இதை கொங்கு மண்டல கிராமங்களில் “கிரகம் புடிச்சவனே” என சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.

பிறர் கருமம் செய்வதையும் அதனால் அவர்களின் வாழ்க்கை சிரமத்தையும் எச்சரித்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் நடைமுறையில் நாம் பல விஷயங்களை எச்சரிக்க தவறுகிறோம்.

உதாரணமாக சென்ற வருடம் ஒரு நடிகை செய்ததை பார்த்து “கருமம் கருமம்” என நீங்கள் எச்சரித்து இருக்க வேண்டும். அல்லது அந்த நடிகையுடன் இருப்பவர் பார்த்து “கிரகம் புடிச்சவன்” என சொல்லி இருக்க வேண்டும். மாறாக இதை டீவியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து நாமும் கர்மம் செய்தோம்..!

மேலும் உதாரணம் சொல்லலாம். இரு நடிகர்கள். ஒருவர் மற்றொருவரை ஏதோ காரணத்தால் துன்புறுத்திவிட்டார். அது கர்மம் தான். ஆனால் அதை நாம் “கர்மம் கர்மம்” என எச்சரிக்கவில்லை. இப்பொழுது அந்த நடிகர் மற்றொரு நடிகரை குடிகர் என வீதிக்கு வீதி அசிங்கமாக பேசுகிறார். எப்பொழுதோ செய்த கர்மம் கிரகங்களால் பிடிக்கபட்டது பார்த்தீர்களா?

ஆகவே இனிவரும் காலத்தில் இவ்வாக்கியங்களை தவறாக பயன்படுத்தாமல் உள் அர்த்தத்துடன் பயன்படுத்துங்கள்.

டிஸ்கி : இவற்றை நான் எழுதக் காரணம் உங்களின் செயல்களை பார்த்து “கருமம் கருமம்” என எச்சரிக்கத்தான். இதை படித்து நான் “கிரகம் பிடித்தவன்” என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..! :)

9 கருத்துக்கள்:

குசும்பன் said...

//இன்னும் ஒருபடி மேலே //இப்படியே ஒவ்வொரு படியா மேலே மேலேன்னு சொன்னா மொட்ட மாடி வந்துடும் சாமியோவ்வ்வ்வ்வ்!

குசும்பன் said...

//தன் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து அதற்கு தக்க செயல்பட்டால் //

உணர்ந்து செயல்பட்டதால் தான் இந்தியாவின் மக்கள் தொகை இப்ப 122 கோடி சாமி!

ஸ்வாமி ஓம்கார் said...

குசும்பரே...!

கருமம் கருமம் :)

Umashankar (உமாசங்கர்) said...

ஒருவர் தான் எதற்காக பிறந்திருக்கிறோம் எனபதை உணர்ந்து அதற்கு தக்க செயல்படாமல் வேறு விதமான செயலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் கர்மாவை சேர்க்கிறார் என அர்த்தம்.

How or way to realize Swami ji?

தனி காட்டு ராஜா said...

கருமத்தை பாரு..
கிரகமே போ :)

[இதுவும் கொங்கு மண்டல கிராம பேச்சு வழக்கம் தான்]

guna said...

good thankyou

நிகழ்காலத்தில்... said...

மனசு ஒத்துக்க மாட்டேங்குது, என்னோட புரிதலில் கோளாறு இருக்கும் போல.....

நிகழ்காலத்தில்... said...

கர்மம்.. கர்மம் சாமீ...


---சுப்பாண்டி

Irai Kaathalan said...

அர்த்தமுள்ள வார்த்தைகளை , கேவலமாக நினைத்து உபயோகபடுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை இந்த பதிவு தெளிவூட்டும் ....மகிழ்ச்சி