Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, March 24, 2011

பழைய பஞ்சாங்கம் 24-03-2011

குர்குரே சுப்பிணி

சுப்பாண்டி தன் மகன் சுப்பிணியுடன் வந்திருந்தான். அன்று உணவு பழக்கத்தை பற்றி மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். உணவு நம் வாழ்க்கையை தீர்மாணிக்கிறது. உணவு நம் மனம் மற்றும் செயல்களுக்கு காரணமாகிறது என விளக்கிக் கொண்டிருந்தேன். வேதத்தில் உள்ள வாசகமான “எதை உண்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்பதை உதாரணங்களுடன் விளக்கிக் கொண்டிருந்தேன்.

பேச்சுக்கு நடுவே அழுகையுடன் கூடிய விசும்பல் சப்தம் கேட்டது. சுப்பாண்டியின் மடியில் உட்கார்ந்திருந்த சுப்பிணி அழுது கொண்டிருந்தான். ஏன் அழுகிறாய் என கேட்க, சுப்பிணியோ என்னை பார்த்து கேட்டான்....

“ஸ்வாமிஜீ நான் குர்குரே ஆயிருவேனா?”

------------

தோட்டகார சாமி

புகழ் பெற்ற டீவி நிலையத்திலிருந்து அழைத்து பேட்டி எடுக்க வருவதாக சொன்னார்கள். முன்பு வேறு ஒரு தொலைக்காட்சியில் சில வினாடிகள் வந்ததால் இவர்களும் தங்களின் தொலைகாட்சிக்கு என்னை அழைத்தார்கள் என நினைத்து சரி என்றேன்.

சொன்ன நேரத்தை விட சில மணி நேரம் ஆகியும் யாரும் வந்தபாடில்லை. இவர்களுக்காக காத்திருந்த நான் நேரத்தை விரயமாக்க விரும்பாமல் தோட்டத்தை ஒழுங்குபடுத்த துவங்கினேன். சிறிது நேரம் கழித்து இரு நபர்கள் வந்து “ஸ்வாமி இருக்காரா?” என்ற வழக்கமான நாத்திக கேள்வி கேட்டனர். “நாந்தேன்” என்றேன். கையில் துடைப்பத்துடன் நான் தோட்டத்தில் இருப்பதை கண்டு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. கேமராவை வைத்து விட்டு வந்துவிட்டோம் இதோ வருகிறோம் என சென்றவர்கள் தான் இன்னும் வரவில்லை.

டீவி நிலையத்தில் எனக்கு தெரிந்தவர் தொலைபேசியில் இதன் காரணத்தை கூறினார். உங்கள் தோரணை சரியில்லை என வந்துவிட்டார்கள் என்றார். இவரின் காரணம் சரி என்றே பட்டது. தோட்ட வேலை செய்யும் சாமியை யார் விரும்புவார்கள்? இனி நானும் ஏஸி ரூமில் அமர்ந்து வருபவர்களுக்கு ஆசி வழங்கி என் தோரணையை மாற்றலாம் என இருக்கிறேன்...!
----------------
திருவண்ணாமலை பித்தர்

ஐந்து வருடத்திற்கு முன்பு திருவண்ணாமல் கிரிவலம் வரும் சமயம் அங்கே பைத்தியக்கார தோரணையில் ஒருவர் அமர்ந்திருந்தார். உடை எல்லாம் அழுக்கு, தலை முடி சடைசடையாக இருக்க குளித்தே பல நாள் ஆன தேகத்துடன் அமர்ந்திருந்தார். வாய் ஓயாமல் ஏதோ உளரிக்கொண்டே இருந்தார். நடு நடுவே பல வசுவுகள் என அவரின் உளரலே பயங்கரமாக இருந்தது. மக்கள் அவரை கடக்கும் பொழுது காசை அவர் முன் போட்டு விட்டு சென்றார்கள். அவர் காசை பற்றி கவலைப்படாமல் எங்கோ பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்.

நான் இளைப்பாற அங்கே அமர்ந்திருந்தேன். “பிச்சக்காரப்பயலுக பிச்சக்கார பயலுக எனக்கு ஒரு ரூவா போட்டுட்டு போறானுங்க..இவனுகளே அரிசியை ஒரு ரூவாய்க்கு வாங்கி திங்கப்போறாங்க.. XXXXX” என பல வசவுகளுடன் கூறினார். அப்பொழுது புரியவில்லை. அப்புறம் புரிந்தது...!

இந்த முறை சென்ற பொழுது அவர் என்ன சொன்னார் தெரியுமா? குழந்தைகள் பருப்பு கடைஞ்சு விளையாடுறது போல கையில சைகை காட்டிட்டு... அஸ்கு புஸ்கு அஞ்சு வருசம் கழிச்சு தெரிஞ்சுக்க என்றார் :)

சித்தர்களோ பித்தர்களோ இவர்களை புரிஞ்சுக்கவே முடியல..!
----------------------

சொல்லனும்னு தோணிச்சு சொன்னேன்
----------------------------------------------------------

நேற்றும் இன்றும் நாளையும்
மாறும் இவ்வுலகம் இந்த ஷணத்தில் மட்டும்
உறைந்து விடுகிறது

6 கருத்துக்கள்:

Paleo God said...

“ஸ்வாமிஜீ நான் குர்குரே ஆயிருவேனா?”//

கோணலா இருந்தாலும் சுப்பிணியோடதாக்கும்! :))

Irai Kaathalan said...

பார்பதற்கு வெண்மையாய் இருக்கிறது என்பதற்காக பாலும் கல்லும் ஒன்றாகுமா ? ? ? - தோட்டகார சுவாமி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு.ஷங்கர் உங்கள் வருகைக்கு நன்றி :))

திரு.திருமால் பாபு உங்கள் வருகைக்கு நன்றி

சிவமுருகன் said...

சுவாமி!

//என் தோரணையை மாற்றலாம் என இருக்கிறேன்...!//

அன்னியனில் வரும் குடுமி வசனம் ஞாபகத்திற்க்கு வந்தது!

(அம்பி அம்பின்னு ஒரு நல்லவன் இருந்தான்! :))

Astro வெங்கடேஷ் said...

வழக்கம்போல் பதிவு சூப்பர்.

நேற்று சன்டிவியில் இரவு 9.30க்கு ஈரோடு அருகே வேலம்பாலையத்திலுள்ள ப்ரமிடு சாமியார் பற்றிய நிஜம் நிகழ்ச்சி பார்த்தேன்.அதில் தொகுப்பாளினி கடைசியாக கூறிய வார்த்தை,"எது எப்படி இருந்தாலும் இந்த சாமியார் தன் வீடு,தன் ப்ரமிடு வரை தன் ஆன்மீகத்தை வளர்ப்பதில் தவறில்லை,இதுவே பெரிய பந்தல் போட்டு ஊரே ஆசி வாங்க,நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் கார்ப்பரேட் சாமியார் ஆனால் தான் ப்ரச்சனை"

Sanjai said...

//அஸ்கு புஸ்கு அஞ்சு வருசம் கழிச்சு தெரிஞ்சுக்க//

:)