சில விஷயங்களை நாமாக துவங்கி பேச அசெளகரியமாக இருக்கும். ஆனால் யாராவது கேள்வியாக கேட்டால் அவர்களின் பெயரால் அவ்விஷயத்தை பேசுவோம். அப்படிப்பட்ட நிலையில் நான் சபரிமலையின் பெயரால் சில விஷயத்தை பேசப்போகிறேன்.
ஆன்மீகம் பெண்களை ஒதுக்குகிறது என பலருக்கு எண்ணம் உண்டு. முக்கியமாக பெண்களுக்கே இத்தகைய எண்ணம் அதிகமாக உண்டு. உண்மையில் இக்கருத்து முற்றிலும் தவறானது. மதங்கள் மாந்தர்களை ஒதுக்கிறது என்றால் நான் முற்றிலும் சரி என்பேன். மதம் என்பதையும் ஆன்மீகம் என்பதையும் பலர் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். அதன் எதிரொலிப்பே இத்தகைய கருத்து.
பெண்ணின் கருப்பை மாதத்திற்கு ஒரு முறை தன்னை சக்தியூட்டிக் கொள்ளும் தாய்மை நிறைந்த செயலை இவர்கள் ‘மாதவிலக்கு’ என அழைக்கிறார்கள். இதற்கு மாத ஓய்வு என்று கூறுங்கள் ஏன் விலக்கு என முற்றிலும் விலக்க வேண்டும்? மதத்தை விலக்குங்கள் தவறில்லை, ஆனால் ஏன் மாத விலக்கு என பெண்களை விலக்குகிறீர்கள் என்பதே என் கேள்வி..!
உங்களுக்கு முடி வளர்கிறது, நகம் வளர்கிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என உணர்கிறீர்கள் இத்தகைய காலத்தில் நீங்கள் ஆன்மீக வழிபாடு செய்வீர்களா? ஆம் என்றால் மாத ஓய்வு அன்றும் செய்யலாம். கோவிலுக்கு செல்லலாமா என கேட்காதீர்கள், கோவிலில் மட்டும் ஆன்மீகம் இல்லை. கோவிலில் மட்டும் இறைவனும் இல்லை.
சளி பிடித்திருக்கும் சமயம் நாசியில் கபம் ஒழுகினாலும் கைக்குட்டையுடன் இறைவனை நினைப்பது தவறென்றால் மாத ஓய்வில் பெண்கள் இறைப்பணியில் ஈடுபடுவதும் தவறே..!
யோக முறைகள் என்றும் ஆண் பெண் என எதையும் பிரித்து பார்ப்பது அல்ல. வேறுபாடு இல்லாமல் இணைந்திருப்பது என்பதே யோகம். சபரிமலைக்கு பெண்கள் ஏன் செல்லக்கூடாது என்பதில் பல முரண்பட்ட தகவல்கள் உண்டு. தற்சமய கேரள அரசும் கோர்ட்டில் பெண்கள் செல்ல அனுமதி வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளது. பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்பதே உண்மை. ஆனால் கருப்பை செயல்படும் நிலையில் இருக்கும் பெண்களே அனுமதி மறுக்கப்படுகிறது.
குழந்தை பருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?
யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியில் செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும். இதை தவிர்த்து தலைப்பகுதியில் செயல்கள் இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.
கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?
இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை செயல்படும் நிலையில் அல்ல என்பதை புரிந்துகொண்டீர்களா?
கேரளத்தில் மன்னார்சாலை என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண் தான் பூஜை செய்ய முடியும். மேலும் ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி இல்லை. காரணம் அக்கோவில் அபாணா என்ற ப்ராணனுக்கானது. அதனால் பெண்களே தாய்மை என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே உள்ளது. இப்படியாக ஒவ்வொரு கோவிலின் சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும் ஏற்படுத்தப்படுகிறது. இதை விடுத்து எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என உளருவது முட்டாள் தனம். பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று ஒரு ஆண் எனக்கும் முடி திருத்துங்கள் என சம உரிமை கேட்பதற்கு சமம்.
இக்காரணத்தை தவிர காட்டில் மிருகம் இரத்த வாசனை உணர்ந்து வந்து தாக்கும் என்பதெல்லாம் ஏதோ ஒரு ராக்கெட் விஞ்ஞானி வெளியிட்ட புரளி என்பதை உணருங்கள். அந்தகாலத்திலிருந்தே பெண்கள் சபரிமலை சென்றதற்கான சான்றுகள் உண்டு. இன்றும் கூட கருப்பை அறுவை சிகிச்சை நடந்துவிட்டது என்ற சான்றிதழ் இருந்தால் இளம் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் புரியாமல் சென்று பாதிக்கப்பட கூடாது என்பதே இந்த கட்டுப்பாட்டின் நோக்கம்.
சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான ப்ராணன் கொண்ட பகுதி. அதனால் தான் அதற்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள் கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் ப்ராணன் செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். இதையே நியதியாக்கினார் அந்த யோகி. ஆனால் தற்சமயம் இது மூடப் பழக்கமாகிவிட்டது.
சபரிமலை என்றாலே ஐயப்பன் தான். இறைவனே அவர்தான் என நம்பும் இவர்களுக்கு ஒன்று புரிவதில்லை. இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால் இருமுடிகட்டாமல் பதினெட்டாம் படியை தொட அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள் அவ்வளவு உயர்ந்ததா என யோசியுங்கள் நான் முன்பு சொன்ன வரிகள் புரியும்.
இவ்வாறு சபரிமலையில் பின்பற்றும் அனேக விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு. இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது, இது இந்து கோவில் என நம் ஆட்கள் அறியாமையை வளர்க்கிறார்கள்.
ஓகே சாமி இது புரிஞ்சுது.. அந்த மகர ஜோதி எப்படி சாமி?
அதுவா.. ஹி ஹி ஹி..
(சரணம் தொடரும்)
10 கருத்துக்கள்:
நான் மிக சிறியவன் அறிவில் அனுபவத்தில் ...,கேள்வி அபத்தமாக இருந்தால் மன்னித்து விடுங்கள் ......., ஆண்களுக்கும் ஒரு சில நேரங்களில் தூக்கத்தில் இருக்கும் போது கரை படிகிறதே ???...,
ஆழமான கருத்துக்கள். சபரிமலை கட்டுப்பாட்டின் கோட்பாட்டை எல்லாரும் சுலபமா புரிஞ்சுக்குற மாதிரி சொல்லிடீங்க சுவாமி!
அநேக நன்றிகள்!!!
ஒரு சின்ன நேயர் விருப்பம், சபரிமலை மாதிரி , பிரத்யங்கா தேவி பற்றியும் பல வகையான கருத்துக்கள் உள்ளத்து, அதையும் இதுபோல தெளிவுபடித்தினால், உணர்ந்து வழிபட வகை செய்யும் :)
ஏஞ்சாமி, பொம்பளைங்க போயிட்டு வந்தா அந்த மாசம் மட்டும்தானே மலட்டுத்தன்மை வரும்..
மற்ற மாதங்களில் பிரச்சினை வராதுதானே...அப்புறம் என்ன?
உடலினுள் உள்ள ப்ராணான் திடீரென மேலெழுவதை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இயற்கை பெண் உடலை வடிவமைத்திருக்காது என நம்புகிறேன்.
சக்தியை நான் குறைத்து மதிப்பிட முடியவில்லை....
பகிர்வுக்கு நன்றி
கோஞ்சம் புரியல...ஆனா பல தடவை படிச்சாதான் புரியும் நினைக்கிறேன்.....
>>>சரணம் தொடரும்......<<<
தொடர்கிறேன்.......
//கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். //
இதைப் படிக்கும்போது வடிவேலுவின் ‘எப்படியெல்லாம் வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டியிருக்குடா’ என்ற
நகைச்சுவை வசனம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை :)
//கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு. அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால் (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும். கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?//
முதல் கேள்வி, பெண்களுக்கான இந்த பாதிப்பு தார்காலிகமானதா இல்லை நிரந்தரமானதா?
அடுத்த கேள்வி. ஆண்களுக்கும் இடைக்கு அருகே ஆணுறுப்பில் மாதம் முழுதும் விந்து சுரந்து கொண்டேயிருக்கிறதே. சபரி மலைக்கு சென்று வந்தால் அவர்களுக்கு ஒன்றும் ஆகாதா?
மலைக்கு சென்று வந்த பல லட்சம் ஆண்கள் தந்தை ஆகி இருக்கிறார்களே!
திரு தில்லுமுல்லு,
திரு இந்தியன்,
நான் பாலியல் கல்வி ஆசிரியரோ மருத்துவரோ இல்லை. எனக்கே தெரிந்த சில அடிப்படை விஷயங்களை வைத்து பார்க்கும் பொழுது நீங்கள் கேட்கும் கேள்விகள் அபத்தமாக தெரிகிறது.
ஆணுனின் உடலில் இருந்து 200 முதல் 500 மில்லியன் விந்தனுக்கள் ஒரு முறை வெளிப்படும் பொழுது வெளியேறும். பெண்ணுக்கு எத்தனை கருமுட்டைகள் இருக்கிறது என நீங்களே சிந்தித்து பார்த்தால் இதன் விளக்கம் புரியும்.
ஆண் எத்தனை முறை அணுக்கள் இழந்தாலும் அவனின் 90 வயது வரை அந்த சக்தி வெளிப்படும். பெண்களுக்கு சராசரியாக 10 வயது முதல் 50 வயது வரை 40 வருடங்களில் 480 முறை கருமுட்டை வெளிப்பட வாய்ப்புண்டு.
இரண்டுக்கும் உள்ள விகிதாச்சார வித்தியாசத்தை புரிந்துகொண்டாலே பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என புரியும்.
என்னை இவ்வாறு விளக்க வைத்தமைக்கு நன்றி.
திரு செந்தில் குமார்,
திரு மதி,
திரு VAROTHAYAN KANAGANAYANGAM,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு நிகழ்காலம்,
திரு இந்தியன்,
ஒரு முறை பயணம் செய்வதால் எந்த கெடுதலும் இல்லை. பெண்கள் ஆன்மீக நாட்டம் அனைவரும் அறிந்ததே. ஒரு கோவில் அவர்களுக்கு ஆழமாக பதிந்துவிட்டால் மீண்டும் மீண்டும் செல்வார்கள். குறைந்தபட்சம் 2 அல்லது 3 முறை இத்தகைய சூழலில் இருந்தால் அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.
சில யோக பயிற்சி பள்ளியில் அனைத்து பெண்களுக்கும் ஒரு வித யோக பயிற்சி எடுக்கிறார்கள். அது மலட்டு தன்மையை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். அத்தகைய விளைவே பல நூற்றாண்டுக்கு முன் இருந்த யோக பல்கலைகழமான சபரிமலையில் ஏற்படும்.
விபத்து நடந்து ஒரு முறை நான் உயிர் தப்பினேன் என்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் பொழுது நான் சென்றாலும் எனக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்பது போன்ற செய்கை இது.
----------------------------
திரு பரிதி நிலவன்,
எதையும் சமாளிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை. ஒரு கோவிலில் அபத்தம் நிகழுகிறது என்றால் அது அபத்தம், முட்டாள் தனம் என தைரியத்துடன் சொல்லுபவன்.
உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் யாராவது ஒருவரை வைத்து இதை சோதனை செய்து பார்க்கவும்.
நன்றி.
Post a Comment