|| சுவாமியே சரணம் ஐயப்பா ||
ஆன்மீகவாழ்க்கையில் இருப்பது சில நேரங்களில் அசெளகரியத்தை கொடுக்கும். அதில் ஒன்று மனிதர்களின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு பின் இருக்கும் உண்மை வெளிப்படுத்துவதாகும்.
உங்கள் நண்பர் வீட்டுக்கு வருகிறார். உங்களின் சிறு வயது மகள் விளையாடி கொண்டிருக்கிறாள். உங்கள் நண்பர் முன் உங்களின் குழந்தையை பற்றி பெருமையடிக்க ஆசைப்படுவீர்கள். “புஜ்ஜிமா, நீ பண்ணின பெயிண்டிங்கை அங்கிளுக்கு காமி” என்பீர்கள். உங்கள் குழந்தையும் விளையாட்டை விட்டுவிட்டு ஒரு காகிதத்தில் வரைந்த பெயிண்டிங்கை கொண்டு வருவாள்.
உங்கள் நண்பர் சும்மா இருப்பாரா? அவர் பங்குக்கு, “சோ..ச்வீட், அருமையா பெயிண்ட் பண்ணிருக்கே. இந்த கலர் எல்லாம் எப்படிடா பெயிண்ட் பண்ணினே?” என்பார். உங்கள் செல்ல மகள் அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துவிட்டு, “அப்பாதான் பெயிண்ட் பண்ணினா.. எனக்கு தெரியாது” என உண்மையை போட்டு உடைக்கும். அப்பொழுது உங்கள் நண்பர் பார்க்கும் பார்வையை எப்படி சந்திப்பீர்கள் ?
அப்படிபட்ட நிலைதான் சபரிமலையை பற்றி என்னிடம் கேட்டால் நான் உணர்வேன்.
முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். சபரிமலை தெய்வீகமான இடம். இறையாற்றல் பரிபூரணமாக நிறைந்த இடம். உங்கள் ஆன்மீக வாழ்க்கை உயர கண்டிப்பாக சபரிமலையும் அதன் கிரீடமாக இருக்கும் சபரி பீடமும் உதவும். இதில் எனக்கு ஒரு துளியும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சபரிமலையை பற்றி பலர் கூறும் அடிப்படை விஷயங்கள் முற்றிலும் தவறானது. இவற்றை விளக்குவதே எனது நோக்கம்.
முக்கியமாக சபரிமலை அமைந்தவிதம் குறித்த தல புராணம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது என்பதிலிருந்து துவங்குவோம்.
ஐயப்பன் பிறப்பு பற்றிய குறிப்பு முற்றிலும் தவறானது. மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் பிறந்த குழந்தை என்றும் காட்டில் கண்டெடுக்கப்பட்டார் என்றும் கூறுவார்கள். இக்கருத்து இந்த தலபுராணத்தை தவிர நம் கலாச்சாரத்தில் இருக்கும் எந்த பகுதியிலும் இல்லை. நம் நாட்டின் சிறப்பே புராணம் மற்றும் இதிகாசங்கள் அனைத்தும் காஷ்மீர் முதல் குமரி வரை ஒன்று போலவே இருக்கும்.
உதாரணமாக கந்த புராணத்தில் முருகனின் பிறப்பு விவரிக்கப்பட்டுள்ளது. முருகன் என்ற பெயருக்கு பதில் கார்த்திக் என்பார்களே ஒழிய கந்தனின் பிறப்பு பற்றிய கருத்து நம் நாட்டின் எந்த பகுதியிலும் ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஐய்யப்பனின் பிறப்பு பற்றிய கருத்து தென்னகத்தில் மட்டுமே உண்டு. வடநாட்டில் தற்சமயம் பிரபலம் சபரிமலை பெரும்பாலும் தெரியும். காரணம் நம்மவர்கள் ஐய்யப்பன் கோவிலை கட்டி இருக்கிறார்கள்.
காஷ்மீர் அல்லது அஸ்ஸாம் பகுதிக்கு சென்றால் அவர்கள் “ஐய்யோ அப்பா” என தனி தனியே சொல்லுவார்கள். அவர்களுக்கு சபரிமலையும் தெரியாது மஹாவிஷ்னுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தையும் தெரியாது.
இக்கதையை திரித்து ஓரின சேர்க்கைக்கு சாட்சி தேடும் மடையர் கூட்டமும் நம்மிடையே உண்டு.பால் கடல் கடையும் பொழுது மோகினி ரூபம் கொண்ட விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த மகன் எப்படி இஸ்லாமியரான வாவருடன் தொடர்பு கொண்டார்? இஸ்லாம் தோன்றி 1500 சொச்ச வருடங்கள் தானே ஆகிறது?
பால்கடல் கடைந்தது என்பது பல லட்சம் வருட கணக்கு அல்லவா வருகிறது? அப்படியே பல லட்சம் வருடம் இருந்ததாக கொண்டாலும் மணிகண்டன் என்ற நிலையில் 12 வருடம் தானே வாழ்ததாக தல புராணம் கூறுகிறது? பாண்டிய மன்னனுக்கு மகனாக வாழ்ந்தார் என்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னேயே பாண்டிய மன்னர்கள் இருந்தார்களா?
இத்தனை கேள்விகளும் எழாமல் வருடா வருடம் சபரி மலை செல்லுபவர்களை என்ன செய்யலாம்?
சபரிமலையில் இருக்கும் இறை சக்தி உண்மையென்றால் அது எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன? கொஞ்சம் பொறுத்திருங்கள்.
(சரணம் தொடரும்)
13 கருத்துக்கள்:
நியாயமா போறியள் சுவாமிகள்!
நன்று!
ஸ்வாமி, அருமையான துவக்கம்.புரிதல் இல்லாமல் நம் பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம் (என்னையும் சேர்த்து தான்).
அதில் ஆன்மிகமும் ஒன்று. இந்த தொடர் நிச்சயம் நல்ல புரிதலை,விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
ஸ்வாமியே சரணம்
ஐயப்பா!!
Please continue this series and explain the real truths. Thanks.
\\ஓரின சேர்க்கைக்கு சாட்சி தேடும் மடையர் கூட்டமும் \\
நண்பர்கள் கூட்டம் அப்படின்னு சொல்லுங்க சாமி....
அவங்க புரிஞ்சுக்கிட்ட அளவு, தெரிஞ்சுக்கிட்ட அளவு, அனுபவத்தில் வந்த அளவு அவ்வளவுதான்..
இது அவர்கள் குறையல்ல...அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தராத உணர்ந்தவர்களின் தவறுதான்....:)) அந்தப்பொறுப்பு தங்களைப்போன்றோர்க்கு அதிகம் சாமி..
(உஸ்ஸ்ஸப்பா... எப்படி சமாளிக்க வேண்டி இருக்கு... மடையருங்க வந்து சாமிய கும்முகும்முன்னு கும்மிட்டாங்கன்னா என்ன பண்றது..
----முன்சாக்கிரதை முத்தண்ணா---
(
பகுத்து அறிவோம் சபரி மலையின் ஆற்றலை
நாங்களும் கருப்பு சட்டை தான்
Dear Swamiji,
I am waiting eagerly to hear your further explanations.
swamiye saranam iyyappa.
by
Jeevanantham
சீக்கிரம் சொல்லுங்க ஸ்வாமிஜி
திரு அத்திவெட்டி ஜோதிபாரதி,
திரு குரு
திரு ஆ
திரு நிகழ்காலம்
திரு நடராசு
திரு ஜீவானந்தம்
திரு ஜெய்சங்கர் ஜகனாதன்
உங்கள் அனைவரின் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி
நல்ல ஆராய்ச்சி தொடருங்கள் .
ம்ம்ம்.... காத்திருக்கணுமா?
நல்ல துவக்கம்.நாங்களும் எதிர்பார்க்கிறோம் தங்களின் விளக்கத்தை.
ஒரு விஷயம் தாங்கள் செய்யும் பணிக்கு தான் மூடப்பழக்கங்களை ஒழித்தல் என்று பெயர்.தவறான புரிதல்களை நீக்கி உண்மையை விளங்க வைப்பவரே குரு.ஆக தங்களின் பணியை சிறப்பாக செய்கிறீர்கள்.தொடருங்கள்.....காத்திருக்கிறோம்
சுவாமி,
சபரிமலை பத்தி தெரிந்துகொள்ள ரொம்ப ஆவலா இருக்கு.
நீங்கள் குருபிட்டு இருக்ற லாஜிகல் questions நிறைய பேருக்கு உண்டு.
நீங்கள் சொன்னது போல சபரிமலை ஒரு மிக பெரிய சக்தி வாய்ந்த இடம் - இது பொய் இல்லை, உண்மை.
உங்களது முழு தொடரை படித்துவிட்டு மேலும் எழுதுவேன்.
சுவாமியே சரணம் ஐயப்பா...
- பட்டறை பாண்டி
:-))
Post a Comment