Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, November 23, 2010

சபரிமலை - சில உண்மைகள்..! பகுதி 2

யோகிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை
யோகமே அவர்களை வெளிப்படுத்துகிறது


சாஸ்தா என்பது இறைநிலை அம்சங்களில் ஒன்று. 32 சாஸ்தாக்கள் உண்டு என்றும் இவை தவிர ஆயிரமாயிரம் சாஸ்தாக்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுவார்கள். இவர்கள் எதற்கு இத்தனை எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என கேள்வி எழும். இவர்களின் முக்கிய பணி சனாதன தர்மத்தை காப்பது. அதனால் இவர்களுக்கு ‘தர்மசாஸ்தா’ என்று பெயர்.

பிரம்ம சாஸ்தா என்ற சாஸ்தா நிலை.
பழனி கோவில் சுவர் ஓவியம்

சனாதன தர்மம் என்றால் என்ன என்று மட்டும் என்னிடம் கேட்டுவிடாதீர்கள்..! என் வாய் குறைந்தபட்சம் பல மணிநேரத்திற்கு மூடாமல் இதை பற்றி விளக்கும். எளிமையாக கூறவேண்டுமானால் அனைத்து உயிர்களையும் சமமாக பாவித்து அவை இறைநிலைக்கு உயர்த்தும் பணி சனாதன தர்மம் விளக்கலாம். மீண்டும் கூறுகிறேன் இதுவே முழுமையான விளக்கம் அல்ல சார்பு விளக்கம் மட்டுமே.

சனாதன தர்மத்தை காப்பவர்கள் தர்ம சாஸ்தா என்றால் இப்பணியை அனேக ஆன்மீகவாதிகள் செய்கிறார்களே அல்லவா? அப்படியானல் அவர்கள் எல்லாம் யார்? ஆன்மீக நிலை கொண்டவர்களுக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கலாச்சார நாகரீக மக்கள் விதவிதமான பெயர் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

சிங்கத்தை கேசரி, லயன் என எப்படி கூறினாலும் சிங்கம், சிங்கம் தானே? அது போல யோகிகளுக்கு நாம் எப்படி பெயர் கொடுத்தாலும் யோக நிலையில் இருப்பவர்கள் என்றும் யோகிகளே..! சித்தர்கள், ரிஷிகள் என பல்வேறு பெயர்களில் நம் ஆன்மீகவாதிகளை அழைப்பது போல கேரள கரையோரம் யோகிகளுக்கு பெயர் சாஸ்தா.

பிறப்பு இறப்பு அற்ற நிலையில் என்றும் சாஸ்வதமாக இருப்பவன் சாஸ்தா..!

அப்படி யோக நிலையில் இருந்து என்றும் மனிதனின் ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டுபவரே தர்மசாஸ்தா என்ற ஐயப்பன்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் சைவ வைணவ துவேஷங்கள் பெருகி இருந்தது. பெரிய புராணத்தில் இதன் சுவடுகள் அதிகம் இருந்ததை காணலாம். மதமாற்றம் மற்றும் மத துவேஷம் அதிகம் இருந்த காலகட்டத்தில் மக்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யாமல் தங்கள் மதம் உயர்ந்தது என்ற ஆணவ போக்கில் இருந்தார்கள்.

அக்காலத்தில் சைவ வைணவ துவேஷத்தை போக்கவும் அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்றும் மனிதநேயமும் இறை பக்தியும் முக்கியமானது என்றும் கூறவே ஐயப்பன் என்ற யோகி அவதரித்தார்...!

பாண்டிய மன்னர்கள் சமண மதத்தை தழுவினார்கள் என்றும் பிறகு நாயன்மார்கள் அவர்களை மீண்டும் சைவத்திற்கு கொண்டு வந்தார்கள் என்ற பெரிய புராணத்திற்கு ஏற்ப, ஒரு பாண்டிய மன்னரின் வாரிசாக இருந்தவரே இந்த யோகி. தனது ஆன்மீக உயர்நிலையால் குறைந்த வயதிலேயே அனைவரையும் தர்மத்தில் பாதையில் செலுத்தினார்.

வடநாட்டில் யோகிகளை ‘பாபா’ என அழைப்பார்கள். பாபா என்றால் தந்தை என அர்த்தம். இது நம் ஊரிலும் அவ்வழக்கம் உண்டு. அய்யன், அப்பன் என தமிழ்நாட்டினரும் கேரளநாட்டினரும் அந்த யோகியை அழைப்பதால் அவர் அய்யப்பன் ஆனார்..!

சித்தர்கள்,யோகிகள் கொடூரமான விலங்குகளை தங்கள் வசமாக்கி அவற்றை சாதுவாக நடமாட விடுவார்கள். அது போல புலியை தன் வசமாக்கி வைத்திருந்தவர் ஐய்யப்பன். இது சித்தர்களுக்கு சாதாரணமான விஷயம். இதற்கு பழனியில் இருந்த புலிப்பாணி சித்தர் ஒரு உதாரணம்.




மே
லே உள்ள வீடியோவை பாருங்கள், தாய்லாந்தில் தற்சமயம் ஒரு ஐயப்பன் இருக்கிறார். எதிர்காலத்தில் அவருக்கும் நம் ஆட்கள் கதை சொல்லுவார்கள்..!

சபரி என்றால் தூய்மையான பரிசுத்தமான என அர்த்தம். இராமாயண கதையில் வரும் சபரி என்ற பாத்திரமும் பரிசுத்தமான பக்தியை வெளிப்படுத்துவதன் மூலம் இக்கருத்தை உணரலாம். சபரி பீடம் என்ற பரிசுத்தமான இடத்தில் இருக்கும் யோகி தனது அருளால் அனைவரையும் சனாதன தர்மத்தில் திளைக்க செய்தார். பரிசுத்தமான அம்மலை சபரி மலை என அழைக்கப்படுகிறது. தன்னை சிவ,விஷ்ணுவின் குழந்தை என்று சொல்லி ஜாதி துவேஷம் விலக்கியும், வாவரின் தோழன் என்று சொல்லி மத துவேஷம் விலக்கியும் மக்களை அறியாமையிலிருந்து யோக வழிக்கு திருப்பினார்.

மக்கள் துறவு என்பதன் அருமையை ஒரு ஷணமேனும் உணர வேண்டும் என்பதற்கு சில நியதிகளை வகுத்தி அதன் படி அவர்கள் வந்தால் மட்டுமே தன்னை காண முடியும் என நிலையை உருவாக்கினார். இதனால் மக்கள் சம்சாரத்தில் இருந்தாலும் ஆன்மீக உயர்நிலையை உணர ஓர் வாய்ப்பு ஏற்பட்டது.

நாளாக நாளாக இக்கருத்துக்களை உணராமல் மக்கள் தங்களுக்கு தோன்றிய விஷயங்களை புகுத்தி சபரி மலை சபரி என்ற தூய தன்மையை இழந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

என்ன தான் சொல்லுங்கள் ஸ்வாமி.. சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்க மறுப்பது பெரும் குற்றம் தான் என்கிறார்கள் பெண்ணீயவாதிகள். ஜாதி மத சமதர்மத்தை போதித்த அய்யப்பன் பெண்களை வர விடாமல் தடுப்பாரா? இதில் ஏதோ காரணம் இருக்குமே என தோன்றுகிறதா? யோசியுங்கள்..

(சரணம் தொடரும்)

22 கருத்துக்கள்:

எல் கே said...

todarungal

Subbu said...

thangalin, kasi suvasi, thodar niraivu peramal irukiranthu swami.

Guru said...

சுவாமியே சரணம் ஐயப்பா...

இன்று ஆன்மிகம் என்பது வெறும் சடங்கு என்று ஆகிவிட்ட நிலையில், அடிப்படை விஷயங்களை உணர்த்த தொடங்கியிருக்கும் இந்த சபரிமலை தொடர் நிச்சயம் தெளிவை ஏற்படுத்தி,எதற்காக செய்கிறோம் புரிதலுடன் சபரிமலை செல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மார்கண்டேயன் said...

எளிய வாழ்க்கை முறை, அந்நியர் வருகையால் மதமாக்கப்பட்டு, சமய சந்தர்ப்பத்திர்க்கேற்ப கோட்பாடுகளுக்கள் அடக்கி, வாழ்க்கை முறை மாறிய காலத்தில், எளிய வாழ்க்கை முறை, எட்டாக்கனியாகவும் சம்ப்ரதாயகவும் ஆகிவிட்ட நிலையில், தங்கள் பதிவு பல விஷயங்களைக் கொடுக்கிறது
நம் பதிவர் ரிஷபன் மீனா அவர்கள், தாய்லாந்து புலிகள் சரணாலய கோவிலின் சுற்றுலா அனுபவங்களை பின்வரும் பதிவுகளில் பகிர்ந்துள்ளார்,

௧. http://rishaban.blogspot.com/2009/12/2.html

௨. http://rishaban.blogspot.com/2009/12/2.html

௩. http://rishaban.blogspot.com/2010/07/blog-post.html

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தொடர். சந்தேகங்களைத் தெளிவு படுத்தும் ஒரு தொடர்.

Matangi said...

Thanks to your writing that clears our doubts. Awaiting to read the rest.

C Jeevanantham said...

Dear swamiji,
good explanations. you have cleared my doubts.
Thank you very much.
pl continue...

Mahesh said...

A long kept doubt cleared.... need to mull over the subject... Thanks...

//பெரிய புராணத்தில் இதன் சுவடுகள் அதிகம் இருந்ததை காணலாம்//
Even in 4000 Dhivya Prabantham !!

Damodar said...

The information is new to me. Good Work Swamiji!!!

ntarasu said...

சுவாமி

ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டியது

பெண்களை சபரிக்கு அனுமதிகதற்கு காரணம் அவர்களின் உதிர வசத்தினால் வனவிலங்குகள் எளிதில் மனிதர்களை பின்தொடர்ந்து தாக்கிவிடும் என்பதால்

தவறாக இருந்தால் மான்னிகவும்

திரு

ஸ்வாமி ஓம்கார் said...

திரு LK,
திரு Subbu,
திரு குரு,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மார்கண்டேயன்,
உங்கள் வருகைக்கும், கொடுத்த சுட்டிகளுக்கும் நன்றி.

திரு வெங்கட் நாகராஜ்,
சகோதரி மாதங்கி,
திரு ஜீவானந்தம்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

கம்பெனியின் லேபர்ஸ் செஞ்ச தப்புக்கு கம்பெணியை குத்தம் சொல்ல கூடாது :)

எல்லா கம்பெனியிலும் இருக்கிறது தானே ;)

உங்கள் வருகைக்கும் சுட்டிக்காட்டுதலுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தாமோதர்,
உங்கள் வருகைக்கு நன்றி

திரு nrarasu,

உங்கள் கருத்து பலரின் கருத்து. அனைவரும் இதையே கூறுகிறார்கள். வரும் பகுதியில் விளக்குகிறேன்

நன்றி

வல்லிசிம்ஹன் said...

கார்த்திகை மாதத்தில் ஸ்ரீசாஸ்தாவைப் பற்றின அருமையான விளக்கங்களை உணர்வது மிகவும் மகிழ்ச்சி ஸ்வாமி.

Anonymous said...

தங்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைகளே,
தங்களுக்கு ஆன்மீகப் பெரியார் என்ற பட்டத்தை வழங்க நான் சிபாரிசு செய்கிறேன்.மேலும் வளர்க...தங்கள் கருத்துக்கள்

ரிஷபன்Meena said...

திரு.மர்கண்டேயன் அவர்கள் கொடுத்த சுட்டியின் மூலம் தங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன்.

சுவாமி தெளிந்த நீரோடை போன்ற எழுதியிருக்கிறீர்கள். உங்கள் விளக்கங்கள் அருமை.

எனக்கும் கூட பல நாள் இந்த கேள்வி எழுவதுண்டு. எதனால் பெண்களுக்கு பல கோவில்களில் தடை என்று. அன்பே உருவான இறைவன் அனைத்து உயிரையும் ஒன்றாகப் பார்க்ககூடிய நிலையில் தான் இருக்க முடியும். மனிதர்கள் வீனான கட்டுப்பாடுகளைக் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரங்கன் said...

சுவாமி ஏற்கனவே வியாசர் ஜைமினி கதை ஒன்று சொல்லி உள்ளீர்கள். சபரிமலை பெண்கள் தடை அது போன்ற ஒன்றாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

எம்.எம்.அப்துல்லா said...

// தங்களுக்கு ஆன்மீகப் பெரியார் என்ற பட்டத்தை வழங்க நான் சிபாரிசு செய்கிறேன்

//

கன்னாபின்னான்னு வழிமொழிகின்றேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வல்லிசிம்ஹன்,
திரு ரிஷபன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஆகமக்கடல்,
அப்துல்லா அண்ணே,

எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் :))

இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டே ரணகளமாக்கிட்டீங்க ;)

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ரங்கன்,

உங்களின் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது :)

உண்மை அக்காரணமும் உண்டு. 45 நாள் விரதம் இருந்துவிட்டு பிறகு தனிமையில் எதிர்பாலினத்தை சந்தித்தால் ஜெய்மினி முனிவரின் நிலைதான் :)