எந்த ஒரு விஷயமும் திடீரென நமக்கு பழக்கமாகி விடுவதில்லை. பாரம்பரியமாகவோ, ரத்ததிலேயே ஊரியோ அல்லது நாகரீகம் கருதியோ தான் அப்பழக்கங்கள் நாம் கொண்டு செல்லுகிறோம்.
உதாரணமாக ரயில் பயணத்தில் பரிசோதகர் உங்கள் சீட்டை சரிபார்த்தவுடன் அவரை பார்த்து ‘நன்றி’ என கூறிப்பாருங்கள். சட்டென உங்களை ஒரு முறை ஆழமாக பார்த்துவிட்டு நகர்வார். இதற்கு காரணம் அவரிடம் எவரும் நன்றி சொல்லுவதில்லை. அவர் தான் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறாரே என்ற நினைப்பு நமக்கு. இவ்வாறு பழங்கங்களில் மட்டுமல்ல சொற்களையும் மொழியையும் பயன்படுத்துவதிலும் நம் மக்களிடம் பல்வேறு நிறை குறைகள் உண்டு.
நம் மக்களிடையே ஒரு பழக்கம் உண்டு ஏதேனும் ஒரு வார்த்தை அவர்களிடம் சிக்கிவிட்டால் அதன் பொருள் தெரிந்துகொள்ளாமலேயே ஆழ்ந்து பயன்படுத்துவார்கள்.
காட்சு பிடிக்கிறது, க்யூ வரிசையில் வருவது என ஆங்கிலத்தில் கூறும் வார்த்தையே தமிழிலும் இணைத்து சொல்லுவார்கள். Catch என்றாலே பிடிப்பது தானே? இது இணைத்து சொல்லுகிறோம் என்ற பிரக்ஞையே இருக்காது நமக்கு. இது போல எத்தனையோ வார்த்தைகள்.
படிக்காதவர்கள் தான் இப்படி என்று இல்லை. நான் சந்தித்த ஒரு நகரின் ஆட்சியர் (கலெக்டர்) கூட என்னிடம் பேசும் பொழுது இப்படி பட்ட தவறுகளை செய்தார். உதாரணமாக, “நான் ஃபிரியாதான் இருக்கேன். நீங்க உங்க விஷயத்தை பிரீஃப்பா சொல்லுங்க” என்றார்.
நாம் கூட நண்பர்களிடம் “பிரீஃப்பா பேசனும் வா” என கூறி இருப்போம். உண்மையில் பிரீஃப் (brief) என்றால் குறுகிய , சுருக்கமான என பொருள். அதனால் தானே சிறிய அளவில் கோப்புகளை வைக்கும் பெட்டியை பிரீஃப் கேஸ் என கூறுகிறோம். பிரீஃபா பேசுவது என்றால் விரிவாக பேசுவது என்றே நாம் நினைத்திருக்கிறோம்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நம்மில் பல வார்த்தைகள் இப்படி புரிதல் இல்லாமலே வெளி வந்துவிடும். பல வசவு சொல்கள் கூட சகஜமாக புழக்கத்தில் உள்ளதை காண முடிகிறது. அதை பெருமையாகவும், நாகரீகம் மற்றும் நகைச்சுவை என்ற பெயரிலும் மனிதர்கள் பேசிக்கொள்கிறார்கள். விழிப்புணர்வு குறைவாக இருப்பவர்கள் மட்டுமே தான் பயன்படுத்தும் வார்த்தையின் ஆழம் மற்றும் அர்த்தம் உணராமல் பயன்படுத்துவார்கள்.
விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு வார்த்தை ஒரு மந்திரம், விழிப்புணர்வு அற்றவர்களுக்கு எச்சில் போன்றது. இரண்டுமே வாயிலிருந்து வந்தாலும் பயன் வேறுபடுகிறது.
பலர் அப்படி பேசலாம் நான் அப்படி அல்ல, மிகத்தெளிவானவன் என நீங்கள் கூறினீர்கள் என்றால் அது உலகமகா பொய். நீங்கள் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அந்த தவறை செய்வீர்கள்.
முன் பின் தெரியாத ஒரு நபரை சந்தித்தோம் என்றால் அவரை அழைக்க, “சார்” என்போம். இது மிகவும் தவறான சொல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.
முன்னூறு வருடங்களால நம்மை அடிமை படித்தி இருந்த ஆங்கிலேயர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த அடிமை வார்த்தையே “சார்”. ஓர் அடிமை தனது முதலாளியை பார்த்து பதில் அளிக்கும் வார்தையே இது. ஆங்கில அதிகாரிகளை சார் என்றும் பெண்களை மேடம் என்றும் பல்வேறு ஆண்டுகளாக அழைத்து பழகிய நாம் எங்கே சென்றாலும் அவ்வாறு அழைக்கிறோம். ஒவ்வொரு முறையை சார் என பிறரை அழைக்கையில் நீங்கள் ஒரு அடிமை என்பதை நீங்களே பதிவு செய்கிறீர்கள்....!
இந்தியர்கள், அப்ரிக்க மக்களை ‘நீக்ரோ’ என்ற சொல்லாடலில் பயன்படுத்துவார்கள். இது மிகவும் கொடூரமான ஒரு சொல். பிறப்பால் அடிமையானவன் என்ற அர்த்தம் கொண்டது இவ்வார்த்தை. இதை அப்ரிக்கர்கள் மிகவும் வெறுப்பார்கள். வெளிநாடு செல்லும் இந்தியர்கள் நம் ஊரில் அவர்களை அழைத்தது போலவே அழைத்து முன் பல் இழந்து நிற்பார்கள். இனியாவது அப்ரிக்கன் என அவர்களை கூறுங்களேன்.
பிறரை அழைக்க 'Sir', 'Boss' என அழைப்பதைக்கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இது நம்மில் இருக்கும் அடிமட்ட அடிமை உணர்வே காரணம். பிறரை ‘அண்ணா’, ‘அக்கா’ அல்லது பெயர் மூலமோ அழையுங்கள். உணர்வுபூர்வமாக அழைப்பதால் அவர்களுடன் நெருக்கமும் ஏற்படும்.
நான் பல்வேறு இடங்களில் பயணிக்கும் பொழுது என்னை ‘சார்’ என அழைப்பதை பார்த்து எனக்கு மிகவும் சங்கடமாக உணர்வேன். எல்லோரையும் எனக்கு இணையாகவும் சமமாகவும் பார்க்கும் நிலையில் அவர்களாகவே சார் என அழைத்து அவர்களை கீழேயும் என்னை மேலையும் வைத்து தர்ம சங்கடப்படுத்துவார்கள். அமெரிக்க ஜனாதிபதியை கூட நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம். சார் என அழைக்கக் கூடாது - என்ற வெள்ளை மாளிகை குறிப்புகள் உண்டு. ஆனால் நாம் இன்னும் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம்.
என்னை பெயர் சொல்லி அழையுங்கள் அல்லது வேறு வார்த்தையில் அழையுங்கள். சார் என்று மட்டும் அழைக்காதீர்கள்.
ஏன் என்றால்...
சாருன்னா எனக்கு பிடிக்காது...!
31 கருத்துக்கள்:
தலைப்பை பார்த்து உள்ளே வில்லங்கம் இருக்கும் என்று நினைத்தேன் :))....
நல்ல கருத்து. நன்றி ஐயா.
அது நல்ல எலாஸ்டிக் வெச்ச Briefa இருக்கும், அதான்! ஹி ஹி :)
அது சரி,
உங்களுக்கு ஒரு திட்டுப்பதிவு உண்டு. அவர் எழுதுறாரோ இல்லையோ பதிவு கண்டிப்பா வரும்.
சிறப்பான இடுகை தோழர் ஸ்வாமிஜி! :))
நன்றி ஒம்கார்ண்ணே...:)
ஓம்கார் என்ற பெயரில் காரு என்கிற மரியாதைச் சொல் இருக்கிறதே இது சாரு ஆகாதா ?
குறும்புடன்
கோவி
சுவாரஸ்யமான இடுகை. குறிப்பா தலைப்பில் இருக்கிற pun! நண்பர் கோவி.கண்ணன் கூட இந்த ரீதியில ஒரு இடுகை எழுதியிருந்தார்.
Sir பற்றி என்னுடைய தாழ்மையான அபிப்ராயத்தை பதிவு செய்ய அனுமதிக்கணும்.
இந்த பதத்தோட தோற்றுவாய் sire என்கிற பதம். நீங்க சொல்ற அடிமை-எஜமான் மரியாதை அந்த சொல்லுக்கு உண்டு.
அதிலிருந்து தோன்றின இந்தச் சொல்லுக்கு மரியாதையான விளிப்புன்னு மட்டும்தான் அர்த்தம் எடுத்துக்கணும்.
http://kgjawarlal.wordpress.com
நல்ல கருத்து Sir.. இது வரை தெரிந்தோ தெரியாமலோ அப்படி பயன்படுத்தியதற்கு சாரி..மன்னிச்சிகோங்க.. ஹிஹி..
அருமையான பதிவு
ஒரு முறை இந்திய ஊடகவியலாளர் ஒருவர் இயன் சேப்பலை சார் என அழைக்க என்னை மிஸ்டர் சேப்பல் என அழையுங்கள் எனக் கடிந்துக் கொண்டாராம். எங்கோ படித்தது
ப்ளாக்கர்ஸ் கூட சேர்ந்து நீங்களும் கெட்டுப் போய்ட்டீங்க ஸ்வாமி
:)
ஸ்வாமிஜி,
நீங்களுமா!!!!!!
அதிர்ச்சித் தலைப்பு வைக்க ஆரம்பிசுட்டீங்க!!!!!!
இடுகையின் முதல் பாதி அப்படியே நம்ம டோண்டுவின் இடுகையிலும் இருக்கு!
இங்கே இருந்து அங்கேயா இல்லை அங்கிருந்து இங்கேயா?
இல்லைன்னா எங்கிருந்தோவா?
இந்த 'மேடம்' விளிப்பு எனக்கும் எரிச்சலாத்தான் இருக்கு.
250 வருசப்பழக்கம். சுலபமாப் போகாதுபோல:(
ப்ளாக்கர்ஸ் கூட சேர்ந்து நீங்களும் கெட்டுப் போய்ட்டீங்க ஸ்வாமி
repeat it
துளசி ஜி கருத்தை வழி மொழிகிறேன்.
நீங்களுமா, தனி நபர் நையாண்டி சார்ந்து எழுதுவது.
இப்போதான் டோண்டு பதிவிற்கு பின்னூட்டம் இட்டு வருகிறேன் (free time, Not free hence Let us have Brief talks)
இதுக்கும் தனியா ஒரு class வைக்கலாம்.
//விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு வார்த்தை ஒரு மந்திரம், விழிப்புணர்வு அற்றவர்களுக்கு எச்சில் போன்றது. இரண்டுமே வாயிலிருந்து வந்தாலும் பயன் வேறுபடுகிறது.//
இன்றைய வணிகமயமாக்கப்பட்ட கல்வியில், மொழி பற்றிய விழிப்புணர்விற்கு இடமில்லை, இதனை நாம் கண்கூடாக பார்க்கலாம்.
பல இணைய நண்பர்கள் ""சார்" என அழைக்கும் போது கூச்சமாகவே உள்ளது. நமக்குச் "சாரு" பிடிக்காது ஆனால் அதைக் கேட்கும் பலருக்குப் பிடித்துத் தொலைக்குதே!
அதிகாரிகளையும்; உயர் பதவி படைத்த நம் தேசத்தவர்களையும் பெயர் சொல்லிக் அழைக்கும் படி கூறிகிறீர்களே!
சற்று யோசித்துப்பாருங்கள்...தற்போதைய முதல்வரைக் கருணாநிதி எனவும்; முன்னாள் முதல்வரை ஜெயலலிதா எனவும் அழைத்தால் தங்கத் தமிழகத்தில் வாழ முடியுமா,?
சில வருடங்களுக்கு முன் யாரோ முதல்வரைக் கருணாநிதி என அழைத்துவிட்டார்கள் என தமிழகத்தில் மரியாதையும்; பண்பும் செத்து விட்டது எனப் புலம்பியதை அறியவில்லையா?
அமெரிக்க ஜனாதிபதியை நீங்கள் பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்....தாராளமாக அதற்காக தமிழகத் தானைத் தலைவர்களையும்; அதிகாரிகளையும் பெயர் சொல்லி அழைக்கும் விசப்பரீட்சை வேண்டாம்.
நீங்கள் காவி கட்டினாலும் "மகனே" என அழைக்க ஏற்றுக் கொள்வார்கள். பெயர் கூற முடியுமோ தெரியவில்லை.
எனக்கு கணக்கு சார் பிடிக்காது ;-)
உங்க கூட சேர்ந்து இந்த ப்ளாகர்ஸ்ல்லாம் கெட்டுப்போயிடுவாங்க போலிருக்கே....
:))))
சார்... என்ன சார்....நீங்களே இப்பிடி எழுதறீங்களே சார்... போங்க சார்.... ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க சார்....
//உதாரணமாக ரயில் பயணத்தில் பரிசோதகர் உங்கள் சீட்டை சரிபார்த்தவுடன் அவரை பார்த்து ‘நன்றி’ என கூறிப்பாருங்கள்.//
இப்படி ஒரு அனுபவம் எனக்கும் நிகல்ததுண்டு, துணிக்கடையின் சேலை எடுத்துபோடும் பெண்களுக்கு நன்றி கூறினேன், அவர்கள் சிரித்துக்கொண்டனர். என் மனைவி கூறினால் நீங்கள் வெளி ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று.
//நம்மில் பல வார்த்தைகள் இப்படி புரிதல் இல்லாமலே வெளி வந்துவிடும்.//
கடைக்கி போய் "டால்டா" வாங்கி வா, "kelloggs " சாபிடிகின்றேன் என்பதும் இதில் அடங்கும் என்று நினைக்கின்றேன். டால்டா "Vegitable Ghee " வும் kelloggs cereal உம் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ஆகும், இந்த நிறுவனத்தை எப்படி நாம் வாங்கவும் உண்ணவும் முடியும்.
// “சார்”. ஓர் அடிமை தனது முதலாளியை பார்த்து பதில் அளிக்கும் வார்தையே இது. //
இதை என்னால் ஏற்க முடிய வில்லை சுவாமி.
ராணுவத்தில் உயர் அதிகாரிகளை மதிக்க பயன் படுத்தும் வார்த்தையும் கூட.
பள்ளி கல்லூரிகளில் ஆசிரியரை மரியாதையுடன் அழைக்கும் வார்த்தையும் கூட.
இங்கிலாந்த் அரசு அளிக்கும் உயரிய பட்டங்களில் "Sir " பட்டமும் ஓன்று. Sir CV ராமன் மறக்க முடியாதே.
இப்பவெல்லாம் "தலைவா" "தல" என்று தான் அழைகிறார்கள். :-)
//இந்தியர்கள், அப்ரிக்க மக்களை ‘நீக்ரோ’ என்ற சொல்லாடலில் பயன்படுத்துவார்கள். இது மிகவும் கொடூரமான ஒரு சொல். பிறப்பால் அடிமையானவன் என்ற அர்த்தம் கொண்டது இவ்வார்த்தை.//
இதையும் என் அறிவு மறுக்கின்றது ஸ்வாமி..
நீக்ரோ என்ற வார்த்தை "Negroid" என்ற வார்த்தையில் இருந்து வந்தாக தான் இருக்க வேந்தும். இது Asian , Caucasian , Hispanic , Negroid போன்ற ஒரு Race குறிக்கும் சொல்லாகத்தான் இருக்க வேண்டும். Negroid என்பது கருப்பு ஆப்ரிக்கா மக்களை குறிக்கும் சொல்லே தவிர பிறப்பால் அடிமையானவன் என்ற அர்த்தம் இருக்க முடியாது என்ற தோன்றுகிறது.
Niger என்ற Latin சொல் கருப்பு என்று அர்த்தம் கூருகின்றந்து. இது விக்கிபீடியாவில் பார்த்தது.
சார் என்பதற்குப் பதிலாக நீங்கள் சொல்லும் முறைகளில் சக நண்பர்களையும் சமூக உறவுகளையும் அழைக்கலாம் ஆனால் வணிக/அலுவல் ரீதியான இடங்களில் சார் தான் பொருந்துகிறது. இங்கே சார் என்பது நம்மை அடிமையாக முன்னிறுத்துவதில்லை மாறாக குறிப்பிடுபவரை மரியாதைப் படுத்துகிறது.
இதற்கு உதாரணமாக வணிக கடிதங்களில், பாராளுமன்ற விவாதங்களில் மற்றும் ரிஷேப்சனில் "dear sir" என்ற சொல்லாடல் பயன்படுத்துகிறோம்.
திரு யோகேஷ்,
திரு ராகவன்,
திரு தினேஷ் பாபு,
திரு அண்ணாச்சி,
திரு ஷங்கர்,
திரு கேபிள் சங்கர்,
திரு கோவி.கண்ணன்,
திரு ஜவஹர்,
திரு சென்,
திரு பரிசல் கிருஷ்ணா,
சகோதரி துளசி கோபால்,
திரு yrskbalu,
திரு ராம்ஜீ,
திரு பிரபு,
திரு நிகழ்காலம் சிவா,
திரு மார்கண்டேயன்,
திரு யோகான்,
திரு மகேஷ்,
திரு கும்க்கி,
திரு ஸ்ரீதர்,
திரு சிவா,
உங்களின் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சுவாமி ரொம்ப அருமையான பதிவு.. முன்பு நான் இருந்த நிறுவனத்தில் என்னுடைய ஜூனியர்கள் என்னை சார் என்று கூறுவார்கள்.. நானும் அட! நம்மை சார் என்று அழைக்கிறார்களே என்று உள்ளூர சந்தோசத்தில் அமைதியாக இருந்து விட்டேன். அதே வெளிநாட்டிற்கு வந்த பிறகு தான் தெரிகிறது நாம் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டுள்ளோம் என்று :-(
உண்மையில் நம்ம ஊரில் நம்மை விட வயது முதிர்ந்தவர்களை எப்படி அழைப்பது என்ற பிரச்சனை உண்டு அது வெளிநாட்டில் இல்லை. இங்கே பெரியவர்களை பெயர் கூறி அழைக்க முடியாது.. ஆனால் வெளிநாடுகளில் அது முடியும்.. எவரும் தவறாக கருத மாட்டார்கள். நம்ம ஊரில் பெயரை கூறி அழைத்தால் அது மரியாதைக்குறைவான செயலாக கருதப்படும்.
எடுத்துக்காட்டாக இங்குள்ள நிறுவனங்களில் பணி புரிபவர்கள் தமக்கு மேலுள்ள அதிகாரியை பெயர் கூறி அழைக்க முடியாது.. அண்ணா அக்கா என்றும் கூற முடியாது (ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம்) பின் எப்படி அழைப்பது? இதுவே இங்குள்ள பிரச்சனை. இது உடனே மாறக்கூடிய விசயமல்ல .. பல தலைமுறைகள் கடந்தாலே மாறும் என்பதே நடைமுறையில் உள்ள விஷயம்.
எடுத்துக்காட்டாக துளசி அவர்களை நானே மேடம் என்று தான் அழைக்கிறேன் .. நீங்கள் கூறியபடி அம்மா என்றோ அக்கா என்றோ அவர்களை அழைக்கலாம் தவறில்லை நீங்கள் கூறியபடி ஒரு நெருக்கம் உருவாகும் மறுக்கவில்லை அதே அலுவலகத்தில் இதைப்போல கூறுவது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று. அவ்வாறு கூறினால் ஆப்பு வேறு வழியில் நிச்சயம்..
எனவே தலைமுறை மாற்றம் மட்டுமே இந்த சார் என்ற வார்த்தையை இந்தியாவில் இருந்து நீக்குமே தவிர உடனடியாக நிகழக்கூடிய அல்லது நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடிய விசயமல்ல அது.
சுவாமி சந்தேகமில்லாமல் நீங்கள் எழுதியுள்ள இந்த இடுகை சிறப்பான ஒரு இடுகை. என்னுள் பல மாற்றங்களை இது கண்டிப்பாக கொண்டு வரும்.
2008 ம் ஆண்டு இதையொட்டி நான் எழுதிய இடுகை
வெள்ளைக்காரர்களை கண்டு நமக்கேன் தாழ்வு மனப்பான்மை?
இந்த ஆட்டத்தில் நான் எப்பொழுதுமே இருந்ததில்லை :))
//எடுத்துக்காட்டாக துளசி அவர்களை நானே மேடம் என்று தான் அழைக்கிறேன் .. நீங்கள் கூறியபடி அம்மா என்றோ அக்கா //
கிரிஅண்ணே இப்பவரைக்கும் நான் அவர்களை அழைப்பது அம்மானுதான் :)
அப்போ இந்த சாமி, திரு இதெல்லாம்?
இந்த அமெரிக்கன் ஸ்டைல் பெயர் சொல்லி விளிப்பதை இப்போ வீடுகளிலும் ஆரம்பித்து உறவுகள் முறைகளை விட்டு வயசு வித்தியாசம் இல்லாமல் பெயர் சொல்லி அழைத்து தங்கள் மேதாவித் தனத்தை காட்டிக் கொள்ளுதல் பற்றி என்ன நினைக்கிறீங்க?
//காட்சு பிடிக்கிறது//
catch என்பது noun என்ற பொருளில் he held that catch என்பது சரியே !!
நீங்கள் சொல்லியிருக்க வேண்டிய உதாரணங்கள்
நடு செண்டர்
கேட் வாசல்
ஷாப் கடை
//பிரீஃப்பா சொல்லுங்க//
இது கூட சரி என்றே தோன்றுகிறது :) :)
http://en.wiktionary.org/wiki/brief
To knowledgeably summarize a recent development to some person with decision-making power.
நீங்கள் சொல்லியிருக்க வேண்டிய உதாரணங்கள்
வண்டி ரிபேர் ஆயிடுச்சு
வண்டியை ரிபேர் பண்ணிட்டேன் !!
பழுதாவது, சரிசெய்வது இரண்டுமே ரிப்பேர் தான்
அல்லது (கஷ்டப்படுவது என்பதை கூற) ரிஸ்க் எடுத்து செய்வது
held on to that catch
சாரு கூடிய விரைவில் உங்கள் சிஷ்யகோடியாகி உங்கள் அருமை பெருமைகளை விளக்கி 10 பதிவும் பிறகு உங்களை திட்டி 40 கட்டுரைகளும் எழுத இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன :)
Post a Comment