நெற்றியில் டிராபிக் சிக்னலில் தெரியும் சிவப்பு விளக்குக்கு நிகரான பொட்டு, உலகில் மஞ்சள் தட்டுப்பாடுக்கு இவரின் முகத்தில் இருக்கும் மஞ்சளின் அளவு ஒரு காரணம் என கூறும் அளவுக்கு மங்கள முகம். முகத்தை முன்புறம் பார்க்கும் பொழுதே தலைக்கு பின்னால் இருக்கும் கனகாம்பர பூ தெரியும் அளவுக்கு அலங்காரம் என்ற தோற்றத்தில் அந்த வயதான பெண் கையில் ஒரு சிறு குச்சியுடன் அனுகினாள்.
"ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா... தம்பி உனக்கு விரைவில் ஒரு பெண் உன் வாழ்க்கையில் வரப்போறா..."
நண்பர்களுடன் கடற்கரையில் சிறிது நேரம் கூட உட்காரவிடாமல் இவர்கள் செய்யும் இம்சை அளவில்லாதது என நினைத்தவாறே வேறுபுறம் திரும்பினேன். அந்த பெண் விடுவதாக இல்லை.
“ஏந்தம்பி திரும்பிட்டே.. உன்னை பத்தி எல்லாம் சொல்றேன் தம்பி.. சரியா இருந்தா மட்டும் காசு கொடு”
என் நண்பன் கோவிந்து குசும்புடன் அவளை திரும்பி பார்த்து பேச்சு கொடுத்தான்.
“ஏம்மா என்னை பத்தி நீ சொல்லா அதற்கு நான் ஏம்மா காசு கொடுக்கனும்? என்னை பத்திதான் எனக்கே தெரியுமே? அதைப்போயி நான் காசு கொடுத்து வேற தெரிஞ்சுக்கனுமா?”
ஓ இவன் பொழுது போக்க முடிவு செய்துவிட்டான் இவனை ஒன்னும் செய்ய முடியாது என நானும் கவனிக்க துவங்கினேன்.
“தம்பிக்கு வேற என்ன தெரிஞ்சுக்கனும்னு சொல்லுங்க ஜக்கம்மாகிட்ட கேட்டு சொல்றேன்”
“ஜக்கம்மா கிட்ட கேட்டு எல்லாம் சொல்லவேணாம். முடிஞ்சா ஜக்கம்மாவை எங்க கூட அனுப்பி வை. வேணுங்கறப்ப நாங்களே கேட்டுக்கறோம்.”
“தம்பி வாயில சனி இருக்கு போல...ஜெய் ஜக்கம்மா” என்றவாறே கோயிந்து தலையில் குச்சியை வைக்க, கோவிந்து மயங்கி சரிந்தான்.
நாங்கள் பதட்டமானோம். “என்னம்மா இப்படி செஞ்சுட்டீங்க...”
“ஜக்கம்மாவா எகத்தாளம் பேசினா இதுதான் கதி. என்கிட்ட ஏதாவது குறிகேளு அப்பத்தான் இவனை எழுப்பிவிடுவேன்”
“காசு வேணும்னா கொடுக்கறோம் இவனை எழுப்பிவிடுமா...தாயே”
“ஜக்கம்மா பிச்சை எடுக்காது. குறிகேட்டு காசு கொடுத்துட்டுப்போ...”
பீச்சில் உலாத்தும் ஜக்கம்மாவின் மேன்மையான கொள்கை எங்களுக்கு இடைஞ்சலாக இருந்தது.
“அம்மா இன்னைக்கு( 6 ஜூலை ) உலகக்கோப்பை கால்பந்து போட்டியில உருகிவே நாடும், நெதர்லாந்தும் போட்டி போடறாங்க. அதில் யாரு ஜெயிப்பானு சொல்லு”
கண்களை மூடி ம்ம்ம்ம்ம்ம் என வாயில் சப்தம் எழுப்பினாள் அந்த பெண். பிறகு கண்களை விரித்து எங்களை பார்த்து“உருகுவே இன்னைக்கு தோத்து போயிடும்” என்றாள்.
என் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு வந்த பணத்தை அவள் கையில் திணித்தேன். மீண்டும் குச்சியால் கோவிந்தை தட்டினாள். அவன் எழுந்து உட்கார்ந்து என்ன நடந்தது என்பது போல பேந்த பேந்த முழித்தான்.
அவனை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
என்னது உங்களுக்கு ஜக்கம்மா சொல்லுவதில் நம்பிக்கையில்லையா? அந்த குச்சியுடன் உங்ககிட்ட வந்தா தெரியும்...
11 கருத்துக்கள்:
இதுக்கு ஜக்கம்மா வேண்டாமே...
மீன்கார மினிம்மாவே சொல்லிடுமே :))
சுவாரஸ்யமான இடுகை.
எனக்குக் கால்பந்து பத்தி கால்வாசி கூடத் தெரியாததாலே இதிலே இருக்கிற சூட்சுமம் புரியல்லை.
ஆனா இன்னொண்ணு புரியுது,’A foot-ball player is more closer to God than a Yogi' என்று சொன்ன ஸ்வாமி விவேகானந்தாவின் வார்த்தை நிஜம்தான்னு புரியுது. யோகிகளுக்கெல்லாம் ஃபுட் பால்லே இண்டெரஸ்ட் வந்திருக்கே!!
http://kgjawarlal.wordpress.com
சொந்த அனுபவமோ ?
சொந்த அனுபவமோ ?
இது ஏதோ மேட்ச் பிக்சிங் போல இருக்கே ..
ஆமா தோத்துடுச்சு. ஜக்கம்மா வாக்கு பலிச்சுடுச்சு!
கலக்குறீங்க சுவாமி... அடுத்த அப்டேட் எப்போ...
Hi swamji
Tell us now who will win this FIFA CUP.
URUGUWAY is not a bad team but NETHERLANDS is better team than urugway...
Will jakkamma or parrot will tell us who wil win the CUP
jaggama sonnathu palichuduchu
uruguvay thothuduchu
jei jaggama
kathai solvathupol jothidatai puguthuviterey
ithu pol jothidathayum kathai pol sonnal elithil puriyum anaivarukum
:-)
எங்கம்மாவின் ஒன்றுவிட்ட சித்தியோட மகளின் மகளை எனக்கு வரனாக பார்க்கிறார்கள். சாஸ்திரம் என்ன சொல்லுது சுவாமி?
ஒன்றுவிட்ட?
எங்கம்மாவின் அம்மா (பாட்டி) அவர்களின் பெரியம்மா மகளின் மகள் ( இளையவர் )
திரு மகேஷ்,
திரு ஜவஹர்லால்,
திரு ரோமியோ,
திரு சுப்புராமன்,
திரு சிவக்குமார்,
திரு essusara,
அனைவருக்கும் நன்றி.
பலரின் பின்னூட்டங்கள் பிளாக்கர் தொழில் நுட்ப கோளாரால் வெளியிடமுடியவில்லை.
Post a Comment