Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, July 3, 2010

கிளி ஜோஸியரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியும்..!

நேற்று வீதியில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கிளி ஜோதிடர் எதிர்ப்பட்டார். ஐயா எதிர்காலம் பார்க்கறீங்களா என்றார்.

ஜோதிடரே எனக்கு எந்த ஒரு விஷயத்திலும் எதிரா இருக்க பிடிக்காது. இணக்கமா வேணும்னா இருப்பேன். எதிர்-காலம் வேண்டாம் என்றேன்.

ஐயா நீங்க கிளிக்கு வேலை கொடுத்தா அதுக்கு நான் ரெண்டு நெல் மணி போடுவேன். உங்க புண்ணியத்தில அது சாப்பிடும் என்றார்.

சரி நான் பார்க்குறேன், ஆனால் என்னை பற்றி அல்ல. உலக கால்பந்து போட்டி பற்றி நான் கேட்கும் கேள்விகளுக்கு உன் கிளியிடம் சீட்டு எடுக்கச்சொல் என்றேன்.

கிளிக்கு நெல் கிடைத்தால் போதும் என தன் விரிப்பை விரிந்து சீட்டுக்களை அடுக்கினார்.


நான் முதல் கேள்வி கேட்டேன் “இன்று (3-ஜூலை) நடக்கும் அர்ஜெண்டினா - ஜெர்மனி போட்டியில் யாரு வெற்றி பெறுவார்கள்?”

கிளி என்னை சைடாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தத்தி தத்தி சென்று ஒரு சீட்டை எடுத்து கொடுத்தது. அதில் தாமஸ் முல்லர் என்பவரின் புகைப்படம் இருந்தது. அவர் ஜெர்மனி அணியின் முதன்மை வீரர். ஓ கிளி ஜெர்மனி வெற்றி பெரும் என்கிறதே..!

இவ்வளவு சூட்டிப்பான கிளியை நான் கண்டதில்லை. அதனால் என் அடுத்த கேள்வியை கேட்டேன், “கிளியே இன்று பராகுவே மற்றும் ஸ்பெயின் அணி விளையாடும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்”?

தன்னை தானே ஒரு முறை சுற்றிக்கொண்டு மீண்டும் சீட்டின் வரிசையில் தேடத்துவங்கியது கிளி. முடிவில் ஒரு சீட்டை எடுத்து தந்தது. அதில் பராகுவே அணி தலைவர் டென்னிஸ் கண்ஸா படம் இருந்தது. கிளியின் ஜோதிட அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது..!

அப்படியானால் கால் இறுதி போட்டியில் ஜெர்மனி பராகுவே நாட்டை சந்திக்கும் போலும் என நினைத்துக் கொண்டேன்.

“கிளியே நீ கூறியவை சரியாக இருந்தால் நாளை இறுதி போட்டியில் விளையாடும் அணி பற்றி உன்னிடம் கேட்கிறேன். இந்தா சில நெல்மணிகள்” என அதன் முன் வீசினேன்.

என்ன தான் உலக கோப்பை அணிகள் பற்றி கூறினாலும் கிளிக்கு கிடைக்கப் போவது என்னவோ நெல்மணிகள் தான்.

நெல் மணிகளை சந்தோஷத்துடன் கொத்தும் கிளியிடம், “கிளியே இந்தியா என்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடும் என கூறுகிறாயா?” என கேட்டேன்.

நெல் மணிகளை என் முன் காறி உமிழ்ந்துவிட்டு கூண்டுக்குள் சென்று அடைபட்டது கிளி...!

9 கருத்துக்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

புனைவை ரசித்தேன்!

இந்தப் புனைவு புயலைக்கிளப்பாது!

கால் பந்தைக்கிளப்பினால் தான் உண்டு!

3020-ல இந்தியா உலகக் கோப்பை வாங்கும் போது பாத்துக்குவோம்!

3020-3050 கால்பந்து கோப்பையை தொடந்து இந்தியா தக்கவைத்துக்கொள்ளும். எனது கணிப்பு எப்படி!?

Krubhakaran said...

எப்புடி இதெல்லாம்? என்னமோ போங்க,நமக்கும் ஒரு காலம் வரும்

கண்ணகி said...

நெல் மணிகளை சந்தோஷத்துடன் கொத்தும் கிளியிடம், “கிளியே இந்தியா என்று உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் விளையாடும் என கூறுகிறாயா?” என கேட்டேன்.
நெல் மணிகளை என் முன் காறி உமிழ்ந்துவிட்டு கூண்டுக்குள் சென்று அடைபட்டது கிளி...!

முதலில் சிரிப்பு..பிறகு வருத்தம்..கலவையான உணர்வு.

வடுவூர் குமார் said...

நாம் வாழும் கால‌த்துக்குள் அந்த‌ க‌டைசி கேள்விக்கும் ப‌தில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்

ஸ்வாமி ஓம்கார் said...

கிளியின் பலன் பாதியே சரியாக வந்தது.

தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

உங்கள் வாழ்த்துக்களை கிளியிடம் சேர்ப்பித்துவிட்டேன்.

அரையிறுதி போட்டியை பற்றி கிளியிடம் கேட்கலாம் என இருக்கிறேன்.

நன்றி

Sivakumar said...

அப்படியே இந்தியாவை மற்றும் தமிழ்நாட்டை எப்போது ந(வ)ல்லவர்கள் ஆள வருவார்கள் என்பதை கிளியிடம் கேளுங்களேன்.

சுரேகா.. said...

கிளியின் பதிலுக்கு வெய்ட்டிங்!!!!! :))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவக்குமார் , திரு சுரேகா,

இந்தியாவை பற்றி கேட்டதற்கே கிளி என்னை அவமானப்படுத்திவிட்டது. :) இந்த லட்சணத்தில் தமிழகத்தை பற்றி கேட்டால் அவ்வளவுதான் :)

உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

ராஜ நடராஜன் said...

பருகுவே ஸ்பெயினிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று விட்டது.

பால் ஆக்டோபஸ்தான் இப்ப ஜோசியத்தில் ஒண்ணாம் நம்பர்:)