விஞ்ஞான ரீதியாக பார்த்தோமானால் அக்னிஹோத்ரம் பல்முனை பயன்களை அளிக்கக் கூடியது. ஆனால் நம் கலாச்சார விஷயங்களை விஞ்ஞானத்துடன் முற்று பெறாமல் மெய்ஞானத்துடன் இணைந்து செயல்படுத்தினார்கள் என்றே கூற வேண்டும்.
அக்னிஹோத்ரம் கூறும் மெய்ஞான விளக்கம் என்ன?
ஒவ்வொரு செயலுக்கும் தக்க விளைவு உண்டு என்கிறது விஞ்ஞானம். இக்கூற்றை மிகவும் உயர்ந்த ஞான நிலையில் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு செயலுக்கும் தக்க விளைவு என பார்க்காமல் அனைத்து செயலும் நல்ல செயலாக செய்தால் அதற்கு தக்க நல்ல விளைவு தானே ஏற்படும்?ஒவ்வொரு செயலையும் நன்மையாக்குவது மெய்ஞானம்.
விஞ்ஞானம் இது இப்படித்தான் நடக்கும் - என்ற விதியை கூறுகிறது. மெய்ஞானம் எல்லாம் நன்மையாகவே நடக்கும் என்கிறது.
மெய்ஞான சமூதாயத்தில் அக்னிஹோத்ரம் ஒரு தவமாக பின்பற்றபட்டது. அரசன் அழைக்கும் பொழுது, “இது அக்னிஹோத்ரம் செய்து கொண்டிருக்கும் நேரம், பிறகு வருகிறேன் என சொல்” என்று ஒரு பிரஜை கூறுவதாக கதைகள் உண்டு. அரசன் அக்னிஹோத்ரம் தடைபடாமல் இருக்க பசுக்கள் மற்றும் நிலங்களை தானமாக வழங்கிய சுவடுகள் பல நம்மிடம் உண்டு. பசு இருந்தால் வறட்டியும் நெய்யும் கிடைக்கும், நிலங்களில் அரிசியை பெறலாம். அனேக அக்னிஹோத்ர பொருட்கள் நமக்கு கிடைக்கும்.
அக்னிஹோத்ரம் என்பதை தற்காலத்தில் தவறான புரிதலுடன் இருக்கிறார்கள். அது ஒரு வழிபாடு என நினைத்துக்கொள்கிறார்கள். ஏதோ ஒரு மதச்சடங்காக இணைக்கிறார்கள். அக்னியை நம்மில் உணர செய்யப்படும் ஒரு தியானம் அக்னிஹோத்ரம் என பலர் மறந்துவிடுகிறார்கள்.
அக்னிஹோத்ரம் செய்வது என்பது துல்லியமான நேரத்தில் செய்ய வேண்டும். நீங்கள் வசிக்கும் இடத்தில் தினமும் சூரிய உதய- அஸ்தமன நேரம் தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் அரிசியை அக்னியில் சேர்க்க வேண்டும்.
தினமும் காலை மாலை இருவேளையும் செய்ய வேண்டும். உடனே நமக்கு ஒரு எண்ணம் வந்திருக்கும். நான் அலுவலகம் சென்று விடுவேனே எப்படி மாலையில் செய்வது? நான் நைட் ஷிப்ட் செய்கிறேனே காலையில் வருவதற்கு தாமதமாகி விடுமே? என பல கருத்துக்கள் வருகிறது அல்லவா? அக்னிஹோத்ரம் பற்றி இங்கே படித்ததை ஒருவரிடம் கூறி உங்கள் மேதாவித்தனத்தை காண்பித்து, எனக்கு அக்னிஹோத்ரம் செய்ய வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் என் அலுவலக நேரம் அப்படி என பிறரிடம் பெருமையாக கூறிக்கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் சோம்பேறித்தனம் அதை ரசித்து மகிழும்.
அக்னிஹோத்ரம் என்ற அற்புதத்தை கண்டறிந்த சமூதாயம் இந்த சில்லறை விஷயத்திற்கு வழி அறியாமல் இருக்குமா? காலையும் மாலையும் அக்னிஹோத்ரம் தடையில்லாமல் செய்ய ஒரு எளிய வழியை கூறி இருக்கிறது.
சென்ற பகுதியில் அனைவரும் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது, சிலருக்கு தடை உண்டு என கூறினேன் அல்லவா? திருமணம் ஆகாத இளையவர்கள், சன்யாசிகள், அரசன், கர்ப்பிணிகள் ஆகியோர் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது. இது தவிர எந்த ஒரு ஜாதி, மத, வர்ண கட்டுப்பாடுகளும் இல்லை.
அக்னிஹோத்ரம் கட்டாயம் செய்ய வேண்டியவர்கள் குடும்ப வாழ்வில் இருக்கும் தம்பதிகள் மட்டும் தான். தங்களுக்குள் உடன்படிக்கை ஏற்படுத்தி காலை கணவன், மாலை மனைவி என்று தங்களின் குடும்ப கடமையாக செயல்படுத்த வேண்டும்.
ஏன் தம்பதிகள் அக்னிஹோத்ரத்தை செய்ய வேண்டும் என கூறினார்கள்? முதல் காரணம் அக்னிஹோத்ரம் தடைபடாமல் இருக்கும். மேலும் சன்யாசிகள், இளைஞர்களைக் காட்டிலும் சமூதாயத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தம்பதிகளாக இருப்பார்கள். அதனால் அக்னிஹோத்ரம் அதிக அளவில் நடக்கும்...!
நம் சமூதாயத்தை எப்படி அழ்ந்து உணர்ந்து கட்டமைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? நீங்கள் கூறுவது எல்லாம் சரி, நானும் என் மனைவி இருவரும் வேலைக்கு செல்லுகிறோம். இப்ப என்ன செய்வது என கேட்டீர்களானால்... உங்களை போன்ற உயர் நிலை ஜென்மங்களுக்கு அக்னிஹோத்ரம் தேவையில்லை என்பேன். :) இருவரும் வேலைக்கு செல்லுகிறோம் என்பதால் குளிப்பதோ, சமைப்பதோ, சாப்பிடுவதோ இல்லையா? அது போன்றுதான் அக்னிஹோத்ரம் என்பது நம் வாழ்க்கையின் ஒரு முக்கியமான செயல் என நினைத்தால் எத்தனை பிரச்சனைக்கு இடையிலும் செய்யலாம்.
சில வருடங்களுக்கு முன் என் வெளிநாட்டு மாணவர் கையில் ஒரு பெட்டியுடன் வலம் வந்து கொண்டிருந்தார். மாலை வேளை நெருங்கியதும் அந்த பெட்டியை திறந்தார். நான் திகைத்துப்போனேன். அது அக்னிஹோத்ரம் செய்யும் கையடக்க பெட்டி..! (Agnihotra Kit).
அதில் ஒரு திசைக்காட்டி, GPS என்ற பூமி ரேகை காட்டி, ரொட்டி வடிவில் வறட்டிகள், ஒரு பாட்டிலில் நெய், சிறிய பெட்டியில் அரிசி, கரண்டிகள் இருந்தன. அவற்றை விலக்கினால் பெட்டியின் அடிப்பாகம் ஒரு சின்ன பள்ளம் கருமையாக காட்சி அளித்தது.
தனது பெட்டியில் இருக்கும் கருவிகைளை கொண்டு சூரிய உதயத்தை கணக்கிட்டு, பெட்டியின் மையத்தை அக்னிஹோத்ர ஹோம குண்டமாக பயன்படுத்தி அக்னிஹோத்ரம் செய்தார். பிறகு அக்னி குளிர்ந்ததும் அந்த சாம்பலை ஒரு பாக்கெட்டில் சேமித்தார்.
இவரின் கருவிகளும்,செயல்களும் வித்தியாசமாக இருந்ததால் அவற்றை பற்றி விபரம் கேட்டேன். தொலைக்காட்சியில் ஆங்கில படங்களை தமிழில் டப்பிங் செய்வார்களே அது போல அவர் கூறியதை உங்களுக்காக கீழே டப்பிங் செய்திருக்கிறேன்.
“சுவாமிஜீ, எனக்கு பல நாளாக சரும புற்று நோய் இருந்தது. மேலும் உடல் முழுவதும் எரிச்சல் மற்றும் உடல் பலவீனம் என சிரமப்பட்டேன். சரும புற்று நோய்க்கு தக்க மருத்துவம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. ஒரு நண்பர் மூலம் அக்னிஹோத்ரம் பற்றி அறிந்து செய்யத் துவங்கினேன். ஆச்சரியப்படும் மாற்றம் உண்டானது. ஒரு நாள் அக்னிஹோத்ர சாம்பலை என் உடல் முழுவதும் பூசிக்கொண்டேன்.
சில வாரங்களில் என் சரும புற்று நோய் முற்றிலும் காணாமல் போனது. அதனால் நான் அக்னிஹோத்ரத்தை எந்த சூழலிலும் செய்யாமல் இருந்ததில்லை. நான் ஒரு விற்பனை மேலாளர். பிறருடன் சந்திப்பில் இருந்தாலும் அவர்களிடம் அனுமதி கேட்டு அக்னிஹோத்ரம் செய்வேன். எனக்கான ஆரோக்கியமான சூழலை அக்னிஹோத்ரம் அளிக்கிறது.”
அவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் கூறும் கருத்துக்கள் என்றும் உன்னதமானது.
பிறகு அவரை பார்த்து கூறினேன், உங்கள் கையில் இருக்கும் பெட்டிக்கும், அக்னிஹோத்ரம் செய்யாத எங்களுக்கும் ஒரே ஆங்கில எழுத்து தான் வித்தியாசம் என்றேன்.
என்ன ? என்பது போல பார்த்தார்.
"You are having Agnihotra Kit ; We are Agnihotra Kid"
[அக்னி ஒளிரும்..]
11 கருத்துக்கள்:
இண்ட்ரஸ்டிங்..ஜி..
ஆஹா அருமை,சூப்பர் என்றெல்லாம் அரைத்தமாவையே நான் அரைக்கல.அக்னிஹோத்ரம் பற்றிய ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கத்தை தாங்கள் வழங்குவது பாராட்டவேண்டிய விஷயம்.அப்படியே பிராமணர்கள் தினமும் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் என்பதை செய்வார்கள்.இதைப்பற்றிய எதார்த்த உண்மைகளையும் தங்கள் பானியில் எழுதலாமே
திரு கேபிள் சங்கர்,
உங்கள் வருகைக்கு நன்றி.
திரு ஆகமக்கடல்,
//அப்படியே பிராமணர்கள் தினமும் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் என்பதை செய்வார்கள்.இதைப்பற்றிய எதார்த்த உண்மைகளையும் தங்கள் பானியில் எழுதலாமே//
தாராளமாக எழுதலாம். அதற்கு முன் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்.
மூன்று வேளையும் சரியாக சந்தியா வந்தனம் செய்யும் அந்த பிராமணர்களை காட்டி உதவுகிறீர்களா?
உங்கள் வருகைக்கு நன்றி.
//"You are having Agnihotra Kit ; We are Agnihotra Kid"//
ஸ்வாமி நீங்கள் இங்கு இருக்க வேண்டியவரே அல்ல! ;)
--
Plant a Tree to save the World!
இது குதர்கமான பதில்.ஏன் இல்லை நிறைய பேர் இருக்கிறார்கள்.எங்கள் ஊருக்கு வாருங்கள்(சந்தியா வந்தனம் செய்யும் வேளையிலேயே,முன் அறிவிப்பின்றி வந்தால் கூட நீங்களே பார்க்கலாம்).சந்தி வந்தனம் பிராமணன் தான் செய்யவேண்டுமா?,என்று கேட்டிருந்தால் கூட நான் விட்டிருப்பேன்.இப்போது ஒரு பிராமணர் கூட சந்தியாவந்தனம் செய்வதில்லை.என்பது போல் அல்லவா இருக்கிறது உங்கள் கேள்வி,இருக்கிறார்கள்.நிறையபேர் சந்தியாவந்தனம் செய்கிறார்கள்.எனவே உங்கள் பதிலை நான் மறுக்கிறேன்
santhanakrishnan
ஏன் திருமணம் ஆகாத இளையவர்கள் அக்னிஹோத்ரம் செய்யக்கூடாது?
விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும்.
திரு சங்கர்,
உங்கள் வருகைக்கு நன்றி.
Plant a Tree to save your self! :)
Can it be done before bath as I have to do morning physical and breathing exercises. Because, since it has to done in the exact timings, I thought it would be better to do it before morning exercises.
Is it anything wrong?
திரு ஆகமக்கடல்,
//ஏன் இல்லை நிறைய பேர் இருக்கிறார்கள்.எங்கள் ஊருக்கு வாருங்கள்//
//நிறையபேர் சந்தியாவந்தனம் செய்கிறார்கள்.//
நான் கூறிய பதிலுக்கு... வாருங்களேன் என்னை பார்க்க நான் தினமும் செய்கிறேன் என கூறுவீர்கள் என நினைத்தேன். நீங்கள் ஊரில் பல பேர் செய்கிறார்கள் என சுட்டி காட்டுகிறீர்கள். :))
ஒரு பத்தினியின் பெயரை கூறு என சொன்னால் சாவித்திரி, நளாயினி என கூறுவது போல :)
//இது குதர்கமான பதில்//
இதை தெரிந்து கொள்ளவே குதர்க்கம் தேவைப்பட்டது. :)
ஒரு சிறு குறிப்பு : பூணல் அனைவரும் அணிந்தாலும் சந்தியாவந்தனம் ப்ராமணர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இருக்கிறது.
நான் பிராமணன் என்று எப்போது தங்களிடம் கூறினேன்.
Post a Comment