சன்யாசியானவர்
எனது நீண்ட நாள் மாணவர் ஒருவர் மிக சோகத்துடன் வந்து, “சாமி எனக்கு சன்யாசம் ஆயிடுச்சு” என்றார். தற்கால நவீன ஆஸரமங்களில் தான் ரூபாய்க்கு இரண்டு சன்யாசம் தருகிறார்களே அப்படி ஏதும் வாங்கிவிட்டாரோ என புரியாமல் விழித்தேன்.
அவரே தொடர்ந்தார், “ என் பையன், என் பேச்சை மீறி வேறு ஜாதி பெண்ணை கல்யாணம் செஞ்சுட்டான். என் சன்-நாசம் ஆயிடுச்சு சாமி..!” என்றார். புத்தர சோகத்திலும் அவரின் குறும்பு மட்டும் குறையவில்லை.
--------------------------------------
படிக்காதவள்...!
தன் மகள் கல்லூரியில் படிப்பதில்லை நீங்க தான் அவளுக்கு அறிவுரை சொல்லி படிக்கவைக்கனும் என ஒரு நடுத்தர வயது தந்தை என்னிடம் வந்தார். ஐயா நானோ அஞ்சாப்பு ஆ பிரிவு கூட தாண்டாதவன் நான் எப்படி அறிவுரை சொல்ல என கேட்டேன். அறிவுரை சொல்லுவது என்பதே எனக்கு பிடிக்காது, இதில் நான் கடைபிடிக்காத விஷயத்தை பற்றி வேறு அறிவுரையா என தவிர்த்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை
தன் மகளை அழைத்து வந்தார். வந்ததிலிருந்து அந்த பெண் தன் கையில் இருந்த செல்போனை விரலால் துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தார். அவ்வளவு அழுக்காகும் அளவுக்கு அந்த பெண்ணின் செல் போனில் அழுக்கு இருக்கிறதா என எட்டிப்பார்த்தேன். அது ஐ-போன்..!
இனி வரும் பரிணாமத்தில் மனிதனின் ஆள்காட்டி விரல் தட்டையாகவும் விரல் ரேகை இன்றியும் பிறப்பார்கள் என நினைக்கிறேன். முடிவில் அந்த பெண் படித்தாளா என கேட்கிறீர்களா? அவர் தந்தையிடம் ஐ-போனில் பாடங்களை இணைக்கும் படி கூறினேன்.
-----------------------------------------
உயிர் போகும் ‘மணி’தர்கள்
சென்னையில் ஒரு நண்பரை தொடர்பு கொள்ள அவரின் கைபேசிக்கு அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்... திடீரென “உயிரே போகுதே உயிரே போகுதே” என சப்தம் வரவே...தொடர்பை துண்டித்து 108க்கு தொடர்பு கொண்டு அவரை காப்பாற்ற முயற்சித்தேன். அதற்கு முன் அவரே என்னை அழைத்து சாவகாசமாக, “என்ன சாமி மிஸ்டு கால் குடுக்கறீங்க” என்றார். விசாரித்ததில் அது ரிங்டோனாம். என் உயிர் சில வினாடிகளில் போயிவந்தது தான் மிச்சம்..! நல்லாவைக்கறாங்கப்பா ரிங் டோனை...
-------------------------------------------
பதில் சொல்ல முடியாத கேள்வி
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ப்ராண வித்யா பயிற்சிகள் மிகச்சிறப்பாக அமைந்தது. அதில் கலந்து கொண்ட மாணவர்களும் அவர்களின் ஈடுபாடும் வளர்ச்சியான பாதையில் இருந்தது. அதில் அனேகர் இந்த வலைப்பதிவை படிப்பவர்கள் என்பது தெரிந்து மகிழ்ந்தேன்.
அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தாலும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க முடியவில்லை. அந்த கேள்வி கட்டுரையின் கடைசியில்....
ப்ராண வித்யா மூலம் ஏராளமான ஹீலர்களை உருவாக்கி அவர்கள் மூலம் ஓர் விழிப்புணர்வு சமுதாயத்தை காணும் நோக்கம் என்னுள் உண்டு. அதை படிப்படியாக அறக்கட்டளை நோக்கில் செயல்படுத்தும் எண்ணம் உண்டு. உங்களில் பலரும் என்னுடன் கைக்கோர்ப்பீர்கள் என எண்ணுகிறேன்.
--------------------------------------------
கோவிந்தா....கோ....விந்தா..
வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சனி அன்று கோவையில் இருக்கும் ஒரு மலைக்கோவிலுக்கு செல்லும் திட்டம் உண்டு. விருப்பம் கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். பால மலை ரங்க நாதர் கோவில் என்ற மலைக்கோவில் கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு அருகே உண்டு. எதில் இருக்கும் மலைப்பாதை எல்லோரும் ஏறி வருவதற்கு வசதியான அமைப்பில் இருக்கும். உடல் ஆரோக்கியமும் ஆன்மீக வளர்ச்சியும் பெற எவ்வயதினரும் கலந்து கொள்ளலாம். காலை 6 மணிக்கு ஆர்.எஸ் புரத்தில் இருந்து மலை புறத்திற்கு பயணம் துவங்கும்.
இதில் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் ஒரு கண்டீஷன் மட்டும் உண்டு..!
1) சரியான நேரத்திற்கு வர வேண்டும்...(இது உங்களுக்கு நல்லது)
2)சிறிய அளவு உணவு பதார்த்தங்களை கொண்டு வர வேண்டும்.(இது எனக்கு நல்லது).
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்
---------------------------------------------------
அந்த பதில் சொல்ல முடியாத கேள்வி
சுப்பாண்டி உங்க கூட வந்திருக்காரா?
7 கருத்துக்கள்:
நம் எல்லோருள்ளும் சுப்பாண்டிகள் உண்டு தானே “ஸ்வாமி”? நிறையும் வரை தளும்பிக்கொண்டு தானே இருப்போம்.
Do we get any karma by healing others? How to avoid or what is the way, in case we practice healing? can you please explain?
அனைத்தும் ரசித்தேன்.... வணக்கம் நீண்ட நாட்களுக்கு பின் வருகின்றேன்
//ரூபாய்க்கு ரெண்டு சன்யாசம்// :))
ஆமா... ஜுப்பாண்டி வந்தாரா இல்லையா?
:))))
இப்படி சுத்தமாக எல்லாம் சொல்லக் கூடாது... அது உசுரே போகுது உசுரே போகுது... ;)
>>>சுப்பாண்டி உங்க கூட வந்திருக்காரா?<<<
இதற்க்கு பதில் சொல்ல எதற்கு இவ்வளவு கஷ்டம்....
புரியலையே....
பால மலை என்றதும் என் நினைவிற்கு ஒரு சம்பவம் வருகிறது. நான் கோவை KMCH மருத்துவ மனையில் காஷியராக பணிபுரிந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து நடந்து பாலமலைக்கு சென்றோம். கோவிலின் அடுத்த பகுதில் உள்ள காடு போன்றதொரு பகுதிக்கி சென்று அன்னதானம் உண்ட களைப்பில் ஒரு மரத்தடியில் சற்றே கண்ணயர்ந்தோம். ஒரு அரைமணி நேரம் கழித்து எழுந்தோம் நான் ஒரு கல்லின்மீது தலைவைத்து படுத்திருந்தேன் எதோ ஒரு புத்தியில் அந்த கல்லை நான் காலால் தள்ளியபோது அதற்குள்ளிருந்து ஒரு பெரிய இல்லை ரொம்ப பெரிய கருந்தேள் ஒன்று ஊர்ந்து சென்றது. எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது அண்டியவர்களை ஒரு ஆபத்தும் அணுகாது காத்துள்ளான் ரங்கநாதன். அதன் பின் அதே கல்லால் அந்த தேளின் வாழ்க்கை என்னால் முடித்து வைக்கப்பட்டது வேறு விஷயம்! ( ஏன்னா நான் விருச்சிக ராசி இல்லை பாருங்க! ஹி... )
Post a Comment