Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, June 3, 2010

ஆன்மீக மாத இதழ்களின் தவறான போக்கு

சில நாட்களுக்கு முன் பழைய பஞ்சாங்கத்தில் காஞ்சி பெரியவரை ஆன்மீக ஆற்றலை பற்றி எழுதாமல் சில பத்திரிகைகள் அதிசயம் என்ற பெயரில் அவமதிப்பதாக எழுதி இருந்தேன். அதற்கு ஒரு சகோதரி கொதித்தெழுந்து விமர்சனங்கள் கொடுத்திருந்தார். தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தை தொகுக்கும் பொழுது அப்பெயர் வேண்டாம் என முதலில் மறுத்தவர் காஞ்சி பெரியவர். பிறகு சிலரின் வேண்டுளின் அடிப்படையில் அவ்வாறு வெளியிடப்பட்டது.

ஆனால் தற்சமயம் சில ஆன்மீக பத்திரிகைகள் காஞ்சி பெரியவரை பற்றி எழுதினாலே புத்தகம் விற்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலரிடம் அனுபவ கட்டுரைகள் எழுத சொல்லுகிறோம் என்ற தன்மையில் காஞ்சி மஹானை பற்றி வேறு ஒரு பிம்பத்தை கொடுக்கிறார்கள்.

மஹான்கள் எல்லோரும் பல்வேறு அதிசயங்கள் செய்பவர்களாக இருக்கட்டும்...! ஆனால் அவர்கள் அனைவருக்கும் ஒன்று போல அதிசயம் செய்யமாட்டார்கள். சிலர் கடிகாரத்தை கைகளில் பதுக்கி வைத்து வருபவர்களுக்கு எல்லாம் கொடுத்து தான் அவதாரம் என்பார்கள் அவர்கள் போல் இவர் என்ன ரோலக்ஸ் வாட்ச் கம்பெனியா வைத்திருந்தார் ?

மடாதிபதிகள் பட்டாடை மற்றும் ஆபரணம் தரிக்கலாம் என்றபொழுதும் எளிமையாக கதர் உடை தரித்து வாழ்ந்து நமக்கு எளிமையை கற்றுக் கொடுத்தவருக்கு இவர்கள் செய்யும் மரியாதை கவலை அளிக்கிறது.

ஆன்மீக பத்திரிகைகள் அளவுக்கு மீறி செயல்படுகிறது என நான் கூறுவதில் சிலருக்கு சந்தேகம் வரலாம். அவற்றை உணர்த்தவே கீழ்கண்ட படத்தை வெளியிடுகிறேன்.


இந்த மாதம் அப்பத்திரிகையின் அட்டையில் வந்திருக்கும் படம் இது.

அப்படியானல் உள்ளே வந்திருக்கும் கட்டுரையை பற்றி யூகம் செய்யுங்கள். புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் காமம் சார்ந்த தலைப்பில் வியாபாரம் செய்யும் பத்திகைக்கும் இவர்கள் போன்ற ஆன்மீக பத்திரிகைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இவர்கள் ஆன்மீக பத்திரிகை நடத்தினாலும், இவர்களுக்கு காசே தான் கடவுளடா..!

14 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

அவரு சாகும் போது கிட்டதட்ட 99 வயது அந்த போசுல நின்னு ஆட முயற்சித்த அன்று தான் போய் சேர்ந்தாரோ.

:)

துளசி கோபால் said...

சரியான இடுகை ஸ்வாமிஜி.

இதையேதான் ராமசந்திரன் உஷா சொல்லப்போக நிறையப்பேர் அவர்மீது பாய்ந்தார்கள்:(

Unknown said...

தங்களின் கணிப்பு சரியானது. தன் குரு உலகதிலேயே பெரியவர் என்று நிருப்பிக்க முயல்கிறார்கள். இது ஒரு விதத்தில் அதிகம் தான்

எறும்பு said...

Goopd post.. swamiji is dancing well.. yennamaa yosikraanga...

Anonymous said...

தங்களின் இந்த பதிவை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்.ஸ்வாமிகள்,சன்யாசி என்ற பெயரில் தான் கற்ற,அனுபவத்தில் உனர்ந்த பல கலைகளை,வாழ்க்கை தத்துவத்தை காசுக்காக விற்கும் வியாபாரிகளாக மாறியுள்ள இந்த கலியுகத்தில் அவரைப்போன்ற மஹான் இனி வரமுடியாது.

தனி காட்டு ராஜா said...

//அப்படியானல் உள்ளே வந்திருக்கும் கட்டுரையை பற்றி யூகம் செய்யுங்கள். புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் காமம் சார்ந்த தலைப்பில் வியாபாரம் செய்யும் பத்திகைக்கும் இவர்கள் போன்ற ஆன்மீக பத்திரிகைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இவர்கள் ஆன்மீக பத்திரிகை நடத்தினாலும், இவர்களுக்கு காசே தான் கடவுளடா..!//

நீங்கள் எப்படி இவற்றில் இருந்து வித்தியா படுகிறீர்கள் ?
அவ்வ்வ்வ்வ்வ் .........

விச்சு said...

பெரியவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை எளிமை மட்டுமே. அதை விடுத்து அவரது அதிசயங்களை பேசி கொண்டிருப்பது அர்த்தம் இல்லாதவை.

ரங்கன் said...

//அவரு சாகும் போது கிட்டதட்ட 99 வயது அந்த போசுல நின்னு ஆட முயற்சித்த அன்று தான் போய் சேர்ந்தாரோ.//

ஒரு அகோரி comment கொடுத்துள்ளதாக நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்!!

Mahesh said...

//கோவி.கண்ணன் said...

அவரு சாகும் போது கிட்டதட்ட 99 வயது அந்த போசுல நின்னு ஆட முயற்சித்த அன்று தான் போய் சேர்ந்தாரோ.

:)
//

அதானே... 99 வயசுக்கு "சிவனே"ன்னு இருக்காம.... கனகசபையெல்லாம் எதுக்கு? :))

திரு ஓம்கார்... உங்க கடமையை செஞ்சுட்டீங்க. அடுத்த புது சாமியார் மாட்டற வரைக்கும்தான்... இவர் சும்மா "இண்டெரிம்"... அப்பறம் மறுபடியும் வாட்ச், மோதிரம், செயின் குடுக்கற சாமிக்கு மாறிடுவாங்க. யாரைத்தான் விட்டு வெச்சாங்க மஹாபெரியவரை மாத்திரம் விட்டு வெக்கறதுக்கு....

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

நாங்கள் எல்லாம் தலையில் தேங்காய் அடித்து சமாதிக்கு அனுப்பும் பரம்பரையில் வந்தவர்கள். :)

எங்க கிட்டயேவா ?:)

ஸ்வாமி ஓம்கார் said...

சகோதரி துளசி கோபால்,

அந்த கட்டுரையை நானும் படித்தேன். அதில் கொஞ்சம் விஷமம் இருந்ததாக எனக்கு பட்டது. மற்றபடி கருத்து ஒன்றாக இருந்தாலும் அது தெரிவிக்கும் விதம் வேறு அல்லவா?

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர்,
திரு ராஜகோபால்,
திரு வெங்கடேச சிவம்,
திரு தனிக்காட்டு ராஜா,
திரு விச்சு,
திரு ரங்கன்,
திரு மகேஷ்,

அனைவருக்கும் எனது நன்றிகள்.

Rangan Kandaswamy said...

Swami Omkar

Please read this article on TVM http://beta.thehindu.com/life-and-style/travel/article435662.ece

Also, appreciate if you could post the weekly stock market trend in the right top corner of your blog.

Thanks in anticipation.

Unknown said...

நான் தவறாமல் ஆன்மிக புத்தகங்கள் வாங்கும் பழக்க முடியவன், இந்த மாதம் அப்படி வாங்கும்போது இந்த அட்டைப்படத்தை பார்க்க நேர்ந்தது

ஏனோ தெரியவில்லை பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அந்த புத்தகத்தை வாங்கும் எண்ணம் போய் விட்டது. அதே புத்தகத்தின் முந்தய வெளியீடுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஏன் இப்படி அவரிமிதமாக சித்தரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. கன்டிப்பா அந்த மகானே இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஆன்மிக புத்தகம் வெளியிடும் இவங்களுக்கு இது கூடவா தெரியாது???