சுப்பாண்டியும் நானும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு நிகழ்ச்சிக்காக பயணம், குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் சுப்பாண்டி வாகனம் செலுத்த துவங்கினான்.எங்கள் வசிப்பிடத்திலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் சென்று இருப்போம் மிகப்பெரிய வாகன நெரிசல். நீண்ட தூரத்திற்கு வாகனம் நெருக்கடியில் நின்று இருந்தது. கோவையில் சில சாலைகள் தவிர பிற இடங்களில் வாகன நெரிசல் காண முடியாது.
நாங்கள் சென்று கொண்டிருந்தது கோவை நகரிலிருந்து வெளிப்புறம் இருக்கும் சாலை. இடையர்பாளையம் மற்றும் வடவள்ளி என்ற இரு ஊர்கள் சந்திக்கும் நான்கு முனை சாலைகள். இந்த சாலையில் என்றுமே இவ்வாறு நெரிசல் இருந்தது இல்லை. இது போன்ற வாகன நெரிசல் எதற்கு என தெரியவில்லை.
பொருமை இழந்த சுப்பாண்டி விஷயம் என்ன என விசாரிக்க சென்றான். அங்கே இருந்த ஒரு முதியவரிடம் என்ன விஷயம் என நான் கேட்டேன்.
முதியவர் கலங்கிய குரலுடன், “சாமீ...இடையர்பாளையம் வடவள்ளி சந்திப்பில் இருக்கிற நூறு வருஷ அரசமரத்தை வெட்டிக்கிட்டு இருக்காங்க. செம்மொழி மாநாட்டுக்கு ரோடு அகலப்படுத்தி கோபுர லைட் போடராங்களாம். வீணா போனவங்க.” என்றார்.
எனக்கு ஏதோ நெருக்கமானவர்கள் இறந்தால் ஏற்படும் துக்கத்தை போல தொண்டையை அடைத்தது. அதுக்குள் சுப்பாண்டி வந்து சேர்ந்தான்.
“சாமீ செம்மொழி மாநாட்டுக்கு ரோடு போடறாங்களாம். அது தான் டிராபிக் ஜாம்” என்றான்.
சரியாக விசாரிக்காமல் வந்த சுப்பாண்டி மேல் கோபம் வந்தது. இருக்கும் துக்கத்தில் இவன் தொல்லை வேறு என்று.. வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு சாலையின் சந்திப்புக்கு சென்றோம்.அங்கே நூறுவருட மரம் படுகொலைச் செய்யப்பட்டிருந்தது.
கோபமும் துக்கமும் இயலாமையும் ஒன்று சேர்ந்து என்னக்கு தடுமாற்றத்தை உண்டு செய்தது.
சினிமாவில் காட்டும் பஞ்சாயத்து காட்சியில் வருவது போல திண்ணை கட்டப்பட்ட அரசமரம். பலர் ஓய்வாக அமரவும், நான்கு வழிச்சாலையின் ஒதுக்கு புறமாகவும் இருந்த இம்மரம் இப்பொழுதுஇல்லை.
நூறு வருட அரசமரத்தை வெட்டி, ஆயிரம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்று இருக்கிறார்கள். மரம் இருப்பதால் வேகத்தடை போல செயல்பட்டது பலர் மெதுவாக வந்து சென்ற சாலை எதிர்காலத்தில் விபத்துபகுதியாக மாறும்.
மரத்தின் கிளைகளை வெட்டி விட்டு உயரத்தை குறைத்து பிறகு இவர்களின் மேம்பாட்டு பணியை செய்திருக்கலாம். ஆனால் இவர்கள் வேருடன் சாய்த்திருக்கிறார்கள். நூறுவருட மரத்தை ஒரு மணி நேரத்தில் வெட்டி விடலாம். ஆனால் நூறு வருடம் முயற்சித்தாலும் அதே மரத்தை வளர்க்க முடியுமா?
சுப்பாண்டியிடம் இப்படி புலம்புக்கொண்டே வந்தேன். வேறு வழியாக சென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தோம். நிகழ்சி முடித்து வரும் வழியில் மீண்டும் அதே இடத்தை கடக்க வேண்டி இருந்தது.
வெட்ட பட்ட மரம் மற்றும் அந்த சாலை அனைத்தும் வெறுமையாக காட்சி அளித்தது.
“மரம் தாவரம்னு எப்பவுமே பேசறீங்களே சாமி, மரம் அப்படி என்ன கொடுக்குது?” என்றான் சுப்பாண்டி.
“சுப்பு. விருக்ஷ ஆயுர்வேதம் என்ற சாஸ்திர நூல் மரம் 150 பலன்கள் மனிதனுக்கு மட்டும் கொடுப்பதாக சொல்லுது. நம்ம சும்மா விரல் விட்டு எண்ணினாலே பல பலன்கள் வரிசைப்படுத்தலாம். காய், கனி, நிழல், நீர், மழை, பறவைகளுக்கு வீடு, அதன் மூலம் இயற்கை சுழற்சி, மரச்சாமான்கள், சுத்தமான காற்று, மருத்துவ குணம் கொண்ட சூழல், மன அமைதி, மண் அரிப்பை தடுத்தல், நிலத்தடி நீர் மேம்பாடு செய்தல், பல நுண்ணுயிர்கள் பெருக்குதல், சூழலில் வெப்பத்தை குறைத்தல், ப்ராணனை மேம்படுத்துதல். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். தாவரம் தாய் மாதிரி சுப்பு என்றேன்” என்றேன்.
எங்கள் அறக்கட்டளையின் வாசலை வந்து அடைந்ததும் நான் வாகனத்திலிருந்து இறங்கி உள்ளே செல்ல நடக்கையில் பின்னாலிருந்து சுப்பாண்டியின் குரல்...
“சாமி மரத்தை பத்தி ஒரு சந்தேகம்....”
என்ன என்பதை போல பார்த்தேன்.
“மரம் சீ.டி படிக்குமா?” என்றான்.
20 கருத்துக்கள்:
:(
:(((((
கேபிள் சஙக்ர்
சரியான நேரத்தில் சரியான கருத்து
கொடுமை. பட்டும் இன்னும் நாம் திருந்தவில்லை.
சுவாமி நீங்கள் கூறிய அதே வார்த்தைகள் தான்.. நெருக்கமானவர்கள் இறந்தால் (கொலை செய்யப்பட்டால்) என்ன வருத்தம் நேரமோ அதைப்போல உணர்ந்தேன் (உணருகிறேன் இதைப்போல கேள்விப்படும் போதெல்லாம்).
செம்மொழி மாநாடு ஏன் நம்ம ஊருக்கு வந்தது என்று வருந்துகிறேன். இங்கு ஒன்று தான் மரங்கள் அதிகம் இருந்தது. அதையும் இப்படி ஒரு மாநாடு நடத்தி மொட்டை ஆக்கி விட்டார்கள்.
புலம்புவதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை சுவாமி. மனது ரொம்ப வலிக்கிறது. என்னைப்போல பலரின் வயித்தெரிச்சல் இவர்களை சும்மா விடாது.
எவ்ளோ வெட்டினாலும் வளரும்னு நினெச்சிக்கிட்டுத்தானே வெட்டிகிட்டு இருக்கானுங்க. வெங்காயம்!
:'(
6 மாசம் முன்பு "ஹிந்து"வில் கோவை சாலைகள் செம்மொழி மாநாடுக்காக அகலப்"படுத்த"ப்படும் என்று செய்தியை நண்பர் ஒருவர் ஹிந்து லெட்டர்ஸ் டு தி எடிட்டர்க்கு எழுதிய கடிதத்தை இன்றுவரை அவர்கள் வெளியிடவில்லை.
செம்மொழி மாநாடு ஏன் நம்ம ஊருக்கு வந்தது என்று வருந்துகிறேன். இங்கு ஒன்று தான் மரங்கள் அதிகம் இருந்தது. அதையும் இப்படி ஒரு மாநாடு நடத்தி மொட்டை ஆக்கி விட்டார்கள்.
:-(
ஒரு சோகமான நெஞ்சை தொடும் பதிவு ஸ்வாமி...
வேதகால வாழ்க்கை தொடரை நினைவூட்டியது...
இப்போது அழிக்கும் இந்த மரங்கள் எல்லாம் நாளை இவர்களின் சந்ததியர்களுக்கு அதன் அருமையை கற்பித்து குடுக்கும் சாமி.
சுவாமிக்கு வணக்கம் இந்த மாதிரி விசயங்கள் கேள்வி படும்போது மனதுக்கு வலிக்கிறது. இதுபோல் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருக்கும் போது கேரளா Visit செய்தார். அப்பொழுது அவர் வருகைக்காக ஒரு மரம் வெட்டப்பட்டது. அதை கண்டித்து ஒருவர் அப்துல்கலாமுக்கு email செய்தார் அதை பார்த்து அவர் உடனே அங்கு மரகன்று நட செய்தார். அவர் வருகையின் போது அங்கு சென்று அந்த செடிக்கு தண்ணீரும் ஊற்றினார். அந்த மாதிரி தலைவர்களை நமக்கு பிடிக்காது. என்ன செய்வது நம் தலை விதி. ஆனாலும் சுவாமிக்கு தைரியம் அதிகம் தான். இதை துணிந்து எழுதுவது. எச்சரிக்கை மாநாட்டில் கலகம் விளைவிக்கிறார் என்று சிறையில் தள்ளி விடுவார்கள் நம் தலைவர்கள். நன்றி சுவாமி
அன்புடன்
ராஜேஷ்
ஏதாவது செய்யணும் .... ( நான் மரம் இன்னும் நிறைய நடுவதை பற்றி யோசிக்கிறேன் ... சாவதற்கு முன் ஒரு ஐஞ்சு மரமாவது நடனும்
:((
ஆமாம் ஸ்வாமி, மரம் வளர்ப்பது ஒரு அறிய கலை, வெகு குறைவான மனிதரிடமே அது இன்னும் வசிகின்றது. சென்னைலே மரம் வளர்க்க மரக்கன்று இலவசம்னு சொன்னங்க சந்தோசம்... ஆனா கோவைல...
இவங்க king அசோகர் மாத்ரி எப்ப மாறுவாங்க...இப்ப அது தான தேவை
ஓஹோ மனமே கலங்காதே... ஓம் சாந்தி ஓம் ..
வருத்தத்தை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
வருத்தப்படுவதுடன் நிறுத்திக்கொள்வதா? ஏதேனும் செய்ய வேண்டாமா?
அரசன் அன்று கொல்லும் - தெய்வம் நின்று கொல்லும் -
மொழி (வெறி) என்றும் கொல்லும்.
இன்று அரச மரம் - நாளை எல்லோரும்.
//“சாமி மரத்தை பத்தி ஒரு சந்தேகம்....”
என்ன என்பதை போல பார்த்தேன்.
“மரம் சீ.டி படிக்குமா?” என்றான்.//
உங்க மரம் ஏ பி எல்லாம் படிக்காதா ?
:)
அன்பின் ஓம்கார்
மிக வருத்தப் பட வேண்டிய செய்தி - இயற்கையை அழிப்பதும் - அதற்கு எதிராக நடப்பதும் - இன்று இயல்பாகி விட்டது - நாம் ஏதாவது செய்ய வேண்டும் - என்ன செய்வது - இப்படி பகிர்ந்து கொள்வதைத் தவிர - ஆதங்கம் - இயலாமை - ஏதேனும் செய்ய முயற்சி ஆரம்பிப்போம்
நல்வாழ்த்துகள் ஓம்கார்
நட்புடன் சீனா
கண்டிப்பாக இதற்கு ஏதாவது நாம் செய்தாக வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து மரம் நடுவிழா ஏற்பாடு செய்ய வேண்டும். அதும் 7 star அல்லது 5 star hotel லில் தான் நடத்தவேண்டும். ஏன் என்றால் அப்பொழுது தான் மரம் நடுவிழா சிறப்பாக அமையும். அது நம் கொள்கையும் கூட. comments எழுதிய அனைவரும் உடனே கோவை நோக்கி செல்லவேண்டும். இதற்கு நம் சுவாமிகள் தலைமை ஏற்பார்.
நன்றி
செம்மொழி மாநாட்டால் ஆட்சியாளர்களின் மீதான கோபம் அதிகரித்திருக்கிறது..
நியாமான ஆதங்கம் சாமி.
அரசு இயந்திரம் அரசு இயந்திரம்னு சொல்லுவாங்கள்ல. அதுனாலத்தானோ என்னமோ அரசு இயந்திரமாதிரியே செயல்படுது. கொஞ்சம் கூட மனித தன்மையே இல்லாம.
Post a Comment