Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, March 29, 2010

ஞானம்


என்றும் நிகழாதது என்றும் நிகழாது என நினைக்கும்
பொழுதுதே நிகழ்ந்தது.

அனைத்து அனுக்களும் தன்
ஈர்ப்பை விடுவித்து பரமணுத்துகள்களாக குவிந்து மெளனமாகியது.

குவிந்துகிடக்கும் இயல்பில் தன்முனைப்பு பேதங்களை காணவில்லை.
குவிந்துகிடப்பதை எங்கும் விரிந்த ஓரொளிப் பேரின்பம் காண்ணுற்றது.

அனுக்கருவின் அசைவில்லா நிலையில்
கரு பிளந்து வெடித்த ஆற்றலில் கரு அறுந்தது

அகத்தே நிகழ்ந்ததை புறத்தே கண்டதும்
நிகழ்ந்தது என்றும் நிகழாதது என்றது சுயம்.



14 கருத்துக்கள்:

Ashok D said...

கவிதையில் ’ஆன்மீக கவிதை’ என்று தனியாக உண்டா?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அசோக்,

பெண்ணியக் கவிதைகள்
புரட்சிக் கவிதைகள்
பின்னவீனத்துவ கவிதைகள்

என கவிதைகள் பலவிதம்.

கவிதைகள் என்பது ஒரு அமைவு. அது அமையக்கூடிய தளத்தை பொருத்து பெயர்பெருகிறது.

எதுக்கெல்லாமோ கவிதைகள் இருக்க ஆன்மீகத்திற்கு கவிதை இருக்க கூடாதா?

எம்.எம்.அப்துல்லா said...

இருக்கும்...
ஆனா..இருக்காது.

:)))

Ashok D said...

திரு.ஓம்கார்

கவிதையென்பதே ஆன்மிகமல்லவா

ஸ்வாமி ஓம்கார் said...

திரு அசோக்,

//கவிதையென்பதே ஆன்மிகமல்லவா
//

இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

கலைகள் அனைத்தும் ஆன்மீகம் தான்.
ஆனால் சிலர் கலைகளை உணர்வு தூண்டுதலுக்காக எழுதுகிறார்கள்.

பெண்ணியக்கவிதை என்ற பெயரில் பாலியல் கவிதை எழுதும் சிலர் இணைய உலகில் இருக்க, அக்கவிதைகளை ஆன்மீகமாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

கவிதை உங்களை உணர்வுக்க அப்பால் செலுத்த வேண்டும். உணர்வுக்கு உள்ளே இழுத்து கீழே தள்ளக்கூடாது.

தள்ளாவிடில் அது ஆன்மீகமே..

வடுவூர் குமார் said...

க‌விதை என‌க்கு பாக‌ற்காய்
க‌ட்டாய‌ம் சாப்பிட்டே ஆக‌னும்...நேர‌ம் வ‌ரும் போது.

கிடைத்த‌ த‌ரிச‌ன‌த்தை வெறும் வார்த்தைக‌ள் போதாது என்று க‌விதையில் அல‌ங்கார‌ம் செய்து ம‌றைத்துவிட்டீர்க‌ளே!! :-)

மதி said...

புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.....

Paleo God said...

ஸ்வாமி என் சிற்றறிவுக்கு எட்டியது..

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது..
கிடைக்காம இருக்கறது கிடைக்காது..

--
:)

Thirumal said...

//கவிதை உங்களை உணர்வுக்கு அப்பால் செலுத்த வேண்டும். உணர்வுக்கு உள்ளே இழுத்து கீழே தள்ளக்கூடாது. //

சூப்பர்.. :-)))

pranavastro.com said...

ஆன்மிகம் வெறும் கவி யாக நின்று விடாது அது உணர்வுகளுக்கு அப்பால் இயங்குவது சூப்பர்
மோகன்குமார்

Siva Sottallu said...

எனக்கு விளங்கியமாதிரி தெரியவில்லை ஸ்வாமி. திரும்ப திரும்ப படித்துக் கொண்டு இருக்கின்றேன்.

//என்றும் நிகழாதது என்றும் நிகழாது என நினைக்கும்
பொழுதுதே நிகழ்ந்தது.//

என்றும் நடவாதது என் முயர்ச்சிக்கினும் நடவாது என்றார் பகவான் ரமணர்...

இது எதிர் மறையாக எனக்குப் படுகின்றதே ஸ்வாமி.

ரங்கன் said...

சாலமன் பாப்பையா கட முட என்று ஒரு பாட்டைச் சொல்லிவிட்டு "எளிய பாட்டுதான்" என்று சொல்வர்.
மாயையில் ஆரம்பித்து மாயையில் முடிகின்றதுபோல் எனக்கு தோன்றுவது ஒரு மாயை தானோ?

G.MUNUSWAMY said...

வணக்கம் சுவாமிஜி,
தாங்கள் சொல்ல வந்தது
சுனாமி தானே. அது இனிமேல்
இந்த நூற்றாண்டுக்குள்
வரகூடாது என்று எங்கள்
வேண்டுதல். கவிதை சுலபமாக
இருந்தால் எல்லோருக்கும்
நலம்.
நன்றி,
இப்படிக்கு,
கோ.முனுசாமி,
சென்னை துறைமுகம்.

விஜய் said...

நன்றாக உள்ளது

(எழுத்து பிழைகளை சரி செய்து விடுங்கள்)

விஜய்