Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, February 24, 2010

காசி சுவாசி - பகுதி 12

பாரத கலாச்சாரம் அனைத்தையும் இறை பொருளாக கணும்பேறு பெற்றது. எந்த ஒரு விஷயம் வாழ்க்கைக்கு ஆதாரமானதோ அதை இறைவனாக பாவித்தனர். இறைவன் அனைத்திலும் இருக்கிறான் என தத்துவார்த்தமாக கூறிவிட்டாலும் யாராவது ஒருவர் ஹிரண்ய கசிப்பு போல இதில் இருக்கிறானா என கேட்டால் நம்மால் பிரஹல்லாதன் பதில் கூற முடியாது. மாறாக நரசிம்ம அவதாரம் எடுத்து அவர்களை கிழித்துவிடுகிறோம்.

நாய், மாடு, காகம், நாகம், கருடன் போன்ற விலங்குகளும் மின்னல், மழை, பூமி போன்ற இயற்கை சக்திகளையும் நாம் வணங்கி வருகிறோம். அவ்வாறு ஆதார விஷயங்களை வணங்கும் வரிசையில் உணவையே இறைவனாக வணங்கும் வழக்கம் தான் அன்னபூரணி வழிபாடு.

அன்னபூரணி ஜகன்மாதா என அழைக்கப்படுகிறாள். உணவு என்பது முதலில் மனிதனுக்கு கிடைக்கத் துவங்குவது தாய் மூலம் தான். அதனால் உணவின் மூலமாக பெண்மையே இருக்கிறது. பிறரின் பசியை ஆற்றி அதில் இன்பம் காண்பது பெண்மையின் இயல்புகளில் ஒன்று.



காசி மாஹா நகரத்தில் காலபைரவர் காக்கும் கடவுள் என்றால், அன்னபூரணி தாயாக இருந்து அனைவர் பசியையும் போக்குகிறாள். இங்கே பசி என்பது ஊண் உடலில் ஏற்படும் பசி அல்ல. ஞான உடலில் ஏற்படும் பசி.

காசியில் சிவன் அன்னபூரணியிடம் யாசகம் கேட்கிறார் என்பது மரபு. அனைவருக்கும் அனைத்தும் வழங்கும் இறைவன் இங்கே யாசிக்கிறார். அதுவும் கபாலத்தில்...

அவர் யாசிப்பது அனைவருக்கும் வழங்க ஞான வைராக்கியத்தை தான். அன்னம் என்பது நம் உடல் வளர்க்க ஒரு கருவி என்றாலும் அதனால் நம் ஞான பாதையும் முடிவு செய்யப்படுகிறது. எதை நீ உண்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்ற அற்புத கருத்தை கொண்டது கடோபநிஷத். அன்னபூரணி நமக்கு அன்னம் மூலம் ஞானம் வழங்குபவளாக இருக்கிறாள்.

பூரணம் என்றாள் முழுமை. அன்னத்தின் வாயிலாக முழுமையை வழங்குபவள் அன்னபூரணி.

அன்னபூரணி கோவிலில் தினமும் மதியம் 12மணிக்கு அன்னதானம் நடைபெறும். அன்னதானத்தின் பொழுது உணவுகள் மிகவும் சுவையுடனும், நீர் விடுவது போல நெய் விட்டும் அளிப்பார்கள். தினமும் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் உணவு உண்கிறார்கள். அன்னபூரணியே இந்த அன்னதான கூடத்தில் தான் இருப்பதாக கூறுவதுண்டு.



பல நூற்றாண்டுகளாக இருக்கும் இந்த அன்னதானத்தில் அனைவருக்கும் சமபந்தி போஜனம்தான்.

மடாதிபதி வந்தாலும், மாடுமேய்ப்பவன் வந்தாலும் ஒரே இடத்தில்தான் உணவு உண்ண வேண்டும். சிவனே இங்கே பிச்சை எடுக்கிறாரம், இங்கே பிறருக்கு மதிப்புகொடுத்து போஜனம் கிடைக்குமா? அனைவரும் இங்கே சமம்தான். ஆனால் தமிழ்நாட்டில் எழுதப்பட்ட ஒரு வரலாற்றில் காசியில் அந்தணர்களுக்கு மட்டுமெ உணவு அளிப்பதாக பதிவுசெய்யப்பட்டது. அந்த சம்பவம் பிற அன்ன சத்திரத்தில் நடந்திருக்கலாம். அன்னபூரணி என்றும் அதற்கு இடம் தந்ததில்லை. ஆனால் அவள் பற்றி எதுவும் எழுதப்படவில்லை என்பது என்னை பல ஆய்வுகளுக்கு செலுத்தியது.

முதன் முதலாக காசிக்கு சென்ற நான் காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு லோக மாதா அன்னபூரணியின் கோவிலுக்குள் நுழைந்தேன்.

விஸ்வநாதர் கோவிலைக் காட்டிலும் ஆடம்பரமான கட்டிட அமைப்புடன் காட்சி அளித்தது. நேராக சன்னதிக்கு சென்றேன். சன்னதி சாத்தப்பட்டு இருந்தது. மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். சன்னதி திறந்ததும் தரிசித்துவிட்டு செல்லலாம் என சன்னதிக்கு இடப்பக்கம் இருக்கும் அலுவலக வாயிற்படியில் சென்று அமர்ந்துகொண்டேன்.

கோவிலின் நிர்வாக மேலாளர் பரபரப்புடன் அங்கும் இங்கும் பலரை ஏவிக்கொண்டிருந்தார். பலர் பதட்டமாக இருந்தனர். நான் வேறு நடைபாதையில் அமர்ந்திருந்ததால் மேலாளர் நகர்ந்து உட்காரும்படி கூறினார். அவர்கள் பேசுவதிலிருந்து ஒருவிஷயம் புலப்பட்டது.

அன்னபூரணிக்கு விஷேஷகாலத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி இருக்கும் அறையின் சாவி காணவில்லை என்பதும், ஒருவர் அந்த அங்கியை அணிவித்து அழகுபார்க்க பணம் செலுத்தி காத்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

ஒரு பத்து நிமிடம் சென்றது, பதட்டம் அதிகரித்தது. நான் மேலாளரிடம் சென்று, “ஐயா நான் சாவி கிடைக்க உதவலாம?” என கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்தார். பிறகு சரி என்றார்.

மனதில் அன்னபூரணியை வணங்கி அங்கே அமர்ந்து இறைவன் அருளிய ஜோதிடத்தை இறைபணிக்கே பயன்படுத்த துவங்கினேன். சில நிமிடத்தில் மேலாளரை அழைத்து ஒரு காகிதத்தில் படம் வரைந்து கோவிலின் இந்த திசையில் இருக்கும் அறையில் சாவி இருப்பதாக கூறினேன்.

அந்த அறையில் இருக்க வாய்ப்பில்லை என்றும் அது தீபாவளி நேரத்தில் பயன்படுத்தும் திருவிழா பொருட்கள் வைக்கும் அறை என்றார். மேலும் அது தினமும் திறக்கப்படாது என்று விளக்கினார்.

எங்கள் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த கோவில் ஊழியர், நேற்று அந்த அறை ஒரு பணிக்காக திறக்கப்பட்டதை கூறினார். இருவரும் சென்று தங்க அங்கி இருக்கும் அறையின் சாவியுடன் திரும்பினார்கள்.

கோவிலுக்கு சென்றால் சாதாரணமாக வணங்கிவிட்டு என் வருகையை பலருக்கு தெரியாத வகையில் பயணிக்கும் எனக்கு அன்று ராஜ உபச்சாரங்கள் நடைபெற்றது. இன்றும் அது தொடர்கிறது.

அன்னபூரணி கோவிலின் பக்கவாட்டில் இருக்கும் ஒரு விஸ்தாரமான அறையில் காளி, ஸ்ரீராமர் என உப சன்னிதிகள் இருக்கும். கோவிலில் கூட்டம் இருந்தாலும் இப்பகுதில் கூட்டம் இருக்காது. அங்கே சென்று தியானத்தில் அமர்ந்தேன்.

அனைத்தும் சுழன்று என்னுள் அடங்கியது. அன்னம் அளிப்பவள் என்னுள் பூரணமானாள். உணர்வுகளுக்கு அப்பாலும், காலத்தை கடந்தும் பயணிக்கச் செய்து எனக்கு அமுதூட்டி என்னை அமிழ்த்தினாள்.

மெல்ல கண்விழித்து பார்த்தேன். கண்களில் பரவசத்தால் கண்ணீர் பெருகியது. உடலில் ஒருவித ஆனந்தம் மிச்சமிருந்தது.

அப்பொழுது தான் கவனித்தேன். எனது மடியில் சில நாணயங்கள் சிதறி கிடந்தது. அவள் வழங்கியது. அன்னபூரணி வழங்கிய நாணயங்களை இன்றும் என்னுடன் வைத்திருக்கிறேன்.

நான் வைத்திருப்பதை பார்த்து இது என்ன நாணயம் என பலர் கேட்பது உண்டு. அவர்களிடம் விளையாட்டாக நான் கூறுவது இதுதான்...

“பிரபஞ்சத்தையே வீட்டாக வைத்திருப்பவளின் அறை சாவியை கண்டறிந்து கொடுத்ததற்கு எனக்கு கிடைத்த சன்மானம் இது...”

என்னுள் ஆட்கொண்டவள் என்றும் கையில் அமிர்த கலசத்துடன் காத்திருக்கிறாள். அனைவருக்கும் அமுத படைக்க...

வாரணாசியின் குறுகலான சந்துகள் வழியே அன்னபூரணியை காண சென்று கொண்டிருக்கிறேன்... நீங்களும் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்...


[சுவாசிப்பேன்...]

அடுத்தப்பகுதியில் நிறைவு பெறும்...

27 கருத்துக்கள்:

Sabarinathan Arthanari said...

நல்ல பகிர்வு

நன்றி

ntarasu said...

அண்ணம் ப்ரமாஹ்

Thirumal said...

//அனைத்தும் சுழன்று என்னுள் அடங்கியது. அன்னம் அளிப்பவள் என்னுள் பூரணமானாள். உணர்வுகளுக்கு அப்பாலும், காலத்தை கடந்தும் பயணிக்கச் செய்து எனக்கு அமுதூட்டி என்னை அமிழ்த்தினாள்//
என்னவொரு அற்புத மகாஅனுபவம் !!!
வணங்கிக் கொள்கிறோம் சுவாமி ..

அதற்குள் நிறைவுப் பகுதியா ? ரொம்ப சீக்கிரம்..

Unknown said...

சுவாமி எங்களை நேரடியாக அழைத்து சென்று காண்பிப்பதுபோல் உள்ளது வாழ்த்துக்கள். ஆனால் அடுத்த பகுதியில் முடியும் எனும்போது சிறிது வருத்தமாக உள்ளது. சுவாமி நீங்கள் எழுதும் தொடர் அனைத்தும் சிவன் சம்பத்தப்பட்டதாகவே உள்ளது பெருமாளை பற்றியும் எழுதுங்கள் சுவாமி. நன்றி சுவாமி.

நிகழ்காலத்தில்... said...

//மனதில் அன்னபூரணியை வணங்கி அங்கே அமர்ந்து இறைவன் அருளிய ஜோதிடத்தை இறைபணிக்கே பயன்படுத்த துவங்கினேன். சில நிமிடத்தில் மேலாளரை அழைத்து ஒரு காகிதத்தில் படம் வரைந்து கோவிலின் இந்த திசையில் இருக்கும் அறையில் சாவி இருப்பதாக கூறினேன்.//

தங்களின் திறனை மதிக்கின்றேன்..

வாழ்த்துகள்

Unknown said...

//மனதில் அன்னபூரணியை வணங்கி அங்கே அமர்ந்து இறைவன் அருளிய ஜோதிடத்தை இறைபணிக்கே பயன்படுத்த துவங்கினேன். சில நிமிடத்தில் மேலாளரை அழைத்து ஒரு காகிதத்தில் படம் வரைந்து கோவிலின் இந்த திசையில் இருக்கும் அறையில் சாவி இருப்பதாக கூறினேன்.//

தொலைந்த பொருளை எப்படி கண்டு பிடிப்பது என்று ஜோதிடத்தில் வாயிலாக அறிய ஆவல் கற்று தருவீர்களா சுவாமி?

yrskbalu said...

it is new thing .

how it is possible find out missed things in jothidam without any jathagam ?

you used jothidam or any other drisiti?

Siva Sottallu said...

பிரம்மிப்பூட்டும் அற்புதமான பதிவு ஸ்வாமி. மிக்க நன்றி.

அன்னபூரணி கோவிலில் நடந்த உங்களின் அம்மானுஷ்ய நிகழ்வினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்வாமி.

//என்னுள் ஆட்கொண்டவள் என்றும் கையில் அமிர்த கலசத்துடன் காத்திருக்கிறாள். அனைவருக்கும் அமுத படைக்க...//

என்று கிடைக்குமோ என் பங்கு... காத்துக்கொண்டிருக்கின்றேன் ஸ்வாமி...

//இறைவன் அனைத்திலும் இருக்கிறான்//

"இறைவன் அனைத்தாகவும் இருக்கிறான்" இரண்டிற்கும் வித்யாசம் உள்ளதாக கருதுகின்றேன் ஸ்வாமி.

ஸ்வாமி, என்னை தவறாக என்ன வேண்டாம், மனதில் தோன்றியதை கேட்கின்றேன், உங்களின் இதே ஜோதிட ஆற்றலை வைத்து இன்று உலகமே தேடும் அந்த பின் லேடன் இடத்தை தெரிவித்தால் உலகில் பல உயிர்களும் பல பொருட்சேதமும் காக்கப்படலாமே ஸ்வாமி. உங்களை காயபடிதினால் என்னை மன்னிக்கவும்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

ஈசனுக்கே படியலக்குதே இந்த அம்மணின்னு அங்கன பாத்தப்ப நினைத்தேன்,,,

அதன் பின் சுவாரசியமான கதைகள் நல்லாருக்கு பட் அது கதை தான் மீன்ஸ் கற்பனை, கற்பனை -:)))

திருச்சிற்றம்பலம் !!!

மதி said...

>>மெல்ல கண்விழித்து பார்த்தேன். கண்களில் பரவசத்தால் கண்ணீர் பெருகியது. உடலில் ஒருவித ஆனந்தம் மிச்சமிருந்தது.<<<

இதை படித்த பிறகு கண்களில் பரவசத்தால் கண்ணிர்...

சுவாரஸ்யம் அதிகரிக்கும் பொழுது 'தொடரும்'.....

G.MUNUSWAMY said...

SWAMIJI,
Maganin thiranai sodhithu than veetin saviyai kidaikka petra annapoorani, thangalin vazhvil eetram adaiya seithirukkiral.
Naandri,
Thangal,
G.MUNUSWAMY,
Chennai Port Trust.

G.MUNUSWAMY said...

SWAMIJI,
Maganin thiranai sodhithu than veetin saviyai kidaikka petra annapoorani, thangalin vazhvil eetram adaiya seithirukkiral.
Naandri,
Thangal,
G.MUNUSWAMY,
Chennai Port Trust.

K DhanaseKar said...

முந்தைய பதிவில் முடிவு பெறாத கேள்வி?....மீண்டும் கேட்பதில் ஆட்சேபனை இல்லையே?..

இறந்தவர்களின் உடலை ஆற்றில் விடுவது சரி என்கிறீர்களா? மீன்களுக்கு உணவாகும் என்று அற்புதமான கருத்து சொன்னீர்கள்...ஆனால் மற்ற விளைவுகள்? கரை ஒதுங்கி நிற்கும் அந்த உடல்களின் அருகே இருக்கும் குடிசைவாழ் பகுதிகளை பார்த்தீர்களா காசியில்? அங்கே குழந்தைகள் விளையாடுவது எதில் தெரியுமா? இறைவனை வணங்கி மனிதர்களை மதிக்காமல் விடுவதால்தான் இறைவனே கேள்விக்குறியாகிறான்.

SRI DHARAN said...

தெரியாததை நிறைய தெரிந்து கொண்டேன். நிறைவு பெறப் போவதால் தெரிந்து கொண்டதில் நிறைவு இல்லை ஸ்வாமிஜி !

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சபரிநாதன்
திரு ntஅரசு,
திரு திருமால்,
திரு நிகழ்காலம்,
திரு ராஜேஷ்,
உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திருyrskbalu,

ஜோதிடத்தில் ப்ரசன்ன சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அதற்கு ஜாதகம் நட்சத்திரம் இது எதுவும் தேவை இல்லை.

கோவிலில் பார்ப்பது தேவப்பிரசன்னம் என கேள்விப்பட்டிருப்பீர்களே? தெய்வ அனுக்கிரகத்தை பார்ப்பதற்கு தெய்வத்தின் ஜாதகம் கேட்க முடியாது அல்லவா? அது போலத்தான்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//அன்னபூரணி கோவிலில் நடந்த உங்களின் அம்மானுஷ்ய நிகழ்வினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்வாமி.
//
இது அமானுஷ நிகழ்வல்ல, ஆன்மீக நிகழ்வு.

//உங்களின் இதே ஜோதிட ஆற்றலை வைத்து இன்று உலகமே தேடும் அந்த பின் லேடன் இடத்தை தெரிவித்தால் உலகில் பல உயிர்களும் பல பொருட்சேதமும் காக்கப்படலாமே ஸ்வாமி. உங்களை காயபடிதினால் என்னை மன்னிக்கவும்.//

ஜோதிடம் என்ற விஷயத்தை பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் கருத்தும் ஜோதிடத்தால் உண்மையில் அடைய முடியும் எல்லை என்பதும் வேறு வேறாக இருக்கிறது.

பின்லாடன் என்ன எதிர்காலத்தில் வர இருக்கும் முன்லாடனைக்கூட கண்டறியலாம். முடியாது என்ற வார்த்தை மட்டுமே ஜோதிடத்தில் முடியாது..!
ஜோதிடத்தில் நான் மற்றும் எனது மாணவர்கள் செய்யும் சில விஷயங்கள் கீழே

1)நிலத்தடி நீர் கண்டரிதல்
2) மழை,பூகம்பம் போன்ற வானிநிலை அறிவித்தல்
3)குண்டுவெடிப்பு, இயற்கை சீற்றம் கூறுதல்
4)வரும் முன் நோய் பற்றி கூறி அதற்குண்டான மருத்துவ முறையை பின்பற்ற செய்தல்.

இவையெல்லாம் வரிசைபடுத்தி பட்டியலிடுவது என்னை விளம்பரப்படுத்த அல்ல.. ஜோதிடத்தால் இவை எல்லாம் முடியும் என்பதை கூறத்தான்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வெற்றிக்கதிரவன்,

திரு மதி,
திரு gmnaidu,
திரு ஸ்ரீதரன்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தனசேகரன்,
//இறந்தவர்களின் உடலை ஆற்றில் விடுவது சரி என்கிறீர்களா? மீன்களுக்கு உணவாகும் என்று அற்புதமான கருத்து சொன்னீர்கள்...ஆனால் மற்ற விளைவுகள்? கரை ஒதுங்கி நிற்கும் அந்த உடல்களின் அருகே இருக்கும் குடிசைவாழ் பகுதிகளை பார்த்தீர்களா காசியில்? அங்கே குழந்தைகள் விளையாடுவது எதில் தெரியுமா? இறைவனை வணங்கி மனிதர்களை மதிக்காமல் விடுவதால்தான் இறைவனே கேள்விக்குறியாகிறான்.//

முன்பு இந்த கேள்வி அறியப்படுவதற்காக கேட்டது போல இருக்கவில்லை என்பதால்த்தான் பதில் அளிக்கவில்லை,

கங்கை என்பது மிகப்பெரிய நதிகளில் ஒன்று. பிரம்ம புத்திரா, சிந்து மற்றும் கங்கையில் ஒரு உடலை சேர்த்தால் அது மீண்டும் காணக்கிடைக்காது என்பது அதை அருகில் இருந்து கண்டால் உணரலாம். அதிகபட்சம் ஒரு கிமீ தூரம் கூட அந்த உடல் பயணிக்காது.

மேலும் இறந்த சன்யாசி உடல் ஒரு நபர் தூக்கும் எடையில் தான் இருக்கும். சம்சாரியின் உடலை தூக்கத்தான் 4 நபர்கள் தேவை, சிலருக்கு கூடுதலாகவும்.

அதனால் கங்கை சென்னையின் கூவம் போல அல்ல.. அது பிரவாகம்..என்பதை உணருங்கள்

Siva Sottallu said...

//ஜோதிடத்தில் நான் மற்றும் எனது மாணவர்கள் செய்யும் சில விஷயங்கள் கீழே
//

அருமையான விஷயம் ஸ்வாமி. வாழ்த்துக்கள், மேலும் தொடரட்டும் உங்கள் பணி.

ராமுடு said...

Mr.Omkar,

Thanks for sharing good article and your experience. When I loose something, my aunty requests me to chant one Sanskrit slogam. I tried couple of times and able to find the object. One day I asked, how it is possible.

She told me, when you are in hurry, you loose your concentration and by chanting this sloga your mind will be relaxed. Since you want to find it out, definetely you should be able to recollect it.

But what you said is amazing. Finding at temple with map.. I can be able to imagine the power you created.

Again thanks.

துளசி கோபால் said...

பிரமித்தேன்!

SUMAN said...

இதுபோன்ற அநுபவங்களைப் பெற என்ன செய்யவேண்டும்

Jayashree said...

""என்னுள் ஆட்கொண்டவள் என்றும் கையில் அமிர்த கலசத்துடன் காத்திருக்கிறாள். அனைவருக்கும் அமுத படைக்க...""

"மூலப்பண்டாரம் காத்துக் கிடக்கிறான் முந்துமினோ, முந்துமினோ"

Blessed you are!!

முடியப்போறதுன்னு பாத்துத்தான் ஏமாத்தமா இருக்கு.

*இயற்கை ராஜி* said...

நல்ல பகிர்வு
:-)

virutcham said...

நல்ல பதிவு.
இந்த பிரச்னம் என்பதை பொதுவாக கேரளாவில் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்களுக்கு அது சுலபமாகி இருப்பதில் சந்தோசம். அதை வைத்து பல நல்ல விஷயங்கள் நீங்கள் செய்வதாகச் சொல்லி இருக்கிறீர்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

காசியைப் பற்றிய நல்ல விஷயங்கள் கேட்க அருமையாக இருக்கிறது. சன் டிவி என்னைக் கொஞ்சம் பயமுறுத்தி இருந்தது. சமீபத்தில் அங்கு சென்று வந்த ஒரு 9 வகுப்பு பையன் தேடி தேடி புகைப் படங்கள் எடுத்து வந்து, இங்கே பாருங்கள் பிணத்தின் முன் எந்த அகோரியும் இல்லை என்று நான் எதுவும் கேட்காமலேயே எனக்குக் கொண்டு வந்துகாட்டினான்.

உங்கள் முயற்சி நல்ல முயற்சி


http://www.virutcham.com

fieryblaster said...

will be leaving for Kasi soon. thought i can have a look at these post so that i can get some useful information. i was really touched to hear how u helped to find the key.